சனி, 11 பிப்ரவரி, 2017

அதிமுக எம்எல்ஏக்கள் தங்கியுள்ள கூவத்தூர் ரிசார்ட்டில் டிஎஸ்பி, தாசில்தார் ரெய்டு

ஆட்கொணர்வு மனுக்கள்எம்எல்ஏக்கள் உண்ணாவிரதம்ஆடம்பர சிறைகாஞ்சிபுரம்: அதிமுக எம்எல்ஏக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள கூவத்தூர் கோல்டன் பே ரிசார்ட்டில் இன்று அதிகாலை செய்யூர் வட்டாட்சியர் ராமச்சந்திரன், மாமல்லபுரம் டிஎஸ்பி ஹெட்விக் ஆகியோர் ஆய்வு நடத்தினர். எம்எல்ஏக்கள் சிறைவைக்கப்பட்டுள்ளதாக தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து இந்த ஆய்வு நடைபெற்றது.
அதிமுகவில் ஓபிஎஸ் அணி சசிகலா அணி என இரண்டு அணியாக உள்ளது. யார் ஆட்சி அமைப்பது என்பதில் ஒருவித பதற்றமான நிலை உருவாகியுள்ளது. தனது ராஜினாமாவை வாபஸ் பெறுவதாக ஓபிஎஸ் ஆளுநரிடம் தெரிவித்துள்ளார். சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிப்பேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

எம்எல்ஏக்கள் யார் பக்கம்அதிமுகவின் தற்காலிக பொதுச்செயலாளர் சசிகலா 134 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளதாகவும், தன்னை ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் என்றும் பதவியேற்க ஆவண செய்ய வேண்டும் என ஆளுநரிடம் வியாழக்கிழமையன்று கடிதம் அளித்து கோரிக்கை வைத்தார்.< சசிகலாவுக்கு 134 எம்எல்ஏக்கள் ஆதரவு இருப்பதாக கூறப்பட்ட நிலையில், முதல்வர் ஓ. பன்னீர் செல்வத்துக்கு ஆதரவு தெரிவிப்பதாக 5 எம்.எல்.ஏக்கள் கூறியுள்ளனர். பலர் ரகசியமாகவும் தொடர்பு கொண்டு ஆதரவு தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் சசிகலாவுக்கு ஆதரவாக உள்ள எம்எல்ஏக்கள் ஓபிஎஸ் பக்கம் சென்று விடக்கூடாது என்பதற்காக அவர்களை கிழக்குக் கடற்கரை சாலையில் உள்ள கூவத்தூர் கோல்டன் பே ரிசார்ட்டில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

 அருகில் உள்ள சில ரிசார்ட்களிலும் தங்க வைக்கப்பட்டனர். மற்றவர்களை சந்திக்கவும், தொலைபேசியில் பேசவும் தடைவிதிக்கப்பட்டது. எம்எல்ஏக்களை கண்காணிக்க மன்னார்குடியில் இருந்து அடியாட்கள் களமிறக்கப்பட்டனர். எந்த வித தகவல் தொடர்பும் இன்றி எம்எல்ஏக்கள் சிறைவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான சகல வசதியும் செய்து தரப்பட்டுள்ளது. இந்நிலையில் தங்கள் பகுதி எம்எல்ஏ வை காணவில்லை என பல்வேறு பகுதியை சேர்ந்த மக்கள் புகார் அளித்த வண்ணம் உள்ளனர்.

 பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தொகுதி அதிமுக எம்எல்ஏ., ஆர்.டி.ராமசந்திரன், கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தொகுதி அதிமுக பெண் எம்எல்ஏ. எம்.கீதாவை ஆகியோரை மீட்டு நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என, குன்னம் தொகுதி வாக்காளர் எம்.ஆர்.இளவரசன் மற்றும் வி.ப்ரீத்தா ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுக்கள் தாக்கல் செய்து இருந்தனர்.

இந்த மனுக்கள் நீதிபதிகள் சி.டி.செல்வம், டி.மதிவாணன் ஆகியோர் முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் எம்.ஆர்.இளவரசன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கே.பாலு, தாங்கள் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 20 எம்எல்ஏக்கள், உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர் எனத் தெரிவித்தார். நீதிபதிகள் உத்தரவு
அதைத்தொடர்ந்து, இதுதொடர்பாக சென்னை மாநகர காவல் துறை ஆணையர், காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி., கூவாத்தூர் காவல் நிலைய ஆய்வாளர், பெரம்பலூர் மாவட்ட எஸ்.பி உள்ளிட்ட எதிர்மனுதாரர்கள் அனைவரும் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை திங்கள்கிழமைக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.< அதிகாரிகள் ஆய்வு< இதைத் தொடர்ந்து கூவத்தூரில் எம்எல்ஏக்கள் தங்கியிருந்த ரிசார்ட்டில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். இன்று அதிகாலை செய்யூர் வட்டாட்சியர் ராமச்சந்திரன், மாமல்லபுரம் டிஎஸ்பி ஹெட்விக் ஆகியோர் ஆய்வு நடத்தினர்.

எம்எல்ஏக்கள் சிறைவைக்கப்பட்டுள்ளதாக தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து டிஎஸ்பி, வட்டாட்சியர் ஆய்வு மேற்கொண்டனர்< செய்தியாளர்கள் மீது தாக்குதல் கூவத்தூர் ரிசார்ட்டில் ஆய்வு நடப்பது அறிந்து செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்கள் மீது மன்னார்குடி கும்பலும் அடியாட்களும் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில நாட்களாக குவிக்கப்பட்டுள்ள மன்னார்குடி அடியாட்கள், கூவத்தூர் கிராம மக்களிடம் கூட கடுமையாக நடந்து கொள்வதாக குற்றம்சாட்டப்பட்டது  tamiloneindia

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக