வெள்ளி, 22 பிப்ரவரி, 2019

ரஜினிகாந்த் விஜயகாந்தை சந்தித்ததில் துளிகூட அரசியல் கிடையாது-

உடல்நலக்குறைவு காரணமாக அமெரிக்காவில் சுமார் 2 மாத காலம்
தங்கியிருந்து சிகிச்சை பெற்ற தேமுதிக தலைவர் விஜயகாந்த், சிகிச்சை முடிந்து கடந்த 16ம் தேதி சென்னை திரும்பினார்.
வீட்டில் தொடர்ந்து ஓய்வெடுத்து வரும் விஜயகாந்தை பல்வேறு தலைவர்கள் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர். தற்போது பாராளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரமடைந்திருப்பதால், ஒவ்வொரு தலைவரின் சந்திப்பும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
அவ்வகையில் இன்று நடிகர் ரஜினிகாந்த், விஜயகாந்தை சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து நலம் விசாரித்தார். ஆனால் இந்த சந்திப்பும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கலாம் என பேசப்பட்டது.

இந்நிலையில், விஜயகாந்துடனான சந்திப்பு குறித்து ரஜினிகாந்த் கூறியதாவது:- அமெரிக்காவில் சிகிச்சை பெற்று திரும்பி உள்ள நண்பர் விஜயகாந்தை சந்தித்து அவரது உடல்நலம் குறித்து விசாரித்தேன். அவர் நல்ல ஆரோக்கியமாக உள்ளார். அவரை சந்தித்ததில் மகிழ்ச்சி. இந்த சந்திப்பில் துளிகூட அரசியல் கிடையாது. நான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பியபோது என்னை சந்தித்து நலம் விசாரித்த முதல் நபர் விஜயகாந்த். அவர் நல்ல மனிதர். அவர் எப்போதும் ஆரோக்கியத்துடன் இருக்க ஆண்டவனை வேண்டுகிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக