வெள்ளி, 15 டிசம்பர், 2017

குழந்தையை கொன்ற சாதி வெறியர்கள்... பெண்ணாகரத்தில்

Gowthama Sanna : குழந்தையை கொலை செய்த மனநோயாளிகளே..தூ..
தர்மபுரி மாவட்டம்,பென்னாகரம் அண்ணாநகர் காலனியைச் சேர்ந்த முல்லைவேந்தனும், பென்னாகரம் சமுத்துவபுரத்தைசேர்ந்த அனுப்பியாவும் கடந்த ஆண்டு காதல் திருமணம் செய்துகொண்டார். முல்லைவேந்தனின் காதல் திருமணத்தைப் பெற்றோர் ஏற்றுக்கொள்ளாததால் அனுப்பிரியா தனது தாய்வீட்டிலியே முல்லைவேந்தனுடன் குடும்பம் நடத்திவருகின்றார்.
இந்த நிலையில் கடந்த 45 நாட்களுக்கு முன்பு அனுப்பிரியாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்தவுடனேமுல்லைவேந்தன் குடும்பத்தினர் அனுப்பிரியாவின் வீட்டிற்கு வந்து குழந்தையை பாசத்துடன் பார்த்துள்ளனர். அப்போது முல்லைவேந்தனின் குடும்பத்தினர் குழந்தையை எங்கள் வீட்டுக்குக் கொண்டு சென்று திரும்ப கொண்டுவருவதாக எடுத்துச் சென்றுவிட்டு மீண்டும் அனுப்பிரியாவிடம் குழந்தையை விட்டுச் சென்றுள்ளனர்.

குழந்தையை விட்டுச் சென்ற சிறிது நேரத்தில் குழந்தைக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது., இதனைக் கண்டுஅதிர்ச்சியடைந்த அனுப்பிரியா தனது கணவரை வரவழைத்து குழந்தையை பென்னாகரத்தில் உள்ள தனியார்மருத்துவமனையில் சிகிச்சை பார்த்துள்ளனர். ஆனால் குழந்தைக்கு பாதிப்பு அதிகமாக இருப்பதாகத் தெரிவிக்கவேதர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் குழந்தையைசேர்த்துள்ளனர். குழந்தையைப் பரிசோதித்தமருத்துவர்கள் குழந்தைக்கு விஷம் கொடுத்திருப்பதை மருத்துவர்கள் தொடர் பரிசோதனையில் குழந்தைக்குக்கள்ளிப்பால் கொடுத்துள்ளதைக் கண்டுபிடித்துள்ளனர். சிறிது நேரத்தில் குழந்தை சிகிச்சை பலன் அளிக்காமல் பெண்சிசுபரிதாபமாக இறந்துள்ளது.
தங்கள் காதல் திருமணத்தை ஏற்றுக்கொள்ளாமல் கணவரின் குடும்பத்தினர் தனது குழந்தையைக் கள்ளிப்பாலை கொடுத்துக் கொலை செய்துவிட்டதாக அனுப்பிரியா புகார் தெரிவிக்கவும் குழந்தை இறப்பு குறித்து பென்னாகரம்காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் விசாரணை செய்துவருகின்றனர்.
இந்த மன நோயாளிகளை எளிதில் கடப்பவர்களும் தீவிர மன நோயாளிகளே.. தூ..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக