வியாழன், 7 மார்ச், 2019

. தேமுதிக ..இப்போ இருக்கும் சூழ்நிலையில் 2 சீட்டுக்கு மேல் கொடுப்பது கஷ்டம்’.. எடப்பாடிக்கு ராமதாஸ் நெருக்கடி!

டிஜிட்டல் திண்ணை:  விஜயகாந்த் வேண்டாம்- எடப்பாடிக்கு ராமதாஸ் நெருக்கடி!மின்னம்பலம் : “தேமுதிகவின் நிலையை தொடர்ந்து மின்னம்பலத்தில் பதிவு செய்து வருகிறோம். இது லேட்டஸ்ட் அப்டேட். திமுக பக்கம் இனி தேமுதிக போகவே வாய்ப்பு இல்லை என்பது உறுதியாகிவிட்டது. ‘என்கிட்ட தனிப்பட்ட முறையில் பேச என்ன இருக்கு? ‘ என்று துரைமுருகன் போட்டு உடைத்துவிட்டார்.
இன்று காலை கே.பி.முனுசாமி முதல்வர் எடப்பாடி பழனிசாமியை பார்த்துப் பேசியிருக்கிறார். பாமகவுடனான கூட்டணிக்காக தொடர்ந்து ராமதாஸோடு பேசிக்கொண்டிருந்தவர் கே.பி.முனுசாமிதான். இப்போதும் அதிமுகவில் இருந்து அவர்தான் ராமதாஸோடு டச்சில் இருக்கிறார்.
இந்த நிலையில் இன்று முதல்வரிடம் பேசிய கே.பி.முனுசாமி, ‘நாலு சீட் கொடுக்கிற அளவுக்கு கூட தேமுதிகவுக்கு செல்வாக்கு இல்லை. நாலு நாளைக்கு முன்பு தேமுதிக செல்வாக்கு பற்றி பாமக தரப்பில் இருந்து ஒரு சர்வே எடுத்திருக்காங்க. அதில் தேமுதிகவுக்கு 2 சதவீதம் ஓட்டு கூட இல்லைனு தெளிவாக இருக்கு. அவங்க எடுத்த சர்வே அப்படிதான் இருக்கும்னு நாம சந்தேகப்பட்டா கூட, , அதிகபட்சமாக போனாலும் 3 சதவீதத்தை தாண்டாது. அப்படி இருக்கும் போது அவங்களை இனி நாம தாங்கிப்பிடிக்க வேண்டிய அவசியமே இல்லை.

டாக்டர் ராமதாஸ் என்கிட்ட போனில் பேசினாரு. ‘தேமுதிகவை நாம சேர்த்துகிட்டா நாங்க நிற்கிற தொகுதியில் அவங்க வேலை பார்க்க மாட்டாங்க. அவங்க நிற்கிற தொகுதியில் எங்க ஆட்கள் வேலை செய்வாங்களா என்பதும் சந்தேகம்தான். மேல்மட்டத்துல இருக்கும் நாம வேணும்னா கைகோர்த்துட்டுப் போய்டலாம். ஆனால் தொண்டர்களை எப்படி சரி பண்ண முடியும்? பாமகவுக்கு கொடுத்த சீட்டு அப்படியே ஜெயிக்கணும்னா தேமுதிக நம்ம கூட்டணியில் இல்லாமல் இருப்பதுதான் நல்லது. தேமுதிக இங்கே வந்தால் எங்களுக்கு கொடுக்கிற சீட்டும் ஜெயிக்க முடியாது. அவங்களுக்கு கொடுக்கும் சீட்டும் ஜெயிக்க முடியாது. மொத்தமாக நம்ம கூட்டணிக்குதான் அது நஷ்டம்...’ என்று வெளிப்படையாகவே சொல்றாரு.
அவரு சொல்றதுல நியாயம் இருக்கு. இவ்வளவு நாளா எலியும் பூனையுமா இருந்த தொண்டர்களை எப்படி கைகோத்து ஒன்றாப் போய் ஓட்டு கேட்க சொல்ல முடியும். அப்படி ராமதாஸும், விஜயகாந்த்தும் சொன்னாலும் அதை அவங்க கேட்பாங்களா? இதனால அதிமுகவுக்கு விழும் வாக்குகளும் பாதிக்கும். நேத்து வரைக்கும் நாம நாலு கொடுக்கிறதா சொன்னோம் இல்ல... இப்போ 2 சீட்டுதான் கொடுக்க முடியும்னு சொல்லுங்க. அவங்களே போய்டுவாங்க. எந்தக் காரணத்துக்காகவும் ராஜ்யசபா சீட் பத்தியே பேசவேண்டாம். நாம முடியாதுன்னு சொன்னால் அவங்க நேரா டெல்லிக்குப் பேசுவாங்க. டெல்லியில் நீங்க உடனே பேசி, நேற்று நம்ம கூட்டணிக்கு பேசிய அதே நேரம் திமுக கூட்டணியில் பேச துரைமுருகன் வீட்டுக்குப் போனதை சொல்லுங்க. அப்புறம் எப்படி பிஜேபி நமக்கு அழுத்தம் கொடுப்பாங்க’ என்று கேட்டிருக்கிறார் கே.பி.முனுசாமி.
அதற்கு எடப்பாடி பழனிசாமியோ, ‘விஜயகாந்த்தால் எந்த பலனும் இல்லை என்பது டெல்லிக்கும் நல்லா தெரியுது. ஆனால், அதை வெளிப்படையாக சொல்ல ஏனோ அவங்க தயங்குறாங்க. நேற்று அவங்க நம்மகிட்டயும், திமுகவுடனும் மாறி மாறி பேசியது அவர்களுக்கும் தெரியும். நாம அவங்களை கழட்டிவிட்டால், விஜயகாந்த், கமல், தினகரன் மூன்று பேரும் ஒன்று சேர்ந்து நிற்க வாய்ப்பு இருக்கா என்பதைத்தான் டெல்லியில் இருந்து திரும்பத் திரும்ப கேட்கிறாங்க. அதுக்கு வாய்ப்பு இருப்பது போல எனக்கு தெரியல. ஆனால், டெல்லிக்கு அந்த சந்தேகம் இருக்கு அப்படி அவங்க மூன்று பேரும் ஒன்று சேர்ந்து நின்றால் கணிசமான வாக்குகளை பிரிப்பாங்க. அது, நம்மோட வெற்றிக்கு பாதகமாகிடும்னு பயப்படுறாங்க..’ என்று சொல்லியிருக்கிறார்.
இப்படியாக இன்றைய பேச்சுவார்த்தைப் போயிருக்கிறது. விஜயகாந்த்க்கு இன்றும் அதிமுக தரப்பில் இருந்து சொல்லப்பட்ட விஷயம், ‘ முன்கூட்டியே பேசி முடிச்சிருந்தால், நீங்க எதிர்பார்க்கிறது கொடுத்திருப்போம். இப்போ இருக்கும் சூழ்நிலையில் 2 சீட்டுக்கு மேல் கொடுப்பது கஷ்டம்’ என்பதுதான். சுதீஷும், பிரேமலதாவும் இந்த தகவலை கேட்டு ரொம்பவும் டென்ஷனில் இருக்கிறார்களாம். டெல்லியில் இருந்தே அழுத்தம் கொடுக்க வைக்கலாம் என தொடர்ந்து டெல்லியை தொடர்பு கொண்டு வருகிறாராம் சுதீஷ். ஆனால் அங்கிருந்தும் இன்னும் நல்ல சேதி எதுவும் இல்லையாம்” என்று முடிந்தது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக