புதன், 6 மார்ச், 2019

சென்னை சென்டிரல் ரயில் நிலையத்துக்கு எம்.ஜி.ஆர்.பெயர் .. மோடியின் தான்தோன்றித்தனம்

தமிழர்களுக்கு ஒன்று என்றால் ஓடோடி வருவோம்.. வருவேன்.. காஞ்சிபுரத்தில் மோடி கர்ஜனை!  தமிழர்கள் உலகில் எங்கே பிரச்சனைகளை சந்தித்தாலும் நாங்கள் உதவுவோம் என்று பிரதமர் மோடி சென்னையில் பேசி இருக்கிறார்.
ஒகி புயலுக்கு ஓடிவந்த மோடி..
தூத்துக்குடியில் தடவி கொடுத்த மோடி குரங்கணி தீவிபத்தில்..... சாதனைகள் ரொம்ப ரொம்ப அதிகம் .. gobackmodi 
வெப்துனியா :இன்று சென்னை வந்துள்ள நம் நாட்டின் பிரதமர் மோடி பாஜக
அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் நடைபெறுகின்ற தேர்தல் பரப்புரை அறிமுக விழாவில் கலந்து கொண்டு பேசிவருகிறார். தற்போது இந்நிகழ்ச்சியில் மேடையில் பேசிக் கொண்டிருந்த மோடி யாரும் எதிர்பார்க்காத வகையில் அறிவித்திருக்கிறார். அதில் சென்னை சென்டிரல் ரயில் நிலையத்துக்கு அதிமுகவின் நிறுவனரும் முன்னாள் முதல்வரான எம்.ஜி.ஆர் பெயர் சூட்டப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் சென்னை ரயில் நிலையத்தில் அறிவிக்கப்படும் தகவல் இனி தமிழில் அறிவிப்படும் என்று கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக