வெள்ளி, 10 பிப்ரவரி, 2017

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு.. களத்தில் குதித்த இலங்கை அமைச்சர் தொண்டமானின் காளைகள்

Sri Lanka Ministers’s 3 bulls in Alanganallur Jallikattuஅலங்காநல்லூர்: 2 ஆண்டுகளுக்கு பின்னர் அலங்காநல்லூரில் இன்று கோலாகலமாக ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது. இதில் இலங்கை அமைச்சர் செந்தில் தொண்டைமானின் 3 காளைகள் பங்கேற்றுள்ளன.
பீட்டா, உச்சநீதிமன்றம், மத்திய அரசு ஆகிய மூன்றும் ஒவ்வொரு வகையில் ஜல்லிக்கட்டு போட்டியை தமிழகத்தில் நடத்தவிடாமல் செய்தன. கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த ஜல்லிக்கட்டு, மாணவர்களின் புரட்சிப் போராட்டத்தின் மூலம் இன்று சிறப்பாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் பங்கேற்க 950 காளைகள் பதிவு செய்யப்பட்டு 1400க்கும் மேற்பட்ட காளையர்கள் அவற்றை அடக்கி வருகின்றனர். ஜல்லிக்கட்டில் பங்கேற்க பதிவு செய்யப்பட்டுள்ள காளைகளில் இலங்கை அமைச்சர் செந்தில் தொண்டைமானின் 3 காளைகள் இடம் பெற்றுள்ளன.

ஜல்லிக்கட்டில் தீவிர ஆர்வம் கொண்ட இலங்கையின் உவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டைமான், ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து போட்டிகளில் பங்கேற்க வைத்து வருகிறார். அவனியாபுரத்திலும் செந்தில் தொண்டைமானின் காளை பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. tamilineindia

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக