சனி, 11 பிப்ரவரி, 2017

மோடியின் உதவியால் அதிமுக எம்எல்ஏக்கள் சொகுசு வாழ்கை, பண மழையில் குளிப்பு

மோடியின் மத்திய அரசு வருமான துறை மிகஸ்ர் தின்று கொண்டு குதிரை பேரத்தை ஊக்குவிப்பதால் ஜெயலலிதா காலத்தில் குவித்த ஊழல் பணத்தை பன்னிர் கோஷ்டியும் சசி கோஷ்டியும் வாரி இறைப்பு.,. sm 3.15பிஜேபி யின் மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு மற்றும் ராஷ்டிரிய சேவா சங்கம் , பிஜேபி எம்பி சுப்ரமணிய சுவாமி ஆதரிக்கும் சசிகலா கோஷ்டி இரு கட்ட பாதுகாப்பை அளித்துள்ளார்கள்.
சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலை ரோட்டில் கூவத்தூர் கிராமத்தில் முதல் கட்டத்தில் கோல்டன் பே ரிசார்ட்டில் 51 எம்.எல்.ஏ காவலுக்கு அமைச்சர்கள் தங்கமணி, அன்பழகன், பாண்டியராஜன், விஜயபாஸ்கர் போன்றவர்கள் மற்றும் இரண்டாம் கட்ட காவலுக்கு சினிமா துறை சார்ந்த பவுன்சர்களைத் சுமார் 160 பேரை அழைத்துவந்துள்ளனர்.
தலைக்குத் தினமும் 4000 ரூபாய் சம்பளம் + பெட்டா 1500 ரூபாய் என்று சினிமா Fight association துறைக்கும் வருமானம் வருவதால் அவர்களும் ஏகத்துக்கு குஷியில் உள்ளதாக தகவல் வருகிறது.

பே ரிசார்ட்டில் இருந்து எட்டு கி.மீ. தூரத்தில் உள்ள இன்னொரு ரிசார்ட்ஸில் 26 எம்.எல்.ஏ-க்கள் பிரிவுக்கு செல்லூர் ராஜ், கடம்பூர் ராஜ், ரெயின்போ விஜயபாஸ்கர், வேலுமணி, காமராஜ் என அமைச்சர்கள் பட்டாளம் பாதுகாக்கிறது . ஒரு எம்எல்ஏ வுக்கு மூன்று சினிமா பௌன்சர் என்ற விதத்தில் சுமார் 78 பேர் இரண்டாம் அடுக்கு காவலில் உள்ளனர்.


தங்களுக்கு முழு ஆதரவாக இருக்கும் எம்.எல்.ஏ-க்களை ஒரே இடத்தில வைத்து மகிழ்வித்தும் மதில் மேல பூனை போல இருக்கும் எம்.எல்.ஏ-க்களை வேறு வேறு இடத்துக்கு மாற்றியும் பாதுகாக்கிறார்கள் மந்திரிகள்.
இதற்கு இடையே எம்.எல்.ஏ-க்களைக் காணவில்லை என்று தொகுதிகளில் போஸ்டர்களை ஒட்ட ஆரம்பித்துள்ளனர். சேலம் கமிஷனர் ஆபீஸில் புகார் தந்திருக்கிறார்கள். நீதிமன்றத்தில் எம்.எல்.ஏ-க்களைக் காணவில்லை. மீட்டுத்தரும்படி மனுதாக்கல் ஆகிறது.


Special Correspondent
ஒ.பி.எஸ் கோஷ்டி அணி தெரிவிக்கும் தகவல்:
சசிகலா கோஷ்டி எம்.எல்.ஏ-க்களை, அமைச்சர் எடப்பாடி மூலம் சில கோடிகள் முன்பணமாக பேசப்பட்டு அவர்கள் சொந்தங்கள் உறவினர்கள் மூலம் பட்டு வாடா செய்யப்பட விருப்பதாகவும் ஆனால் மத்தியில் நேரிடையாக மோடி அரசின் ஆதரவை எச். ராஜா பிஜேபி பொது செயலாளர் பேட்டியை மேற்கோள்காட்டி தங்களுக்கு இருப்பதால் தாங்கள் மொத்த 5சி பணத்தை ஒரே செட்டில்மென்ட் தந்த விஷயத்தை சொல்லி சசி கோஷ்டி எம்.எல்.ஏ-க்களுக்கு வலை வீசுவதால் சசி தரப்பு கவலை அடைந்து உள்ளதாக தெரிவித்தனர்.
இரு கோஷ்டிகளை ஆதரிக்கும் மத்திய மோடியின் பிஜேபி அரசு:
வெளிமாநில வங்கிகளில் எங்கே போனால், புதுநோட்டு மொத்தமாக கிடைக்கும் என்றெல்லாம் க்ளூ கொடுத்து அனுப்புகிறார்கள் மத்திய அரசின் சில அதிகாரிகள். அதில் அவர்களுக்கும் சுமார் 20% வருவதால் அங்கேயும் மோடி அரசு அதிகாரிகள் கோடிகளில் ஹாப்பி... இதனை மத்திய பிஜேபி மோடி அரசின் வருமானவரித் துறையினரும் கண்டும்காணாமல் ஏன் மிக்ஸர் சாப்பிட வேண்டும் என்று பொது மக்கள் கேள்விகள் வைக்கின்றனர்.
உங்கள் அறிவுறுத்தல் மற்றும் பின்னுட்டம் எங்களுக்கு மிகவும் பயன் தரத்தக்கது . நாங்கள் சரியாக / நியாமாக ஒரு விஷயத்தில் இரு பக்கமும் செய்தியை முக்கியத்துவம் தருகிறோமோ என்று எங்களை தொடர்ந்து கண்காணித்து வழிநடத்த வேண்டுகிறோம்... நன்றி - ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் - ஸ்பெல்க்கோ மீடியா ஆசிரியர் குழு spelco.medea ,com 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக