வெள்ளி, 22 பிப்ரவரி, 2019

கடலூரில். வகுப்பறைக்குள் ஆசிரியை சரமாரி வெட்டி கொலை!

அலறி கூச்சல் தொடர்ந்து தொந்தரவு tamioneindia-Hemavandhana | கடலூர்: ஆசிரியை ரம்யாவை இ:ளைஞர் ஒருவர் பள்ளி வளாகத்திலேயே வெட்டி கொலை செய்து தப்பி ஓடிவிட்ட சம்பவம் கடலூர் மாவட்டத்தையே அதிர வைத்துள்ளது.
குறிஞ்சிப்பாடி பகுதியை சேர்ந்தவர் ரம்யா. 23 வயதாகிறது. இவர் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார். ரம்யா இன்று காலை 8 மணி அளவில் வீட்டில் இருந்து ஸ்கூலுக்கு சென்றார். சீக்கிரமாகவே ஸ்கூலுக்கு வந்துவிட்டதால், மற்ற ஆசிரியர்கள் உட்பட யாருமே அங்கு இல்லை. அதனால் பள்ளி வளாகத்திலேயே ரம்யா தனியாக நின்று கொண்டிருந்தார். அப்போது திடீரென உள்ளே நுழைந்த ஒரு இளைஞர், தனியாக நின்று கொண்டிருந்த ரம்யாவை பலமாக தாக்கினார்.
இதனால் ரம்யா நிலைதடுமாறி கீழே விழுந்தார். உடனே அந்த இளைஞர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ரம்யாவின் கழுத்தை அறுத்தார். இதனால் சம்பவ இடத்திலேயே ரம்யா பரிதாபமாக விழுந்து இறந்தார்.


உடனே அந்த இளைஞர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். கொஞ்சம் கழித்து பள்ளிக்கு வந்த ஒரு ஆசிரியர் ரம்யா விழுந்து கிடப்பதை பார்த்து அலறி கூச்சலிட்டார். இதையடுத்து பள்ளி நிர்வாகம் சார்பில் குறிஞ்சிப்பாடி போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார் ரம்யாவின் உடலை கைப்பற்றி இது சம்பந்தமான விசாரணையை கையில் எடுத்தனர். காதல் விவகாரத்தினால் இந்த கொலை நடந்ததாக முதல்கட்ட தகவல் வெளியானது.

இது சம்பந்தமாக ரம்யாவின் தந்தை சுப்பிரமணியனிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, அவர் சொன்னதாவது: விருத்தாசலத்தை சேர்ந்த ராஜசேகர் என்பவர் சில மாதங்களுக்கு முன்பு குடும்பத்துடன் வந்து ரம்யாவை பெண் கேட்டார். ஆனால் நாங்கள் மறுத்துவிட்டோம். ரம்யாவும் மறுப்பு சொல்லிவிட்டாள். ஆனாலும் ஸ்கூலுக்கு போகும்போதெல்லாம் ரம்யாவை வழிமறித்து, கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்தி கொண்டே இருந்தார்.

இந்த நிலையில்தான் என் மகள் இன்று கொலை செய்யப்பட்டு இருக்கிறாள். அதனால் இந்த கொலையில் ராஜசேகருக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகப்படுகிறேன்" என்றார். இதையடுத்து ராஜசேகரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக