வியாழன், 7 மார்ச், 2019

தமிழருவியா ....? தமிழ் தேசியத்திற்குள் ஒழிந்திருக்கும் காவி சாயம்

தமிழருவி மணியனின் காவி முகம்
தமிழருவி காவி அருவியான மர்மம் என்ன? மஞ்சை வசந்தன் தமிழ் இந்து நாளிதழ் தேர்தல் களம் - 2019 பகுதியில் தமிழருவி மணியனின் பேட்டி.
பா.ஜ.க. ஆட்சி குறித்து கேட்கப்பட்டதற்கு, பிரதமர் மோடி நல்ல பல திட்டங்களை முன்னெடுத்து இருக்கிறார். இந்த நல்ல திட்டங்கள் மக்களிடம் சென்ற சேருவதை, ஒரே இனம், ஒரே தேசம், ஒரே மொழி போன்ற பா.ஜ.க.வின் நடவடிக்கைகள் முழுவதுமாக மறைத்துவிடுகின்றன. எனினும், வரும் தேர்தலிலும் பா.ஜ.க.தான் தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும்.
என்று பதில் அளித்துள்ளார். அதே தமிழருவி மணியன் எடப்பாடியின் இரண்டாண்டு ஆட்சி பற்றி கேட்டதற்கு,
தமிழகம் மாறி மாறி சந்தித்துவரும் தி.மு.க. - அ.தி.மு.க ஊழல்மலிந்த ஆட்சியின் தொடர்ச்சியாக இந்த அரசும் இருக்கிறது. பா.ஜ.க பின்புலத்தில் இருந்து தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கும் அரசு. என்று பதில் கூறியுள்ளார்.
ஆக, இவர் கூறிய கருத்துகளின் சாரம், பா.ஜ.க. மோடி ஆட்சி நல்ல திட்டங்களை முன்னெடுத்துள்ளது; எடப்பாடி ஆட்சி ஊழல் ஆட்சி என்பதுதான். அத்தோடு நிறுத்தியிருந்தால்கூட தமிழருவி மணியன் தப்பித்திருப்பார். ஆனால், அவரே ஒரு ஒப்புதல் வாக்குமூலமும் அளித்துள்ளார்.

எடப்பாடி ஆட்சியை பா.ஜ.க. மோடி ஆட்சி தாங்கிப் பிடித்துக் கொண்டுள்ளது என்கிறார்.
ஊழல் ஆட்சியை தாங்கிப் பிடிக்கும் பா.ஜ.க. மோடி ஆட்சி உத்தம ஆட்சியா? அதுதானே மாபெரும் ஊழல் ஆட்சி!
பா.ஜ.க. தன் அடிமையாட்சியான அ.தி.மு.க. ஆட்சியைக் காப்பாற்றச் செய்துவரும் மோசடிகள், பித்தலாட்டங்கள் எத்தனை எத்தனை?
வருமான வரித்துறை, நீதிமன்றங்கள், தேர்தல் ஆணையம் என்று அத்தனை அமைப்பையும் தங்கள் விருப்பப்படி செயல்படச் செய்த அயோக்கியத் தனத்திற்கு அளவு உண்டா?
நீதிமன்றங்களே இதற்கு துணைபோகும் அவலம், மானக்கேடு! மகாமட்டமானது!
அத்தனையும் மக்கள் விரோத, பாசிச திட்டங்கள் அல்லவா?
பா.ஜ.க மோடி ஆட்சி 5 ஆண்டுகளில் செய்த நலத்திட்டங்கள் எவை?
குலக்கல்வி, நீட் தேர்வு மூலம் அடித்தட்டு மக்களின் கல்வியைப் பறித்தது; சமஸ்கிருதத் திணிப்பு, தமிழ் மொழியை அழித்தொழிக்க திட்டம், தமிழர் தொன்மை சார்ந்த அகழ்வாய்வுகளை மறைத்து, அழித்த துரோகம். தமிழக இயற்கை வளங்களை அழித்தல், தமிழகத்தின் இயற்கை பேரிடர்களுக்கு நிதியளிக்காமை, 7 தமிழர் விடுதலையை நிறுத்திவைத்து பழி தீர்த்தல், சமூகநீதியை ஒழித்தல், உயர்ஜாதிக்கு இடஒதுக்கீடு அளித்து பார்ப்பனர்கள் ஒதுக்கீடு பெற வழிசெய்தது.
இளைஞர்கள் வேலைவாப்புகளை அறவே ஒழித்து, கார்ப்பரேட்டுகளின் நலனுக்காக ஆட்சி செய்தல், பண மதிப்பிழப்பின் மூலம் பொருளாதார சீரழிவு. சில்லறை வணிகத்தை ஒழித்து பல லட்சம் வணிகர்களின் வாழ்வை நாசம் செய்தது, விவசாயிகளை வஞ்சித்தது என்று எண்ணற்ற கேடுகள், கொடுமைகள் மக்களாட்சியையும், மனித தர்மத்தையும் ஒழித்து மனுதர்மத்தை, சனாதனத்தை கொண்டு வரும் முயற்சி. இதுதானே பா.ஜ.க. ஆட்சியின் திட்டங்கள். இப்படிப்பட்ட பா.ஜ.க.தான் மீண்டும் ஆட்சிக்க வரும் என்று ஆசி வழங்குகிறார் தமிழருவி மணியன். தமிழருவி காவி அருவியாக பாய்கிறது, பூனைக்குட்டி வெளியில் வந்துவிட்டது. தமிழர்களே எச்சரிக்கை!
இந்த காவி அருவிதான் இரஜினிகாந்த்துக்கு குருஜி. அப்படியென்றால், இரஜினிகாந்தின் அரசியல் யாருக்கு சாதகமாய் இருக்கும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்!
ஆக, இந்தக் காவி அருவிகள், தமிழ் தேசியம் பேசி ஆரியத்தை ஆதரிக்கும் அரைவேக்காடுகளின் கபட நாடகங்களில் மயங்காது, பா.ஜ.க. ஆட்சியை அகற்றுவதை மட்டுமே ஒரே இலக்காகக் கொண்டு இத்தேர்தலை நாம் அணுக வேண்டும். கார்ப்பரேட் முதலாளிகளின் தொலைகாட்சி உதவியுடனும் கைக்கூலிகளின் துணையுடனும் மோடியை மீண்டும் தூக்கி நிறுத்த முயற்சிப்பார்கள்.
அதை நாம் முறியடித்து வெற்றி பெற்றாக வேண்டும்!
இது தேர்தல் அல்ல, தலைமுறைப் போர்!
ஜனநாயகமா? சனாதனமா? 3% பார்ப்பன ஆதிக்கம் செலுத்த 97% மக்கள் வாழ்வு அழிக்கப்பட வேண்டுமா? இதைத் தீர்மானிப்பதே இத்தேர்தல்! எனவே, இத்தலைமுறை வாழ் எதிர்கால தலைமுறையைக் காக்க பி.ஜே.பி. ஆட்சியை ஒழித்துக் கட்ட வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக