சனி, 23 பிப்ரவரி, 2019

வாகன ஓட்டுநர்களையும் நெருக்கமானவர்களை போல நேசியுங்கள்.

குடும்பத்தோடு பயணம் செய்யும் போது நம்முடன் ஒரு ஓட்டுநரை கூட்டிச்
செல்வது வழக்கம்...
இரவு சமயத்தில் நாம் நல்ல ஒரு தங்கும் விடுதியில் அல்லது நண்பர்கள் வீட்டில் தங்கும்போது ஓட்டுனருக்கு தங்குவதற்கு நல்ல ஒரு இடம் நாம் அமைத்து கொடுப்பது குறைவு அப்படி இருக்கும் பட்சத்தில் ஓட்டுநர் அவரது வாகனத்திலேயே படுத்து தூங்கும் நிலைமை தான் உருவாகிறது. ஒருசில தங்கும் விடுதிகளில் மட்டுமே ஒட்டுநர்களுகான ஓய்வு அறை உள்ளது.
பெரும்பாலான விடுதிகளில் அதுபோல் இல்லை.ஓட்டுனருக்கு குறைந்தபட்சம் ஒரு 800 ரூபாய்க்கு அல்லது 1000 ரூபாய்க்கு அறையெடுத்து கொடுத்து அந்த ஓட்டுநர் நிம்மதியாக தூங்குவதற்கு நாம் வழி செய்வது குறைவு அடுத்த நாள் நமக்கு நெருங்கியவர்கள் கூட சுகமாக பயணிக்கும்போது முதல் நாள் இரவு சரியாக தூங்கி இருப்பாரா நமது ஓட்டுநர் என்று சிந்தித்து கூட பார்ப்பதில்லை.. 

பைக்கில் இருந்து விழுந்த 4 வயது சிறுமியை கால் இடுக்கில் வைத்து யானைக் கூட்டத்தில் இருந்து பாதுகாத்த யானை

tamil.thehindu.com -: மேற்கு வங்க மாநிலம், ஜல்பைகுரியில் வனப்பகுதி சாலையில், பைக்கில் இருந்து விழுந்த 4 வயது சிறுமியை, மற்ற யானைகள் தாக்காமல் இருக்கும் வகையில்,  கால் இடுக்கில் வைத்து யானை ஒன்று பாதுகாத்த சம்பவம் நடந்துள்ளது.
இந்த சம்பவம் ஜல்பைகுரி மாவட்டம், கருமரா வனப்பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை 31-ல் நேற்று நடந்துள்ளது.
இது குறித்து வனத்துறையினர் கூறியதாவது:
லடாகுரி பகுதியைச் சேர்ந்தவர் நிது கோஷ். இவரின் மனை டிட்லி, 4 வயது மகள் அஹானா. இவர்கள் மூவரும் பைக்கில் வனப்பகுதியில் உள்ள ஒரு கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு மீண்டும் லடாகுரிக்கு நேற்று திரும்பினார்கள்.

தீண்டாமை பள்ளிகள் .. வித்தியாலயா .. வித்தியாஷ்ரம் .. ஆஷ்ரம் ...

Shalin Maria Lawrence : "வித்யாஷ்ரமம்" "வித்யாலயா" என்று எப்பொழுது பள்ளிகளுக்கு பெயரிட்டார்களோ அன்றே நவீன தீண்டாமை பள்ளிகளில் தோன்றி விட்டது.
குழந்தைகளின் அறிவு வளர்ச்சியை அள க்காமல்,பல்முனை திறனை அளக்காமல் வெறும் பள்ளியின் பெயரை வைத்து சுயஇன்பம் காணும் கூட்டம் ஒருபுறம் வளர்ந்து.
அதுவே அந்த பள்ளியின் பெயரை உச்சரிக்கும்போது வாயில் எச்சயை குதப்பிக்கொண்டு பேசுவது போல் உச்சரிக்கவேண்டும். அப்பொழுது ஸ்டேட்டஸ் இன்னும் உயரும் என்கிற அற்ப நம்பிக்கை வேறு.
ஒரு சக பணியாளரின் மனைவி சொல்லிற்று "matriculation ல இருந்து cbse மாத்திட்டோம்.அங்க கண்ட குழந்தையும் படிக்குது அதுங்க கிட்ட இருந்து நம்ம கொழந்த கத்துக்க கூடாத பாஷாயெல்லாம் கத்துகிட்டா?"
இந்த ஆஷ்ரம் கீஷ்ரம் எல்லாமே குல கல்வி முறை போலதான்.ஜாதிய நிலையில் மேலே இருக்கும் பள்ளிகள். அப்படியே தப்பி தவறி நம் பிள்ளைகளை வீராப்பிற்காக அங்கே சேர்த்துவிட்டால் அவர்களை அங்கேயே சமஸ்க்ருதமயம் படுத்தி விட வேண்டும்.
இந்தம்மா ப்ராமினா இருக்காது மொய்லியாரா இருக்கும் ஆனா பேச்சு "அவா டீச்சர் சரி இல்ல ,என் பொண்ணு ஹோம் ஒர்க் பண்ணின்ட்ருக்கா" அப்படினு பேசும்.
கீழ்மையிலும் கீழ்மை.
பின்பு பரதநாட்யம் ,கர்நாடிக் கிளாஸ் என்று தமிழ் பிள்ளை ஆரியனாகி போவான்.
என் உறவினர் ஒருவர் க்ரிஷ்டவர் ,தன் பிள்ளை keyboard வாசிக்க வேண்டும் என்று அத்தனை அடம், அவனுக்கோ பறை பிடித்திருக்கிறது ஆனால் அவனை பறை பற்றி பேச கூட விடுவதில்லை... பறை அசிங்கம் அந்தமாவிற்கு. அந்த அம்மாவின் மாமனாரின் குல தொழிலே அதுதான்.

பாராளுமன்ற தொகுதிகள் மறுசீரமைப்பு; சட்டமன்ற தொகுதிகள் வாரியாக*

Mahalaxmi : Exclusive... First on : இந்தியா முழுவதும் தொகுதிகள் மறுசீரமைக்கப்பட்டது. அதன்படி தமிழகத்தில் தொகுதிகள் சீரமைக்கப்பட்டன. பாராளுமன்ற தொகுதிகள் வாரியாக சட்டமன்ற தொகுதிகள் ப‌ட்டிய‌ல் இங்கே...
*1. திருவள்ளூர் (தனி) பாராளுமன்ற தொகுதி*
1.கும்மிடிப்பூண்டி
2. பொன்னேரி (தனி)
3. திருவள்ளூர்
4. பூந்தமல்லி (தனி)
5. ஆவடி
6. மாதவரம்
*2. வட சென்னை பாராளுமன்ற தொகுதி.*
1திருவொற்றியூர்
2. டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர்
3. பெரம்பூர்4. கொளத்தூர்
5. திரு.வி.க. நகர் (தனி)
6. ராயபுரம்
*3. தென் சென்னை பாராளுமன்ற தொகுதி.*
1விருகம்பாக்கம்

பங்களூர் 300 க்கு மேற்பட்ட கார்கள் தீ பற்றி எரிந்தது .. விமான கண்காட்சியில் விபரீதம் .வீடியோ .. ஒரு விமானியும் உயிரழப்பு

tamil.oneindia.com-  hemavandhana: பெங்களூர்: பெங்களூரில் நடைபெற்று 300க்கும் மேற்பட்ட வாகனங்கள் எரிந்து நாசமானதற்கு காரணம் சிகரெட்தான் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து மக்கள் ட்விட்டரில் கொதித்து போய் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.
பெங்களூருவில் நடைபெற்று வரும் விமான கண்காட்சி அரங்கத்திற்கு வெளியேதான் எல்லா கார்கள், பைக்குகள் நிறுத்தப்பட்டிருந்தன.
இப்படி ஒரு தீ விபத்து பட்டப்பகலில் மதிய நேரத்தில் ஏற்படும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லைதான். மளமளவென கொழுந்து விட்டு எரிந்த தீயில் வாகனங்களும் சேர்ந்து எரிந்தன< சாம்பல் தூக்கி எறிந்த அந்த ஒத்த சிகரெட்டால், கோடி ரூபாய் கார்கள் கருகி சாம்பலானதை வீடியோ காட்சிகளாக கண்ட பொதுமக்கள் கொதித்துபோய் ட்வீட்களை பதிவிட்டு வருகின்றனர்.  அந்த படங்களில் எல்லாமே கார்கள் எரிந்து கொண்டிருக்கின்றன. கருப்பு புகையும், மஞ்சள் நெருப்பும் என மளமளவென எரிய, அடிக்கும் காற்றில் அது இன்னும் வேகமாக பரவுவதாக உள்ளது

தோழர் முகிலன் .. ஆட்கொணர்வு மனு தாக்கல்! அரசு மீது சந்தேகம். மு.க.ஸ்டாலின்

சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் முகிலன் காணாமல்போன வழக்கின்
விசாரணை அறிக்கையை மார்ச் 4ம் தேதி தாக்கல்செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 15ம் தேதி முதல் அவரைக் காணவில்லை என்பதும், அவரைக் கண்டுபிடிக்கவேண்டும் என ஆட்கொணர்வு மனு போடப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது
சென்னை: சமூக செயல்பாட்டாளர் முகிலன் மாயமானதில் அரசு மீது சந்தேகம் இருப்பதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துளளார். ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு ஆதாரத்தை வெளியிட்ட முகிலனை ஒருவாரம் காணவி்ல்லை எனவுட் கூறினார். சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் பொறுப்பில் இருப்போர் முகிலனை மீட்க வேண்டும் எனவும் கூறினார்.
 Henri Tiphagne : This is an update of Mugilan's case from Henri Tiphagne, the petitioner in HCP
An update on the HCP as regarding Mugilan Swamiyathal that was filed in the Madras High Court, Chennai and the hearing came before Mr.Justice M. Sathyanarayanan and Mr.Justice Nirmal Kumar and was argued by Ms.Sudha Ramalingam .

விஜயகாந்த் உடல்நிலையை விமர்சிப்பவர்கள் எங்கள் வீட்டு வாசலில் வந்து நிற்கிறார்கள்- விஜய பிரபாகரன் ஆவேச பேச்சு

விஜயகாந்த் உடல்நிலையை விமர்சிப்பவர்கள் எங்கள் வீட்டு வாசலில் வந்து நிற்கிறார்கள்- விஜய பிரபாகரன் ஆவேச பேச்சு
மாலைமலர் : விஜயகாந்துக்கு உடல் நலக்குறைவு என்று கூறுபவர்கள் ஏன் எங்கள் வீட்டுவாசலில் கூட்டணிக்காக நிற்கிறார்கள் என்று விஜய பிரபாகரன் பேசினார்.  கும்பகோணத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் நேற்று மாலை தஞ்சை சென்றார். அண்ணா சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு இறகுப் பந்துப் போட்டியை தொடங்கி வைத்தார
பின்னர் கும்பகோணம் சென்ற விஜயபிரபாகரன் அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசியதாவது: ‘காவிரி டெல்டா பகுதியில் கடந்த காலங்களில் 58 சதவீத விவசாயம் நடைபெற்றது. தற்போது 7 சதவீதம் தான் விவசாயம் நடைபெறுகிறது. காவிரியில் தண்ணீர் வராததால் 51 சதவீதம் விவசாயம் செய்ய முடியாமல் போய் விட்டது.

திமுக கூட்டணி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முடிந்தது- அடுத்த வாரம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

திமுக கூட்டணி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முடிந்தது- அடுத்த வாரம் அதிகாரப்பூர்வ அறிவிப்புமாலைமலர் :திமுக கூட்டணி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முடிந்துள்ளதால் இன்னும் 1 வாரத்தில் தொகுதி எண்ணிக்கையை மு.க.ஸ்டாலின் வெளியிடுவார் என்று கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர். சென்னை:
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலை எதிர் கொள்ள ஆளும் கட்சியான அ.தி.மு.க.வும், எதிர்க்கட்சியான தி.மு.க.வும் தயாராகி வருகிறது. இரு கட்சிகளுமே கூட்ணி பேச்சு வார்த்தையில் மும்முரமாக ஈடுபட்டு உள்ளன.
அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வுக்கு 7 தொகுதிகளும், பா.ஜனதாவுக்கு 5 தொகுதிகளும், என்.ஆர்.காங்கிரசுக்கு ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. தே.மு.தி.க. த.மா.கா உள்ளிட்ட சில கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.
தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரசுக்கு புதுச்சேரி உள்பட 10 தொகுதிகளும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
ம.தி.மு.க. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி ஆகிய கட்சிகள் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.
இதில் ஒவ்வொரு கட்சியும் போட்டியிட விரும்பும் தொகுதிகளை தி.மு.க. பேச்சுவார்த்தை குழுவிடம் வழங்கி உள்ளது.

அஸ்ஸாமில் விஷச் சாராயம் அருந்திய பெண்கள் உள்பட 99 பேர் இறப்பு

BBC : இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாமில் சட்டவிரோதமாக
விற்பனை செய்யப்பட்ட விஷச் சாராயத்தை அருந்தியவர்களில் குறைந்தது 99 பேர் பலியாகியுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 200க்கும் மேலானவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இறந்தவர்கள் அனைவரும் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் ஆவர். அவர்களில் பெண்களும் அடக்கம்.
பலியானவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தராகண்ட் ஆகிய மாநிலங்களில் விஷச் சாராயம் அருந்திய சுமார் 100 பேர் உயிரிழந்த இரு வாரங்களில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கோலாகட் மாவட்டத்தைச் சேர்ந்த 58 பேர் இருந்துள்ளதாக அந்த மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளர் பிபிசி இடம் தெரிவித்துள்ளார்.
குறைந்தது 12 பேர் அருகிலுள்ள ஜோர்கட் மாவட்டத்தினர் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

சத்திரியனாக இருப்பதைவிட சாணக்கியனாக இருப்பது முக்கியம்: தொண்டர்களுக்கு அன்புமணி

பெண்களின் வாயை மூடுவதற்கு அவர்களை வேசி என்று சொல்லு! 
மக்களின் வாயை மூடுவதற்கு அவர்களை துரோகி என்று சொல்லு - சாணக்கியன் கூறியது இதுதான்!
இதைத்தான் பாஜகவும் செய்கிறது தற்போது ராமதாசும் கூறுகிறார்! 
tamil.thehindu.com- எஸ்.நீலவண்ணன் : சத்திரியனாக இருப்பதைவிட சாணக்கியனாக இருப்பது முக்கியம் என, தொண்டர்களுக்கு பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவுரை வழங்கியுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம், வானூர் அருகே பட்டானூரில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் இன்று (சனிக்கிழமை) பாமக சிறப்பு பொதுக்கூழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது: தேர்தல் கூட்டணி முடிவை சிலர் விமர்சிக்கிறார்கள். கட்சியின் வயதில் திமுக, அதிமுகவுக்கு அடுத்து பாமக  உள்ளது. நம் கட்சியின் நோக்கம் தமிழகம் முன்னேற வேண்டும். ஆட்சிக்கு வந்தால் தான் நம் இலக்கை எட்டமுடியும். புகையிலைக்கு எதிராக தொடர்ந்து போராடி வந்தோம். ஆனால், பதவிக்கு வந்தவுடன் பொது இடங்களில் புகை பிடிக்ககூடாது என்று ஆணையிட்டோம். தமிழகத்தில் பாமக ஆட்சிக்கு வருவது உறுதி. இது காலத்தின் கட்டாயம்.

நடிகை விஜயலட்சுமி தீவிர சிகிச்சை பிரிவில் .. சீமானோடு காதல் .. திருமணம் சர்ச்சையில் ...

விஜயலட்சுமிக்கு உடல் நலக்குறைவு tamil.filmibeat.com - rajendra-prasath.: சென்னை: நடிகை விஜயலட்சுமி உடல்நலக் குறைவு காரணமாக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழ் மற்றும் கன்னடப் படங்களில் நடித்தவர் நடிகை விஜயலட்சுமி. தமிழில் பிரண்ட்ஸ் படத்தில் விஜய்க்கு தங்கையாக, சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தவர். பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் ஆர்யாவுக்கு அண்ணியாக நடித்திருந்தார்.
தமிழில் சில சீரியல்களிலும் நடித்த இவர்,
இயக்குநர் மற்றும் நாம் தமிழர் அமைப்பின் தலைவர் சீமானுடன் காதல், திருமணம் எனப் பல பரபரப்பு புகார்களைக் கூறி சர்ச்சையை ஏற்படுத்தியவர்.
தொடர்ந்து பட வாய்ப்புகள் இல்லாததால் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்த இவர், சமீபகாலமாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு இவரது அம்மா சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது விஜயலட்சுமியும் ஐசியுவில் தீவிர சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

உலகத் தமிழாராய்ச்சி மாநாடு... ஜூலை 5-ல் சிகாகோவில்.. 6,000 ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்கும்

தனிநாயகம் அடிகள்உலகத் தமிழாராய்ச்சி மாநாடு.vikatan.com இரா.செந்தில் குமார் பெ.மதலை ஆரோன் :
இந்த மாநாட்டை உலகத் தமிழாராய்ச்சி மன்றத்துடன், வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை, சிகாகோ தமிழ்ச் சங்கம் ஆகிய தமிழ் அமைப்புகள் இணைந்து நடத்துகின்றன.
6,000 ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்கும் உலகத் தமிழாராய்ச்சி மாநாடு... ஜூலை 5-ல் சிகாகோவில் தொடங்குகிறது!த்தாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு வரும் ஜூலை மாதம் 6, 7 (தொடக்க விழா 5-ம் தேதி) ஆகிய தேதிகளில், அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகரில் நடைபெற இருக்கிறது. இந்த மாநாட்டை உலகத் தமிழாராய்ச்சி மன்றத்துடன், வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை, சிகாகோ தமிழ்ச் சங்கம் ஆகிய தமிழ் அமைப்புகள் இணைந்து நடத்துகின்றன.
தனிநாயகம் அடிகள் என அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் வண.சேவியர் தனிநாயகம் என்னும் ஈழத்து தமிழறிஞரால், 1964-ம் ஆண்டு தொடங்கப்பட்டதுதான் உலகத் தமிழாராய்ச்சி மன்றம். தமிழறிஞராக மட்டும் அல்லாமல் மிகச்சிறந்த கல்வியாளராகவும் திகழ்ந்தவர். ஆங்கிலம், ரோமம், போர்ச்சுக்கீஸ், பிரெஞ்ச், ஜப்பனிஷ் ஆகிய மொழிகளில் பேசவும், எழுதவும் வல்லமை பெற்றவர். ஐரோப்பிய நாடுகள் பலவற்றுக்குச் சுற்றுப்பயணம் செய்து அங்குள்ள நூலகங்களில் இருந்த தமிழ் நூல்களைப் பற்றி ஆராய்ச்சி செய்து உலகுக்குத் தெரிவித்தவர். இவர் 1951-ம் ஆண்டு 'தமிழ் கல்ச்சர்' என்னும் ஆங்கில இதழை ஆரம்பித்து நடத்தி வந்தார். 1964-ம் ஆண்டில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் என்கிற அமைப்பை, பேராசிரியர் வ.ஐ.சுப்பிரமணியம் மற்றும் இருபத்தாறு தமிழறிஞர்களுடன் இணைந்து தொடங்கினார். இரண்டாண்டுக்கு ஒருமுறை உலகெங்கிலும் இருக்கும் தமிழ் ஆராய்ச்சியாளர்களை ஒருங்கிணைக்கும் மாநாடுகளை நடத்தும் நோக்கில் இந்த மன்றம் தொடங்கப்பட்டது.

38 தொகுதிகளில் அமமுக போட்டி: டிடிவி தினகரன் அறிவிப்பு

T.T.V.Dinakaran, AMMK, 2019 Tamil Nadu Election, டிடிவி தினகரன், டிடிவி தினகரன் பேட்டிtamil.indianexpress.com: தமிழ்நாட்டில் 38 தொகுதிகளில் அமமுக போட்டியிடும் என டிடிவி தினகரன் கூறினார். தேமுதிக.வுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்றும் அவர் கூறினார்.
2019 மக்களவைத் தேர்தலுக்கு தமிழ்நாட்டில் அதிமுக தலைமையில் ஒரு அணியும், திமுக தலைமையில் மற்றொரு அணியும் அமைகின்றன. கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் ஆகியவை எந்த அணியிலும் இடம் பெறவில்லை.
இந்தச் சூழலில் இன்று (பிப்ரவரி 22) சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், ‘அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சில கட்சிகளுடன் கூட்டணி பேசி வருகிறேன் என்று கூறினேன். உடனே தேமுதிக, பாமக என சிலர் நினைத்துவிட்டனர்.
இந்தக் கட்சிகளுடன் கூட்டணி பேசவில்லை. முதல்வர் வேட்பாளராக நின்று டெப்பாசிட் இழந்தவர்களும், மாற்றம் முன்னேற்றம் என நின்று தோற்றவர்களும் பெரிய கட்சி அல்ல. சில முக்கியமான ஆட்களுடன் பேசுகிறோம். அநேகமாக 38 தொகுதிகளில் அமமுக போட்டியிடும். வருகிற 28-ம் தேதி இது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும்’ என்றார் டிடிவி தினகரன்.

அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் சாலை விபத்தில் உயிரிழப்பு

சாலை விபத்தில் அதிமுக நாடாளுமன்ற  உறுப்பினர் ராஜேந்திரன் பலிதினத்தந்தி :சாலை விபத்தில் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் உயிரிழந்தார். விழுப்புரம்- திண்டிவனம் சாலையில் தடுப்புச்சுவரில் கார் மோதிய விபத்தில் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் பலியானார்.
62 வயதான ராஜேந்திரன் விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்வாகி இருந்தார். இன்று காலை சென்னைக்கு வந்த போது, திண்டிவனம் அருகே எம்.பி பயணம் செய்த கார் விபத்துக்குள்ளானதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

காங்கிரஸ் தலைமையில் கூட்டணி அரசு: ஆய்வு முடிவு!

காங்கிரஸ் தலைமையில் கூட்டணி அரசு: ஆய்வு முடிவு!மின்னம்பலம் : வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு அமைய அதிக வாய்ப்புள்ளதாக ஆய்வு நிறுவனமான ஃபிட்ச் கணித்துள்ளது.
இன்னும் சில நாட்களில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேதியை இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவிக்கவுள்ளது. தேசிய அளவில் பாஜக, காங்கிரஸ் கட்சிகள் மட்டுமின்றி மாநிலக் கட்சிகளும் இம்முறை கூட்டணியமைத்து போட்டியிட தயாராகி வருகின்றன. தேர்தல் களம் நாளுக்கு நாள் சூடாகி வரும் நிலையும் தேர்தல் கருத்துக்கணிப்புகளும் வெளியாகிப் பரபரப்பைக் கூட்டி வருகின்றன.

எச் ராஜா இடத்தில் கமல்ஹாசன்... தொடரும் ஆரிய சேவைகள்

எசப்பாட்டு: எச் ராஜா இடத்தில் கமல்ஹாசன்?மின்னம்பலம் : தனியன் : வாரிசு அரசியலை எதிர்த்துப் போராட வரத் தயாரா என்று ராகுல் காந்தியிடம் கமல் நேரில் சென்று அழைப்பு விடுத்தபோது எடுத்த படம்தான் மேலே நீங்கள் காண்பது.
வர்ண பேதம் பார்த்துதான் கமல் வாரிசு அரசியலை எதிர்ப்பார்போல.
இல்லாவிட்டால் காஷ்மீர் பிராமண குடும்பத்து ஐந்தாம் தலைமுறை அரசியல் வாரிசிடம் வாயெல்லாம் பல்லாக இளித்தவர், கலைஞருக்கு எதிராகவும் அவரது முதல் தலைமுறை அரசியல் வாரிசுக்கு எதிராகவும் இவ்வளவு வன்மம் கக்குவது ஏன்?
வாரிசு அரசியல் என்கிற அளவுகோலை வைத்து அளப்பதாக இருந்தால் ராகுல், ஸ்டாலின் இருவரையும் அல்லவா கமல் எதிர்க்க வேண்டும்? நிராகரிக்க வேண்டும்?
மாறாக ராகுலை ஆதரித்தபடி ஸ்டாலினுக்கு எதிராக மட்டும் வாரிசு அரசியல் குற்றச்சாட்டு வைப்பது என்ன விதமான அரசியல் அறம்? இதைச் சுய சாதிப் பாசம் என்று ஏன் சொல்லக் கூடாது?
இதைத்தானே அதே செட்டிநாட்டு வட்டார இன்னொரு பிராமண குலதிலகமான எச். ராஜா இத்தனை காலமாகத் தமிழக அரசியலில் செய்து வந்தார்?

சவுக்கு சங்கர் : அதிமுக-பாமக-பாஜக கூட்டணி வெற்றிக் கூட்டணியா ?

ராகுல் காந்தி : காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து: உறுதியளித்த ராகுல்காந்திzeenews.india.com :இன்று காலை திருப்பதி சென்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சாமி தரிசனம் செய்தார்.
பின்னர் அங்கு நடைபெற்ற பொதுகூட்டத்தில் பங்கேற்று பேசினார். அப்பொழுது அவர் பேசியதாவது, 2014 பொதுத்தேர்தலில் திருப்பதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி ஏராளமான வாக்குறுதிகளை அளித்தார். அதில் ஒன்று ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து. ஆனால் இதுவரை ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்த்தை மோடி அரசு வழங்கவில்லை. ஆந்திர மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் மோடி அரசு தோல்வி அடைந்துள்ளது.
அவர்கள் வெறும் பொய்யான வாக்குறுதி மட்டும் தான் கொடுப்பார்கள். ஆனால் ஆந்திரா மக்களுக்கு விரைவில் நல்லது நடக்கப்போகிறது. மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தவுடன் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் அதை யாராலும், எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. இது உறுதி என ராகுல்காந்தி பேசினார்.<

மாபா பாண்டியராஜன் : நீட் ஒரு தேர்தல் பிரச்சனையும் அல்ல.. இந்தியா டு டே க்கு பேட்டி


A Sivakumar : நீட் விவகாரம் தொடர்பாக கேள்வி கேட்கப்படுகிறது.
அது தொடர்பாக பதிலளிக்கும் மாநில அமைச்சர்...அவர்களுடைய அரசால் இயற்றப்பட்ட நீட் விலக்கு சட்ட மசோதாக்களை பற்றி வாயே திறக்கவில்லை.
நீட் ஒரு தேர்தல் பிரச்சனையும் அல்ல என்று ஆணவமாக புறந்தள்ளுகிறார்.
அதனோடு சேர்த்து...இரண்டு பொய்களையும் அடித்து விடுகிறார்.
பொய் 1:
கல்வி பொதுப்பட்டியலுக்கு போனது குறித்தது. அதற்கு திமுக சார்பாக பேசிய திரு.பழனிவேல் தியாகராஜன் பதில் சொல்லிவிட்டார்
பொய் 2:
காங்கிரஸ் திமுக அரசு தான் நீட்டை நுழைத்தது என்ற வழக்கமான பொய் தான் அது.
காங்கிரஸ் கொண்டு வந்த நீட் தேர்வை வேண்டாம் என்று ஒதுக்க மாநிலங்களுக்கு உரிமையளித்தே நீட் கொண்டு வரப்பட்டது. மத்தியில் காங்கிரசும் மாநிலத்தில் திமுகவும் ஆளும் வரை தமிழகத்தில் நீட் நுழையவில்லை.
ஏன் ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை மத்தியில் பாஜக ஆட்சி வந்த பின்பும் நீட் நுழையவில்லை.

வெள்ளி, 22 பிப்ரவரி, 2019

உலகின் பத்து சிறந்த ஆசிரியர் தேர்வுக்கு ஈழத்தமிழ் ஆசிரியை .. அவுஸ்திரெலியா

வீரகேசரி :தமிழ் பெண் உலகின் சிறந்த ஆசிரியர் என்ற கௌரவத்தைப் பெறுகிறார் ஈழத்
தமிழ் பெண் உலகில் சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ள ஆசிரியர்களில் முதல் பத்து இடங்களுக்குள் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த வரலாறு மற்றும் சமூக கலாச்சார ஆசிரியராகக் கடமையாற்றும் யசோதை செல்வக்குமரன் என்ற ஈழத் தமிழ் பெண் தெரிவாகியுள்ளார்.
 அவருக்கு ஒரு மில்லியன் டொலர் பணத்துடன் வார்கீ பவுண்டேசன் ( Varkey Foundation ) என்ற அமைப்பின் உலகின் சிறந்த ஆசிரியர் என்ற கௌரம் வரும் மார்ச் 24ஆம் திகதி வழங்கப்படவுள்ளது. இந்தப் பரிசு, ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் நோபல் பரிசு என பத்திரிகைகளால் குறிப்பிடப்பட்டுகிறது.

எட்டாம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சியால் கல்வித் தரம் கெட்டுவிட்டதா? - முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி

நந்தினி வெள்ளைச்சாமி THE HINDU TAMIL :
இந்தியா முழுவதும் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி 1 முதல் 8-ம் வகுப்பு வரை மாணவர்களை கட்டாயத் தேர்ச்சி செய்யும் முறை இப்போது அமலில் உள்ளது. இதனால் கல்வித்தரம் பாதிக்கப்படுவதாகக் கூறி, 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவதற்கான சட்டத்திருத்தத்தை கடந்த நாடாளுமன்றக் குளிர்கால கூட்டத்தொடரில் மத்திய அரசு கொண்டு வந்தது.
இந்த சட்டத்திருத்தத்தை அமல்படுத்த தமிழக அரசு முடிவெடுத்துள்ளதாகத் தகவல் வெளியானது. தமிழகத்தில் கட்டாயத் தேர்ச்சியை ரத்து செய்தால் கிராமப்புற மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும், இடை நிற்றல் உயரும் என ஆசிரியர்கள், கல்வியாளர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், பொதுத்தேர்வு முறையை நடப்பாண்டில் அமல்படுத்த அரசு ஆணை ஏதும் பிறப்பிக்கவில்லை என்று தெரிவித்தார். தமிழகம் மாதிரியான கல்வியில் முன்னோடி மாநிலம் ஏன் 5, 8 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வை எதிர்க்கிறது என்பது குறித்து, முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சரும், திமுக எம்எல்ஏவுமான தங்கம் தென்னரசுவிடம் பேசினோம்.
கல்வியாளர்கள் மற்றும் சமூக வலைதளங்களில் எதிர்ப்பு எழுந்ததும், 5, 8-ம் வகுப்புகளுக்கு நடப்பாண்டில் பொதுத்தேர்வு இல்லையென்றிருக்கிறார் அமைச்சர். இந்த அறிவிப்பு போதுமா?

கடலூரில். வகுப்பறைக்குள் ஆசிரியை சரமாரி வெட்டி கொலை!

அலறி கூச்சல் தொடர்ந்து தொந்தரவு tamioneindia-Hemavandhana | கடலூர்: ஆசிரியை ரம்யாவை இ:ளைஞர் ஒருவர் பள்ளி வளாகத்திலேயே வெட்டி கொலை செய்து தப்பி ஓடிவிட்ட சம்பவம் கடலூர் மாவட்டத்தையே அதிர வைத்துள்ளது.
குறிஞ்சிப்பாடி பகுதியை சேர்ந்தவர் ரம்யா. 23 வயதாகிறது. இவர் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார். ரம்யா இன்று காலை 8 மணி அளவில் வீட்டில் இருந்து ஸ்கூலுக்கு சென்றார். சீக்கிரமாகவே ஸ்கூலுக்கு வந்துவிட்டதால், மற்ற ஆசிரியர்கள் உட்பட யாருமே அங்கு இல்லை. அதனால் பள்ளி வளாகத்திலேயே ரம்யா தனியாக நின்று கொண்டிருந்தார். அப்போது திடீரென உள்ளே நுழைந்த ஒரு இளைஞர், தனியாக நின்று கொண்டிருந்த ரம்யாவை பலமாக தாக்கினார்.
இதனால் ரம்யா நிலைதடுமாறி கீழே விழுந்தார். உடனே அந்த இளைஞர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ரம்யாவின் கழுத்தை அறுத்தார். இதனால் சம்பவ இடத்திலேயே ரம்யா பரிதாபமாக விழுந்து இறந்தார்.

திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு

தினகரன் : சென்னை : மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் இந்திய
யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் காதர் மொய்தீன் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது.

ரஜினிகாந்த் விஜயகாந்தை சந்தித்ததில் துளிகூட அரசியல் கிடையாது-

உடல்நலக்குறைவு காரணமாக அமெரிக்காவில் சுமார் 2 மாத காலம்
தங்கியிருந்து சிகிச்சை பெற்ற தேமுதிக தலைவர் விஜயகாந்த், சிகிச்சை முடிந்து கடந்த 16ம் தேதி சென்னை திரும்பினார்.
வீட்டில் தொடர்ந்து ஓய்வெடுத்து வரும் விஜயகாந்தை பல்வேறு தலைவர்கள் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர். தற்போது பாராளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரமடைந்திருப்பதால், ஒவ்வொரு தலைவரின் சந்திப்பும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
அவ்வகையில் இன்று நடிகர் ரஜினிகாந்த், விஜயகாந்தை சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து நலம் விசாரித்தார். ஆனால் இந்த சந்திப்பும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கலாம் என பேசப்பட்டது.

விஜயகாந் ஸ்டாலின் சந்திப்பு .. நலம் விசாரித்தார் .. அரசியல் இல்லை என்று ஸ்டாலின் அறிவிப்பு

மாலைமலர் :அரசியலுக்காக தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்திக்கவில்லை என
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்தை, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று சந்தித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தலைவர் கலைஞர் மீது அளவுகடந்த அன்பும் பக்தியும் கொண்டவர் தேமுதிக தலைவர் விஜயகாந்த். கலைஞர் மறைவு குறித்த செய்தி கேட்டு, வெளிநாட்டில் இருந்தபடி கண்ணீர் விட்டு அழுதது மறக்க முடியாது.
என்னை எப்போதும் அண்ணன் என்றுதான் அழைப்பார். இன்று அரசியல் பேசுவதற்காக அவரை சந்திக்கவில்லை.

அனில் அம்பானியை கைவிட்ட முகேஷ் அம்பானி .. காத்திருக்கும் சிறை... கரை சேர்வாரா?

vikatan.com -mukilan : இப்படியான நிதி நெருக்கடியில் சிக்கிக்கொண்டிருக்கும் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் டிஃபென்ஸ் லிமிடெட் நிறுவனம், ரஃபேல் விமானத்தைத் தயாரிக்கும் ஒப்பந்தத்தில் எப்படிச் சேர்த்துக்கொள்ளப்பட்டது என்ற கேள்வியும்
எழாமலில்லை.
து 2006-ம் ஆண்டு, அமெரிக்காவின் பிரபல பிசினஸ் பத்திரிகையான `ஃபோர்ப்ஸ்' வெளியிட்ட இந்தியப் பணக்காரர்கள் பட்டியலில் 14.8 பில்லியன் டாலர் சொத்துமதிப்புடன் மூன்றாவது இடத்தில் இருந்தார் அனில் அம்பானி. ஆனால், இன்று அவரது ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்தின் வீழ்ச்சியும், அதனால் ஏற்பட்ட கடனும் அவரை சிறைக்கம்பிகளுக்குப் பின்னால் தள்ளும் அளவுக்கு அச்சுறுத்திக்கொண்டிருக்கின்றன. 
ரிலையன்ஸ் குழுமத்தின் நிறுவனரான திருபாய் அம்பானியின் மறைவுக்குப் பிறகு, முகேஷ் அம்பானியும் அனில் அம்பானியும் இணைந்து நிறுவனத்தைக் கவனித்துவந்தனர். என்றாலும், நிர்வாக விஷயங்களில் ஆரம்பக்காலம் தொட்டே மூத்த சகோதரரான முகேஷ் அம்பானியின் கையே ஓங்கியிருந்தது. இந்த நிலையில், அனிலின் அரசியல் ஆர்வம், சமாஜ்வாதிக் கட்சியின் ஆதரவுடன் எம்.பி-யானது, பிறகு இரண்டே வருடத்தில் அந்தப் பதவியை ராஜினாமா செய்தது போன்றவை எல்லாம் ரிலையன்ஸ் நிறுவனத்தின் இமேஜை பாதிக்கும் வகையில் இருப்பதாக முகேஷ் கருதினார். இதனால், ஒருகட்டத்தில் நிறுவனத்தின் ஒட்டுமொத்த நிர்வாகத்தையும் தனது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்தார். முகேஷ் அம்பானியின் சம்மதம் இல்லாமல் அனில் தன்னிச்சையாக எதையும் நிறுவனம் சார்பில் செயல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. 

விநியோகஸ்தர்கள், பைனான்ஸியர்களான கதை!

விநியோகஸ்தர்கள், பைனான்ஸியர்களான கதை!மின்னம்பலம் : தமிழ் சினிமா 365: பகுதி - 44 இராமானுஜம்
தமிழ் சினிமாவில் அவரவர் துறைக்குள் மட்டுமே தொழில் ரீதியாக பயணித்துக் கொண்டிருந்த போது தொழில் ரீதியான பைனான்சியர்கள் சினிமாவுக்கு கடன் கொடுப்பதை குறைத்துக் கொண்டனர்.
இவர்களைப் பொறுத்தவரை ஒரு படத்திற்கு நெகட்டிவ் பைனான்ஸ் மட்டுமே கொடுப்பார்கள். படம் வெளியீட்டுக்கு முதல் நாள் அசலும் - வட்டியும் கொடுக்கப்பட்டு பைனான்சியரிடம் NOC பெறப்பட்டு பிலிம் லேபரட்ரியில் கொடுத்தால் மட்டுமே படம் ரிலீஸ் என்பது உறுதியாகும்.
நெகட்டிவ் பைனான்ஸ் வாங்கிய தயாரிப்பாளர் ஏரியா உரிமை, வெளிநாட்டு உரிமை, தொலைக்காட்சி உரிமை என எல்லாவற்றையும் தனித்தனியாக அடமானம் வைத்து கடன் வாங்கியிருப்பாரேயானால் நெகட்டிவ் பைனான்சியர் டம்மியாகி விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்களுடன் பேச வேண்டிய நிலை ஏற்படும்
அப்பத்தை பங்கு போட்டது போல் படத்திற்கு ஏரியா உரிமை விற்பனை செய்ததில் கிடைத்த தொகையை வைத்து மொத்த கடனையும் அடைக்க முடியவில்லை என்றால் மொத்த கடன் அதில் யார் எவ்வளவு கொடுத்திருக்கின்றார்களோ அதற்கு ஏற்ப சதவீதம் கணக்கிடப்பட்டு கடன் தொகை திருப்பிக் கொடுக்கப்படும்.

திமுக கூட்டணியில் இடதுசாரிகள், மதிமுக, விசிக கேட்கும் தொகுதிகளும் சாத்திய கூறுகளும்

கூட்டணி தலைவர்கள் - மு.அப்துல் முத்தலீஃப் /tamil.thehindu.com : திமுக கூட்டணியில் இடதுசாரிக்கட்சிகள், மதிமுக, விசிகே, முஸ்லீம் லீக் கேட்கும் தொகுதிகள் மற்றும் திமுக நிலைப்பாடு குறித்த ஒரு அலசல்.
2019 நாடாளுமன்ற தேர்தலில் திமுக, அதிமுக தலைமையில் கூட்டணி அமைய உள்ளது. டிடிவி தினகரன், கமல்ஹாசன் தனியாக போட்டியிடுகின்ற நிலையில் உள்ளனர். சீமான், பண்ருட்டி வேல்முருகன், மமக உள்ளிட்ட கட்சிகளும் முடிவெடுக்கவேண்டிய நிர்பந்தத்தில் உள்ளனர். தேமுதிக, தமாகா எந்தப்பக்கம் என மதில் மேல் பூனையாக உள்ளனர். அதிமுக தேர்தல் கூட்டணியை கிட்டத்தட்ட உறுதிப்படுத்திவிட்டது. அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக இணைந்துள்ளனர். இதுதவிர சிறிய கட்சிகளும் இணைய உள்ளனர். தேமுதிக, தமாகா, சரத்குமார் உள்ளிட்டோருடன் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.
திமுக தேர்தலுக்காக கூட்டணி என தனியாக அமைக்கவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக திமுகவுடன் மக்கள் பிரச்சினைகளுக்காக தோளோடு தோள் நின்று போராடிய தோழமைக்கட்சிகளே தற்போது கூட்டணி காண உள்ளன. இதில் காங்கிரஸுக்கு திமுக 9 மற்றும் பாண்டிச்சேரி ஒரு தொகுதி என 10 தொகுதிகளை ஒதுக்கிவிட்டது.

கனிமொழி, தமிழிசை, ராதிகா: தூத்துக்குடியில் மும்முனை போட்டி.. ?

வெப்துனியா :தமிழகம் முழுவதும் இன்றைய சூழ்நிலையில் அதிமுக, திமுக என இரண்டு முனை போட்டி மட்டுமே இருந்து வரும் நிலையில் தூத்துகுடியில் மட்டும் மும்முனை போட்டி என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.,
ராஜ்யசபா எம்பி பதவிக்காலம் முடிவடையவுள்ளதால் வரும் மக்களவை தேர்தலில் போட்டியிடும் முடிவை எடுத்த கனிமொழி, கடந்த ஒரு வருடமாகவே தூத்துகுடி தொகுதியை குறிவைத்து அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த ஒரு வருடத்தில் அவர் பலமுறை தூத்துகுடி சென்று அத்தொகுதியின் மக்களை சந்தித்து வருகிறார். அதேபோல் தொலைக்காட்சி தொடர்களில் மூலமும், சரத்குமார் கடந்த முறை தேர்தலில் போட்டியிட்டபோது பிரச்சாரம் சென்ற வகையிலும் நடிகை ராதிகா தூத்துகுடி தொகுதியில் ஏற்கனவே பிரபலம். இந்த பிரபலத்தை பயன்படுத்தி அவரும் அந்ட தொகுதியில் களமிறங்கவுள்ளார்.

விஜயகாந்த் கட்சிக்கு 5 தொகுதிகள் ..அதிமுக கூட்டணி உறுதியானது ... திருநாவுக்கரசர் உபயம்?

திடீர் திருப்பம் விஜயகாந்த் இல்லம் tamil.oneindia.com/authors/veerakumaran : கூட்டணி விவகாரத்தில் தேமுதிக எப்பவுமே இப்படித்தான் !- வீடியோ சென்னை: விஜயகாந்த்தின் தேமுதிகவிற்கு திமுக தரப்பிலிருந்து, காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான திருநாவுக்கரசர் மூலமாக தூதுபோனதால் அதிர்ச்சியடைந்துள்ள அதிமுக, தனது பிடிவாதத்தை தளர்த்திக் கொண்டுள்ளது.
பாஜக, பாமக, அதிமுக ஆகிய கட்சிகள் அடங்கிய கூட்டணியில் தேமுதிகவையும் கொண்டுவந்துவிட்டால், அந்த கூட்டணி முழுமை பெற்றுவிடும் என்று அக்கட்சிகள் நினைக்கின்றன.
ஆனால் தேமுதிகவுக்கு 2 தொகுதிகள் மட்டுமே வழங்க முடியும் என அதிமுக கூறிவிட்டது.
விஜயகாந்த் இல்லம் 3 நாட்கள் முன்பாக, அதிமுகவுடன் கூட்டணி அறிவிப்பு வெளியிடுவதற்காக, மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சென்னை வந்திருந்தபோது, விஜயகாந்த் இல்லத்திற்கு சென்று, அவரிடம் நலம் விசாரித்தார். அப்போது, தேமுதிக நிர்வாகி சுதீஷிடமும் தனியாக அவர் பேசினார். ஆனால் இதுவரை பாஜக, அதிமுக அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணியில் தேமுதிக இணையவில்லை.

வெளிநாடுவாழ் இந்தியர்கள் ஆன்லைனில் வாக்களிக்க முடியாது தேர்தல் கமி‌ஷன்

thinathanthi : புதுடெல்லி, வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் ஆன்லைனில் வாக்களிப்பது தொடர்பான சட்டம் நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால், இது மாநிலங்களவையில் நிறைவேற்றப்படவில்லை. இதனால் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் ஆன்லைனில் வாக்களிப்பது தொடர்பாக குழப்பம் நிலவியது. இதற்கு இந்திய தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் ஆன்லைனில் வாக்களிக்க முடியாது. அவர்கள் தங்கள் மாநிலங்களுக்கு சென்று தங்களது வாக்குப்பதிவு மையங்களில் தான் வாக்களிக்க முடியும். அப்போது பாஸ்போர்ட்டை காட்டித்தான் வாக்களிக்க வேண்டும் என தெரிவித்து உள்ளது.

அமைச்சர் வீரமணி வீட்டில் ரெய்டு- பின்னணியில் எடப்பாடி!

டிஜிட்டல் திண்ணை: அமைச்சர் வீரமணி  வீட்டில் ரெய்டு- பின்னணியில் எடப்பாடி!மின்னம்பலம் : “வணிக வரித்துறை, பத்திரப் பதிவுத் துறை என வளமானத் துறைகளை கவனித்துவரும் அமைச்சர் வீரமணி வீடு, அலுவலகங்களிலும், அவரது உறவினர், நண்பர்கள் வீடுகளிலும் இன்று காலை 7 மணி முதல் வருமான வரித்துறை அதிரடி ரெய்டு இன்று நடந்திருக்கிறது.
அதிமுக-பாஜக கூட்டணி அமையவில்லை என்றால் மத்திய உளவுத்துறையான ஐ.பி மூலமாகத் தமிழக எம்.எல்.ஏ. எம்.பி, அமைச்சர்கள்,முக்கிய எம்.எல்.ஏ,களின் சொத்து விபரங்களைச் சேகரித்து ரெய்டு நடத்துவோம் என்று பாஜக தலைமை மிரட்டல் விட்டதாக மின்னம்பலத்தில் ஏற்கனவே எழுதியிருக்கிறோம். ஆனால் பாஜக சொன்னபடி அதிமுகவும் கூட்டணிக்கு ஒப்புக்கொண்டு, ஒப்பந்தமும் கையெழுத்தான நிலையில் அமைச்சரைக் குறிவைத்து ரெய்டுகள் நடப்பது அதிர்ச்சியாகத்தான் பார்க்கப்படுகிறது அதிமுக வட்டாரத்தில்.

கமலஹாசனின் flashback ..சரிகா மாடியில் இருந்து விழுந்த சரித்திரம் .. துரோகங்களால் துரத்தப்பட்ட சரிகா

சரிகா .கமலை பிரிந்த பின்பு நடித்த பர்சானியா
வாணி கமல்
Kamal began his relationship with Sarika even before he was legally separated from Vani. 
He married Sarika in 1988 and applied for divorce in 2002. 
The deal-breaker was Kamal’s alleged affair with his then co-star Simran. 
In 2004, the couple got divorced, thus ending 17 years of marriage. They have two children — Shruti Haasan and Akshara Haasan 
சிம்ரன்  கமல்
கௌதமி கமல்
கமலஹாசனின் இரண்டாவது மனைவியும்  இரு குழந்தைகளின் தாயுமான நடிகை சரிகாவின் வாழ்க்கை பல துயரமான பக்கங்களை கொண்டிருக்கிறது. வாழ்க்கை முழுவதும் மிகவும் மோசமான துரோங்களை சந்தித்து இருக்கிறார். கோடிக்காணக்கான சொத்துக்களை சம்பாதித்தவர் இன்று மீண்டும் சொந்த வீடுகளை இழந்து வாடகை வீட்டில் வசிக்கிறார்.
திரை வெளிச்சத்தின் முன்னே ஜொலித்த சரிகா அவரது தாயின் பணம் காச்சி மரமாக இருந்து கொடுமைகளை அனுபவித்தார் .
அந்த கொடுமைகளில் இருந்து ஒரு மீதி கிடைத்து விட்டது . என்னை மீட்ட தேவன் வந்துவிட்டான் என்று எண்ணி கமலஹாசனின் காதலில் தன்னை மறந்தார் ..
இவரது தாயின் பெயரும் கமல்.. கணவனின் பெயரும் கமல்
இனிமையாக வாழ்க்கை ஆரம்பித்தது .. ஆனால் அது நிலைக்கவில்லை. கமலஹாசனின் சதா சபல மனம் வேறோறொரு நடிகையை நாடியது.
இதனால் மனமொடிந்த சரிகா வீட்டில் புயல் வீசியது . ஆனால் ஊடகங்கள் கடுமையான மௌன விரதத்தை கடைப்பிடித்தன.
இந்த நிலையில் ஒரு நாள் சரிகா வீட்டின் மொட்டை மாடியில் இருந்து கீழே விழுந்தார் .. முதுகெலும்பில் பெரிய பாதிப்பு ஏற்பட்டது . சென்னையில் ஒரு மருத்துவமனையில் சுமார் மூன்று மாதங்கள் சிகிச்சை பெற்றார் .பின்பு மும்பைக்கு கொண்டு செல்லப்பட்டு இரு ஆபரேஷன்கள் செய்யப்பட்டன.
அதன் பின் சில வருடங்கள் தங்கள் குழந்தைகளின் நலனை உத்தேசித்து இருவரும் ஒற்றுமையாக இருப்பதாக செய்திகள் உலாவின.
எந்த காலத்திலும் சரிகா எப்படி மாடியில் இருந்து விழுந்தார் ,,யார் தள்ளி விழுந்தினார்கள் என்பது பற்றியெல்லாம் எந்த வித விசாரணையும் இடம்பெறவில்லை.
போலீசும் நீதிமன்றமும் அவாள் கட்டுப்பாட்டில் ஆச்சே?

வியாழன், 21 பிப்ரவரி, 2019

கீழடியில் மத சின்னங்களோ, கடவுள் சின்னங்களோ ஒன்று கூட இல்லை... தமிழரின் வாழ்வியலை எடுத்துக்காட்டுகிறது

செஸ் காயின்
சுடுமணல்தாயக்கட்டை
Karthikeyan Fastura :தமிழை ஆதியில் இருந்து
இதுவரை சொல்லப்பட்ட அனைத்து வரலாற்றையும் திருப்பிப்போடும் சான்றுகள் வந்துவிட்டன. கீழடி ஆய்வில் கிடைத்த பொருட்கள் செப்பேடுகளோ, மன்னர்கள் செதுக்கி வைத்த கல்வெட்டுக்களோ அல்ல. சாமானியர்களின் கைவண்ணங்கள், மொழிக்குறிப்புகள். வாணிப சான்றுகள்.
தோண்டி எடுத்து பார்த்தால்
சாதியும் இல்லை, மதமும் இல்லை. சமிபத்தில் மதுரையில் நிகழ்ந்த தொல்லியல் திருவிழாவில் கீழடி ஆய்வு குறித்து மிக விரிவாக பேசப்பட்டது.
இதில் எங்கேயும் சிவன் இல்லை முருகன் இல்லை வேறு எந்த மத சின்னங்களோ, கடவுள் சின்னங்கள் ஒன்று கூட இல்லை. சாதிய அடையாளங்கள் ஒன்று கூட இல்லை. வாழ்க்கையும், கலையும், கொண்டாட்டமும் தான் இருந்திருக்கிறது. தமிழ் மொழி சித்திரக்கோடுகளாக இருந்திருக்கிறது.
விளையாட்டு பாண்டங்கள் கிடைத்திருக்கிறது. Dice எனப்படும் கனசதுர சதுரங்க கல், தாயக் கட்டைகள், செஸ் காயின்கள் கிடைத்திருக்கிறது. இவை அனைத்தும் 2200 வருடங்களுக்கு முன்பு உள்ளவை. எனக்கு ஆச்சரியத்திலும் ஆச்சர்யம் இது தான்.

திருநாவுக்கரசர் விஜயகாந்த்தை சந்தித்து தரகுவேலை பார்ப்பது எந்த கட்சிக்காக?

Thirunavukarasar met Vijayakanth- a few questionsThirunavukarasar met Vijayakanth- a few questionstamil.oneindia.com - sherlinsekar-lekhaka. : சென்னை: தேர்தலுக்கான நாட்கள் நெருங்க நெருங்க அகில இந்திய அளவிலும் மாநில அளவிலும் கட்சிகள் கூட்டணியை கட்டமைப்பதில் அதி தீவிரமாக உள்ளன.
தமிழகத்தை பொறுத்தவரை இரு தேசிய கட்சிகளும் யாருடன் கூட்டணி என்பதுவும் எத்தனை தொகுதிகள் என்பதுவும் முடிவாகிவிட்டது. இந்த நிலையில் பாமக யாருடன் என்ற கேள்வி தொடர்ந்து எழுந்துவந்த நிலையில் அவர்கள் அதிமுக அணி என்று முடிவானதுடன் 7+1 என்று தொகுதிகளையும் பெற்று பெருமகிழ்ச்சியில் உள்ளனர். அதே வேளையில் விஜயகாந்தின் தேமுதிக யாருடன் கூட்டணி அமைக்கும் என்ற கேள்வி தொடர்ந்து எழுப்பப் பட்டு வருகிறது. அவர்கள் அதிமுக அணியில்தான் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படும் சூழலில் அங்கு சேர்ந்தால் 3 அல்லது 4 தொகுதிகள்தான் கிடைக்கும் என்ற சூழலே நிலவி வருகிறது.
ஆனால் பாமகவை விட குறைந்தது ஒரு தொகுதியாவது அதிகமாக தந்தால்தான் நாங்கள் கூட்டணிக்கு வருவோம் என்று தேமுதிக பிடிவாதமாக உள்ளது. இதனால் பாஜகவின் உதவியை நாடிய அதிமுக மத்திய அமைச்சர் பியுஸ் கோயலை வைத்து பேச வைத்தது. இருந்தாலும் விஜயகாந்த் தரப்பினர் படியவில்லை.

பாகிஸ்தானுக்கு பாயும் நதிநீரை தடுக்க மத்திய அரசுக்கு அதிகாரம் உண்டா? வெறும் தேர்தல் தந்திரமா?

பாகிஸ்தானுக்கு பாயும் நதிநீரை தடுக்க மத்திய அரசு முடிவு! zeenews.india.com: இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு பாயும் நதிநீரை தடுத்து நிறுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்!
இந்துஸ் நீர் ஒப்பந்தத்தின்படி ஜெலும், செனாப், இந்துஸ் நதி நீர் பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டு வருகிறது.  இந்தியாவில் உற்பத்தியாகி பாகிஸ்தான் வழியாக சென்று அரபிக் கடலில் கலக்கும் இந்துஸ் நதியின் 80% நீரை பாகிஸ்தான் பயன்படுத்தி வருகிறது.
இந்நிலையில்,  தற்போது புல்வாமா மாவட்டம் அவந்திப்போரா பகுதியில் நடைப்பெற்ற பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு பாயும் நதிநீரை தடுத்து நிறுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

திமுக கூட்டணியில் இடதுசாரிகளுக்கு ஒதுக்கும் தொகுதிகள் எவை?

Left Parties Alliance with DMK, Tamil Nadu CPIM, CPI, திமுக கூட்டணிtamil.indianexpress.com :திமுக கூட்டணியில் இடம்பெற்ற இடதுசாரிகள் அடுத்தடுத்து அறிவாலயத்தில் திமுக குழுவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இடதுசாரிகளுக்கு ஒதுக்க திமுக ஆலோசிக்கும் தொகுதிகள் குறித்து தெரிய வந்திருக்கிறது.
2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதரக் கட்சிகளுக்கு சீட் ஒதுக்குவதற்கான பேச்சுவார்த்தையை திமுக குழு மேற்கொண்டு வருகிறது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் இன்று காலை அறிவாலயம் வந்தனர். அவர்கள் துரைமுருகன் தலைமையிலான திமுக பேச்சுவார்த்தைக் குழுவிடம் பேசினர்.
மார்க்சிஸ்ட் கட்சி கடந்த 2009-ல் அதிமுக கூட்டணியில் 3 தொகுதிகளைப் பெற்றது. அதேபோல இந்த முறை திமுக கூட்டணியிலும் 3 சீட்களை கேட்டதாக தெரிகிறது. குறிப்பாக கோயம்புத்தூர், மதுரை தொகுதிகளை பெறுவதில் மார்க்சிஸ்ட் கட்சி ஆர்வம் காட்டி வருகின்றது.

அதிமுக கூட்டணியில் என்.ஆர்.காங். கட்சிக்கு புதுச்சேரி தொகுதி ஒதுக்கீடு

nrநக்கீரன் :நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக - என்.ஆர்.காங்கிரஸ் இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது.  அதிமுக சார்பில் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம்,  என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் ரங்கசாமி ஆகியோர் அதிமுக தலைமை அலுவலகம் வந்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.   என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது,.