சனி, 23 பிப்ரவரி, 2019

சத்திரியனாக இருப்பதைவிட சாணக்கியனாக இருப்பது முக்கியம்: தொண்டர்களுக்கு அன்புமணி

பெண்களின் வாயை மூடுவதற்கு அவர்களை வேசி என்று சொல்லு! 
மக்களின் வாயை மூடுவதற்கு அவர்களை துரோகி என்று சொல்லு - சாணக்கியன் கூறியது இதுதான்!
இதைத்தான் பாஜகவும் செய்கிறது தற்போது ராமதாசும் கூறுகிறார்! 
tamil.thehindu.com- எஸ்.நீலவண்ணன் : சத்திரியனாக இருப்பதைவிட சாணக்கியனாக இருப்பது முக்கியம் என, தொண்டர்களுக்கு பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவுரை வழங்கியுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம், வானூர் அருகே பட்டானூரில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் இன்று (சனிக்கிழமை) பாமக சிறப்பு பொதுக்கூழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது: தேர்தல் கூட்டணி முடிவை சிலர் விமர்சிக்கிறார்கள். கட்சியின் வயதில் திமுக, அதிமுகவுக்கு அடுத்து பாமக  உள்ளது. நம் கட்சியின் நோக்கம் தமிழகம் முன்னேற வேண்டும். ஆட்சிக்கு வந்தால் தான் நம் இலக்கை எட்டமுடியும். புகையிலைக்கு எதிராக தொடர்ந்து போராடி வந்தோம். ஆனால், பதவிக்கு வந்தவுடன் பொது இடங்களில் புகை பிடிக்ககூடாது என்று ஆணையிட்டோம். தமிழகத்தில் பாமக ஆட்சிக்கு வருவது உறுதி. இது காலத்தின் கட்டாயம்.

2011-ம் ஆண்டு தனித்து போட்டி என முடிவெடுத்து அதை தைரியமாக செயல்படுத்தினோம். இந்த தைரியம் தமிழகத்தில் எந்த கட்சிக்கும் இல்லை. பூரண மதுவிலக்கு வேண்டும் என்று தொடர்ந்து வலியிறுத்தினோம். இதனை ஜெயலலிதா உள்ளிட்ட அனைத்து கட்சித் தலைவர்களும் ஏற்றுக்கொண்டனர்.
தனித்து போட்டி என்று அறிவித்து கடந்த காலங்களில் போட்டியிட்டோம். மக்கள் நமக்கு கொடுத்தது 6 சதவீத வாக்குகள் தான். நம் இலக்குகளை அடைய சூழலுக்கேற்ப வியூகங்களை அமைக்க வேண்டும். அந்த அடிப்படையில் தான் ராமதாஸ் இந்த முடிவு எடுத்துள்ளனர். ஜூலை மாதம் உள்ளாட்சி தேர்தலில் நாம் அதிக இடங்களை பெறுவோம். அறிவிப்பு மட்டுமே செய்ய வேண்டும்.
நேற்று தைலாபுரத்தில் முதல்வரும், துணை முதல்வரும் ராமதாஸிடம் ஆசி பெற்றார்கள். இது நமக்கு கிடைத்த மரியாதை. பாமக எந்த கொள்கையையும் விட்டு கொடுக்காமல் 10 அம்ச கோரிக்கையோடு தான் அதிமுக கூட்டணியில் இணைந்துள்ளது. அதிமுகவுடன் இணைந்து இக்கோரிக்கைகளுக்கு குரல் கொடுத்தால் எளிதில் நம் கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றும். சத்திரியனாக இருப்பதைவிட சாணக்கியனாக இருப்பது முக்கியம்.
89 எம்எல்ஏக்களை கொண்டுள்ள திமுகவால் செய்யமுடியாததை ஒரு எம்எல்ஏகூட இல்லாத பாமகவால் செய்யமுடியும். இக்கூட்டணி அமைக்கப்பட்டதால் பாமக தன் கொள்கையிலிருந்து எள்ளளவும் பின்வாங்கவில்லை.
இவ்வாறு அன்புமணி பேசினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக