வியாழன், 7 மார்ச், 2019

தனியாக தேர்தலை சந்திக்கும் தினகரன், சரத்குமார். சீமான் , கமலஹாசன் ..

மாலைமலர் :திமுக அதிமுக கூட்டணிகளுக்கு எதிராக சரத்குமார் , தினகரன் , சீமான்,  
கமல்ஹாசன்  ஆகியோர் தனித்து களம் காண்கிறார்கள்.
சென்னை: தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட கமல்ஹாசன், சீட் கிடைக்காததால் தனித்து போட்டியிடுகிறார்.
புதுவை உள்ளிட்ட 40 பாராளுமன்ற தொகுதிகளிலும் போட்டியிட விரும்புபவர்களிடம் சீமான் தினகரன் கமல் போன்றோர் விருப்பமனு வாங்கி வருகிறார்.
தமிழகத்தை ஆண்ட அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய கட்சிகளையும் தொடர்ந்து விமர்சித்து வரும்  அம்மா மக்கள் முன்னேற்ற கழக தலைவர் தினகரனும் தனியாக களம் காண்கிறார். கூட்டணி கட்சியான எஸ்.டி.பி.ஐ. கட்சிக்கு ஒரே ஒரு தொகுதியை மட்டும் ஒதுக்கிவிட்டு மீதி உள்ள 39 தொகுதிகளிலும் தினகரன் தனது கட்சி வேட்பாளர்களையே நிறுத்துகிறார்.
அ.தி.மு.க.வில் உள்ள அடிமட்ட தொண்டர்கள் தங்கள் பக்கமே இருக்கிறார்கள் என்று கூறிக்கொள்ளும் தினகரன் இதன்மூலம் தாங்களே வெற்றிபெறுவோம் என்று தொடர்ந்து கூறிவருகிறார்.

இவர்கள் தாக்கத்தை ஏற்படுத்துவார்களா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
அந்த வரிசையில் சமத்துவ மக்கள் கட்சியும் தனித்து போட்டியிடப்போவதாக நேற்று சரத்குமார் அறிவித்தார். நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஏற்கனவே அறிவித்து விட்டார். தமிழகம், புதுவையில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் பெண்களுக்கு 50 சதவீத தொகுதிகளை சீமான் ஒதுக்கி உள்ளார். 20 தொகுதிகளில் ஆண் வேட்பாளர்களும், 20 தொகுதியில் பெண் வேட்பாளர்களும் போட்டியிட இருப்பதாக சீமான் கூறி உள்ளார். இதன்மூலம் இந்த கட்சிகளின் செல்வாக்கு என்ன? என்பதும் இந்த தேர்தலின்போது தெரிய வரும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக