வெள்ளி, 22 பிப்ரவரி, 2019

உலகின் பத்து சிறந்த ஆசிரியர் தேர்வுக்கு ஈழத்தமிழ் ஆசிரியை .. அவுஸ்திரெலியா

வீரகேசரி :தமிழ் பெண் உலகின் சிறந்த ஆசிரியர் என்ற கௌரவத்தைப் பெறுகிறார் ஈழத்
தமிழ் பெண் உலகில் சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ள ஆசிரியர்களில் முதல் பத்து இடங்களுக்குள் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த வரலாறு மற்றும் சமூக கலாச்சார ஆசிரியராகக் கடமையாற்றும் யசோதை செல்வக்குமரன் என்ற ஈழத் தமிழ் பெண் தெரிவாகியுள்ளார்.
 அவருக்கு ஒரு மில்லியன் டொலர் பணத்துடன் வார்கீ பவுண்டேசன் ( Varkey Foundation ) என்ற அமைப்பின் உலகின் சிறந்த ஆசிரியர் என்ற கௌரம் வரும் மார்ச் 24ஆம் திகதி வழங்கப்படவுள்ளது. இந்தப் பரிசு, ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் நோபல் பரிசு என பத்திரிகைகளால் குறிப்பிடப்பட்டுகிறது.
2019ஆம் ஆண்டு வழங்கப்படும் உலகின் சிறந்த ஆசிரியர் பரிசுக்குத் தேர்வாகியுள்ள 50 ஆசிரியர்களில் இருவர் ஆஸ்திரேலியர்கள்.
அவர்களில் ஒருவர் தமிழ் ஆஸ்திரேலிய ரூட்டி ஹில் உயர்நிலைப் பாடசாலையில் வரலாறு மற்றும் சமூக கலாச்சார ஆசிரியராகக் கடமையாற்றும் யசோதை செல்வக்குமரன். ஈழத்தில் உள்நாட்டு போர் காரணமாக யசோதை செல்வக்குமரனின் குடும்பம் ஆஸ்திரேலியவுக்கு இடம்பெயர்ந்தனர். அங்கு யசோதை கல்வியில் நல்ல முன்னேற்றத்தைக் கண்டதுடன் ஆஸ்திரேலியாவிலுள்ள அகதிகளுக்கு நல்ல கல்வியினைப் போதிக்கவேண்டும் என்ற இலட்சியத்துடன் பணியாற்றினார்.
ரூட்டி ஹில் உயர் நிலைக் கல்லூரியில் கல்விகற்கும் 80 சதவீதமான மாணவர்கள் அகதிகளாகவும் புலம்பெயர்வாளர்களாகவுமே உள்ளதாக கூறப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக