வெள்ளி, 8 மார்ச், 2019

பிரேமலதா செய்தியாளர்களை தரக்குறைவாக .. நீ வா போ ... ... வீடியோ


.dinakaran.com/ கூட்டணி சேர முடியாததால் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விரக்தி : செய்தியாளர் சந்திப்பில் பிரேமலதா அநாகரீக பேச்சு
சென்னை : எந்த கூட்டணியிலும் சேர முடியாத நிலையில் உள்ள தேமுதிக பொருளாளர் பிரேமலதா அது குறித்து கேள்வி கேட்ட செய்தியாளர்களை ஒருமையில் பேசி, அநாகரீகமாக நடந்து கொண்டதிற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
சென்னையில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் தனது சகோதரர் சுதீஷுடன் சேர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதாவிடம் கூட்டணி தொடர்பாக சரமாரி கேள்வி எழுபப்பட்டது. இதற்கு பதில் சொல்ல முடியாமல் திணறிய பிரேமலதா, கேள்வி கேட்டவர்களை ஒருமையில் பேசியதற்கு செய்தியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.


ஒரே நேரத்தில் இரண்டு தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியது அம்பலமானதால் அதிமுக கூட்டணியில் தேமுதிகவை சேர்ப்பதில் கேள்விக்குறி ஆகியுள்ளது.
இதையடுத்து அதிமுகவையும் பிரேமலதா சரமாரியாக விமர்சித்துள்ளார். நேற்று செய்தியாளர்களை சந்தித்த தேமுதிக துணை பொதுச் செயலாளர் சுதீஷும் செய்தியாளர்களிடம் கோபத்தை வெளிப்படுத்தினார். ஒரு கட்டத்தில் செய்தியாளர் சந்திப்பையே பாதியில் முடித்து கொண்டு சுதீஷ் வெளியேறிய நிலையில், இன்று அவரது சகோதரியும் கட்சியின் பொருளாளருமான பிரேமலதா செய்தியாளர்களை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

 மேலும் பிரேமலதா கூறியதாவது,'தேமுதிக கொள்கையில் உறுதியாக உள்ளது, நாடாளுமன்ற தேர்தல் என்பதால் ஏதேனும் ஒரு தேசிய கட்சியுடன் கூட்டணி வைத்து ஆக வேண்டும், கடந்த தேர்தலில் தனித்து நின்று வெற்றி பெற்ற அதிமுக எம்.பி.க்களால் தமிழகத்திற்கு என்ன பலன் கிடைத்தது, கூட்டணி குறித்து விஜயகாந்த் மற்றும் நிர்வாகிகள் முடிவு செய்வார்கள், கட்சி மீது விமர்சனம் வைப்பதால், கூட்டணி வைக்க மாட்டோம் என அர்த்தமில்லை, ஜெயலலிதாவை எதிர்த்து சட்டப்பேரவையில் மக்களுக்காக குரல் கொடுத்தவர் விஜயகாந்த், அதிமுக ஆட்சி தொடர தேமுதிக கூட்டணி வைத்தது தான் காரணம்,  தனித்து போட்டியிட தேமுதிகவுக்கு பயமில்லை ' என்று கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக