வெள்ளி, 10 பிப்ரவரி, 2017

தமிழ் ராக்கர்ஸ்ஸில் சிங்கம் 3 ரிலீஸ் - அதிர்ச்சியில் படக்குழு

விஜய் ஆன்டனியின் எமன் பட ஆடியோ வெளியீட்டு விழாவில் சிங்கம்3 தயாரிப்பாளர் ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா பேசினார். தமிழ்ராக்கர்ஸ் இணையத்தளம் பிப்ரவரி 9 ம் தேதி சிங்கம் 3 ரிலீஸ் ஆனவுடன், காலையிலேயே சிங்கம் 3 படத்தை லைவ் ஸ்ட்ரீம் பண்ணப்போறோம் என்று அறிவித்தார்கள். அதை கோலிவுட் அதிர்ச்சியாக பார்த்தது. இந்த கடுப்போடவே மேடையேறிய ஞானவேல் ராஜா பொது மேடையிலேயே **** கெட்ட வார்த்தையில் ஆரம்பித்து திட்ட ஆரம்பித்தார். ஆக்ரோஷமாக பேசிய அவர், ‘உன்னை ஆறு மாசத்தில் தேடி வந்து உள்ளே தள்ளுவேன் நாயே. அதை லைவ் ஸ்ட்ரீம் செய்வேன்” என்று சொன்னார். அத்தோடு,சிங்கம் 3 படத்தை இணைய தளத்தில் நேரலையில் ஒளிபரப்புவோம் என்று தமிழ் ராக்கர்ஸ் சொன்னதற்கு சிங்கம் 3 படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்தார். அதில், வரும் 9ம் தேதி வெளியாக உள்ள சிங்கம் 3 படத்தை தமிழ் ராக்கர்ஸ் மற்றும் 173 இணையதளங்களில் பதிவேற்றம் செய்வதை தடுக்க தடை விதிக்க கேட்டு இருந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. விசாரிக்க உகந்தது அல்ல என்று நீதிபதி சொன்னவுடன் வழக்கை வாபஸ் வாங்கி விட்டனர்.
ஆனால், சிவில் வழக்காக தொடர அனுமதி கிடைத்துள்ளது. அதன் பின் வேறு ஒரு மனு மூலம், சிங்கம் 3, அனுமதியின்றி எந்த ஒரு இணையதளமும் வெளியிட கூடாது என சென்னை உயர் நீதிமன்ற த்தில் தடை வாங்கினர். ஆனால், நேற்று சிங்கம் 3 ரிலீஸ் ஆனவுடன், லைவ்வில் சிங்கம்3 யை ஒளிபரப்புவோம் என்று சவால் விட்டது போலவே, படத்தின் பல காட்சிகளை லைவ் ஸ்ட்ரீம் செய்துள்ளது தமிழ் ராக்கர்ஸ் . இதனால் சூர்யா முதல் கோலிவுட் அதிர்ச்சியில் உள்ளனர். ‘சொன்ன சொல்லை காப்பாத்திட்டியே, தமிழ் ராக்கர்ஸ் ‘ என்று பேஸ்புக்கில் ஒருத்தரு புகழ்ந்து இருக்கார். இந்த சூழலில், முழு படமும் தமிழ் ராக்கர்ஸ் உட்பட எல்லா இணையதளங்களிலும் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதனால் சூர்யா உட்பட அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
லைவ்டே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக