வெள்ளி, 22 பிப்ரவரி, 2019

விஜயகாந் ஸ்டாலின் சந்திப்பு .. நலம் விசாரித்தார் .. அரசியல் இல்லை என்று ஸ்டாலின் அறிவிப்பு

மாலைமலர் :அரசியலுக்காக தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்திக்கவில்லை என
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்தை, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று சந்தித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தலைவர் கலைஞர் மீது அளவுகடந்த அன்பும் பக்தியும் கொண்டவர் தேமுதிக தலைவர் விஜயகாந்த். கலைஞர் மறைவு குறித்த செய்தி கேட்டு, வெளிநாட்டில் இருந்தபடி கண்ணீர் விட்டு அழுதது மறக்க முடியாது.
என்னை எப்போதும் அண்ணன் என்றுதான் அழைப்பார். இன்று அரசியல் பேசுவதற்காக அவரை சந்திக்கவில்லை.

மனிதாபிமான அடிப்படையில் உடல் நலம் குறித்து விசாரிக்கவே சந்தித்தேன். தற்போது அமெரிக்காவில் அவர் சிகிச்சை முடிந்து நல்ல முறையில் தேறி வந்திருக்கிறார். அவர் இன்னும் நல்லமுறையில் ஆரோக்கியத்துடன் நீண்ட காலம் மக்கள் பணியாற்ற வேண்டும் என வாழ்த்து தெரிவித்தேன். இவ்வாறு அவர் கூறினார். அப்போது திமுக கூட்டணிக்கு தேமுதிக வந்தால் ஏற்றுக்கொள்வீர்களா? என்று நிருபர்கள் கேட்டனர். இதற்கு பதிலளித்த ஸ்டாலின், ‘உங்கள் நல்ல எண்ணத்திற்கு பாராட்டுக்கள்’ என்று தெரிவித்துவிட்டு புறப்பட்டுச் சென்றார்<

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக