சனி, 11 பிப்ரவரி, 2017

கூவத்தூர் விடுதியில் போலீசார் ஆய்வு: செய்தியாளர்கள் மீது கல் வீச்சு

சசிகலாவுக்கு ஆதரவான அதிமுக எம்எல்ஏக்கள் சென்னையை அடுத்த கல்பாக்கம் அருகே கூவத்தூர் கோல்டன் பே ரெசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் சட்ட விரோதமாக தங்க வைக்கப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்தது. அதில் இரண்டு எம்எல்ஏக்களை மீட்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக அறிக்கை அளிக்கும்படி டிஜிபி மற்றும் சென்னை காவல் ஆணையருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து காவல்துறையினர் இன்று காலை 6.45 மணி அளவில் கூவத்தூர் விடுதி பகுதிக்கு வந்தனர். மாமல்லபுரம் டி.எஸ்.பி. எட்வர்டு தலைமையிலான 10க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் வட்டாட்சியர் ராமச்சந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். விடுதியில் எம்எல்ஏக்கள் சிறை வைக்கப்பட்டுள்ளார்களா என அவர்கள் விசாரணை நடத்தினர். இதனிடையே இதனை செய்தி சேகரிக்க வாகனங்களுடன் வந்த செய்தியாளர்களை அங்கிருந்த சிலர் கல்வீசி தாக்குதல் நடத்தினர். அப்போது வெளியே நின்றிருந்த போலீசார் இதனை தடுக்காமல் அவர்களும் போலீஸ் வாகனத்தை எடுத்துக்கொண்டு வெளியேறினர் நக்கீரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக