சனி, 11 பிப்ரவரி, 2017

தேக்கம்பட்டி கிராமம்.. காட்டுயானைகள்.. வாழை விவசாயிகளின் உழைப்பு பாழாகி..

தேக்கம்பட்டி மக்கள் குரல் அரசின் காதை எட்டுமா?
கோவை மாவட்டம் ,மேட்டுப்பாளையம் வட்டத்தில் உள்ளது தேக்கம்பட்டி கிராமம். மேட்டுப்பாளையத்தில் இருந்து மேற்குபுறமாக சென்றால் தேக்கம்பட்டி கிராமம். மலையடிவாரத்தில். அந்தப் பக்கம் 16 கி.மீ போனால் கேரளா.
இரண்டு வருடங்களுக்கு ஊர் மக்கள் மகிழ்ந்து போயினர், தங்கள் ஊர் பிரபலமாகிறதென. இப்போது விரக்தியின் விளிம்பில் உள்ளனர்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன் யானைகள் புத்துணர்வு முகாம் நடைபெறும் என அரசு அறிவித்தது. தேக்கம்பட்டி கிராமத்திற்கு ஒருபுறம் மிகப் பெரும் அங்கீகாரம் கிடைத்தது என. அதற்கு முன்பாக இந்த யானைகள் முகாம் முதுமலையில் நடைபெற்றது. ஆம், ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்டு கோவில் யானைகளுக்கு நடைபெறும் புத்துணர்வு முகாம்.

சசிகலா : நாளை முதல் வேறு விதத்தில் போராட இருக்கிறோம்... அதிமுகவில் பிளவை ஏற்படுத்தவே காலதாமதம்!

இன்று வரை காத்திருந்தோம், நாளை வேறு விதத்தில் போராட இருக்கிறோம் என்று கூவத்தூரில் இருந்து சென்னை திரும்பிய அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா பேட்டியளித்துள்ளார்.
அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் இன்று மதியம் பன்னீர் செல்வத்தை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். அதன்பின் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா திடீரென காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கூவத்தூரில் தங்கியிருக்கும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை நேரில் சென்று சந்தித்தார். எம்.எல்.ஏ.க்கள் மத்தியில் உரையாற்றிய சசிகலா, பின்னர் ஒவ்வொரு எம்.எல்.ஏ.க்களிடம் தனித்தனியாக சுமார் 3 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்பின் சென்னை திரும்பினார். இரவு 8.30 மணியளவில் சென்னை போயஸ் கார்டன் வந்தடைந்த அவர், நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

மாணவர்களை ஏன் அடிச்சீங்க? முதல்வரின் சட்டையைப் பிடித்த திவாகரன், ஒரு M.L.A. வாக்குமூலம்?

ஆஹாங் ஒண்ணொண்ணா வெளியே வருது முதல்வர் பன்னீர் என்கிற சாது மிரண்டது திடீர் நிகழ்வு அல்ல என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். அதிலும் பன்னீர் பக்கம் வந்து விட்ட ஒரு M.L.A ஊடகங்களுக்கு அளித்துள்ள ஒரு ஒப்புதல் வாக்கு மூலம் பகீர் ரகம். ஒரு முதல்வரை வாடா, போடா என்று பேசுவதும், சட்டையை பிடித்து இழுக்கவும் முடிகிறது என்பது மோசமான முன் உதாரணம். பன்னீர் தவிர வேறு யாரும் இவ்வளவு பொறுமையாக இருக்கவே முடியாது. அன்று எங்களுக்கு அழைப்பு வந்தது. நாங்கள் அனைவரும் பதறியடித்துக் கொண்டு போயஸ் கார்டன் ஓடினோம். அங்கு சசிகலா மற்றும் தினகரன், திவாகரன், டாக்டர் வெங்கடேஷ், மகாதேவன், பாஸ் என்கிற பாஸ்கரன் அனைவரும் கடும் கோபத்துடன் அமர்ந்திருக்க சற்று நேரத்தில் முதல்வர் பன்னீர்செல்வம் வந்து சேர்ந்தார். அவரை உட்காரக் கூடச் சொல்லவில்லை. அக்கா முதல்வர் ஆகணும். உன் பதவியை ராஜினாமா பண்ண வேண்டியதிருக்கும் என்றார் திவாகரன். பன்னீர் மெதுவாக அதற்கு இப்போ என்ன அவசரம் என்றார். படாரென்று சேரைப் பிடித்து தள்ளிவிட்டு மகாதேவன் எழுந்தார். முதல்வர் பயப்படவே இல்லை. சாதுவாக நின்றார். வாக்கு வாதம் முற்றியது. மாணவர்களை எதற்காக அடித்தீர்கள் என்றார் முதல்வர்? நீ ஹீரோ ஆகிட்டுப் போய்டுவே நாங்க விரல் சூப்பிட்டு போயிடணுமா என்றார் மகாதேவன்.

விஜயகாந்த் :தேமுதிகவை அழிக்க நினைத்தோரின் கட்சி இன்று பல பிரிவுகளாக பிளவு!

''நம்மை அழிக்க நினைத்தவர்கள் தானாக அழிவதையும், நம் கட்சியை பிளவுபடுத்த எண்ணியவர்களின் கட்சி, இன்று பல பிரிவுகளாக பிளவுபட்டு இருப்பதையும் நம் கண் முன்னே காண்கிறோம்'' என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''இன்று தேமுதிக 12-வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதை எண்ணி நாம் அனைவரும் பெருமைப்படுவோம்.
தமிழகம் முழுவதும் தேமுதிக கொடி பட்டொளி வீசி பறக்க காரணமான நம் கட்சியைச் சேர்ந்த அனைவருக்கும், இந்த நல்ல நாளில் எனது நன்றியையும், சந்தோஷத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

சசிகலா வசம் 95 எம்.எல்.ஏக்கள்தான்.. அதிலும் 30 பேர் அதிருப்தியில்?

சென்னை: சசிகலா வசம் மொத்தமே 95 எம்.எல்.ஏக்கள்தான் இருப்பதாக ஒரு பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளது. அதிலும் 30 பேர் கடும் அதிருப்தி அடைந்துள்ளதாகவும், அவர்கள் தங்களைத வீடு திரும்ப அனுமதிக்குமாறு சசிகலாவிடம் கூறியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சசிகலாவின் கூவத்தூர் பயணம் பெரிய அளவில் வெற்றி இல்லை என்றுதான் கூற வேண்டும் என்று உள் நிலவரம் அறிந்தவர்கள் கூறுகிறார்கள். அவர் எதிர்பார்த்தது போல சுமூகமான பயணமாக இது அமையவில்லை என்று கூறப்படுகிறது சசிகலாவின் கூவத்தூர் பயணத்தின் உண்மை நிலவரம் குறித்து கீழ்க்கண்டவாறு தகவல்கள் கூறுகின்றன:
  • கூவத்தூர் கோல்டன் பே ரிசார்ட்டில் மொத்தமே 95 எம்.எல்.ஏக்கள்தான் உள்ளதாக கூறப்படுகிறது.
  • இதில் 30 பேர் கடும் அதிருப்தியுடன் உள்ளனராம்
  • முதலில் தங்களை வீடு திரும்ப அனுமதிக்குமாறு அவர்கள் சசிகலாவிடம் வாதிட்டதாக தெரிகிறது.
  • இந்த 30 பேரையும் சமாதானப்படுத்த முடியாமல் சசிகலா திணறியதாக கூறப்படுகிறது.
  • 2 நாட்கள் மட்டும் காத்திருங்கள் என்று அவர்களிடம் கெஞ்சிக் கேட்டுள்ளாராம் சசிகலா.
  • 4 மணிக்குத் தொடங்கி 7 மணி வரை இந்தப் பேச்சுவார்த்தை நடந்துள்ளது.
பதவியேற்பு மேலும் தாமதமானால் ஆதரவு மேலும் குறையும் என்ற அபாய நிலையில் சசிகலா தரப்பு உள்ளதாம்.  tamiloneindia

என்ஜீனியரிங் படிப்புகளுக்கும் நீட் தேர்வு! இனி சாமானியனுக்கு எல்லாம் கனவுதான்?


நாடு முழுவதும் பொறியியல் கல்லூரியில் சேர்வதற்கும் தேசிய அளவில் நீட் தேர்வை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு தேசிய அளவில் ஒரே நுழைவுத் தேர்வு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, இந்த ஆண்டு முதல் தமிழகத்தில் நீட் தேர்வு நடைபெறவிருக்கிறது. இதுமட்டுமின்றி, தமிழ் உள்ளிட்ட ஆறு மாநில மொழிகளில் நீட் தேர்வை எழுதலாம் என்று மத்திய அரசு அறிவித்தது. அதன்படி, இந்த ஆண்டு முதல் மாணவர்கள் நீட் தேர்வை தமிழில் எழுதவுள்ளனர்.

தேசிய புரோக்கர் சு.சாமி ஆளுனரை சந்தித்தார் .. பின் வாசல் வழியாக ஓடி விட்டார் !

ஆளுநர் மாளிகையில் நிருபர்களை சந்திக்காமல் பின் வாசல் வழியாக சுப்பிரமனனியன் சாமி சென்றுவிட்டார்

 old news .: பரபரப்பான தமிழக அரசியல் சூழ்நிலையில் ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்திக்க, பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி நேரம் கேட்டுள்ளார். சசிகலா முதல்வர் பதவியை ஏற்க வேண்டும் என்றும், அவருக்கு ஆளுநர் உடனடியாக பதவிப் பிரமாணம் செய்துவைக்க வேண்டும் என்றும் பாஜக மூத்த தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுப்பிரமணியன் சுவாமி தொடர்ந்து வலியுறுத்திவந்தார். முன்னதாக, சசிகலாவுக்கு பதவிப் பிரமாணம் செய்துவைப்பதில் ஆளுநர் காலதாமதம் செய்வதன்மூலம் ஆளுநர் அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு எதிராகச் செயல்படுகிறார் என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இன்று சென்னை வந்துள்ள சுப்பிரமணியன் சுவாமி, ஆளுநரை நேரில் சந்திக்க நேரம் கேட்டுள்ளார். இந்தச் சந்திப்பின்போது, சசிகலாவுக்கு முதல்வர் பதவிப் பிரமாணம் செய்துவைக்க வேண்டும் என்று அவர் மீண்டும் வலியுறுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மின்னமபலம் 

பொன்னையன் : அம்மாவால் அடையாளம் காட்டப்பட்டவர் பன்னீர்செல்வம் ! காவேரிதான் சிங்காரி சிங்காரிதான் காவேரி!


முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அதிமுக முன்னாள் அமைச்சரும், அதிமுக செய்தி தொடர்பாளருமான பொன்னையன் நேரில் சென்று ஆதரவு தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக அதிமுக எம்.பி.க்கள் பி.ஆர்.சுந்தரம் மற்றும் அசோக்குமார் ஆகியோர் இன்று காலை நேரில் சென்று ஆதரவு தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜனும் முதல்வருக்கு நேரில் சென்று தனது ஆதரவை தெரிவித்தார்.
இந்நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக, அதிமுக முன்னாள் அமைச்சரும், கட்சியின் செய்தி தொடர்பாளரும், மூத்த தலைவர்களில் ஒருவருமான பொன்னையன் இன்று முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் இல்லத்திற்கு நேரில் சென்று தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

லொக்கேஷன் Golden Bay Resort.. சசிகலா செங்கோட்டையனை முதல்வராக்க முடிவு!


மொபைல் டேட்டா ஆன் செய்தோம். வாட்ஸ் அப் ஆன்லைனில் வந்தது.
‘‘பன்னீருக்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகிக்கொண்டு போகிறது. இன்று காலை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டார். அதன்பிறகு பன்னீர் வீட்டுக்குப் போய்விட்டார். பாண்டியராஜன் சார்ந்திருக்கும் நாடார் அமைப்புகள் எல்லாம் ஒன்றுசேர்ந்து பாண்டியராஜனிடம் பேசியிருக்கிறார்கள். ‘பன்னீருக்கு நாம ஆதரவு தெரிவிக்கணும். அவரு முதல்வராகத் தொடர்ந்தால், அட்லீஸ்ட் அவரைப் பார்க்கமுடியும், பேச முடியும். சசிகலா முதல்வராக ஆகிட்டால், அவர் இன்னொரு ஜெயலலிதாவாக மாறிவிடுவார். பிறகு அவரைப் பார்க்கவும் முடியாது, பேசவும் முடியாது. அதனால் நீங்க பன்னீருக்கு ஆதரவு தெரிவிங்க...’ என்று சொல்லியிருக்கிறார்கள். ஆரம்பத்தில் பாண்டியராஜன் யோசித்திருக்கிறார். அடுத்தகட்ட முயற்சியாக ஆடிட்டர் குருமூர்த்தியை பேசவைத்தார்கள். பாரதிய ஜனதா கட்சியில் ஏற்கனவே இருந்த பாண்டியராஜனுக்கு ‘மத்தியில் உங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது’ என, குருமூர்த்தி பேசிய வார்த்தைகள் வேலை செய்தன.

உத்தர பிரேதேசத்தில் முதல்கட்ட வாக்கெடுப்பு தொடங்கியது !


உத்தரப்பிரதேசத்தின் 403 சட்டசபை தொகுதிகளில் 73 தொகுதிகள் இன்று தேர்தலைச் சந்திக்கின்றன. ஏழு கட்டங்களாக நடக்கவிருக்கும் தேர்தலின் முதல்கட்ட தேர்தல் இன்று நடக்கிறது. சமாஜ்வாதி - காங்கிரஸ் கூட்டணி, பகுஜன் சமாஜ் கட்சி, பாரதிய ஜனதா கட்சி ஆகியவை இன்றைய தேர்தலில் பங்கேற்கும் முன்னணிக் கட்சிகள். 2013இன் முஸாஃபர் நகர் கலகத்துக்குப் பேர்போன, இனவாத பிரச்னைகள் இருக்கும் உத்தரப்பிரதேசத்தில் அதிகாரத்துக்கு வர இந்தக் கட்சிகள் தேர்தலில் மோதுகின்றன. பாகிஸ்தான் எல்லையில் நடந்ததாக கூறப்படும் தாக்குதல்  , மோடியின் பண மதிப்பிழப்பு நடவடிக்கை ஆகியவற்றின் தாக்கம் குறித்த பாஜக-வின் கணிப்பு, கட்சிக்குள் குடும்ப மோதல்கள் நடந்த நிலையில், அகிலேஷ் யாதவின் எதிர்காலம் போன்றவை இந்த தேர்தலில் வினையாற்றக்கூடும்.

பன்னீர்செல்வம் அணிக்கு மாபா பாண்டியராஜன் ,பொன்னையன் மேலும் பலர் வந்து கொண்டே இருக்கிறார்கள்

அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவுக்கு நேற்று வரை தனது ஆதரவை தெரிவித்த மாஃபா பாண்டியராஜன் இன்று திடீரென பன்னீருக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.
தேமுதிக-வில் இருந்த மாஃபா பாண்டியராஜன், விஜயகாந்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அதிமுக-வில் இணைந்தார். இதைத் தொடர்ந்து, அவருக்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் பதவியையும் வழங்கினர். இந்நிலையில், சசிகலாவுக்கும் பன்னீர்செல்வத்துக்கும் நிலவிவரும் மோதலில், சசிகலாவுக்கு ஆதரவாக தொடர்ந்து குரல் கொடுத்துவருபவர் மாஃபா பாண்டியராஜன். சசிகலா முதல்வராக பதவியேற்பார் என்றும் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

சசிகலா எம்.எல்.ஏக்களுடன் ராஜ்பவன் செல்ல திட்டம் : போலீஸ் குவிப்பு, பரபரப்பு!

அ.தி.மு.க.,எம்.எல்.ஏக்கள் தங்கியுள்ள நட்சத்திர ஹோட்டலுக்கு சென்று ஆலோசனை நடத்திவரும் அ.தி.மு.க.,பொதுச்செயலாளர் சசிகலா அனைத்து எம்.எல்.ஏக்களையும் அழைத்து கொண்டு, ராஜ்பவன் சென்று கவர்னரை சந்திக்க திட்டமிட்டுள்ளார் என்ற தகவலையடுத்து ராஜ்பவனில் போலீஸ் பாதுகாப்பு அதிகப்படுத்தபட்டுள்ளது. கவர்னரை சந்தித்து எம்.எல்.ஏக்கள் அனைவருடைய ஆதரவு என்னிடமுள்ளது என்னை முதல்வராக பதவிப்பிரமாணம் செய்து வையுங்கள் என சசிகலா கோரி இரண்டு நாட்கள் ஆகியும் கவர்னர் மாளிகையில் இருந்து அழைப்பு வரவில்லை. இதில் அதிருப்தி அடைந்த சசிகலா இன்று இந்த அதிரடி முடிவை எடுக்கவுள்ளதாக கூறப்படுகிறது. பதவியேற்பு நாள் தள்ளி போக போக தன்னிடமுள்ள எம்.எல்.ஏக்கள் ஒவ்வொருவராக முதல்வர் பன்னீர் செல்வத்திடம் சென்று வருவதால் அடுத்து இரண்டு நாட்கள் சென்றால் கூடாரம் காலியாகிவிடும் என்ற அச்சம் சசிகலாவிற்கு ஏற்பட்டுள்ளது. கவர்னர் மாளிகையில் எம்.எல்.ஏக்கள் மெஜாரட்டியை காண்பிக்க அதிகாரம் இல்லை என்பதால் அதை தடுப்பதற்காகவே அதிக அளவில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. லைவ்டே

ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அறையில் சி சி டிவி கமெரா இருந்தது?

ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அறையில் திடுக்கிடும் ஆதாரம்…  
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அறையில் சிசிடிவி கமெரா இருந்தது என ஆதாரத்துடன் தெரியவந்துள்ளது. சமீபத்தில் ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை குறித்து சென்னை செய்தியாளர்களை சந்தித்து பேசிய லண்டன் மருத்துவர் பீலே உட்பட அப்பல்லோ மருத்துவர்கள், ஜெயலலிதா இருந்த ஐசியு அறையில் கமெராவே இல்லை எனறு சாதித்தனர். ஆனால் அப்பல்லோ மருத்துவமனையின் இணையதளத்தில் உள்ள இணைப்பில், அப்பல்லோ மருத்துவமனையின் ஐசியு வார்டுகளில் கமெரா உள்ளது என்றும், உலகில் எங்கிருந்து வேண்டுமானாலும் ஐசியுவில் உள்ள நோயாளிகளை பார்க்க முடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் அப்பல்லோ மருத்துவர்கள் எதற்காக இப்படி ஒரு பொய்யை கூறினார்கள் என்ற கேள்வியும், சந்தேகமும் தமிழக மக்களிடையே எழுந்துள்ளது. முகநூல் பதிவு

ஊடகங்களுக்கு தடை ... அதிகாரிகள் சொகுசு பங்களாவில் ரகசிய பேச்சு? சசிகலாவிடம் உள்ள எம் எல் ஏக்களுடன் குதிரை பேரம்?

தமிழகத்தில் நடந்துவரும் அசாதாரண சூழலில், அதிமுக எம்எல்ஏக்களை சசிகலா தரப்பினர் சொகுசு பங்களாவில் சிறை வைத்துள்ளதாக வந்த புகாரின் அடிப்படையில், ஆய்வு செய்ய தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் இன்று காலை வட்டாட்சியர் தலைமையில், போலீஸ் அதிகாரிகள் குழு உள்ளே நுழைந்தது. அப்போது, அதிகாரிகள் உள்ளே சென்றவுடன், இவர்களுடன் அழைத்துச்செல்லப்பட்ட மீடியாக்கள் உள்ளே வராமல் அங்கிருந்தவர்கள் கற்களை எறிந்து தாக்குதல் நடத்தினர். இதனை, கண்டுகொள்ளாமல் ஆய்வு அதிகாரிகள் உள்ளே சென்றுள்ளனர். ஆய்வு அதிகாரிகளும், போலீசாரும் நினைத்தால் அதை தடுத்திருக்கவும் முடியும், உள்ளே அழைத்துச்சென்றிருக்கவும் முடியும். ஆய்வு அதிகாரிகள் இதைச் செய்யாதது ஏன்? இந்த தாக்குதலுக்கு ஆய்வு அதிகாரிகளும் உடந்தையா என பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர். இதனைத்தொடர்ந்து, ஆய்வுக்குச் சென்ற வட்டாட்சியர், தற்போது எம்எல்ஏக்கள் சுதந்திரமாக உள்ளதாக தகவல் கொடுத்துள்ளது. என்ன நடக்கிறது சொகுசு பங்களாவில்? என்ற பூதகரமான சந்தேகத்தை கிளப்பியுள்ளது. லைவ்டே

சசிகலா சொத்துக் குவிப்பு: மேல்முறையீடு 14-ம் தேதி தீர்ப்பு? ஜெயலலிதா,சசிகலா, சுதாகரன் ,இளவரசி மீதான..

மறைந்த தமிழக முன்னாள் முத‌ல்வர் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் வரும் 14-ம் தேதி தீர்ப்பை அறிவிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 1991- 96 காலக்கட்டத்தில் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீது வருமானத்துக்கு அதிகமாக ரூ.66.6 கோடி சொத்து சேர்த்ததாக வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா, 2014 செப்டம்பர் 27-ம் தேதி ஜெயலலிதா உள்ளிட்ட நால்வருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தார்.
இதை எதிர்த்து ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட நால்வரும் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த க‌ர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி, 2015 மே 11-ம் தேதி நால்வரும் நிரபராதிகள் என விடுவித்தார். இதை எதிர்த்து கர்நாடக அரசு, சொத்துக்குவிப்பு வழக்கின் முதல் புகார்தாரரான சுப்பிரமணியன் சுவாமி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. 6 மாதங்களுக்கு மேலாக இவ்வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த ஜூன் 7-ல், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது.

பன்னீர்செல்வம் அணியில் கிருஷ்ணகிரி ,நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் !

ஒ.பி.எஸ்.ஸை சந்தித்து ஆதரவு தெரிவித்த 2 நாடாளுமன்ற எம்பிக்கள் முதல் அமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் இல்லத்திற்கு கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர் அசோக்குமார், நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் சுந்தரம் ஆகிய இரண்டு பேரும் சென்று ஆதரவு தெரிவித்துள்ளனர். ஏற்கனவே மாநிலங்களவை உறுப்பினர் மைத்ரேயன் பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளார். எம்.எல்.ஏ.க்கள் ராஜமாணிக்கம், ஆறுக்குட்டி, மனோரஞ்சிதம், மனோகரன், எஸ்.பி.சண்முகநாதன் ஆகியோர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஏற்கனவே ஆதரவு தெரிவித்திருந்தனர். அ.தி.மு.க. அவைத்தலைவராக இருந்த மதுசூதனன், நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, பி.எச்.பாண்டியன், மனோஜ் பாண்டியன், முன்னாள் மத்திய மந்திரி பொன்னுசாமி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் முத்துச்செல்வி, முத்துகிருஷ்ணன், அய்யப்பன், வி.என்.பி.வெங்கட்ராமன், தாராவில்சன், சுப்புராயர், முன்னாள் எம்.பி.க்கள் இளங்கோவன், ராஜா பரமசிவன் உள்ளிட்டோர் முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை அவருடைய இல்லத்தில் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். நக்கீரன்

மோடியின் உதவியால் அதிமுக எம்எல்ஏக்கள் சொகுசு வாழ்கை, பண மழையில் குளிப்பு

மோடியின் மத்திய அரசு வருமான துறை மிகஸ்ர் தின்று கொண்டு குதிரை பேரத்தை ஊக்குவிப்பதால் ஜெயலலிதா காலத்தில் குவித்த ஊழல் பணத்தை பன்னிர் கோஷ்டியும் சசி கோஷ்டியும் வாரி இறைப்பு.,. sm 3.15பிஜேபி யின் மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு மற்றும் ராஷ்டிரிய சேவா சங்கம் , பிஜேபி எம்பி சுப்ரமணிய சுவாமி ஆதரிக்கும் சசிகலா கோஷ்டி இரு கட்ட பாதுகாப்பை அளித்துள்ளார்கள்.
சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலை ரோட்டில் கூவத்தூர் கிராமத்தில் முதல் கட்டத்தில் கோல்டன் பே ரிசார்ட்டில் 51 எம்.எல்.ஏ காவலுக்கு அமைச்சர்கள் தங்கமணி, அன்பழகன், பாண்டியராஜன், விஜயபாஸ்கர் போன்றவர்கள் மற்றும் இரண்டாம் கட்ட காவலுக்கு சினிமா துறை சார்ந்த பவுன்சர்களைத் சுமார் 160 பேரை அழைத்துவந்துள்ளனர்.
தலைக்குத் தினமும் 4000 ரூபாய் சம்பளம் + பெட்டா 1500 ரூபாய் என்று சினிமா Fight association துறைக்கும் வருமானம் வருவதால் அவர்களும் ஏகத்துக்கு குஷியில் உள்ளதாக தகவல் வருகிறது.

ஆளூர் ஷாநவாஸ் : தமிழகத்தின் அசல் எதிரியுடன் மோத முடியாத நிலையில் அ.தி.மு.க உள்ளது..

ஓ.பி.எஸ்ஸை பின்னால் இருந்து அல்ல; முன்னால் இருந்தே இயக்குவது பா.ஜ.க தான் என்பது அம்பலமான பிறகும், தி.மு.க.வை கைகாட்டி விட்டு சசிகலா தரப்பு பம்முவது ஏன்?
ஆளுநர் மூலம் ஜனநாயகப் படுகொலையை செய்யும் மோடி அரசை கண்டிக்கவும் களமிறங்கவும் அ.தி.மு.க தயங்குவது ஏன்?
தமிழகத்தின் அசல் எதிரியுடன் மோதுவதற்கு நெஞ்சுரம் இன்றி அஞ்சும் நிலையில்தான் அ.தி.மு.க உள்ளது. இன்றைய சிக்கல்களின் அடிப்படையே இதுதான்!
Ashwag Imbrose இதே பன்னீர்செல்வம் தான் சட்டசபையில் பொறுப்பற்ற முறையில் சென்னை மெரினா போராட்டத்தில் போலீஸ் தடியடி நடந்ததுக்கு காரணமாக ஒசாமா ஸ்கூட்டி போட்டோவ காமிச்சவர் இன்னையவரைக்கும் அந்த தீவிரவாதிகளை ஏன் கைது செய்யவில்லை இது கண்டிப்பாக பிஜேபி சதியாக தான் இருக்கணும் இன்னும் குழப்பமா இருக்கா? பாஜக RSS டவுசர்களின் முகநூல்,டிவிட்டர் பதிவுகளை பாருங்கள், எல்லாம் புரியவரும்.
Sirajudeen Babu பன்னீரைவிட சசிகலாவை ஆதரவே இப்போது பாஜக-விற்கு தேவை. இப்போது லோக்சபா, ராஜ்யசபா உறுப்பினர்கள் 50 பேரில் இருவர் தவிர மற்ற அனைவரும் சசிகலா பின்னால்தான் நிற்கிறார்கள்.

தமிழர்கள்... இப்போது 18 - 40 வயது .. ஐ.டி, மாணவ, மத்திய தர மொண்ணையான மடையர்கள்

அரசியல் மொண்ணைகள்....
இப்போது கேட்கும் ஓலம் அரசியல் தெரியாத பாமரர்களுடையது (படிக்காத என அர்த்தம் இல்லை... ஐ.டி, மாணவ, மத்திய தர மடையர்களுக்குத்தான் அரசியல் தெரியாது). ஆனால், பிம்பம் இல்லை என்ற இவர்களுடைய மொண்ணைத்தனமான குறை முக்கியமானது. மன்மோகனை தரையில் தள்ளி மோடியை மேலே ஏற்றிய கத்தி அது.
தமிழர்கள், குறிப்பாக இந்த தலைமுறைக்காரர்கள், அதாவது இப்போது 18 - 40 வயதிருக்கும் ஆட்கள் மொண்ணையான அறிவுடையவர்கள் என மாதமொரு முறை நிரூபித்து, என் நம்பிக்கைக்கு துரோகம் செய்யாமல் வாழ்ந்து வருகிறார்கள். முதலில் மெரினாவில் நடந்த டெல்லி அப்பள போராட்டம், ஆர்.ஜே.பா, லாரண்ஸ் கூத்து, புட் சட்னி இசுமைல் சேட்டை புரட்சி. இப்போது ஓ.பி.எஸ்.
இவர்கள் மிக சீரியஸ் ஆக மூஞ்சை வைத்துக்கொண்டு கம்யூக்களை கிண்டலடிப்பதை, திமுக துரோகம், குடும்பம் ஊழல் என பேசுவதை, திருமாவை கிண்டலடிப்பதை பார்த்தால் குமட்டிக்கொண்டு வருகிறது.
இந்தியாவில் கம்யூ கட்சியின் கொள்கைகள், தலைவர்களின் கருத்துகள், வரலாறு அல்லது உங்கள் சொந்த தொகுதியில் அதன் லோக்கல் ஆட்கள், போராட்டங்கள் தெரியுமா? சரி. கலைஞர் என்னென்ன செய்தார்? என்னென்ன சட்டங்கள், கட்டமைப்பு வசதிகள், முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. தெரியுமா? சரி, குற்றம் சாட்டவாவது 2ஜி தவிர, 1 நாள் உண்ணாவிரதம் தவிர வேறு காரணம் தெரியுமா? ஸ்டாலின் மேயராக இருந்ததாவது ? திருமா பற்றியோ அல்லது அவரது கொள்கை ரிதியிலான பேட்டிகளை வாசித்து இருக்கிறீர்களா?

கூவத்தூர் விடுதியில் போலீசார் ஆய்வு: செய்தியாளர்கள் மீது கல் வீச்சு

சசிகலாவுக்கு ஆதரவான அதிமுக எம்எல்ஏக்கள் சென்னையை அடுத்த கல்பாக்கம் அருகே கூவத்தூர் கோல்டன் பே ரெசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் சட்ட விரோதமாக தங்க வைக்கப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்தது. அதில் இரண்டு எம்எல்ஏக்களை மீட்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக அறிக்கை அளிக்கும்படி டிஜிபி மற்றும் சென்னை காவல் ஆணையருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து காவல்துறையினர் இன்று காலை 6.45 மணி அளவில் கூவத்தூர் விடுதி பகுதிக்கு வந்தனர். மாமல்லபுரம் டி.எஸ்.பி. எட்வர்டு தலைமையிலான 10க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் வட்டாட்சியர் ராமச்சந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். விடுதியில் எம்எல்ஏக்கள் சிறை வைக்கப்பட்டுள்ளார்களா என அவர்கள் விசாரணை நடத்தினர். இதனிடையே இதனை செய்தி சேகரிக்க வாகனங்களுடன் வந்த செய்தியாளர்களை அங்கிருந்த சிலர் கல்வீசி தாக்குதல் நடத்தினர். அப்போது வெளியே நின்றிருந்த போலீசார் இதனை தடுக்காமல் அவர்களும் போலீஸ் வாகனத்தை எடுத்துக்கொண்டு வெளியேறினர் நக்கீரன்

சசிகலா ஜோதியில் கலந்துவிட திருநாவுக்கரசர் துடிப்பு .. ராகுல் முன்னிலையில் தகராறு!

ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரிப்பதா? சசிகலாவை ஆதரிப்பதா? என்பது தொடர்பாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி முன்னிலை யில் அக்கட்சியின் தமிழகத் தலைவர்கள் மோதலில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசியல் நிலவரம் குறித்து காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி டெல்லியில் நேற்று தமிழக காங்கிரஸ் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
காலை 9 முதல் 11 மணி வரை 2 மணி நேரம் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர், முன்னாள் மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், சுதர்சன நாச்சியப்பன், சட்டப் பேரவை காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி, முன்னாள் மாநிலத் தலைவர்கள் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், கே.வீ.தங்கபாலு, எம்.கிருஷ்ணசாமி, குமரிஅனந்தன், அகில இந்திய செயலாளர்கள் ஜெயக்குமார், செல்லக்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தமிழகத்தில் நடந்து வரும் அரசியல் மாற்றங்கள், அதிமுக சட்டப்பேரவை கட்சித் தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டது, அதை எதிர்த்து முதல்வர் பன்னீர் செல்வம் போர்க்கொடி தூக்கியிருப்பது, அதனால் ஏற்பட்டுள்ள சூழ்நிலை குறித்து ஒவ்வொருவரிடமும் ராகுல் காந்தி விளக்கமாக கேட்டுள்ளார்.

ஆட்சி அமைக்க சசியை அழைக்க முடியாது! இந்த வேலை என்கிட்ட ஆகாது?! கவர்னா் எச்சரிக்கை

தற்போதைய சூழலில் சசிகலாவை ஆட்சி அமைக்க அழைக்க முடியாது’ என மத்திய உள்துறை அமைச்சருக்கு கவர்னர் வித்யாசாகர் ராவ் அறிக்கை அனுப்பினார். இதுதொடர்பான, தமிழக அரசியல் நிலவரம் குறித்து கவர்னர்,மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு 3 பக்க அறிக்கையை அனுப்பி உள்ளார்.கவர்னரின் அறிக்கையில் கூறி உள்ளதாவது: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீராக உள்ளது. ஜல்லிக்கட்டு போட்டிகள் தமிழகம் முழுவதும் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதிமுகவில் நிலவும் பிரச்சனை உட்கட்சி பிரச்னைதான். சொத்து குவிப்பு வழக்கில், சுப்ரீம் கோர்ட் சில தினங்களுக்குள் தீர்ப்பு வழங்க உள்ள சூழலில், சசிகலாவை ஆட்சி அமைக்க அழைக்க முடியாது. அதிமுக, எம்.எல்.ஏ.,க்கள் சிறை வைக்கப்பட்டுள்ளனரா, அவர்களில் சூழல் என்ன என்ற விசாரணை நடத்துமாறு தமிழக டி.ஜி.பி.,க்கு உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் சசி உன்வேலை என்கிட்ட ஆகாது என திட்டவட்டமாக கவர்னா் வித்யாசாகர ராவ் தெரிவித்துவிட்டதாக கவர்னா் மாளிகை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் உள்துறைக்கு அனுப்பிய அறிக்கை குறித்த தகவல்கள் ஊடகங்களில் வெளியானதால், அவ்வாறு அறிக்கை எதுவும் அனுப்பப்படவில்லை என்று கவர்னர் மாளிகை மறுத்துள்ளதாக தெரியவருகிறது. லைவ்டே

புழுகியர் திலகம் சி ஆர் சரஸ்வதி பன்னீர்செல்வத்தின் கொ.ப. செ ஆவார்?

தமிழகத்தில் அண்ட் புழுகி, ஆகாச புழுகி என்று பட்டம் கொடுத்தால் அது நடிகை சி.ஆா். சரஸ்வதிக்குதான் கொடுக்க வேண்டும். இந்த பட்டத்திற்கு 100க்கு 200 சதவீதம் தகுதியானா் இவா். அம்மா எழுந்து நடந்தாங்க. இட்லி சாப்பிட்டாங்க. காவிரி பிரச்சனைக்கு ஆலோசனை சொன்னங்க. மந்திரி சபை கூட்டத்த நடத்தினாங்க. ஜெயலலிதாதான் சசியின் கையைப்பிடித்துக் கொண்டு உன்னை விட்டா ஆளே கிடையாது. நீ தான் கட்சியையும், ஆட்சியையும் நடத்துவேண்டும் என்று சொன்னங்க என்று கலா், கலரா காதுல பூ சுத்ததான் சி.ஆா். சரஸ்வதிக்கு தெரியும். இந்திய வரலாற்றில் முதல் முறையாக, நான் சசியோடு இருப்பதால் பொதுமக்கள் போன்செய்து கண்டபடி திட்டுறாங்க என்று உண்மையை சொல்லியுள்ளார்.

இந்தோனோசியா, தாய்லாந்து அழகிகள் மசாஜ்! எம்எல்ஏக்களுக்கு வந்த வாழ்வு அல்லது தாழ்வு ! மைலாப்பூர் நாடாவும் ... கலி முத்திடிச்சு!

தமிழக எம்எல்ஏக்கள், இந்திய அழகிகளே வேண்டாம் வெளிநாட்டு அழகிகள்தான் வேண்டும் என்று பிடிக்கின்றனராம். செல்போன் வேண்டாம், வீட்டில் உள்ளவர்களுடன் பேசவேண்டிய அவசியம் இல்லை. இன்னும் 10 நாட்கள் இங்கேயே இருந்தால் போதும் என்று கூறுகின்றனராம் எம்எல்ஏக்கள். தமிழகத்தில் மக்கள் சேவைக்காக தோ்வு செய்யப்பட்டவர்கள், தேவைகள் இப்படி இருப்பதாக பாதுகாப்பு இருக்கும் பவுன்சர்கள் தலையில் அடித்துக் கொள்கிறார்களாம். இது என்ன கலாட்டா என்று பார்க்காதீர்கள். இதுதான் இன்று தமிழக மக்களால் தோ்வு செய்யப்பட்ட எம்எல்ஏக்களின் நிலை. சசி ஆதரவு எம்எல்ஏக்கள் வெளிநாட்டு சரக்குகளான மேஜிக் மூமன்ட்ஸ், ஸ்கை, ஸ்கெட்டல் ஒன்ஸ், பிளாக் கேட், ஒயிட் கேட், ரஸ்யன் ரம், ஒயிட் ரம் என்று எவ்வளவு அடித்தாலும் போதை ஏறவில்லையாம். நாட்டு சரக்குதான் அதுவும் சின்னம்மா சரக்குதான் உடனே ஏறும் என்று அங்கலாய்த்துக் கொள்கின்றனா். ஆட்டம்னா அது தாய் அழகி ஆட்டம்தான் அம்சம், மற்றது எல்லாம் சப்பை என்று அழகிகள் தரம் குறித்து அதிரடி ஆலோசனை என்று வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனா்.

ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், 1,800 து.ராணுவத்தினர் சென்னைக்கு விரைவு?; ஆளுநர் உத்தரவு?

சசிகலா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் வரும் செவ்வாய்கிழமையன்று தீர்ப்பு வர வாய்ப்புள்ளதாகவும், எந்த நேரத்திலும் ஆளுநர் அறிவிப்பு
தமிழக முதல்வர் பன்னீர்செல்வத்தின் சசிகலாவுக்கு எதிரான அதிரடி பேட்டியைத்தொடர்ந்து அதிமுகவிலும், தமிழக மக்களிடையேயும் அசாதாரண சூழ்நிலை வலுத்துவருகிறது. இந்த சூழ்நிலையில், தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசார் ராவ் நேற்று முன்தினம் மும்பையிலிருந்து புறப்பட்டு சென்னை வந்தார். இதனைத்தொடர்ந்து தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் சந்திப்புக்குப்பின், அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இதனையடுத்து, இன்று தலைமைச் செயலாளர், டிஜிபி, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கவுல் மற்றும் எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோரிடம் ஆளுநர் ஆலோசனை நடத்தினார்.

நந்தினியைக் கொன்ற இந்து முன்னணி – ஆவணப்படம்


யாரோ ஒருவர் வெள்ளுடை போர்த்தப்பட்ட அந்த உடலை நீல நிற தார்பாய் ஒன்றினுள் புரட்டிப் போடுகிறார். தலை குப்புற கிடத்தப்பட்டிருக்கும் அந்த உடல் சில நொடிகள் கண்களில் விழுகின்றது. முழு நிர்வாணமான அந்த உடலின் மேல் முதுகு கருத்துப் போய் அதன் மீது வெள்ளைப் புழுக்கள் நெளிந்து கொண்டிருக்கின்றன. இடது கீழ் முதுகில் காயம் பட்ட அடையாளம் தெரிகின்றது. உடலைப் புரட்டிப் போடுகிறார் அந்த மனிதர். கருநீலத் துணி ஒன்றால் அந்தப் பெண்ணின் வாய் கட்டப்பட்டுள்ளது. சற்றே மேடிட்ட வயிறு.. அவளது பெண்ணுறுப்பு சிதைக்கப்பட்டுள்ளது.
ஐயோ ஐயோவென்ற ஓலம் அதிகரிக்க, சட்டென்று அந்த உடல் நீலத் தார்பாயால் மூடப்பட்டு அருகில் நின்று கொண்டிருந்த வெள்ளை ஆம்புலஸ் வேனுக்குள் திணிக்கப்படுகிறது. உணர்ச்சியற்ற முகங்களோடு நின்று கொண்டிருந்த போலீசு அதிகாரிகளிடம் ஒருவர் வாதிட்டுக் கொண்டிருக்கிறார்..
“சார்.. இதே ஒரு எஸ்.சி பையன் வன்னியர் பிள்ளைய அழைச்சிட்டுப் போயிருந்தா நடவடிக்கை எடுக்காம இருந்திருப்பீங்களா?” அந்தக் குரலில் வெளிப்பட்ட ஆற்றாமையின் உள்ளேயும் அவருக்கு முகம் கொடுத்து நின்று கொண்டிருந்த காவலதிகாரியின் கள்ள மௌனத்தின் உள்ளேயும் ஏராளமான அர்த்தங்கள் பொதிந்து கிடக்கின்றன. பதினேழே வயதான ஒரு சிறுமியின் கனவுகளும் அவளது பெற்றோரின் நிறைவேறாத ஆசைகளும் ஏமாற்றங்களும் மட்டுமின்றி ஆதிக்க சாதித் திமிரும் இந்து பயங்கரவாத வெறியின் ஆணவமும் அந்தக் காணொளித் துண்டின் ஒவ்வொரு காட்சியிலும் உறைந்து கிடக்கின்றன.அவள்  நந்தினி.  வினவு

அதிமுக எம்எல்ஏக்கள் தங்கியுள்ள கூவத்தூர் ரிசார்ட்டில் டிஎஸ்பி, தாசில்தார் ரெய்டு

ஆட்கொணர்வு மனுக்கள்எம்எல்ஏக்கள் உண்ணாவிரதம்ஆடம்பர சிறைகாஞ்சிபுரம்: அதிமுக எம்எல்ஏக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள கூவத்தூர் கோல்டன் பே ரிசார்ட்டில் இன்று அதிகாலை செய்யூர் வட்டாட்சியர் ராமச்சந்திரன், மாமல்லபுரம் டிஎஸ்பி ஹெட்விக் ஆகியோர் ஆய்வு நடத்தினர். எம்எல்ஏக்கள் சிறைவைக்கப்பட்டுள்ளதாக தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து இந்த ஆய்வு நடைபெற்றது.
அதிமுகவில் ஓபிஎஸ் அணி சசிகலா அணி என இரண்டு அணியாக உள்ளது. யார் ஆட்சி அமைப்பது என்பதில் ஒருவித பதற்றமான நிலை உருவாகியுள்ளது. தனது ராஜினாமாவை வாபஸ் பெறுவதாக ஓபிஎஸ் ஆளுநரிடம் தெரிவித்துள்ளார். சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிப்பேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

கங்கைஅமரன் சாபம் : பிரபலமான என்னைபோன்றவர்களுக்கே இந்த கதி என்றால் ... பையனூர் பறிபோன கதை ..


மகாபலிபுரம் சாலையில் பையனூர் பகுதியில் 22 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ளது. இசையமைப்பாளா் கங்கை அமரன் வீடு.
இந்த வீட்டை ரசித்து, ரசித்து கட்டினார். அந்த வழியே சென்ற சசிகலாவின் சகோதரி மகன் பாஸ்கரனின் கண்ணில் பட்டுள்ளது.
அந்த பண்ணைவீடு மிகவும் பிடித்து போக அந்த வீட்டை வலைத்து போட ஆசைப்பட்டார். யாருடைய வீடு என்று விசாரணை செய்ததில் இது இசையமைப்பாளா் கங்கை அமரனின் வீடு என்று தெரியவந்து.
எப்படி அந்த வீட்டை விலைக்கு வாங்குவது என்று தெரியவில்லை. அப்போது முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா தங்களை சந்திக்க வேண்டும் என்று கூறியுள்ளார் என்று கூறியுள்ளனா்.
முதலமைச்சா் என்றவுடன் கங்கையமரனும் முதல்வா் ஜெயலலிதாவை சந்திக்க சென்றுள்ளார். அவா்கள் சொன்னபடி முதலமைச்சருக்கு பூங்கொத்து கொடுத்துள்ளார். பின்னா் முதல்வா் எதுவும் பேசாமல் சென்று விட்டாராம்.
சில தினங்கள் கழித்து அதே பாஸ்கரன் மீண்டும் கங்கையமரனின் வீட்டிற்கு வந்துள்ளார். முதலமைச்சா் ஜெயலலிதாவுக்கு உங்களது வீடு மிகவும் பிடித்து விட்டது.

தினமணி : சிங்கம் 3 ... ஹாலிவுட் இயக்குநர்கள் கூட சிந்திக்கத் தயங்குகிற பிரம்மாண்டம்.




இயக்குநர் ஹரியின் வழக்கமான ஆர்ப்பாட்டத்திற்கும் அமர்க்களத்திற்கும் சற்றும் குறையாமல் வந்திருக்கும் திரைப்படம் சிங்கம் -3. முந்தைய பகுதிகளின் அதே பாணியில் குறிப்பாக இரண்டாம் பகுதியின் வார்ப்பை அப்படியே பின்பற்றி உருவாகியிருக்கிறது மூன்றாம் பாகம்.  என்னவொன்று தமிழக வாசனையோடு இழந்ததோடு கூடுதலான ஆந்திர காரமும் இருக்கிறது.  சூர்யாவின் வணிகச்சந்தை மதிப்பு மாநிலங்களின் எல்லையைத் தாண்டியிருப்பதால் ஆந்திர மக்களின் ரசனையை மனதில் பிரதானமாகக் கொண்டு அதற்கேற்ப களத்தின் பின்னணியை உருவாக்கி கூடுதல் மசாலாவைக் கலந்து சுடச்சுட பரிமாறியிருக்கிறார் ஹரி.
வளர்ந்த நாடுகள் தங்களின் மின்னணு கழிவுகளையும் மருத்துவக் குப்பைகளையும் மூன்றாம் உலக நாடுகளில் கொட்டி அவற்றை குப்பைத்தொட்டியாக பயன்படுத்துகின்றன. இந்த உலகளாவிய பிரச்னையை ஆவேசமாக உரையாடுவதன் சாக்கில் உருவாகியிருக்கும் சிங்கம் -3, தமிழ் சினிமாவின் சூழலில் கூடுதலான தூய்மைக்கேட்டையும் ஒலி மாசுபடுதலையும் ஏற்படுத்தியிருப்பது முரண்நகை.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் .... சசிகலா +பிரதாப் ரெட்டி + பிரதமர் மோடி மற்றும் பலர் நடந்து கொண்ட விதம்? ... புரோட்டோகோல் கடைப்பிடிப்பபடவில்லை !

அப்பல்லோ மருத்துவமனையில் ஜெ. மரணம் அடைந்து 60 நாட்கள் கழித்து அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் பிப்ரவரி 6-ம் தேதி திடீரென பத்திரிகையாளர்களை சந்தித்து அவரது மரணம் குறித்த சந்தேகங்களுக்கு விளக்கம் கொடுத்தார்கள்.;லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலேவும், அப்பல்லோவின் டாக்டரும் ஜெ.விடமிருந்து இடைத்தேர்தல் விண்ணப்ப படிவத்தில் கைநாட்டு வாங்கியதால் புகழ்பெற்ற அரசு டாக்டருமான பாலாஜியும், ஜெ. மரணத்திற்கு பிறகு உடலை பதப்படுத்தும் வேலையை செய்த டாக்டர் சுதா சேஷையனும், ஜெ.வுக்கு சிகிச்சை அளித்த அப்பல்லோ டாக்டர் குழுவுக்கு தலைமை தாங்கிய டாக்டர் பாபு ஆப்ரஹாமும் பத்திரிகையாளர்களை சந்தித்து, ஜெ.வுக்கு அப்பல்லோ மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்த விளக்கத்தை அளித்தனர்.

வெள்ளி, 10 பிப்ரவரி, 2017

நக்கீரன் :சசிகலாவை ஆட்சியமைக்க அழைக்க இயலாது - ஆளுநரின் 3 பக்க அறிக்கை

ஆளுநரை அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். சசிகலா ஆட்சி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆளுநரை சந்தித்தார். தமிழகத்தின் அரசியல் சூழல் குறித்து இன்று அதிகாரிகளுடனும், காவல்துறையினரிடமும் ஆலோசித்த பின்னர் உள்துறை அமைச்சகத்திற்கு 3 பக்க அறிக்கை அனுப்பினார் ஆளுநர் வித்தியாசாகராவ். அந்த அறிக்கையில், ஓபிஎஸ், சசிகலா கோரிக்கைகள் குறித்து குறிப்பிட்டுள்ளார். அதிகாரிகள், காவதுறையினர் அளித்த தகவலை தெரிவித்துள்ளார். எம்.எல்.ஏக்கள் சிறைப்பிடிக்கப்ப ட்டுள்ளதாக காவல்துறை தந்த தகவலை தெரிவித்துள்ளார். சசிகலாவுக்கு உச்சநீதிமன்ற தீர்ப்பு நிலுவையில் உள்ளதை குறிப்பிட்டுள்ளார். தற்போதைய சூழலில் சசிகலாவை ஆட்சி அமைக்க அழைக்க இயலாது என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

ஜெ., மரணம் : டாக்டர் ராமசீதாவின் விடியோ புயல் ... சசியை கைது செய் ... தொண்டர்கள் ஆவேசம்!

சமீபத்தில் வலைதளங்களில் ஒளிப்பரப்பான வீடியோ காட்சியில் ஒரு மருத்துவர் ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனைக்கு இறந்துதான், பிணமாகதான் கொண்டு வரப்பட்டார் என்று கூறியிருக்கிறார்.
அப்படி ஒரு மருத்துவர் கூறியிருப்பதை வைத்துக் கொண்டு அரசு ஏன் இன்னும் சசியை கைது செய்து விசாரிக்கவில்லை.
அவரை கைது செய்து ஜெயலலிதாவின் இறப்பின் ரகசியத்தை வெளியே கொண்டுட்டு வாங்க. தனது பதவி பறிபோகும் என்கிற பயத்தில் நள்ளிரவு பத்திரிக்கையாளா்களை சந்தித்து பேட்டி அளிக்கும் அவர். ஜெயலலிதா மருத்துவமனையில் இருக்கும்போது ஏன் ஒருவருக்கு கூட காட்டவில்லை.
சாதாரண நகைக்கடை, அடகு பிடிக்கும் கடை,மளிகைக்கடை, என அனைத்து கடைகளிலும்,  சாலைகளிலும் சிசிடிவி கேமரா இருக்கும் போது அப்போலோ மருத்துவமனையில் மட்டும் ஏன் கேமரா பொருத்தவில்லை.
இதுவே சட்டப்படிப் குற்றம். இந்த குற்றத்தை செய்த மருத்துவமனையின் மீது போலீசார் இதுவரை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?
தமிழக அரசின் முதல்வரையே மிரட்டி கையெழுத்து வாங்கும் சசிகலா ஏன் ஜெயலலிதாவை அடித்து கொலை செய்திருக்க கூடாது.

ஆளுநரிடம் சசிகலாவுக்கு ஸ்டாலின் வைத்த ‘ஆப்பு’; அதிமுகவினர் கலக்கம்?

முதல்வர் பன்னீர்செல்வத்தின் சசிகலாவுக்கு எதிரான பேட்டியைத்தொடர்ந்து அதிமுகவிலும், தமிழக மக்களிடையேயும் அசாதாரண சூழ்நிலை வலுத்துவருகிறது.
இந்த சூழ்நிலையில், தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் நேற்று மும்பையிலிருந்து புறப்பட்டு சென்னை வந்தார். இதனைத்தொடர்ந்து முதல்வர் பன்னீர் மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா ஆகியோரை சந்தித்துப் பேசினார்.
இதனையடுத்து, இன்று தலைமைச் செயலாளர், டிஜிபி, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கவுல் உள்ளிட்டோரிடம் ஆளுநர் ஆலோசனை நடத்தினார்.
இவர்களைத்தொடர்ந்து, தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலினை ஆளுநர் சந்தித்து ஆலோசனை நடத்தினர். இந்த சந்திப்பின்போது, ஆளுநரிடம் மு.க.ஸ்டாலின் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார்.

திவாகரன், ‘என்னய்யா பாக்குற... கையெழுத்த போடுயா.. பன்னீர்செல்வம் இப்படித்தான் கையெழுத்து போட்டார் !

சனிக்கிழமை இரவு அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட சசிகலா “நாளைக்கு வேறெங்கும் ஊர் சுற்றப் போய் விடாதே.. கார்டனுக்கு வா” என ஒருமையில் பேசியுள்ளார். முதல்வராக இருக்கும் தன்னை சசிகலா இப்படி இகழ்வாக பேசியும், ஏந்த கோபத்தையும் காட்டாமல், வருகிறேன் அம்மா என பவ்யமாக பதில் கூறி விட்டு, அடுத்த நாள் (ஞாயிற்றுக்கிழமை) போயஸ் கார்டன் சென்றுள்ளார் ஓ.பி.எஸ். அப்போதுதான், அவரிடம் ராஜினாமா கடிதத்தில் கையெழுத்திட கூறியிருக்கிறது சசிகலா தரப்பு. அம்மாவின் அனுமதி கேட்டு விட்டு வருகிறேன் என ஓ.பி.எஸ் கூற, ‘முதலில் கையெழுத்து போடு.. அப்புறம் உன் அம்மாவை போய் பாரு..’ என சசிகலா தரப்பு அதட்டியுள்ளது. உடனே ஓ.பி.எஸ் மேல்நோக்கி பார்த்துள்ளார். அப்போது, சசிகலாவோடு உடனிருந்த அவரின் தம்பி திவாகரன், ‘என்னய்யா பாக்குற... கையெழுத்த போடுயா..’ என ஏகத்துக்கும் எகிற, அவமானத்தோடு, கண்களில் கண்ணிர் சிந்திய படி கையெழுத்தை போட்டுள்ளார் ஓ.பி.எஸ்..
தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை, சசிகலாவும், அவரின் உறவினர்களும் தொடர்ந்து அவமானப் படுத்தியதாலேயே அவர் தற்போது பொங்கி எழுந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது

ஸ்டாலின் ஆளுநரிடம் மனு .. முடங்கி உள்ள தமிழக நிவாகம் .. உடன் நடவடிக்க எடுங்கள் !

தமிழக நிர்வாகம் நீண்ட காலமாகமே முடங்கியுள்ளது, உடனடியாக நடவடிக்கை எடுங்கள் என்று ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் மனு அளித்துள்ளார். முடங்கி போயுள்ள தமிழக அரசினை காப்பாற்ற நடவடிக்கை எடுங்கள்ஆளுநரிடம் ஸ்டாலின் மனு சென்னை: தமிழக அரசியலின் பரபரப்பான சூழலில், ஆளுநர் வித்யாசாகர் ராவை, எதிர்க் கட்சி தலைவர் ஸ்டாலின் இன்று இரவு 7.30 மணியளவில் சந்தித்தார். ஸ்டாலினுடன் துரைமுருகன், பொன்முடி, எ.வ.வேலு உள்ளிட்டோரும் ஆளுநர் மாளிகை சென்றனர். ஆளுநரை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் ஸ்டாலின் பேசியதாவது: மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 75 நாட்களும் தமிழகத்தில் எந்த பணிகளும் நடைபெறவில்லை.
அதேபோல், ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு எந்த பணிகளும் நடைபெறவில்லை.

ஆட்சி அமைக்க சசிகலாவை அழைக்க மறுப்பு அறிக்கை அனுப்பினார் கவர்னர்

பெரும்பான்மையை நிரூபிக்க, ஒரு வாய்ப்பு கொடுங்கள்' என, முதல்வர் பன்னீர்செல்வமும்; ஆட்சி அமைக்க, அழைப்பு விடும்படி சசிகலா வும், தமிழக கவர்னரை சந்தித்து, மனு கொடுத்தனர்.
இரு தரப்பு கோரிக்கையையும் கேட்ட கவர்னர், மத்திய அரசுக்கு அறிக்கை அளித்துள்ளார். அவர் எந்த பதிலும் தெரிவிக்காததால், தமிழகத்தில் ஆட்சி அமைக்கப் போவது யார் என்பதில், 'சஸ்பென்ஸ்' நீடிக்கிறது.இம்மாதம், 5ம் தேதி நடந்த, எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில், அ.தி.மு.க., சட்டசபை கட்சி தலைவராக, சசிகலா தேர்வு செய்யப்பட்டார். மறுநாள், கவர்னர், தமிழகம் வருவார்; அவரை சந்தித்து, கடிதத்தை கொடுத்து, முதல்வராக பொறுப்பேற்கலாம் என, சசிகலா எண்ணினார்.

ஜெயலலிதா இறந்த பின்பே அப்போலோவுக்கு கொண்டுவந்தார்கள் .. அப்போலோ டாக்டர் ராமசீதா வாக்குமூலம் !

இந்நிலையில் தற்போது ஒரு புதிய தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. கிரீம்ஸ் ரோடு அப்பல்லோ மருத்துவமனையில் பணியாற்றி ராஜினாமா செய்த பெண் மருத்துவர் ஒருவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.வடசென்னை மாவட்ட ஜெ.தீபா பேரவையின் ஆலோசனை கூட்டம் ஒன்றில் அந்த பெண் மருத்துவர் கலந்துகொண்டு பேசினார். அப்போது பேசிய அவர் ஜெயலலிதா இறந்த நிலையில் தான் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். இரண்டாவது தளத்தில் வைத்து அவருக்கு சிகிச்சை அளிப்பது போல மக்களை ஏமாற்றினார்கள் என்ற பரபரப்பு தகவலை கூறியுள்ளார்.  வெப்துனியா

திமுக ஆதரவு: சுப்புலட்சுமி ஜெகதீசன் சொன்னது ஆழம் பார்க்க? போட்டு வாங்கியது?

thetimestamil : விமர்சனம் என்று வந்துவிட்டால் அதற்கு யாரும் விதிவிலக்கல்ல. நேற்று பத்திரிகையாளரிடம் பேசிய திமுகவின் துணைப் பொதுச் செயலாளர்களில் ஒருவரான சுப்புலட்சுமி ஜெகதீசன், தெளிவான குரலில், பன்னீர்செல்வத்தை சட்டசபையில் திமுக எம்.எல்.ஏக்கள் ஆதரிப்பார்கள் என்று சொல்லியிருக்கிறார். வழக்கமாக இதுபோன்ற ஸ்டேட்மெண்டுகளின் முன்னாலும் பின்னாலும் உள்ள கேள்விகளையும் பார்க்க வேண்டும். நடுவில் பேசிய இரண்டு வரிகளை மட்டும் எடுத்துப் போட்டுக் குழப்பியடிக்கவும் செய்வதுண்டு. ஆனால் இந்தப் பேட்டி அப்படியில்லை. தெளிவான பார்வையுடன் தெளிவான வார்த்தை பிரயோகங்களுடன் கொடுக்கப்பட்ட பேட்டி.
திமுகவின் அதிகாரப்பூர்வ குரல் ஒலித்தால் எப்படியிருக்குமோ அந்தத் தொனியில் அந்தப் பேட்டியில் விஷயங்களைச் சொல்லியிருந்தார் அவர். கேள்வி இதுதான். நடக்கிற சர்ச்சையில் எண்ணையை அள்ளிக் கொட்டுவதற்காகவும் ஆழம் பார்ப்பதற்காகவும் தலைமையின் ஆசியுடன் சொல்லப்பட்ட பதிலா என்கிற கேள்வியும் எழுகிறது. சுப்புலட்சுமி அவர்கள் சொன்னதற்கு உடனடியாக மறுப்பு அறிக்கை வெளியிட்டிருக்கிறார் திமுகவின் செயல் தலைவரான மு.க.ஸ்டாலின். தலைமைதான் இந்த விஷயத்தில் முடிவெடுக்கும் என்றும் அறிவித்திருக்கிறார். தங்களை மீறி தன்னுடைய கட்சியின் மூத்த தலைவர் ஒருத்தர் பேசியிருப்பதாக அந்த அறிக்கை அதிகாரப்பூர்வமாக ஒத்துக் கொள்கிறது.

தமிழகத்தில் கவர்னர் ஆட்சி! - கணக்குப் போடும் மத்திய அரசு!

மின்னம்பலம் :“அரசியல் சூழ்நிலைகள் பரபரப்பாக போய்க் கொண்டிருக்கிறது. ஜெயலலிதா இருந்தவரை அதிமுக-வில் யாரும் வாயே திறக்கமாட்டார்கள். இப்போது எல்லோரும் பேசுகிறார்கள். எல்லோரும் பேட்டி கொடுக்கிறார்கள். எல்லோரும் சிரிக்கிறார்கள். போயஸ் கார்டனுக்கு வெளியே சி.ஆர்.சரஸ்வதி பேட்டி கொடுக்கிறார். அதே நேரத்தில், கிரீன்வேஸ் சாலையில் மதுசூதனன் பேட்டி கொடுக்கிறார். பொதுவாக, அரசியல் கட்சித் தலைவர்கள் வசிக்கும் சாலைகளில் பெயர்கள் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படும். அந்த வரிசையில் கிரீன்வேஸ் சாலையும் சேர்ந்துவிட்டது. பரபரப்புக்கு கொஞ்சமும் பஞ்சமில்லாமல் இருக்கிறது. பன்னீரைப் பார்க்க தினமும் ஏராளமானவர்கள் அங்கே வருகிறார்கள். முக்கியமானவர்கள் சந்திக்க உடனடியாக அனுமதி கிடைக்கிறது. கட்சியின் பல்வேறுகட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் என நிறைய வருவதால், எல்லோருடைய பெயர் மற்றும் போன் நம்பர்களை வாங்குவதற்கு பன்னீர் வீட்டுக்கு வெளியே இருவர் அமர்ந்திருக்கிறார்கள். அவர்களிடம் தங்களது வருகையைப் பதிவுசெய்கிறார்கள் அதிமுக-வினர். அப்படி வந்துவிட்டுப்போன எல்லோருக்கும், ‘உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி. ஓ.பன்னீர்செல்வம், தமிழக முதல்வர்’ என்ற எஸ்.எம்.எஸ். போகிறதாம். அதற்காகத்தான் போன் நம்பரும் வாங்கியிருக்கிறார்கள். முதல்வர் மெசேஜ் அனுப்பியிருக்காரு... என தொண்டர்கள் படு குஷியாகிவிட்டனர்.

பன்னீருக்கு கவர்னர் அழைப்பு?

minnambalam.com :முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் வீட்டிற்கு பாமக கட்சியைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் பொன்னுசாமி வருகை தந்து தனது ஆதரவை தெரிவித்தார். அவரைத் தொடர்ந்து முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆதரவு தெரிவிக்க மற்றவர்களும் அவரது வீட்டுக்கு வருகை தந்து கொண்டிருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில் தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபியுடன் ஆளுநர் ஆலோசனை நடத்திய பிறகு முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை ஆளுநர் மாளிகைக்கு அழைக்கவிருப்பதாக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வீட்டில் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது

பொதுச்செயலாளர் என சசிகலா கூறுவது தவறு: தேர்தல் ஆணையத்திற்கு மதுசூதனன் கடிதம்

அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன், முதல் அமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், பொதுச்செயலாளர் என சசிகலா கூறுவது தவறு. அதிமுக தொண்டர்களால் அதிமுக பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். மன்னிப்பு கடிதம் கொடுத்து போயஸ் கார்டன் வந்தவர் சசிகலா. சசிகலா பொதுச்செயலாளராக தேர்வு செய்திருப்பதை ஏற்கக் கூடாது என தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளோம். சசிகலா பொதுச்செயலாளராக இருப்பதற்கு தகுதியற்றவர். 5 ஆண்டு உறுப்பினராக இருந்தால் தான் பொதுச்செயலாளர் பதவிக்கு வர முடியும் என்றார். படங்கள்: செண்பகபாண்டியன் நக்கீரன்

மதுசூதனன் : பொதுக்குழு விரைவில் கூடுகிறது .. சசிகலாவை நீக்கி விட்டோம் . புதிய பொது செயலரை தேர்ந்தெடுப்போம் !

சசிகலா நீக்கம் - விரைவில் தேர்தல் நடக்கும் : மதுசூதனன் அறிவிப்பு
அ.தி.மு.க.வில் நிலவிவரும் குழப்பமான சூழலால் முதல்வர் ஓ.பி.எஸ். தலைமையிலும், பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள சசிகலா தலைமையிலும்  அ.தி.மு.க. இரு அணிகளாகப் பிளவுபட்டுள்ளது. இதில் ஓ.பி.எஸ். தலைமையிலான அணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார் மதுசூதனன். இதனால், அ.தி.மு.க. அவைத்தலைவர் பதவியிலிருந்து அவரை நீக்கி சசிகலா உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்நிலையில் சென்னையில் இன்று மாலையில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இல்லத்தில் மதுசூதனன் செய்தியாளர்களை சந்தித்தார்."
;அப்போது அவர்,  ‘’எம்.ஜி.ஆர். உருவாக்கிய சட்டதிட்டத்தின்படி சசிகலா பொதுச்செயலாளரே அல்ல.  அதிமுக சட்டத்தி அதிமுக தொண்டர்கள் மட்டுமே பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க முடியும். அதிமுகவில் தற்காலிக பொதுச்செயலாளர்  என்ற ஒன்றே கிடையாது. அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு விரைவில் தேர்தல் நடக்கும்’’ என்று தெரிவித்தார்  ;படங்கள்: செண்பகபாண்டியன் நக்கீரன்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு.. களத்தில் குதித்த இலங்கை அமைச்சர் தொண்டமானின் காளைகள்

Sri Lanka Ministers’s 3 bulls in Alanganallur Jallikattuஅலங்காநல்லூர்: 2 ஆண்டுகளுக்கு பின்னர் அலங்காநல்லூரில் இன்று கோலாகலமாக ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது. இதில் இலங்கை அமைச்சர் செந்தில் தொண்டைமானின் 3 காளைகள் பங்கேற்றுள்ளன.
பீட்டா, உச்சநீதிமன்றம், மத்திய அரசு ஆகிய மூன்றும் ஒவ்வொரு வகையில் ஜல்லிக்கட்டு போட்டியை தமிழகத்தில் நடத்தவிடாமல் செய்தன. கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த ஜல்லிக்கட்டு, மாணவர்களின் புரட்சிப் போராட்டத்தின் மூலம் இன்று சிறப்பாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் பங்கேற்க 950 காளைகள் பதிவு செய்யப்பட்டு 1400க்கும் மேற்பட்ட காளையர்கள் அவற்றை அடக்கி வருகின்றனர். ஜல்லிக்கட்டில் பங்கேற்க பதிவு செய்யப்பட்டுள்ள காளைகளில் இலங்கை அமைச்சர் செந்தில் தொண்டைமானின் 3 காளைகள் இடம் பெற்றுள்ளன.

கவர்னரிடம் கொடுத்த மனுவில் சசிக்கு பாய்சன் வைத்தார், பன்னீர்!

சசிகலாவை சட்டரீதியாக கவர்னர் ஆட்சி அமைக்க அழைக்கக் கூடாது என்பதற்காகவே தயார் செய்து மனுக் கொடுத்துள்ளார் முதல்வர் பன்னீா். அதில் அப்படி என்னதான் இருந்தது. 2 மணி நேரத்தில் ஆட்சி அமைக்க அழைப்பார் என்று கருதி காத்து இருந்த சசி உறவினர்கள் அதிச்சியில் அடங்கிவிட்டனா். என்னை கட்டாயப்படுத்தி முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வைத்துவிட்டனர். அந்த ராஜினாமாவை திரும்பப்பெற அனுமதிக்க வேண்டும்., முதல்வராக சசிகலாவுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கக்கூடாது. கவர்னர் மாளிகையில் எம்.எல்.ஏ.,க்கள் அணிவகுப்பு நடத்த அனுமதி வழங்கக் கூடாது. சட்டசபையில் பெரும்பான்மை பலத்தை நிரூபிப்பதற்கு எனக்கு அனுமதி வழங்க வேண்டும். இவ்வாறு முதல்வர் பன்னீர் செல்வம் மனுக் கொடுத்ததோடு தனது ஆதரவு எம்எல்ஏக்கள், மற்ற எம்எல்ஏக்களை எப்படி கையெழுத்து இட சசிகலா வைத்தார் என்பது குறித்தும் மனு கொடுத்துள்ளார்.

தமிழ் ராக்கர்ஸ்ஸில் சிங்கம் 3 ரிலீஸ் - அதிர்ச்சியில் படக்குழு

விஜய் ஆன்டனியின் எமன் பட ஆடியோ வெளியீட்டு விழாவில் சிங்கம்3 தயாரிப்பாளர் ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா பேசினார். தமிழ்ராக்கர்ஸ் இணையத்தளம் பிப்ரவரி 9 ம் தேதி சிங்கம் 3 ரிலீஸ் ஆனவுடன், காலையிலேயே சிங்கம் 3 படத்தை லைவ் ஸ்ட்ரீம் பண்ணப்போறோம் என்று அறிவித்தார்கள். அதை கோலிவுட் அதிர்ச்சியாக பார்த்தது. இந்த கடுப்போடவே மேடையேறிய ஞானவேல் ராஜா பொது மேடையிலேயே **** கெட்ட வார்த்தையில் ஆரம்பித்து திட்ட ஆரம்பித்தார். ஆக்ரோஷமாக பேசிய அவர், ‘உன்னை ஆறு மாசத்தில் தேடி வந்து உள்ளே தள்ளுவேன் நாயே. அதை லைவ் ஸ்ட்ரீம் செய்வேன்” என்று சொன்னார். அத்தோடு,சிங்கம் 3 படத்தை இணைய தளத்தில் நேரலையில் ஒளிபரப்புவோம் என்று தமிழ் ராக்கர்ஸ் சொன்னதற்கு சிங்கம் 3 படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்தார். அதில், வரும் 9ம் தேதி வெளியாக உள்ள சிங்கம் 3 படத்தை தமிழ் ராக்கர்ஸ் மற்றும் 173 இணையதளங்களில் பதிவேற்றம் செய்வதை தடுக்க தடை விதிக்க கேட்டு இருந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. விசாரிக்க உகந்தது அல்ல என்று நீதிபதி சொன்னவுடன் வழக்கை வாபஸ் வாங்கி விட்டனர்.

மக்கள் அதிகாரம்: சசி – பன்னீர் இருவருக்குமே குறி பதவியும் அதிகாரமுமே

தற்போதுள்ள தமிழக அரசியல் சூழல் குறித்து மக்கள் அதிகாரம் (தமிழ்நாடு) வெளியிட்டுள்ள அறிக்கை:
 அனைத்து கட்சிகளும் முடிவெடுக்க முடியாமல் திணறுகின்றன. அது மட்டுமல்ல நாட்டின் மொத்த அரசு கட்டமைப்பும் – எல்லா நிறுவனங்களுமே இம்மாதிரியான நெருக்கடியில் சிக்கி, எதற்கும் தீர்வு காண முடியாத நிலைக்கு வந்துள்ளன. கால் வைக்கும் இடமெல்லாம் முள் குத்தும் நெருஞ்சிக் காட்டில் சிக்கிக்கொண்டன. எந்தப் பிரச்சினையையும் தீர்க்கும் தலைமை இல்லை. கேடுகெட்ட பன்னீர்-சசிகலா போன்றோர்களைத்தான் உருவாக்கவும் முன்னிறுத்தவும் முடிகிறது. மங்காத்தா போல தேர்தல் சூதாட்டத்தில் ஆளை மாற்றுவதைத் தொடர்ந்தால் இன்று பன்னீர், நாளை சசிகலா, அப்புறம் வளர்மதி என்பதுதான் கதியாகும்.
“மூன்றுமுறை முதல்வராக இருந்த என்னை மிரட்டி பதவியைப் பிடிங்கிக் கொண்டார்கள்” என்று ஒப்பாரி வைக்கிறார், பன்னீர்! அதைப் பார்த்து நாம் அனுதாபப்படலாமா? “இதோ, இன்னும் எங்கள் காயங்கள் ஆறவில்லை, வலிகுறையவில்லை. கடந்த வாரம் நீதானே போலீசை ஏவி எங்கள் மாணவனின் கண்ணைப் பறித்தாய், இன்னொருவனின் கையை முறித்தாய்; எங்கள் மீனவரின் முகத்தைச் சிதைத்து ஜெயிலில் அடைத்தாய்; எங்கள் தாயின் மண்டையை பிளந்தாய்; எங்கள் சொத்துக்களைச் சூறையாடினாய்! இப்போது பதவி பறிபோனதென்று எங்களிடம் வந்து முறையிடுகிறாயே, வெட்கமில்லையா? கடந்த மாதம்தான் அலங்காநல்லூரில் நாங்கள் விரட்டியடித்ததை அதற்குள் மறந்துவிட்டாயா” என்றல்லவா நாம் விரட்டவேண்டும்?

பன்னீர்செல்வம் ஆளுநரிடம் முன் வைத்த 5 கோரிக்கைகள்... கொடுத்த 6 கோப்புகள்!

கவர்னர் வித்யாசாகர் ராவ், ஓ.பன்னீர் செல்வம்மிழகத்தின் பரபரப்பான அரசியல் சூழலில், வாழ்வா? சாவா? போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றனர் சசிகலாவும், பன்னீர் செல்வமும்... முதல்வர் பொறுப்பை ராஜினாமா செய்த ஓ.பி.எஸ், அதை வாபஸ் பெற்று, மீண்டும் அந்த இடத்தைக் கைப்பற்றத் துடித்துக் கொண்டிருக்கிறார். 128 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவை வைத்திருக்கும் சசிகலா முதல்முறையாக முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்துவிடப் போராடிக் கொண்டிருக்கிறார். யாருக்கு வெற்றி என்பது தற்காலிகமாக கவர்னரின் கையில்தான் இருக்கிறது. இப்படிப்பட்ட ‘இருதலைக்கொல்லி’ நிலையில் தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ் ஓ.பி.எஸ், வி.கே.எஸ் என இருவருக்கும் ஒரே நாளில் அப்பாயின்ட்மென்ட் கொடுத்தார். 9-ம் தேதி மாலை 5 மணிக்கு கவர்னரைச் சந்திக்கப்போன ஓ.பி.எஸ் 5 கோரிக்கைகள், 6 கோப்புகளை தன்னுடன் எடுத்துப்போனார்.