வெள்ளி, 8 மார்ச், 2019

பனிமலர் மீது வழக்கு .. நடிகர் வடிவேலுவின் .. அல்ல அல்ல இந்துக்களின் மனதை புண்படுத்தினாராம்

Devi Somasundaram :சிவராத்திரி ஈஷா யோகா தியான மண்டப நிகழ்வ ஒட்டி வடிவேல் முகத்தை
போட்டோ ஷாப் செய்து வெளியிட பட்ட படத்தை தோழர் பனி மலர் பன்னீர்செல்வம் பகிர்ந்து இருந்தார் ,
அது இந்துக்கள் மனதை புண்படுத்துவதா அவர் மேல வழக்கு போட்டு இருக்கிறார்களாம்..
இந்த வழக்கு நிக்காதுன்னு கேஸ் போட்ட வக்கிலுக்கே தெரியும். அப்றம் ஏன் போடுகிறார்..
இதே படத்தை நான் , சவுக்கு சஙகர் அண்ணன் உட்பட பலர் போஸ்ட் செய்திருந்தோம் .ஏன் சவுக்கு மேல, என் கேஸ் தர படல .(.சரி என்னை விடுங்க , நான் எப்ப வம்பு வரும்னு எப்பவும் கம்போட நிக்றவ சவுக்கு போஸ்டர் பாத்து இந்துக்கள் மனது புண்படலன்னா பனி மலர் போஸ்ட் பாத்து மட்டும் புண்பட்டுச்சா ..
இதென்ன பார்ஷியல் புண்ணு .
இவர்களுக்கு இந்து கடவுள் மேல அக்கறை இருந்தா எல்லார் மேல கேஸ் குடுத்து இருக்கனும்...இவர்கள் பக்தி வெறும் வெளி வேஷம் பனிமலர் பெரியாரிஸ்ட், திமுக ஆதரவாளர் , துணிச்சலான பெண் என்பது இவர்களுக்கு உறுத்திகிட்டே இருக்கு ..

பெண் தன் காலில் நிற்க தொடங்கினாலே பதட்டம் , இதுல மூட தனத்தை எல்லாம் எதிர்த்தா இவர்கள் மீசை முறுக்கிட்டு வெளில வர முடியாதில்ல ..அந்த சுய பச்சாதாபம் தான் .
சரி போகட்டும்.. அரசியலில் தில்லா ,தெளிவா பேசும் பெண்கள் கம்மியா இருக்கோம்...பனி மலர் கள அரசியளுக்கு வர வேண்டும்..அதற்கு முதல் அடி போட்ட அந்த பார்ஷியல் பக்திக்கு நன்றி ..
இது தான் நேரம் ..அரசியலுக்கு வாங்க பனிமலர் .. நாளை நம் கையில் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக