வெள்ளி, 22 பிப்ரவரி, 2019

கனிமொழி, தமிழிசை, ராதிகா: தூத்துக்குடியில் மும்முனை போட்டி.. ?

வெப்துனியா :தமிழகம் முழுவதும் இன்றைய சூழ்நிலையில் அதிமுக, திமுக என இரண்டு முனை போட்டி மட்டுமே இருந்து வரும் நிலையில் தூத்துகுடியில் மட்டும் மும்முனை போட்டி என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.,
ராஜ்யசபா எம்பி பதவிக்காலம் முடிவடையவுள்ளதால் வரும் மக்களவை தேர்தலில் போட்டியிடும் முடிவை எடுத்த கனிமொழி, கடந்த ஒரு வருடமாகவே தூத்துகுடி தொகுதியை குறிவைத்து அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த ஒரு வருடத்தில் அவர் பலமுறை தூத்துகுடி சென்று அத்தொகுதியின் மக்களை சந்தித்து வருகிறார். அதேபோல் தொலைக்காட்சி தொடர்களில் மூலமும், சரத்குமார் கடந்த முறை தேர்தலில் போட்டியிட்டபோது பிரச்சாரம் சென்ற வகையிலும் நடிகை ராதிகா தூத்துகுடி தொகுதியில் ஏற்கனவே பிரபலம். இந்த பிரபலத்தை பயன்படுத்தி அவரும் அந்ட தொகுதியில் களமிறங்கவுள்ளார்.

மேலும் அதிமுகவிடம் இருந்து ஐந்து தொகுதிகளை பெற்ற பாஜக, இந்த தொகுதியில் தமிழிசையை போட்டியிட வைக்க முடிவு செய்துள்ளதாக அந்த தொகுதியின் வட்டாரங்கள் கூறுகின்றன. தூத்துகுடி தொகுதியில் நாடார் இன மக்களின் வாக்குகள் அதிகம் என்பதால் மூவருமே அந்த வாக்குகளை குறிவைத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது<

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக