ndtv.com : பிங்க் நிற சட்டையும்
அதற்கு மேல் கருப்பு நிற ஜாக்கெட்டும் அணிந்து சென்ற நிரவ் மோடியை பார்த்த
டெலிகிராப் நிருபர் அவரிடம் பல கேள்விகளை எழுப்பினார், எதற்கும்
பதிலளிக்காமல் மெளனம் காத்து சென்றார் நிரவ் மோடி.
தப்பியோடிய தொழிலதிபர் நிரவ் மோடி லண்டன் சாலையில் நடந்து சென்றபோது காணப்பட்டார்.<தப்பியோடிய
தொழிலதிபர் நிரவ் மோடி, லண்டன் நகரில் இருப்பதாகவும் அங்கு சாலையில்
நடந்து சென்று கொண்டிருந்த அவரை நேரில் பார்த்த பிரிட்டனில் உள்ள தி
டெலிகிராப் நாளிழிதழ் நிருபர் அவரிடம் கேள்விகள் எழுப்பியபோது அவர்
பதிலளிக்காமல் சென்றுள்ளார்.
இதுதொடர்பான வீடியோ ஒன்றை டெலிகிராப் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில், நிரவ் மோடியிடம் அந்த நிருபர் தொடர்ந்து கேள்விகள் எழுப்புகிறார். எவ்வளவு நாள் லண்டனில் இருக்க திட்டமிட்டுள்ளீர்கள் போன்ற கேள்விகளை 6 முறையாவது அவர் கேட்டிருப்பார். எனினும் எதற்கும் அவர் பதிலளிக்காமல் அமைதியாக சென்றுவிட்டார்.