வெள்ளி, 10 பிப்ரவரி, 2017

ஸ்டாலின் ஆளுநரிடம் மனு .. முடங்கி உள்ள தமிழக நிவாகம் .. உடன் நடவடிக்க எடுங்கள் !

தமிழக நிர்வாகம் நீண்ட காலமாகமே முடங்கியுள்ளது, உடனடியாக நடவடிக்கை எடுங்கள் என்று ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் மனு அளித்துள்ளார். முடங்கி போயுள்ள தமிழக அரசினை காப்பாற்ற நடவடிக்கை எடுங்கள்ஆளுநரிடம் ஸ்டாலின் மனு சென்னை: தமிழக அரசியலின் பரபரப்பான சூழலில், ஆளுநர் வித்யாசாகர் ராவை, எதிர்க் கட்சி தலைவர் ஸ்டாலின் இன்று இரவு 7.30 மணியளவில் சந்தித்தார். ஸ்டாலினுடன் துரைமுருகன், பொன்முடி, எ.வ.வேலு உள்ளிட்டோரும் ஆளுநர் மாளிகை சென்றனர். ஆளுநரை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் ஸ்டாலின் பேசியதாவது: மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 75 நாட்களும் தமிழகத்தில் எந்த பணிகளும் நடைபெறவில்லை.
அதேபோல், ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு எந்த பணிகளும் நடைபெறவில்லை.


 ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள் இளைஞர்கள் ஒருவார காலத்திற்கு மேலாக போராட்டம் நடத்தினார்கள். அப்போது தமிழக அரசு முடங்கியிருந்தது. ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பிறகு, அதிமுக கட்சிக்குள் மல்லுக்கட்டு நடக்கிறது ஜல்லிக்கட்டு போராட்டம், அதிமுக கட்சிக்குள் மல்லுக்கட்டு நடக்கிறது. யார் முதலமைச்சர் என்ற பிரச்சனையில் பன்னீர் செல்வம் காபந்து முதலமைச்சராக உள்ளார்.

அதனால், தமிழகத்தில் தேர்தல் முடிந்து கடந்த 9 மாதங்களாக இதுவரை தமிழகத்தில் எந்த பணிகளும் நடைபெறவில்லை. தமிழக அரசு முற்றிலும் முடங்கி போயுள்ளது. சட்டப்பேரவை கூட்டத்தை உடனே கூட்ட கோரிக்கை வைத்தோம். சட்ட ரீதியான நடவடிக்கை எடுத்து தமிழகத்தில் நல்ல நிலையை ஏற்படுத்த வேண்டும். சசிகலாவின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க விரும்பவில்லை. எம்.எல்.ஏ-க்கள் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்தும் ஆளுநரிடம் தெரிவித்தோம் இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக