சனி, 23 பிப்ரவரி, 2019

சவுக்கு சங்கர் : அதிமுக-பாமக-பாஜக கூட்டணி வெற்றிக் கூட்டணியா ?

00:00
00:41
Video Player
00:00
00:33
Video Player
00:00
01:21
Video Player
00:00
00:45
Video Player
00:00
02:20
Video Player
00:00
00:40
இதன் காரணமாகவே இந்த கூட்டணியை தவிர்க்க அன்புமணி முயற்சித்தார் என்று தகவல்கள் கூறுகின்றன.  கூட்டணி அறிவிக்கப்பட்டபோது கூட, அன்புமணியின் முகம் இறுக்கமாகவே இருந்தது.   இப்படி விமர்சித்துவிட்டு அன்புமணி, எந்த முகத்தோடு எடப்பாடியோடும், பன்னீர்செல்வத்தோடும் ஒன்றாக பிரச்சாரம் செய்யப் போகிறார் என்று புரியவில்லை.   “அரசியலில் கட்சிகள் மாறி மாறி கூட்டணி வைப்பது இயல்பான விஷயமே என்றாலும், பாமக தலைவர்கள் மற்றவர்களை விமர்சிக்க பயன்படுத்திய தடித்த வார்த்தைகளே அவர்கள் மீது இத்தனை விமர்சனம் எழக் காரணமாக இருக்கிறது” என்கிறார் மணி.
இதே போல, எடப்பாடி மிக பிடிவாதமாக செயல்படுத்த முயன்ற சேலம் 8 வழிச் சாலையை இரு ராமதாஸ்களும் தீவிரமாக எதிர்த்தார்கள்.  அன்புமணி, அப்பகுதிக்கு போராட்டம் நடத்த சென்றபோது, அப்போராட்டங்களுக்கு எடப்பாடி அரசு தடை விதித்தது.  நீதிமன்றம் மூலம் போராட்டத்துக்கு  அனுமதி பெற்ற பிறகு, தடை விதித்த தமிழக அமைச்சர்களை “அயோக்கிய பயல்கள்” என்று பேசினார் அன்புமணி.
பத்திரிக்கையாளர் லட்சுமி சுப்ரமணியம் இவ்வாறு குறிப்பிட்டார். “பாட்டாளி மக்கள் கட்சி, சேலம் 8 வழிச் சாலையை எதிர்த்து கடுமையாக போராடியது.  சேலம், தருமபுரி, திருவள்ளூர், காஞ்சிபுரம் பகுதிகளில், அதிமுகவோடு சேர்ந்து இக்கட்சி இப்போது எப்படி பிரச்சாரம் செய்யும்” என்று கேள்வி எழுப்புகிறார்.
சேலம் 8 வழிச் சாலையை கைவிடுகிறோம் என்று இதுவரை எடப்பாடி அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற விமர்சனங்களால்தான், அதிமுக-பாமக கூட்டணி முன்னெப்போதும் இல்லாத வகையில், சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
இதற்கு முன்பு, அதிமுக-பாமக கூட்டணி ஏற்பட்ட சமயங்களிலும், பாமகவினர், அதிமுக தொகுதிகளில் வேலை பார்க்கவில்லை.  அதிமுகவினர் பாமக தொகுதிகளில் வேலை பார்க்கவில்லை. 2009 தேர்தலில், இப்போது போலவே அதிமுக கூட்டணியில் 7 தொகுதிகளை பெற்ற பாமக ஏழிலும் தோற்றது. இம்முறை, குறிப்பாக, ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தது முதல், அதிமுக மீது வைத்த கடுமையான விமர்சனங்கள் வரை உன்னிப்பாக கவனித்து வரும், அதிமுக தொண்டன், இந்த கூட்டணிக்கு ஆதரவு அளிப்பானா என்பது சந்தேகமே.  மேலும், முன்பு போல இல்லாதவகையில், இம்முறை, அதிமுக தொண்டனுக்கு, டிடிவி தினகரன் என்ற ஆப்ஷன் உள்ளதை மறுக்க முடியாது.  மேலும், எடப்பாடி பழனிச்சாமியோ, பன்னீர்செல்வமோ, ஜெயலலிதா போன்ற பெரும் ஆளுமைகள் இல்லை என்பதையும் மறுக்க இயலாது.
பாமக நிறுவனர் ராமதாஸை கைது செய்த ஜெயலலிதா, அக்கட்சியை தடை செய்யும் அளவுக்கு போனார் என்பதையும் நாம் இந்நேரத்தில் மறந்தி விடக் கூடாது.   ஜெயலலிதா இவ்வாறு பேசியதையும், ராமதாஸை கைது செய்ததையும், பாமக தொண்டர்களொ, அதன் பிறகு பாமக தலைவர்கள், ஜெயலலிதாவையும், அதிமுகவையும் செய்த விமர்சனங்களை அதிமுக தொண்டர்களோ அத்தனை எளிதில் மறந்து விட மாட்டார்கள்
Video Player
00:00
00:44
இந்த கூட்டணிக்கு வன்னியர் மற்றும் கவுண்டர்களின் ஆதரவு இருக்கும் என்பது உண்மையே.  ஆனால், இதர கட்சிகளும் இதே சமூகத்தைச் சேர்ந்த வேட்பாளர்களையே நிறுத்தப் போகின்றன.  இதனால், இச்சமூகத்தின் வாக்குகள், ஒட்டுமொத்தமாக அப்படியே இக்கூட்டணிக்கு கிடைக்கும் என்றும் சொல்ல முடியாது.  இது தவிர, பெரும்பான்மை சமூகத்தை சேராத இதர சமூகங்களின் வாக்குகளும், குறிப்பாக தலித் சமூகத்தினரின் வாக்குகள் மற்றும், சிறுபான்மையினர் சமூகங்களின் வாக்குகள், இந்த கூட்டணிக்கு கிடைப்பதற்கான சாத்தியங்கள் குறைவே.
பத்து அம்ச கோரிக்கைகளை அளித்து, அதை ஏற்றுக் கொள்வதாக அதிமுக கூறியதாலேயே கூட்டணிக்கு ஒப்புக் கொண்டோம் என்று ராமதாஸ் கூறுவதை, பாமக தொண்டர்களே நம்ப மாட்டார்கள்.  ஒரு மூத்த பத்திரிக்கையாளர், 1996ம் ஆண்டு, மக்கள் மனதை புரிந்து கொள்ளாமல், அதிமுகவும் காங்கிரஸ் கட்சியும் வைத்த கூட்டணியை, மக்கள் முழுவதுமாக நிராகரித்தார்கள்.  இந்த கூட்டணிக்கும் அதே கதிதான் ஏற்படும் என்று கூறினார்.
அரசியல் கட்சிகள் போடும் கணக்குகளையும், கருத்துக் கணிப்புகளையும் மக்கள் பல நேர்வுகளில் நிராகரித்துள்ளார்கள். இந்தக் கூட்டணியும் அப்படி ஒரு தப்புக் கணக்கின் அடிப்படையிலேயெ என்று தோன்றுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக