புதன், 6 மார்ச், 2019

நளினி சிதம்பரம் : நீட் தேர்வில் தமிழகம் விலக்கு பெற்றால், வழக்கு தொடர்வோம் ..Aug 14, 2017 flashback

tamil.samayam.com : டெல்லி: நீட் தேர்வில் தமிழகம் விலக்கு பெற்றால், வழக்கு
தொடர்வோம் என்று நளினி சிதம்பரம் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் மருத்துவ படிப்பிற்கு நீட் எனப்படும் ஒரே நுழைவுத் தேர்வை >மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இதனால் மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்று தமிழகத்தில் எதிர்ப்பு கிளம்பியது. பல இடங்களில் போராட்டங்களும் நடைபெற்றன. இதையடுத்து மாநிலப் பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கு 85% உள் ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டது. இதனை எதிர்த்து சிபிஎஸ்இ மாணவர்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதில் உள் ஒதுக்கீட்டிற்கு தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து உச்சநீதிமன்றத்திலும் அனுமதி கிடைக்கவில்லை. இதற்கிடையில் அவசர சட்டம் இயற்றினால், ஓராண்டிற்கு தமிழக அரசு மருத்துவக் கல்லூரி இடங்களுக்கு மட்டும் நீட் தேர்வில் விலக்கு அளிக்கப்படும் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
இந்நிலையில் நீட் தேர்வில் தமிழகம் ஓராண்டு விலக்கு பெற்றால், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்று வழக்கறிஞரும், முன்னாள் மத்திய அமைச்சர் பா. சிதம்பரத்தின் மனைவியுமான நளினி சிதம்பரம் என்று கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக