சனி, 16 டிசம்பர், 2017

குஜராத்தில் காங்கிரஸ் வெற்றி ... பாஜக தோல்வி ... அழுத்தமான ஒரு ஆய்வு ,,,

குஜராத்தில் மொத்தமாக இருப்பதே 182 தொகுதிகள்தான் , ஆனால் மானம் கெட்ட ஊடகங்கள் அவசரத்தில் 195 தொகுதிகளுக்கு கருத்து கணிப்பு வெளியிட்ட கூத்து !
Venkat Ramanujam : சற்று முன் என்னுடைய பள்ளி நண்பர் ஸ்வாமிநாதன் புனேவில் இருந்து கேட்டே விட்டார் எப்படி அவ்வளவு உறுதியாக சொல்கிறாய் பிஜேபி குஜராத்தில் தோல்வியை தழுவும் என்று ..
MBA distinction வாங்கிய மாணவன் என்ற over confidence எல்லாம் கிடையாது .. இது previous poll data + current alliance of BJP & Congress + accumulated Anti establishment votes for 2 decades + field report என்றெல்லாம் கூட்டாகி வரும் அவியலை சமைக்கும் ஒரு பெண்மையின் அழகிய analytical பாங்கு .
micro provision of data போர் அடித்து விடும் .. மூன்று சொல்கிறேன் செவிமெடுத்து உள்வாங்கி கொள்ளுங்கள் :
🔴 தேர்தல் முடித்தவுடன் பிரதமர் அதிகமாக வந்து வாக்குஅளித்த குஜராத் மக்களுக்கு நன்றி என்று ட்வீட் செய்கிறார் . ஆனால் சென்ற 2012 முறை ஒப்பிட்டால் இந்த முறை voting 4% சுமார் குறைவு . சோ பிரதமர் பதட்டத்தில் பொய் சொல்லுகிறார்..
🔴 2009 இல் இருந்த வந்த எக்ஸிட் போல்ஸ் 63% வரை தோல்வியில் முடிந்து உள்ளது ..
🔴 காங்கிரஸ் இந்த முறை விரியமுடன் சென்று EVM-VVPAT 20% tally உச்சநீதிமன்றம் கதவை தட்டி உள்ளது ..இது மோடியின் கைப்பாவை EVM tampering தேர்தல் ஆணையத்துக்கு கிலி நிச்சயம் கொடுத்து இருக்கும் .. SC ரிஜெக்ட் செய்துள்ளது என்றெல்லாம் #BJP #RSS supporters please நுனி புல் மேயாதீர்கள் . https://splco.me/1mnews/Dec17/161217en2.html கொஞ்சம் தீவிரமாக சட்ட நுணுக்கத்தை படியுங்கள்..
EVM tampering benefits to bjp 15% கொடுத்தால் Cong : 98 ; BJP 80 என்றும்.,
EVM tampering benefits to bjp 10% கொடுத்தால் Cong : 108 ; BJP 68 என்றும்.,
EVM tampering benefits to bjp 5% கொடுத்தால் Cong : 121 ; BJP 54 என்றும்.,
EVM tampering 0% கொடுத்தால் Cong : 154 ; BJP 24 என்றும்.,
வர வாய்ப்புக்கள் உள்ளது .. திங்கள்கிழமை மேலும் பேசுவோம் ..கணிப்பில் தவறு இருந்தால் நீங்கள் எரியும் கற்களை பெற்று கொள்ளகிறேன் ..
சரியாய் இருப்பின் Narain Rajagopalan ஐ உரிமையுடன் அழைத்து சென்று முழு party meals at RK salai Savera hotel மூக்கு பிடிக்க ..
"There are only two tragedies in life: one is not getting what one wants, and the other is getting it."- Oscar wilde 6 October 1854 ~ 30 November 1900
#evm #congress #bjp #gujrat #elections #VVPAT

ஜார்கண்ட் மதுக்கோடாவுக்கு 3 ஆண்டுகள் சிறை ... சுயேச்சை எம் எல் ஏவாக இருந்து முதலைமச்சர் ஆகி

மதுகோடா
விகடன் ராகினி ஆத்ம வெண்டி மு. `பெரிதினும் பெரிது கேள்' - இதுதான் அவரின் ஒரே கொள்கை, குறிக்கோள், லட்சியம், எல்லாம். எந்தவொரு அரசியல் பின்புலமும் இல்லாமல் நாட்டில் புதிதாக உதயமான ஒரு மாநிலத்துக்கு மூன்றாவது முதல்வராகப் பதவியேற்கிறார். மிகவும் இளம் வயதில் சுயேச்சை எம்.எல்.ஏ-வாகத் தேர்தலைச் சந்தித்த ஒருவர், முதல்வர் ஆன காட்சியை நாடே திரும்பிப் பார்த்தது. அரசியலில் பழுத்த தலைவர்கள்கூட நிமிர்ந்து பார்த்தனர். ஆனால், வேகமான வளர்ச்சி வீழ்ச்சியையே தரும் என்ற வார்த்தைகளுக்கு அர்த்தமாகிப்போனார் அந்த முதல்வர். அவர்தான் ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மதுகோடா.
ஒடிஷா மாநிலத்தில் மலைவாழ் விவசாயி ஒருவரின் மகனாக 1971-ம் ஆண்டு பிறந்த மதுகோடா, படிக்கும் காலத்திலேயே மாணவர் தலைவனாகத் தனது அரசியல் கோலத்துக்கு முதல் புள்ளியை வைத்தார். 2000-ம் ஆண்டு யாரும் எதிர்பார்க்காத திருப்பம் மதுகோடா வாழ்வில் எந்த முகாந்திரமும் இல்லாமல் வந்து நின்றது. பீகார் மாநிலப் பொதுத்தேர்தலில் ஜகன்நாத் தொகுதியில் சுயேச்சை எம்.எல்.ஏ-வாக வெற்றி பெறுகிறார் மதுகோடா.

பாஜக ஹெச்.ராஜா கைது! திருமாவளனுக்கு எதிராக விஷம பிரசாரம்

ஹெச்.ராஜா கைது!minnambalam :அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றதாக பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜாவை நாகை மாவட்ட காவல்துறையினர் வாஞ்சியூரில் கைது செய்தனர்.
கடந்த 6ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய திருமாவளவன், கோயில்களை இடிக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்ததாக தகவல் வெளியாகியது. ஆனால் தன்னுடைய கருத்து திரித்து வெளியிடப்பட்டு விட்டதாக திருமாவளவன் முழு விளக்கம் அளித்துவிட்டார். ஆனால் திருமாவளவனுக்கு எதிராக தொடர்ந்து பாஜகவினரும், இந்து அமைப்பினரும் ஆர்பாட்டம் நடத்தி வந்தனர். சில நாட்களுக்கு முன்பு காரைக்குடியில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் பேசிய ஹெச்.ராஜா, "திருமாவளவன் என்ன பெரிய ரவுடியா, வேட்டியை மடித்துக் கட்டினால் நானும் ரவுடிதான் என்று பேசினார்" இது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

ஜெயலலிதா சிகிச்சை குறித்து பொய் அறிக்கை தான் வெளியிட்டோம்: உண்மையை ஒப்புக்கொண்ட பிரதாப் ரெட்டி!

வெப்துனியா :தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த வருடம் டிசம்பர் 5-ஆம் தேதி அப்பல்லோ மருத்துவமனையில் மரணமடைந்தார். அவர் முன்னதாக செப்டம்பர் 22-ஆம் தேதி அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு சாதாரண காய்ச்சல் தான், அவர் விரைவில் வீடு திரும்புவார் என அப்பல்லோ சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. ஆனால் தற்போது அதன் தலைவர் பிரதாப் ரெட்டி அந்த அறிக்கை பொய் எனவும், உண்மையை மறைத்து வெளியிடப்பட்ட அறிக்கை எனவும் கூறியுள்ளார்.
ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது அவருக்கு சாதாரண காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு தான் என கூறினார்கள். மேலும் ஜெயலலிதா நலமுடன் இருக்கிறார். அவர் எப்போது வீட்டுக்கு செல்லலாம் என விரும்புகிறாரோ அப்போது அவர் செல்லலாம் என பேசி வந்தார் அப்பல்லோ குழும தலைவர் பிரதாப் ரெட்டி. ஆனால் ஜெயலலிதா கடைசி வரை வீடு திரும்பாமல் மருத்துவமனையிலேயே மரணமடைந்தார்.

வடமாநில கொள்ளையர்கள் நாடு முழுவதும் கொள்ளை குத்து வெட்டு கொலை ..

tamilthehindu :கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக அழைத்து வரப்பட்ட வடமாநிலக் கொள்ளையர்கள். நாமக்கல், சேலத்தில் கைதான வடமாநிலக் கொள்ளையர்கள், பல்வேறு மாநிலங்களில் ஏடிஎம் இயந்திரங்களை உடைத்து கொள்ளயடித்ததுடன், பல்வேறு குற்றச் செயல்களிலும் ஈடுபட்டவர்கள். எங்கும் பிடிபடாத இவர்கள், தமிழகத்தில் பிடிபட்டுள்ளனர் என்று கோவை மாநகர காவல் ஆணையர் கே.பெரியய்யா, மேற்கு மண்டலத் தலைவர் ஏ.பாரி ஆகியோர் தெரிவித்தனர்.
கோவையில் செய்தியாளர்களிடம் அவர்கள் நேற்று இரவு கூறியதாவது: கோவை பீளமேடு பகுதியில் கடந்த 10-ம் தேதி நள்ளிரவு ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து, அதிலிருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டதாக தகவல் கிடைத்தது.
  உடனடியாக போலீஸார் விசாரணையில் ஈடுபட்டதில், வெள்ளை நிற கார் அந்தப் பகுதியில் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, குறிப்பிட்ட நேரத்தில் கோவை மாநகர எல்லையைக் கடந்து சென்ற கார்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டது. திருச்சி சாலையில் மகாராஷ்டிர மாநில பதிவெண் கொண்ட கார் சென்றது தெரியவந்தது.

வட மாநில கொள்ளையர்கள் 8 பேர் கைது – பறக்கும் கேமரா தேடுதல் 2 கார், லாரி, துப்பாக்கி தோட்டா, ரூ.2.93 லட்சம் பறிமுதல்

வட மாநில கொள்ளையர்கள் 8 பேர் கைது – பறக்கும் கேமரா உதவியுடன் தேடுதல் வேட்டை; 2 கார், லாரி, துப்பாக்கி தோட்டா, ரூ.2.93 லட்சம் பறிமுதல் >கி.பார்த்திபன் பிடிபட்ட நபர்கள் போலீஸ் வாகனத்தில் ஏற்றப்பட்டனர். நாமக்கல் மற்றும் சேலத்தில் போலீஸார் நடத்திய வாகன சோதனையின் போது வடமாநில கொள்ளையர்கள் 8 பேர் கைது செய்யப்பட்டனர். அதிகாலைவேளையில் போலீஸ் வாகனம் மீது மோதிவிட்டு காரில் தப்ப முயன்ற கொள்ளை கும்பலை போலீஸார் விரட்டிச் சென்று, பறக்கும் கேமரா உதவியுடன் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கரூர் மாவட்டம் அரச்சலூரில் இருந்து வட மாநிலத்தைச் சேரந்த கொள்ளை கும்பல் ஒன்று நேற்று அதிகாலை 2 காரில் பரமத்தி வேலூர், நாமக்கல் வழியாக தப்பிச் செல்வதாக நாமக்கல் மாவட்ட போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அர.அருளரசு உத்தரவின்பேரில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் எம்.ராமசாமி, எஸ்.சதீஸ் ஆகியோர் தலைமையில் 3 காவல் துணைக் கண்காணிப்பாளர்கள், 5 காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் தனித்தனி குழுக்களாக பிரிந்து மாவட்ட எல்லையான பரமத்தி வேலூர் மற்றும் நாமக்கல் அருகே கீரம்பூரில் உள்ள சுங்கச்சாவடியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.

இந்தோனேஷியா ஜாவா தீவில் நிலநடுக்கம் 6.5 ரிக்டர் . இதையடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

தினத்தந்தி :ஜகார்த்தா, இந்தோனேஷியாவின் ஜாவா தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின. சில வீடுகளில் விரிசல்கள் ஏற்பட்டன. இதனால் அப்பகுதி மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.
நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள சேத விவரங்கள் குறித்த முழுமையான தகவல்கள் வெளிவரவில்லை. கடலுக்கடியில் சுமார் 91 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனால் அப்பகுதியில் நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். இந்த நிலநடுக்கம் சுமார் 20 நொடிகள் உணரப்பட்டது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆர் கே நகர் இன்றைய களநிலவரம் ... நேரடி ஆய்வு !

Sowmian Vaidyanathan : ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் கள நிலவரம் பற்றி பல்வேறு கருத்துக் கணிப்புகள் / திணிப்புகள் மூலமாகவும், ஊடகச் செய்திகள் வழியாகவும், களத்தில் இருக்கின்ற தோழர்கள் மூலமாகவும் கலவையான செய்திகள் வருகின்றன.
தினகரன் தரப்பிலிருந்து கொடுப்பதாகச் சொல்லப்படும் அளப்பறிய பொருளாதார அன்பளிப்புகள் என்பது, நேரடியாக வாக்காளர்களுக்கு இவ்வளவு தொகை என்பதையெல்லாம் கடந்து, கடந்த முறை கொடுக்கப்பட்ட 4000 ரூபாயிலிருந்து அது ஒரு முன்பணமாக கணக்கில் வைத்துக்கொள்ளுமளவிற்கு வாக்காளர்களின் மனநிலை பக்குவப்படுத்தப்பட்டு...
அதன் தொடர்ச்சியாக ஒரு பூத்துக்கு குறைந்த பட்சம் 200 வாக்காளர்களுக்கு தினப்படியாக பிரச்சார ஊதியம் என்ற அடிப்படையில் கணிசமான வருமானத்திற்கு வழி ஏற்படுத்தியும்... இன்னபிற வழிமுறைகளிலும் கூட நேர்த்தியாக வாக்காளர்களுக்கு அன்பளிக்கப்பட்டு (!?) குக்கருக்குள் வேக வைக்கப்படுகின்றனர்...!
இதைக் கண்டு மிரண்டு போயிருக்கும் ஆளுந்தரப்பு இலை மட்டும் வேலைக்குதவாது என்பதைப் புரிந்து கொண்டு..., நான்காயிரம் என்ற நம்பரை உடைத்து வெற்றி காண... அதை விட பெரிய நம்பரான ஐந்தாராயிரம் மந்திரத்தை ஜெபிக்கப்போவதாக தொகுதி முழுக்க செய்திகள் பரவி... மந்திரத்தில் மாக்களை... மன்னிக்கவும்... மக்களை பழுக்கவைக்க ஆரம்பித்திருப்பதாகவும் செய்திகள் வருகின்றன.

அருவி - தமிழ் சினிமா கானகத்தில் காட்டாறாகப் பாயவிருக்கும் இந்த அருவியைக் கொண்டாடாடுவோம்! ..!


விகடன் விமர்சனக்குழு
எதிர்பார்ப்புகளே பல படைப்புகளுக்கு முதல் எதிரி. நிறைய எதிர்பார்த்து திரையரங்கில் அமரும் நம்மை, ஏமாற்றிய படைப்புகளின் எண்ணிக்கை மிக அதிகம். ஒரு சில படங்களே எதிர்பார்ப்புகளையும் தாண்டி நம்மை வசீகரிக்கும். 'அருவி' அப்படிப்பட்ட  சினிமா. சர்வதேசத் திரைவிழாக்களில் குவிந்த பாராட்டுகள், சிறப்புத் திரையிடல்களில் வந்த பாசிட்டிவ் விமர்சனங்கள் ஆகியவற்றையெல்லாம் தாண்டி சராசரி ரசிகனும் கொண்டாடுவதற்கு அவ்வளவு விஷயங்கள் இருக்கின்றன அருவியில்...!  
அருவி
அருவி - நீங்கள் தெருவில் இறங்கி நடக்கும்போது கண்ணில்படும் முதல் பெண் அவளாகத்தான் இருக்கும். 'நாம் இருவர் நமக்கு இருவர்' குடும்பம், அந்தந்த வயசுகளுக்கே உரிய உரையாடல்கள் நடக்கும் நண்பர்கள் குழு, 'லவ் யூ அருவினு வெள்ளைப் பேப்பர்ல எழுதிக்கொடுத்து ப்ரொபோஸ் பண்ணணும்' என்ற சினிமாத்தனமான  ஆசை - இதுதான் அருவியின் உலகம். வெளிப்பார்வைக்கு அருவி நம்மைச் சுற்றி நடமாடும் ஆயிரக்கணக்கான பெண்களில் ஒருத்தி. பின் எது அவளைத் தனித்துவமானவள் ஆக்குகிறது என்ற கேள்விக்குப் பதிலாக விரிகிறது இந்த இரண்டு மணிநேர பயணம்.  

நாப்கின் நாயகனைக் கொண்டாடும் படம்! Pad Man

minnambalam :
கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த அருணாசலம் முருகானந்தம் என்பவரின் வாழ்க்கை தற்போது பாலிவுட்டில் படமாகிவருகிறது. இந்தப் படத்தில் டிரைலர் வெளியாகிப் பெரும் வரவேற்பைப் பெற்றுவருகிறது.
அவர் அப்படி என்ன செய்துவிட்டார்?
பெண்களுக்கு முக்கியமான பிரச்சினைகளில் ஒன்று மாதவிடாய். மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் கஷ்டங்களைச் சொல்ல வார்த்தைகளே இல்லை. பெண்களின் இந்தச் சிரமத்தைக் குறைப்பதற்காக முயற்சியை மேற்கொண்டு, பல்வேறு இன்னல்களுக்கிடையில் வெற்றிபெற்றவர் அருணாசலம்.

மாதவிடாய் காலங்களில் பெண்கள் பயன்படுத்தும் நாப்கினை வியாபார நோக்கத்தில் பன்னாட்டு நிறுவனங்கள் அதிக விலைக்கு விற்பனை செய்கின்றனர். தற்போது நாப்கின்களுக்கு 12 சதவீதம் ஜிஎஸ்டி வரியை மத்திய அரசு விதித்துள்ளது. நாப்கின்களின் விலையைக் கண்டு மலைக்கும் கிராமப்புறப் பெண்கள் நாப்கின்களைப் பயன்படுத்த முடியாமல் துணி, சாம்பல் போன்றவற்றைப் பயன்படுத்துகின்றனர். இதனால் அவர்களுக்கு சுகாதாரச் சீர்கேடு ஏற்படுகிறது.

ஆய்வு பணிகளை பாதியில் நிறுத்திய ஆளுநர் ... கடலூரில் திமுக, விசிகவினர் கருப்பு கொடியுடன் ஆர்ப்பாட்டம்


தினகரன் : கடலூர்: கடலூரில் நேற்று ஆய்வு செய்ய வந்த தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு திமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கருப்பு கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், ஆய்வு பணிகளை பாதியில் நிறுத்திவிட்டு சுற்றுலா மாளிகைக்கு கவர்னர் சென்றார்.தமிழகத்தில் முதன் முறையாக கடந்த மாதம் 14ம் தேதி கோவையில் அதிகாரிகளுடன் கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஆய்வு பணிகளை மேற்கொண்டார். இதற்கு அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. ஆனால் இதை பொருட்படுத்தாத கவர்னர் இனி எல்லா மாவட்டங்களிலும் ஆய்வு பணிகளை மேற்கொள்வேன் என அறிவித்தார்.

ஆர்.கே.நகர் தேர்தலை நடத்த தனி தேர்தல் அதிகாரி நியமனம்,,,, இந்திய தலைமை தேர்தல் ஆணையம் நடவடிக்கை

தினகரன் :சென்னை: ஆர்.கே. நகர் தேர்தலை நடத்த தனி தேர்தல் அதிகாரியை நியமித்து தலைமை தேர்தல் ஆணையம் அதிரடியாக நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது. அவரே இனி அனைத்து தேர்தல் பணிகளையும் கவனிப்பார் என்றும் ஆணையம் அறிவித்துள்ளது.ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வருகிற 21ம் தேதி நடக்கிறது. எந்த இடைத்தேர்தலிலும் இல்லாத அளவில் 8 தேர்தல் பார்வையாளர்கள் வந்துள்ளனர். இதில் தேர்தல் செலவின பார்வையாளர்கள், வேட்பாளர்களின் செலவு கணக்கு மற்றும் வேட்பாளர்களுக்கு எந்த வகையில் பணம் வருகிறது என்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வார்கள்.பொது பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டவர்கள் வேட்பாளர்களின் பிரசாரம் உள்ளிட்ட பணிகளை கவனிப்பார்கள். போலீஸ் பார்வையாளர்கள் சட்டம்-ஒழுங்கு பிரச்னையை கண்காணிப்பார்கள். 30க்கும் மேற்பட்ட பறக்கும் படையினரும் ஆர்.கே.நகரில் வாகன சோதனை பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

கலைஞர் அண்ணா அறிவாலயம் வருகை ... ஓராண்டுக்கு பின் ..


சென்னை: திமுக தலைவர் கருணாநிதி ஓராண்டு இடைவேளைக்கு பின் அறிவாலயம் சென்றார். சென்னை கோபாலபுரம் இல்லத்தில் இருந்து கருணாநிதி அறிவாலயம் சென்றுள்ளார். கருணாநிதி திடீரென அறிவாலயம் சென்றதால் நிர்வாகிகள், தொண்டர்கள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

பெங்களூரில் 6 ஆண்கள் 36 மணிகள் ... பெண்ணின் காலை உடைந்து கைகளை முறித்து வன்புணர்வு ... தெருவில் யாரும் உதவவில்லை

வெப்துனியா :பெங்களூரில் ஹோட்டல் ஒன்றில் வேலை பார்த்து வந்த பெண்ணை ஆறு ஆண்கள் கடத்தி மிகவும் கொடூரமாக தாக்கி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் நடந்துள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த நில நடுக்கம் ஒன்றில் அந்த பெண்ணின் வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் இறந்துள்ளனர். வீட்டின் கட்டிடம் இடிந்து விழுந்ததால் இந்த மரணம் நடந்துள்ளது. இதனால் அந்த பெண் தனியாக ஹோட்டல் ஒன்றில் 50 ரூபாய் சம்பளத்தில் பாத்திரம் கழுவும் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த பெண் தனியாக இருப்பதை தினமும் கவனித்த சிலர் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். ஒரு வாரத்திற்கு முன்னர் அந்த பெண் வேலை முடிந்து வீடு திரும்பிக்கொண்டு இருக்கும் போது அடையாளம் தெரியாத 6 பேர் அந்த பெண்ணை அடித்து காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்றுள்ளனர்.
அந்த பெண்ணின் கால்களை கல்லால் அடித்து உடைத்தும், கைகளை திருகியும் உடைத்துள்ளனர். அதன் பின்னர் இரவு முழுவதும் அந்த ஆறு நபர்களும் அந்த பெண்ணை மிகவும் கொடூரமாக மிருகத்தனத்துடன் பாலியல் பலாத்காரம் செய்தனர்.

வெள்ளி, 15 டிசம்பர், 2017

குஜராத் காங்கிரஸ் 94-98, பாஜக 78- 84, ஏனையோர் 4-6 குஜராத் முக்கிய காவல் துறை அதிகாரி ..

Sanjiv Bhatt : · My final prediction for #Gujarat2017: BJP: 78 - 84 INC: 94 - 98 Oth: 4 - 6

Sanjiv Bhatt : · Remember the Exit Polls of Bihar Elections 2015: Today's Chanakya: BJP-155, Times Now-CVoter: BJP-111 Dainik Jagran: BJP-130 ABP/ Nielsen: BJP-130 India Today-Cicero: BJP-120 Actual Results: BJP-53 Exit Polls in India are nothing but wild fantasies of the pet news anchors.

தினத்தந்தி :குஜராத்தில் காங்கிரஸ் கட்சி மக்களோடு ஒருங்கிணைந்து நடத்திய பிரசாரத்தால் அங்கு யார் வெற்றி பெறுவார்கள்? என்பதில் ஆச்சரியம் தரும் முடிவுகள் இருக்கும் என்று ராகுல்காந்தி தெரிவித்துள்ளார் புதுடெல்லி: அகில இந்திய காங்கிரஸ் தலைவராக ராகுல்காந்தி தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு முதல் நிகழ்ச்சியாக நேற்று டெல்லியில் மகிளா காங்கிரஸ் நடத்திய கருத்தரங்கில் பங்கேற்றார். அப்போது ராகுல்காந்தி பேசியதாவது:- குஜராத் தேர்தலில் காங்கிரசின் பிரசார பணி மிக சிறப்பாக இருந்தது. அங்கு மக்களோடு இணைந்து காங்கிரஸ் கட்சி பாரதிய ஜனதாவுக்கு எதிரான போரை நடத்தியது. நமது கட்சியினர் மக்களோடு நடத்திய பேச்சுவார்த்தைகள், ஆலோசனைகள் இவை எல்லாம் மிகவும் சக்தி வாய்ந்ததாக அமைந்தது. குஜராத்தில் காங்கிரஸ் கட்சி மக்களோடு ஒருங்கிணைந்து நடத்திய பிரசாரத்தால் அங்கு யார் வெற்றி பெறுவார்கள்? என்பதில் ஆச்சரியம் தரும் முடிவுகள் இருக்கும். ஓட்டு வித்தியாசங்களும் ஆச்சரியத்தை அளிக்கும்.

அதிமுகவினர் ஊடகங்களில் தலைகாட்டத் தடை? விவாதங்களில் மானம் போவதால்...


அதிமுகவினர் ஊடகங்களில் தலைகாட்டத் தடை?minnambalam :ஊடக நிகழ்ச்சிகளில் அதிமுக கட்சி சார்பில் பங்கேற்க எந்த ஒரு நபருக்கும் அனுமதியோ, ஒப்புதலோ அளிக்கப்படவில்லை என்று தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சார்பில் கூட்டறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
நாளிதழ், வானொலி, தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட அனைத்து ஊடகங்களிலும் அரசியல் விவாதம் என்பது இப்போது பரவலாகி வருகிறது. ஒவ்வொரு கட்சி சார்பிலும் இந்த விவாதங்களில் கலந்துகொள்வதற்கென்று, சிறப்பு பேச்சாளர்கள் அடங்கிய செய்தித் தொடர்பாளர்கள் குழு தனியாக உள்ளது. தினசரி விவாதங்கள் ஊடகங்களில் பெருகிவரும் நிலையில், ஒவ்வொரு கட்சியும் குறிப்பிட்ட பிரச்சனைகளில் தங்களது நிலைப்பாடுகள் என்னவென்பதை தெரியப்படுத்த, இந்த செய்தித் தொடர்பாளர்கள் குழுவைப் பயன்படுத்தி வருகின்றன.
கடந்த நவம்பர் 28ஆம் தேதியன்று, இது தொடர்பாக அதிமுக ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தது. இதில், விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கருத்துகளை அதிகாரப்பூர்வமாக எடுத்துரைப்பதற்கென புதிய செய்தித்தொடர்பாளர்கள் குழு விரைவில் அமைக்கப்படும் என்றும், அக்குழுவில் இடம்பெறுவோர் மட்டுமே அரசியல், சமூக, பொருளாதார விவகாரங்கள் குறித்த கழகத்தின் நிலைப்பாடுகளை எடுத்துக்கூறுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

கீற்று மறைப்புக்குள் நுழைந்து இளம்பெண் குளிப்பதை பார்த்த ஆளுநர்: பொதுமக்கள் சுற்றிவளைப்பு!

வெப்துனியா :தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று கடலூரில் ஆய்வு மேற்கொள்ள சென்றார். அவர் அங்கு கீற்று மறைப்புக்குள் குளித்துக்கொண்டு இருந்த இளம்பெண்ணை நேரில் பார்த்ததாக புகார் எழுந்துள்ளது. தமிழக ஆளுநராக பதவியேற்றுக்கொண்ட பன்வாரிலால் புரோஹித், சமீபத்தில் கோவையில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பல சர்ச்சைகள் எழுந்தது. அதனையடுத்து ஆளுநர் கடலூரில் ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக கூறப்பட்டது. அதன் படி அவர் இன்று கடலூரில் ஆய்வு மேற்கொண்டார். அவருக்கு திமுகவினர் கருப்புக்கொடி காட்டினர். இதனால் ஆளுநரின் ஆய்வுப்பயண திட்டம் மாறிப்போனது. அவர் கடலூரில் வண்டிப்பாளையம், அம்பேத்கர் நகர் முதலான பகுதிகளில் ஆய்வு செய்தார்.

ஆளுநரின் பாதுகாப்புக்கு சென்று திரும்பிய வாகனம் மோதியதில் 3 பேர் உயிரிழப்பு

மாலைமலர் :ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின்
பாதுகாப் மாமல்லபுரம்: தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று கடலூர் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டார். அவரது பாதுகாப்புக்காக சென்ற போலீசார் பணியை முடித்துக்கொண்டு இன்று மாலை வாகனத்தில் புறப்பட்டு வந்தனர். மாமல்லபுரம் அருகே உள்ள புதுகல்பாக்கம் என்ற இடத்தில் வந்தபோது, அந்த வாகனம் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பாதசாரிகள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் சுரேஷ் (35),அவரது மகன் கார்த்திகேயன் (10) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். ஒரு மூதாட்டி பலத்த காயம் அடைந்தார். அவர் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் அவரும் சிகிச்சை பலனின்றி இறந்துபோனார். இதுகுறித்து மாமல்லபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஆளுநரின் பாதுகாப்பு வாகனம் மோதி விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியானது. இதனை மறுத்த ஆளுநர் மாளிகை, ஆளுநரின் பாதுகாப்பு பணிகளை முடித்துக்கொண்டு திரும்பிய போலீஸ் வாகனம்தான் மோதியதாக விளக்கம் அளித்துள்ளது.

பாமக ஊழல்புகாரில் எடப்பாடி மீது ஆளுநர் நடவடிக்கையா?

1 லட்சத்து 12 ஆயிரம் கோடி கிரானைட் ஊழல், பல்கலை கட்டுமான ஊழல், பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் ஆசிரியர்கள் நியமன ஊழல், தனியார் பள்ளிகள் முறைகேடு ஊழல், பணி நியமனம் மற்றும் பணியிட மாற்றல் ஊழல், 52 ஆயிரம் கோடி தனியார் மின் கொள்முதல் ஊழல், 303 கோடி ரூபாய் மருத்துவ காப்பீட்டு திட்ட ஊழல், 39 கோடி ரூபாய் குட்கா ஊழல், வாக்கி டாக்கி கொள்முதல் ஊழல், பொதுப்பணித்துறையின் 1000 கோடி தார் கொள்முதல் ஊழல், சேகர் ரெட்டியிடம் அமைச்சர்கள் பெற்ற 300 கோடி கையூட்டு ஊழல், 2000 கோடி கேபிள் தொலைக்காட்சி ஊழல், அரசுப் பணியாளர் தேர்வாணைய தேர்வு மற்றும் உறுப்பினர்கள் நியமன ஊழல், தொழில்துறை ஊழல், வேளாண்துறை பவர்டில்லர் ஊழல், 25 ஆயிரம் கோடி சி.எம்.டி.ஏ. கட்டிட அனுமதி ஊழல், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக ஊழல் என எடப்பாடி அரசின் முக்கியத்துறைகள் சார்ந்த 24 ஊழல் குற்றச்சாட்டுகளை ஆளுநர் பன்வாரிலாலிடம் முன்வைத்திருக்கிறார் அன்புமணி

திருவண்ணாமலை ரமணாஸ்ரம சுற்றுச்சுவர் இடிந்து விபத்து: 2 உயிரழப்பு

ramanashramதினமணி :திருவண்ணாமலையின் கிரிவலப்பாதையில் ரமணாஸ்ரமம் உள்ளது. இதன் சுற்றுச்சுவர் இடிந்த விபத்தில் சிக்கி 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். திருவண்ணாமலையின் கிரிவலப்பாதை விரிவாக்கத் திட்டப்பணி ரூ.65 கோடி செலவில் நடைபெற்று வருகிறது.& இங்குள்ள ரமணாஸ்ரமத்தின் அருகில் இந்தப் பணிகள் காரணமாக மழை நீர் கால்வாய் அமைக்கு பணி நடைபெற்று வந்தது. அப்போது அதன் வெளிப்புற சுற்றுச்சுவர் எதிர்பாரா விதமாக இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இச்சம்பவத்தில் அங்கு பணியில் இருந்த தொழிலாளர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 3 பேர் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் உடனடியாக அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி மேலும் ஒருவர் உயிரிழந்தார். மேலும் படுகாயமைடந்த இருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக திருவண்ணாமலை எஸ்.பி. பொன்னி சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டார். இந்த விபத்து தொடர்பாக காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது

சிதிலமடைந்த திருச்செந்தூர் கோவில் இரு மாதங்களுக்கு முன்பே பத்திரிகைகளில் செய்தி

உரிய பராமரிப்பு இல்லாததே திருச்செந்தூர் கோவில் விபத்துக்கு காரணமா?: பக்தர்கள் புகார்

குஜராத் தேர்தலுக்காக ராமர் பாலம் கட்ட , பாகிஸ்தான் சதி பண்ண ,,, கடலில் மீனவர்கள் குரல் மட்டும் கேட்காது?


thetimestamil :குஜராத் தேர்தல் நடந்து கொண்டிருக்கும் நிலையில் ராமர் சேது பாலம் மனிதர்களால் 7000 வருடங்களுக்கு முன்பு உருவாக்கப்பட்டதாக சொல்கிறது ‘சயின்ஸ் சேனலின்’ ஆய்வு. தனது ட்விட்டர் பக்கத்தில் 2.26 நிமிடங்களுக்கு வெட்டி தொகுக்கப்பட்ட வீடியோவை சயின்ஸ் சேனல் வெளியிட்டுள்ளது.
அந்த ட்விட்டை ஸ்மிருதி இரானி பகிர்ந்திருக்கிறார்.
சுப்ரமணியன் சாமி, ட்விட்டுக்கு கமென்ட் போடுகிறார். அந்த சேனலின் மற்ற ட்விட்டுகள் 100 லைக்கையோ, 100 ரீ ட்விட்டையோகூட கடக்கவில்லை. ராமர் பால ட்விட், 25 ஆயிரம் ரீ-ட்விட்டுகளை கடந்துள்ளது. அறிவியலை விலைக்கு வாங்க முடியுமா? முடியும்.

ஜெயலலிதா மரணம்: 4 மணி நேர விசாரணைக்கு பின்னர் தீபக் கூறியது!

வெப்துனியா: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த வருடம் டிசம்பர் 5-ஆம் தேதி மரணமடைந்தார். அவரது மரணத்தில் சசிகலா குடும்பத்தின் மீது சந்தேகம் இருப்பதாக விசாரணை ஆணையத்திடம் தீபா கூறியுள்ள நிலையில், சசிகலா குடும்பத்துடன் நெருக்கமாக இருந்த தீபாவின் தம்பி தீபக் இன்று விசாரணைக்கு ஆஜரானார்.>தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, அவரை சந்திக்க யாரையும் அனுமதிக்கவில்லை. சசிகலா குடும்பத்தினர் மட்டுமே அவரோடு இருந்தனர். அவர் சிகிச்சை பெற்ற எந்த புகைப்படமும் கடைசி வரை வெளியிடப்படவில்லை.<>இதனால் அனைவருக்கும் அவரது மரணத்தில் சந்தேகம் எழுந்தது. இதனையடுத்து ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான தமிழக அரசு விசாரணை ஆணையம் அமைத்தது. இந்த விசாரணை ஆணையும் ஜெயலலிதா மரணம் குறித்து புகார் அளித்த அனைவரையும் விசாரித்து வருகிறது.இதனடிப்படையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் முன்பு நேற்று விசாரணைக்கு ஆஜராகினார். சுமார் 3 மணி நேர விசாரணைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தீபா சசிகலா குடும்பத்தினர் மீது சரமாரியான குற்றச்சாட்டுகளை வைத்தார்.

கோவையில் 2 ஏ.டி.எம்.களை உடைத்து ரூ.30 லட்சம் கொள்ளை: வடமாநில கொள்ளையர்கள் 8 பேர் கைது

கோவையில் 2 ஏ.டி.எம்.களை உடைத்து ரூ.30 லட்சம் கொள்ளை: வடமாநில கொள்ளையர்கள் 8 பேர் கைதுதினத்தந்தி :கோவையில் 2 ஏ.டி.எம்.களில் ரூ.30 லட்சம் கொள்ளையடித்த வடமாநில கொள்ளையர்கள் 8 பேர் நாமக்கல், சேலத்தில் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். இதில் புதரில் பதுங்கியிருந்த 2 பேரை ஆளில்லா குட்டி விமானம் மூலம் கண்டுபிடித்தனர். நாமக்கல், கோவையில் கடந்த 10-ந் தேதி 2 ஏ.டி.எம். எந்திரங்களை உடைத்து ரூ.30 லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளை அடித்துச் சென்றனர். இதுதொடர்பாக கோவை பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏ.டி.எம். கொள்ளையர்களை தேடிவந்தனர். போலீசாரின் விசாரணையில் அவர்கள் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதும், போலி நம்பர் பிளேட் பொருத்திய காரில் வந்து கொள்ளையடித்ததும் தெரியவந்தது. இந்த கும்பல் வடமாநிலத்துக்கு கார் மூலம் தப்பிச் செல்ல திட்டமிட்டு இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். இதைத்தொடர்ந்து நாமக்கல், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் போலீசார் உஷார் படுத்தப்பட்டனர்.

6,700 ரோஹிங்கியா முஸ்லிம்களை சூறையாடிய மியான்மர் அரசு

Special Correspondent FB Wing : மியான்மர் நாட்டில் ராணுவ ஆட்சி முடிவுக்கு வந்து ஜனநாயக முறைப்படி கடந்த ஆண்டு நவம்பர் 8-ம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடந்தது. அதில் ஆங் சான் சூகியின் ஜனநாயகத்துக்கான தேசிய கட்சி (என்.எல்.டி.) இரு சபைகளிலும் 80 சதவீதத்துக்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது.

மியான்மர் அரசியல் சட்டப்படி வெளிநாட்டை சேர்ந்தவரை திருமணம் செய்தவரோ, அவரின் குழந்தைகளோ நாட்டின் உயரிய பதவியை வகிக்கமுடியாது. இதன் அடிப்படையில், ஜனநாயகத்துக்கான தேசிய கட்சியின் தலைவரான ஆங் சான் சூகி, இங்கிலாந்து நாட்டுக்காரரை திருமணம் செய்ததால் அதிபர் தேர்தலில் அவர் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டது.

கடலூரில் மிதந்து வந்த பர்மா புத்தர் சிலை ... அழகான தெப்பம்

நக்கீரன் ;கடலுார் மாவட்டம், சிதம்பரம் (தில்லை) அருகே உள்ள எம்.ஜி.ஆர். திட்டு பகுதியை சார்ந்த மீனர்வர்கள். புதன் மாலை பிச்சாவரம் பகுதியில் உள்ள கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, 15 அடி உயர மரகம்பத்தில், பல வண்ண கொடி பறப்பதை பார்த்து திடுக்கிட்ட மீனவர்கள் ஒக்கி புயலில் காணாமல் போனவர்கள் திசைமாறி வந்து விட்டார்களோ என்ற ஆச்சரியத்துடன் விரைந்து சென்று கொடிமரத்தை பார்த்தனர். அது 2௦ அடி அகலம், 10 அடி நீளத்தில் மூங்கிலால் செய்யப்பட்ட தெப்பம் மிதந்து கொண்டிருந்தது. தெப்பத்தில் 41 வர்ணம் தீட்டப்பட்ட கலசங்கள், கலசங்களின் உள்ளே கருப்பு நிற தலைமுடி, இரு பூஜை தட்டுகள் மற்றும் பூஜை பொருட்கள்,பயன்படுத்திய குடிநீர் பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில் ஒன்றும் இருந்தது. இதில் பர்மா நாட்டு மொழி அதில் இருந்தன. மேலும் நீலம், மஞ்சள், சிகப்பு நிற கொடிகளும் தெப்பத்தில் பறந்தன.
 தெப்பத்தின் உள்ளே, ஒன்றரை அடி உயரத்தில், வெண்கல புத்தர் போன்ற தோற்றத்தில் அமர்ந்த நிலையில், ஒரு கையில் கலசமும், மறுகையால் மூடிய நிலையிலான சிலை இருந்ததைக் கண்டு திடுக்கிட்டனர். சிலையுடன் கூடிய தெப்பத்தை, தங்கள் படகில் கட்டி, கரைக்கு இழுத்து வந்த மீனர்வகள் உப்பனாற்றில் நிறுத்தி வைத்தனர்.

ஜிஷா கொலை வழக்கில் அஸ்ஸாம் இளைஞருக்கு தூக்குத்தண்டனை! எர்ணாகுளம் நீதிமன்றம் தீர்ப்பு!

விகடன் :கேரள மாணவி ஜிஷா, பாலியல் வன்கொடுமைசெய்து கொல்லப்பட்ட வழக்கில், அஸ்ஸாம் இளைஞர் அமீருல் இஸ்லாமுக்கு தூக்குத்தண்டனை விதித்து எர்ணாகுளம் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சட்டக்கல்லூரி மாணவி ஜிஷா, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கடந்த 2016-ம் ஆண்டு ஏப்ரலில் கொலைசெய்யப்பட்ட சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கின் விசாரணையை விரைந்து முடித்து நடவடிக்கை எடுக்குமாறு கேரள முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டிருந்தார். ஜிஷா வழக்கை விசாரிக்க ஏ.டி.ஜி.பி சந்தியா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. போலீஸார் விசாரணையில் அஸ்ஸாம் இளைஞர் அமீருல் இஸ்லாம் என்பவர் கைதுசெய்யப்பட்டார்.

காவல் ஆய்வாளர் பெரியபாண்டியை சுட்டுக்கொல்லும் CCTV வீடியோ.. ராஜஸ்தானில் ..



மதுரவாயில் நகை கடை கொள்ளை தொடர்பாக திருடர்களை பிடிக்க சென்ற தமிழக காவல் அதிகாரியை அந்த கொள்ளையர்கள் சரமாரியாக சுட்டு கொன்றனர். இந்த செய்தி மிகவும் பதட்டத்தை ஏற்படுத்தியது, அந்த பதட்டம் அடங்கும் முன் அவரை சுட்டுக்கொன்ற வீடியோ CCTV வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆர்.கே.நகர் அசிங்கமே இந்து ராஷ்டிரம் !

வினவு :ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பா.ஜ.க. இரண்டு வேட்பாளர்களைக் களத்தில் இறக்கிவிட்டிருக்கிறது. ஒருவர் பா.ஜ.க.வைச் சேர்ந்த கரு.நாகராஜன். மற்றொருவர், அ.தி.மு.க. என்ற பெயரில் உள்ள தமிழக பா.ஜ.க.வின் பி டீமைச் சேர்ந்த மதுசூதனன்.
மதுசூதனன் பா.ஜ.க.வின் ஆசிபெற்ற வேட்பாளர் மட்டுமல்ல, இந்தியத் தேர்தல் ஆணையத்தின் ஆசிபெற்ற வேட்பாளரும்கூட. இரட்டை இலைச் சின்னத்தை ஓ.பி.எஸ். – இ.பி.எஸ். அணிக்கு ஒதுக்கிய கையோடு, ஆர்.கே. நகர் இடைத்தேர்தலுக்கு நாளும் குறித்த அதனின் வேகத்தைக் கொண்டே இதனை யாரும் புரிந்துகொள்ளலாம்.
கடந்த சில ஆண்டுகளாகவே தேர்தல் ஆணைய அதிகாரிகள் அ.தி.மு.க.வின் பூத் ஏஜெண்டுகளைப் போலத்தான் செயல்பட்டு வருகிறார்கள். குறிப்பாக, திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலுக்கான வேட்புமனு படிவங்களில், அ.தி.மு.க.வின் பொதுச் செயலர் ஜெயா வைத்ததாகக் கூறப்படும் கைநாட்டை, இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்திலிருந்து வந்த கட்டளைப்படி, எவ்வித ஆய்வுக்கும் உட்படுத்தாமல் ஏற்றுக்கொண்டோம் என ஒப்புதல் வாக்குமூலமே அளித்திருக்கிறார், தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி.

குழந்தையை கொன்ற சாதி வெறியர்கள்... பெண்ணாகரத்தில்

Gowthama Sanna : குழந்தையை கொலை செய்த மனநோயாளிகளே..தூ..
தர்மபுரி மாவட்டம்,பென்னாகரம் அண்ணாநகர் காலனியைச் சேர்ந்த முல்லைவேந்தனும், பென்னாகரம் சமுத்துவபுரத்தைசேர்ந்த அனுப்பியாவும் கடந்த ஆண்டு காதல் திருமணம் செய்துகொண்டார். முல்லைவேந்தனின் காதல் திருமணத்தைப் பெற்றோர் ஏற்றுக்கொள்ளாததால் அனுப்பிரியா தனது தாய்வீட்டிலியே முல்லைவேந்தனுடன் குடும்பம் நடத்திவருகின்றார்.
இந்த நிலையில் கடந்த 45 நாட்களுக்கு முன்பு அனுப்பிரியாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்தவுடனேமுல்லைவேந்தன் குடும்பத்தினர் அனுப்பிரியாவின் வீட்டிற்கு வந்து குழந்தையை பாசத்துடன் பார்த்துள்ளனர். அப்போது முல்லைவேந்தனின் குடும்பத்தினர் குழந்தையை எங்கள் வீட்டுக்குக் கொண்டு சென்று திரும்ப கொண்டுவருவதாக எடுத்துச் சென்றுவிட்டு மீண்டும் அனுப்பிரியாவிடம் குழந்தையை விட்டுச் சென்றுள்ளனர்.

வியாழன், 14 டிசம்பர், 2017

இந்திய வரைபடத்தை சிதைத்து உலக வரைபடம்:கனடாவில் ....

இந்திய வரைபடம்,India Map,  உலக வரைபடம்,World Map, இந்தியா, India,     காஷ்மீர், Kashmir, அருணாச்சல்பிரதேசம், Arunachal Pradesh,டோரண்டோ,Toronto,  அமெரிக்கா,USA, கோஸ்ட்கோ ,Costco,பன்னாட்டு ஷாப்பிங் மால், International Shopping Mall,கனடா,Canada,தினமலர் :டோரண்டோ: கனடாவில் இந்தியாவில் காஷ்மீர், அருணாச்சல்பிரதேச மாநிலங்கள் இல்லாத உலக வரைபடம் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது சமூக வலைதளங்களிலும் வைரலாக பரவியுள்ளது. கனடாவில் முக்கிய நகரம் ஒன்றில் அமெரிக்காவின் கோஸ்ட்கோ என்ற பன்னாட்டு ஷாப்பிங் மாலில் பன்னாட்டு சில்லரை சங்கிலி தொடர் வர்த்தகம் நடத்தும் ஸ்டோரில் உலக வரைபடம் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது. அதில் காஷ்மீர், அருணாசலம் ஆகிய மாநிலங்களின் வரைபடம் இல்லாமல் இருந்தது. இந்திய வரைபடத்தை சிதைக்கும் வகையில்இருந்த அதில் காஷ்மீர் தனி பிரதேசமாகவும், அருணாச்சல் பிரதேசம் சீனாவின் ஒரு பகுதியாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இது சமூக வலைதளங்களிலும் வைரலாக பரவிவருகிறது. டுவிட்டரில் கண்டன குரல்களும் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

ஆவடி குமார் பணம் கடத்தி சிறை பிடிப்பு பறக்கும் படை அதிரடி!

வெப்துனியா :அதிமுக தலைமைக்கழக பேச்சாளர் ஆவடி குமார் ஆர்கே நகர் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதற்காக காரில் பணம் கடத்தியதாக பறக்கும் படை அதிகாரிகள் அவரை சிறைபிடித்து விசாரித்து வருகின்றனர். ஆர்கே நகர் இடைத்தேர்தல் வரும் 21-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அனைத்துக்கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளது. அதே நேரத்தில் பணப்பட்டுவாடா அதிகமாக நடப்பதாக புகார்களும் தொடர்ந்து வந்துகொண்டு இருக்கின்றன. இதனால் தேர்தல் ஆணையம் மிகத்தீவிரமாக இந்த தேர்தலை கண்காணித்து வருகிறது.
;இந்நிலையில் இன்று மாலை ஆர்கே நகர் தொகுதியில் அதிமுக கட்சியின் தலைமை கழக பேச்சாளரான ஆவடி குமார் பிரஸ் ஸ்டிக்கர் ஒட்டிய தனது காரில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம் கடத்தியதாக புகார் எழுந்தது.

திருச்செந்தூர் மண்டபம் இடிந்து விழுந்து ..பெண் உயிரழப்பு


நக்கீரன் ;திருச்செந்தூர் முருகன் கோவில் பிரகார மண்டபம் இடிந்து விபத்து:
பராமரிப்பு இல்லை என குற்றச்சாட்டு
;தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலின் பிரகார மண்டபம் இன்று காலை 10.45 மணி அளவில் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. 15 அடி நீளத்திற்கு மேற்கூரை விழுந்துள்ளது."அங்கு எப்போதும் உள்ளுரைச் சேர்ந்த பேச்சியம்மாள் என்ற பெண்மணி மோர் விற்றுக்கொண்டிருப்பார். இன்று பிரகார மண்டபம் இடிந்து விழுந்தபோது, அந்த இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தார். 3 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. மீட்புப்பணிகளின் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.
;தங்கத் தேர் வலம் வருவதற்காக திரைப்பட தயாரிப்பாளர் சின்னப்பத் தேவர் வெளிப்பிரகாரம் கட்டிக்கொடுத்துள்ளார். 45 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட இந்தக் கட்டிடத்தை சரியாக பராமரிக்கவில்லை. கடலோரமாக இருப்பதால் உப்புக் காற்று படும் என்பதால் அவ்வப்போது பராமரிக்க வேண்டும். பராமரிக்காத காரணத்தினால்தான் தற்போது 15 அடி நீளத்திற்கு விழுந்துள்ளது என்று கோவில் நிர்வாகம் மீதும், தமிழக அறநிலையத்துறை மீதும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

BBC: குஜராத் இமாச்சல பிரதேச வாக்கு பதிவுக்கு பிந்தைய கருத்து கணிப்புக்கள்

இந்தியா முழுவதும் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கும் குஜராத் தேர்தல் இன்று நிறைவடைந்தது. குஜராத் மற்றும் இம்மாச்சலப்பிரதேச சட்டமன்ற தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கை வரும் திங்கள் கிழமையன்று நடக்கவுள்ளது.
இந்நிலையில் சில நிறுவனங்கள் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கணிப்பு முடிவுகளை வெளியிட்டுள்ளன. அவற்றை பிபிசி தமிழ் வாசகர்களுக்காக தொகுத்துத் தருகிறோம்.
குஜராத்தில் மொத்தம் 182 தொகுதிகள் உள்ளன. அங்கே ஆட்சி அமைக்க மெஜாரிட்டிக்குத் தேவையான சீட் 92.
1. டைம்ஸ் நவ் விஎம்ஆர் நடத்திய கணிப்பு முடிவுகள்.
பாஜக 109 காங்கிரஸ் 70
2. இந்தியா டுடே நடத்திய கணிப்பு முடிவுகள்.
பாஜக 99-113 காங்கிரஸ் 68-82
3. இந்தியா நியூஸ் - சி என் எக்ஸ்
பாஜக 110 -120 காங்கிரஸ் 65 -75
4. ரிபப்ளிக் டிவி - சி வோட்டர் நடத்திய கணிப்பு முடிவுகள்.
பாஜக 108 காங்கிரஸ் 74
5. ஏபிபி - சிடிஎஸ் நடத்திய கணிப்பு முடிவுகள்.
பாஜக 117 காங்கிரஸ் 64
குஜராத்தில் கடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக 115 இடங்களை வென்று ஆட்சியில் அமர்ந்தது. காங்கிரஸ் 61 இடங்களை வென்றது. வாக்கெடுப்புக்கு பிந்தைய கணிப்புகள் அனைத்தும் பாஜகவுக்கு சாதகமாகவே உள்ளன.இமாச்சல பிரதேசத்தில் மொத்தம் 68 தொகுதிகள் உள்ளன. அங்கே ஆட்சி அமைக்க மெஜாரிட்டிக்குத் தேவையான இடங்கள் 34.

இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி கொலைகாரர்கள் ராஜஸ்தானில் பிடிபட்டனர்?

மின்னம்பலம்: ராஜஸ்தானில் நகைக்கடை கொள்ளையர்களைப் பிடிக்கச் சென்றபோது ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டில் தமிழகத்தைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியன் கொல்லப்பட்டார். இதில் சம்பந்தப்பட்ட கொலையாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த நவம்பர் 16ஆம் தேதி சென்னை கொளத்தூர் மகாலட்சுமி தங்க மாளிகையில் மூன்று கிலோ தங்கம், நான்கு கிலோ வெள்ளி மற்றும் ரூபாய் இரண்டு லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. சிசிடிவி கேமராவில் கிடைத்த அடையாளங்களின் அடிப்படையில் கொள்ளையர்களைத் தேடும்பணி தொடங்கியது. இந்த வழக்கில் கேளாராம், தன்வர்ஜி, சங்கர்லால் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டு, கடந்த மாதம் 29ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட நால்வரின் வாக்குமூலத்தை வைத்து முக்கிய குற்றவாளிகளைக் கைது செய்ய, மதுரவாயல் காவல் ஆய்வாளர் பெரிய பாண்டியன், கொளத்தூர் காவல் ஆய்வாளர் முனிசேகர் உட்பட எட்டு பேர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. டிசம்பர் 8ஆம் தேதி, கொள்ளையர்களைப் பிடிப்பதற்காகத் தனிப்படை ராஜஸ்தான் சென்றது.

ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டம் ஜெய்த்ரான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராம்புர்கலான் என்ற கிராமத்தில் கொள்ளையர்கள் நாதுராம் மற்றும் தினேஷ் சவுத்ரி ஆகியோர் தங்கியிருப்பதாகத் தகவல் கிடைத்ததை அடுத்து, நேற்று (டிசம்பர் 13) அதிகாலை தனிப்படை அங்கு சென்றது. அப்போது ஏற்பட்ட மோதலில் பெரிய பாண்டியன் சுட்டுக்கொல்லப்பட்டார்.

நீதிபதியிடம் கெஞ்சிய தஷ்வந்த் :எனக்கு சீக்கிரமா தண்டனை கொடுங்க ப்ளீஸ் -

தினத்தந்தி : சிறுமி ஹாசினி கொலைக் குற்றவாளி தஷ்வந்த், தான் செய்த குற்றங்களுக்கான தண்டனையை விரைவில் வழங்குமாறு நீதிபதியிடம் கெஞ்சிய சம்பவம் நடந்துள்ளது. சிறுமி ஹாசினி கொலை வழக்கில் ஜாமீன் பெற்று வெளியே வந்த தஷ்வந்த், தனது தாயை கொலை செய்து விட்டு அவரின் நகை மற்றும் வீட்டிலிருந்த நகையை எடுத்துக்கொண்டு மும்பை தப்பி சென்றார். அவரை அங்கு கையும் களவுமாக தமிழக போலீசார் பிடித்தனர். ஆனால், ஒரு போலீஸ் அதிகாரியை தாக்கிவிட்டு அவர் தப்பி சென்றார். அதன்பின் ஒருவழியாக அவரை பிடித்த தமிழக போலீசார் அவரை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தினர். அவரை நீதிமன்ற வளாகத்திற்கு போலீசார் அழைத்து வந்த போது, அங்கிருந்த பெண்கள் அவரை சூழ்ந்துகொண்டு சராமாரியாக தாக்குதல் நடத்தினர். அவர்களிடமிருந்து அவரை மீட்டு போலீசார் உள்ளே அழைத்து சென்றனர். அந்நிலையில், தஷ்வந்துக்காக ஆஜரான வழக்கறிஞர் விஜயகுமார், திடீரென இந்த வழக்கில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதனால், தஷ்வந்த் நேரிடையாக நீதிபதியிடம் பேசினார். அப்போது, தான் செய்த குற்றங்களுக்கான தண்டனையை விரைந்து வழங்குமாறு அவர் நீதிபதியிடம் கெஞ்சினார்<

நீதிபதி கருத்து .. உடுமலை ஆணவ கொலை'யில் அதிகபட்ச தண்டனை ஏன்?

தினமலர் :திருப்பூர் : உடுமலை சங்கர் கொலை வழக்கில், ஆறு பேருக்கு, இரட்டை துாக்கு உட்பட குற்றவாளி களுக்கு அதிகபட்ச தண்டனை விதிக்கப்பட்டதன் காரணம் குறித்து, தீர்ப்பில் விளக்கப்பட்டுள்ளது.<உடுமலை, 'கவுரவ கொலை'யில் அதிகபட்ச தண்டனை ஏன்? - தீர்ப்பில் நீதிபதி கருத்து முழு விபரம்" >உடுமலை சங்கர் கொலை வழக்கில், நேற்று முன்தினம், ஆறு பேருக்கு இரட்டை துாக்கு தண்டனை; ஒருவருக்கு வாழ்நாள் முழுவதும் சிறை, மற்றொருவருக்கு ஐந்தாண்டு கடுங்காவல் சிறை விதிக்கப்பட்டது.
253 பக்கங்கள் கொண்ட தீர்ப்பில், நீதிபதி, அலமேலு நடராஜன் கூறியிருப்பதாவது: குற்றம் சாட்டப்பட்டுள்ள, 11 பேரில், அன்ன லட்சுமி, பாண்டித்துரை மற்றும் பிரசன்னா மீதான குற்றச்சாட்டுகள், ஆதாரபூர்வமாக அரசு தரப்பில் நிரூபிக்கப்படவில்லை.
எனவே, குற்ற நடைமுறைச்சட்டம், 235 -1ன் படி, மூவரும் விடுவிக்கப்படுகின்றனர்.சின்னசாமி, ஜெகதீசன், மணிகண்டன், செல்வகுமார், கலை தமிழ்வாணன், மதன் ஆகிய, ஆறு பேர் மீதான குற்றச்சாட்டு கள் முற்றிலும் நிரூபிக்கப் பட்டுள்ளன.இவர்கள் ஆறு பேருக்கும், கூட்டுச்சதி செய்து, கொலை செய்த குற்றத்துக்கு, துாக்கு தண்டனை மற்றும் அபராதம்; அபராதம் செலுத்த தவறினால், சிறை தண்டனை விதிக்கப்படுகிறது.

ராதாரவி வழக்கு: விஷால் நேரில் ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவு


tamilthehindu :நடிகர் ராதாரவி தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தென்னிந்திய நடிகர் சங்கச் செயலாளர் விஷால் டிசம்பர் 19-ம் தேதிக்குள் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஆண்டு நடைபெற்ற நடிகர் சங்கத் தேர்தலில் நடிகர் விஷால் தலைமையிலான பாண்டவர் அணியினர் வெற்றிபெற்று, தலைவராக நடிகர் நாசர், செயலாளராக நடிகர் விஷால் உள்ளிட்டோர் பொறுப்பேற்றனர். பின்னர், அவர்களுக்கு முன்னதாக சங்கத்தை நிர்வகித்த தலைவர் சரத்குமார், செயலாளர் ராதாரவி உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என புதிய நிர்வாகிகள் அறிவித்தனர். இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் நடிகர் ராதாரவி வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு விசாரணையின்போது, வழக்கில் முடிவெடுக்கப்படும் வரை ராதாரவி மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாது என செப்டம்பர் 22-ம் தேதி சங்கச் செயலாளர் என்ற முறையில் விஷால் தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.

குஜராத்தில் 93 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி கட்ட தேர்தல்: வாக்குப்பதிவு துவங்கியது

தினத்தந்தி :குஜராத்தில் 93 சட்டமன்ற தொகுதிகளில் இறுதி கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று துவங்கி நடைபெற்று வருகிறது. மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். அகமதாபாத், 182 உறுப்பினர்களை கொண்ட குஜராத் சட்டசபைக்கு டிசம்பர் 9, 14–ந் தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி 89 தொகுதிகளுக்கு முதல் கட்ட தேர்தல் கடந்த 9–ந்தேதி நடந்தது. அதில் சுமார் 68 சதவீதம் வாக்குகள் பதிவானது. இந்த நிலையில் எஞ்சிய 93 தொகுதிகளுக்கு 2–வது மற்றும் இறுதிக்கட்டமாக தேர்தல் இன்று தேர்தல் துவங்கி நடைபெற்று வருகிறது. காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கியதும் மக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். இந்த 93 தொகுதிகளில் கடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜனதா 52 தொகுதிகளையும், காங்கிரஸ் 39 தொகுதிகளையும் கைப்பற்றின. இதனால் இரு கட்சிகளும் 2–வது கட்ட தேர்தலில் அதிக தொகுதிகளை கைப்பற்ற வியூகம் அமைத்து செயல்பட்டன.

ஸ்டாலின் :ராஜஸ்தானுக்கு போலீஸாரை தனியாக அனுப்பி இருக்கக் கூடாது

tamilthehindu : ராஜஸ்தானில் கொள்ளையர்களுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் உயிரிழந்த இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி குடும்பத்திற்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.
மேலும், இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் தனியாக அனுப்பாமல் உயர் அதிகாரிகள் இது போன்ற நடவடிக்கைகளுக்கு சென்றிருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
சென்னை மதுரவாயல் காவல் ஆய்வாளர் பெரிய பாண்டி, கொளத்தூர் காவல் ஆய்வாளர் முனிசேகர் தலைமையில் 6 பேர் தனிப்படை ராஜஸ்தான் கொள்ளையர்களைப் பிடிக்கும் முயற்சியில் சுடப்பட்டனர். அதில் பெரியபாண்டி உயிரிழந்தார். முனிசேகர் படுகாயமடைந்தார்.
இது குறித்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அமேஸானில் கவிஞர் பிரமிள் இன் கைப்பிடியளவு கடல் ...

எஸ்.ராமகிருஷ்ணன்: எழுத்தாளர் விமலாதித்த மாமல்லன் முயற்சியால் கவிஞர் பிரமிளின் நூல்கள் தற்போது அமேஸானில் ஈபுக்காக விற்பனைக்கு கிடைக்கின்றன.
பிரமிள் (1939-1997), நவீன தமிழ் இலக்கியத்தின் சாதனையாளர்களில் குறிப்பிடத்தக்கவர். தருமு சிவராம் என்றும் அறியப்பட்டவர்.
காலாதீதத்திலும் இக்கணத்திலும் அலையும் அவருடைய கவிதையும் ஆய்வுக்கூர்மை, தீவிரம், பன் முகத்தன்மை நிறைந்த அவருடைய விமர்சனமும் அவரது இருபெரும் சிகரங்கள். மேலும் புனைகதை, நாடகம், ஓவியம், சிற்பம், ஆன்மீகம், மறை முக ஞானம் ஆகியவற்றிலும் அவரது ஆற்றலும் வெளிப்பாடும் உயரிய நிலையைப் பெற்றுள்ளன.
மேதமையும் மரபின் அத்திவாரமும், அறிவார்த்தச் செழுமையும் அங்கதக் கூர்மையும் ஆன்மீக விரிவும் சமூக விமர்சனமும் கவித்துவத்தின் அதிகபட்ச சாத்தியமும் பெற்று விளங்குகின்றன இவருடைய கவிதைப் பனுவல்கள்.
பிரமிளின் வாழ்நாளில் வெளியான கவிதைத் தொகுப்பு நூல்கள் கண்ணாடியுள்ளிருந்து (1972), கைப்பிடியளவு கடல் (1976), மேல்நோக்கிய பய ணம் (1980) ஆகியவை. அவரது மறைவுக்குப் பின் வெளிவந்த முழுக்கவிதைகளின் தொகுப்பு பிரமிள் கவிதைகள் (1998) என்ற நூல். இதில் பிரமிளின் பிரதான கவிதைகள், விமர்சனக் கவிதை கள், தமிழாக்கக் கவிதைகள், ஆங்கிலக் கவிதைகள் ஆகிய எல்லா கவிதைகளும் முழுமையாக அடங்கி யிருந்தன.

புதன், 13 டிசம்பர், 2017

கரை ஒதுங்கிய மீனவர் உடல்கள் அடையாளம் காணமுடியாது சிதைந்துள்ளது ,, டி என் ஏ சோதனை செய்ய ...

மின்னம்பலம :ஓகி புயலில் இறந்து கரை ஒதுங்கிய மீனவர்களின் உடல்களை டி.என்.ஏ. சோதனைக்குப் பின்னரும் அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கடந்த மாதம் 30ஆம் தேதி கன்னியாகுமரி கடல் பகுதியில் ஓகி புயல் உருவானது. இதனால் கன்னியாகுமரியிலும் கேரளாவிலும் பலத்த சேதம் ஏற்பட்டது. கடலில் மீன் பிடிக்க சென்ற ஏராளமான மீனவர்கள் மாயமாகியுள்ளனர். புயலில் சிக்கி உயிரிழந்தவர்கள் குறித்த தகவல்கள் இதுவரை உறுதியாகத் தெரியவில்லை. இதுவரை கரை ஒதுங்கிய மீனவர்களின் உடல்களை அடையாளம் காண்பதில் சிக்கல் நீடிக்கிறது.

குமரிக்கண்டத்தில் தமிழர்களால் அமைக்கப்பட்ட பாலம் ... ராமேஸ்வரம் தலைமன்னார் பாலம்

புதுடில்லி, :  லெமுரியா கண்டம் என்று அழைக்கப்படும் குமரிக்கண்டத்தில் அமைந்துள்ள பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது என அமெரிக்க அறிவியல் சானல் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.  கடல் பெருக்கெடுப்பால் மூழ்கடிக்கப்பட்டது  குமரிக்கண்டம். அங்கு ஓங்கி இருந்த  பூம்புகார் நாகரீக வரலாற்று உன்மைகள  இன்று படிப்படியாக வெளிவருகிறது ,
தென் தமிழகத்தில் இருந்து கடல் மார்க்கமாக இலங்கையை சென்றடைய திராவிட மக்கள் அமைத்த  இந்த பாலம் பிற்காலத்தில் பார்ப்பனர்களால்  'ராமர் சேது'  பெயர் சூட்டபட்டது. இந்நிலையில் அமெரிக்க அறிவியல் சானல் ஆவணம் ஒன்றை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக அந்த அறிவியல் சானல் ஒன்று நிபுணத்துவம் பெற்றவர் விவரித்து கூறும் 2நிமிட அந்த ஆவணபடத்தில்  இதுவரை காலமும் இயற்கையால் அமைந்த ஆடம்ஸ்பிரிட்ஜ் என்று நம்பப்பட்ட பாலம் மனிதனால் உருவாக்கப்பட்ட பாலமாக இருக்கிலாம் என்று கூறி உள்ளது , நாசாவின் புகைபடங்களின்படி 7 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கற்களால் இந்தியாவிற்கும் இலங்கை தீவுக்கும் இடையே பாலம் அமைக்க மனிதனால் உருவாக்கப்பட்டது. மனிதனின் மிகப்பெரிய சாதனை இந்த பாலம் என கூறியுள்ளது

ஆர்.கே.நகர் டிடிவி தினகரனுக்கே வெற்றி வாய்ப்பு ! பேராசிரியர் ராஜநாயகம் கருத்து கணிப்பு

நக்கீரன் :சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் டிடிவி தினகரனுக்கே வெற்றி வாய்ப்புள்ளதாக பேராசிரியர் ராஜநாயகத்தின் மக்கள் ஆய்வு வெளியிட்டுள்ள முடிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மக்கள் ஆய்வு சார்பில் பேராசிரியர் ராஜநாயகம் மற்றும் குழுவினர் இணைந்து ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் குறித்து கள ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அதன் முடிவில், ஆர்.கே.நகர் தொகுதியின் இன்றைய சூழலில் மக்கள் வாக்களிப்பதாக இருந்தால் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கியுள்ள டிடிவி தினகரன் மற்றவர்களை விட 35.5% மக்கள் ஆதரவுடன் முதலிடத்தில் உள்ளார்.

அதையடுத்து திமுக வேட்பாளர் மருதுகணேஷ் 28.5% மக்கள் ஆதரவு பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளார். அடுத்து, அதிமுக வேட்பாளர் மதுசூதனன் 21.3% மக்கள் ஆதரவு பெற்று 3வது இடத்தில் உள்ளார்.

இந்தநிலையில், கடந்த ஏப்ரல் மாதத்தில் அறிவிக்கப்பட்டபடி தேர்தல் நடந்திருந்தால் பெரும்பான்மையான ஆதரவு யாருக்கு என்றும் கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. அதிலும் டிடிவி தினகரனுக்கே மக்கள் அதிக ஆதரவு தெரிவித்துள்ளனர்.