வெள்ளி, 15 டிசம்பர், 2017

கடலூரில் மிதந்து வந்த பர்மா புத்தர் சிலை ... அழகான தெப்பம்

நக்கீரன் ;கடலுார் மாவட்டம், சிதம்பரம் (தில்லை) அருகே உள்ள எம்.ஜி.ஆர். திட்டு பகுதியை சார்ந்த மீனர்வர்கள். புதன் மாலை பிச்சாவரம் பகுதியில் உள்ள கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, 15 அடி உயர மரகம்பத்தில், பல வண்ண கொடி பறப்பதை பார்த்து திடுக்கிட்ட மீனவர்கள் ஒக்கி புயலில் காணாமல் போனவர்கள் திசைமாறி வந்து விட்டார்களோ என்ற ஆச்சரியத்துடன் விரைந்து சென்று கொடிமரத்தை பார்த்தனர். அது 2௦ அடி அகலம், 10 அடி நீளத்தில் மூங்கிலால் செய்யப்பட்ட தெப்பம் மிதந்து கொண்டிருந்தது. தெப்பத்தில் 41 வர்ணம் தீட்டப்பட்ட கலசங்கள், கலசங்களின் உள்ளே கருப்பு நிற தலைமுடி, இரு பூஜை தட்டுகள் மற்றும் பூஜை பொருட்கள்,பயன்படுத்திய குடிநீர் பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில் ஒன்றும் இருந்தது. இதில் பர்மா நாட்டு மொழி அதில் இருந்தன. மேலும் நீலம், மஞ்சள், சிகப்பு நிற கொடிகளும் தெப்பத்தில் பறந்தன.
 தெப்பத்தின் உள்ளே, ஒன்றரை அடி உயரத்தில், வெண்கல புத்தர் போன்ற தோற்றத்தில் அமர்ந்த நிலையில், ஒரு கையில் கலசமும், மறுகையால் மூடிய நிலையிலான சிலை இருந்ததைக் கண்டு திடுக்கிட்டனர். சிலையுடன் கூடிய தெப்பத்தை, தங்கள் படகில் கட்டி, கரைக்கு இழுத்து வந்த மீனர்வகள் உப்பனாற்றில் நிறுத்தி வைத்தனர்.
பின்னர் இது குறித்து சம்பந்தபட்ட அரசு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். இந்த தகவல் சுற்று வட்டாரத்தை சேர்ந்த மக்களிடம் காட்டு தீ போல் பரவியது இதனை அப்பகுதியில் உள்ள மக்கள் வியப்புடன் பார்த்துவிட்டு சென்றதால் பரபரப்பு நிலவுகிறது.

இது குறித்த தகவலறிந்த சிதம்பரம் தாசில்தார் மகேஷ் தலைமையிலான வருவாய் துறையினர் சிலையை கைபற்றி சிதம்பரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்துள்ளனர். தாசில்தார் கூறுகையில், இது புத்தர் சிலை வடிவமைப்புடன் கூடிய வெங்கல சிலைதான் சிலை குறித்த விபரம் சரியாக தெரியவில்லை. இது குறித்த தகவலை தொல்லியல் துறையினருக்கும், அருங்காட்சியனருக்கும் தகவல் கொடுத்துள்ளோம். அவர்கள் வந்து ஆய்வு செய்தால் தான் இது குறித்து தகவல் தெரியும். நமக்கு அருகில் இலங்கை,பர்மா நாடுகளின் கடல் எல்லை உள்ளது. அது எந்த நாட்டில் இருந்து வந்தது என்று சரியாக கூறமுடியாது என்றார். -காளிதாஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக