சனி, 11 பிப்ரவரி, 2017

உத்தர பிரேதேசத்தில் முதல்கட்ட வாக்கெடுப்பு தொடங்கியது !


உத்தரப்பிரதேசத்தின் 403 சட்டசபை தொகுதிகளில் 73 தொகுதிகள் இன்று தேர்தலைச் சந்திக்கின்றன. ஏழு கட்டங்களாக நடக்கவிருக்கும் தேர்தலின் முதல்கட்ட தேர்தல் இன்று நடக்கிறது. சமாஜ்வாதி - காங்கிரஸ் கூட்டணி, பகுஜன் சமாஜ் கட்சி, பாரதிய ஜனதா கட்சி ஆகியவை இன்றைய தேர்தலில் பங்கேற்கும் முன்னணிக் கட்சிகள். 2013இன் முஸாஃபர் நகர் கலகத்துக்குப் பேர்போன, இனவாத பிரச்னைகள் இருக்கும் உத்தரப்பிரதேசத்தில் அதிகாரத்துக்கு வர இந்தக் கட்சிகள் தேர்தலில் மோதுகின்றன. பாகிஸ்தான் எல்லையில் நடந்ததாக கூறப்படும் தாக்குதல்  , மோடியின் பண மதிப்பிழப்பு நடவடிக்கை ஆகியவற்றின் தாக்கம் குறித்த பாஜக-வின் கணிப்பு, கட்சிக்குள் குடும்ப மோதல்கள் நடந்த நிலையில், அகிலேஷ் யாதவின் எதிர்காலம் போன்றவை இந்த தேர்தலில் வினையாற்றக்கூடும்.
காங்கிரஸ் மீண்டும் நாடு முழுதும் கால்பதிக்க நினைக்கும் நிலையில், நல்லதே வேண்டியிருக்கும். 2019ஆம் ஆண்டு பொதுத் தேர்தல்களுக்கான அரையிறுதிப் போட்டியாக பார்க்கப்படும் இந்த தேர்தல், முன்னணி கட்சிகளுக்கு அக்னிப் பரீட்சையாக இருக்கிறது. 2014ஆம் ஆண்டின் மக்களவைத் தேர்தலில் 80 சீட்டுகளில் 73 சீட்டுகளை வென்றது பாஜக. இந்த தேர்தல் பிரச்சாரத்துக்காக பிரதமர் நரேந்திர மோடி சில தடவை உத்தரப்பிரதேசம் சென்றுவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  மின்னம்பலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக