சனி, 21 நவம்பர், 2015

படப்பிடிப்பில் உதவி இயக்குனரை அடித்த ...மீனாட்சி

தமிழில் ‘கருப்பசாமி குத்தகைதாரர்’ படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் மீனாட்சி. இப்படத்திற்கு பிறகு ‘டி.என்.07 ஏ.எல்.4777’, ‘ராஜாதி ராஜா’, ‘மந்திர புன்னகை’, ‘அகம் புறம்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் சமீபத்தில் வெளியான ‘வெள்ளக்கார துறை’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார். இவர் தற்போது ‘நேர்முகம்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படப்பிடிப்பின்போது படத்தின் உதவி இயக்குனரை மீனாட்சி தாக்கியுள்ளார். உடனே அவர் மயக்க நிலைக்கு சென்றிருக்கிறார். இதை பார்த்த படக்குழுவினர் உடனே அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் படப்பிடிப்பில் உதவி இயக்குனரை அடித்ததற்கு மன்னிப்பு கேட்கும் வரை அவர் படப்பிடிப்பு தளத்தை விட்டு வெளியேறக் கூடாது என்று சிறை பிடித்தனர். பின்னர் மீனாட்சி படப்பிடிப்பில் இவ்வாறு நடந்ததற்கு மிகவும் வருந்துகிறேன் என்று கூறி மன்னிப்பு கடிதம் எழுதியுள்ளார். அதன் பின்னரே படக்குழுவினர் சமாதானம் ஆகியிருக்கிறார்கள்.

மதுரை நீதிமன்றம் கோவிலுக்குள் என்னன்ன ஆடை அணியவேண்டும் என்று தீர்ப்பு...காசில போயி சொல்லவேண்டியதுதானே...

அரைக்கால் டவுசர், கையில்லாத மேலாடை, ஜீன்ஸ், குறைந்தளவு டி-சர்ட்கள் அணிந்து வருவோரை இந்து கோயிலுக்குள் அனுமதிக்கக் கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருச்சி மாவட்டம், மருங்காபுரி அக்கியம்பட்டியில் உள்ள ஸ்ரீசெண்பகவிநாயகர் கோயில் விழாவில் நவ. 22, 23 ஆகிய நாள்களில் கிராமிய இசை நிகழ்ச்சி நடத்துவதற்கு அனுமதி கோரி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்து நீதிபதி எஸ்.வைத்தியநாதன் நேற்று பிறப்பித்த இடைக்கால உத்தரவு:
செண்பகவிநாயகர் கோயிலில் இரு நாட்களிலும் கலைநிகழ்ச்சிகள் நடத்த அனுமதி வழங்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சிகளில் ஜாதி, கட்சி, மதத் தலைவர்கள் சார்பாக கோஷங்கள் எழுப்பக்கூடாது. பாடல்கள் ஒலிபரப்பக்கூடாது. அவர்களின் படங்களுடன் பிளக்ஸ் போர்டுகள், பேனர்கள் கட்டக்கூடாது, பொதுமக்களின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கக்கூடாது, ஒலிபெருக்கி பயன்படுத்தக்கூடாது, இந்த நிபந்தனைகள் மீறப்பட்டால் போலீஸார் நிகழ்ச்சியை நிறுத்தலாம்.

அமெரிக்காவில் இஸ்லாமியர்கள் குறித்து கணக்கெடுப்பு வேண்டும்” ஜனாதிபதி வேட்பாளர் Trump Donald

குடியரசு கட்சி சார்பாக ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் டொனால்ட் ட்ரம்ப் நேற்று செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் கூறுகையில், ”பாரீஸ் தாக்குதலுக்கு பிறகு, அமெரிக்காவில் பல விடயங்களை கூர்ந்து கண்காணிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, அமெரிக்காவில் வசித்து வரும் ஒட்டுமொத்த இஸ்லாமியர்களின் எண்ணிக்கையை சேகரிப்பதுடன் அவர்களின் முகவரிகள், பணியிடங்கள் உள்ளிட்ட தகவல்களையும் கணக்கெடுக்க வேண்டும்” என கூறியுள்ளார். மேலும், தான் ஜனாதிபதியாக வெற்றி பெற்றால், இதனை கட்டாயமாக செயல்படுத்துவேன் என கூறியுள்ளார். டொனால்ட் ட்ரம்பின் இந்த கருத்து பல தரப்பினரிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து, ஜெர்மனியை அடால்ஃப் ஹிட்லர் ஆட்சி செய்தபோது யூதர்களின் எண்ணிக்கையை கணக்கெடுக்க உத்தரவிட்ட சர்வாதிகார போக்கையே இது காட்டுகிறது என்று குற்றம் சாட்டியுள்ளார். webdunia.com

பாரிஸ் 132 பேர் பலியான தாக்­கு­தல்­க­ளுக்கு திட்டம் தீட்­டிய சூத்­தி­ர­தா­ரி­யை எப்படி நெருங்கியது காவல்துறை? விடியோ...

பிரான்ஸின் பாரிஸ் நகரில் கடந்த வெள்­ளிக்­கி­ழமை 132 பேர் பலி­யா­வ­தற்குக் கார­ண­மான தாக்­கு­தல்­க­ளுக்கு திட்டம் தீட்­டிய சூத்­தி­ர­தா­ரி­யான அப்­டெல்­ஹமீட் அபா­யோ­வுத்தை தேடி பொலிஸார் மாடிக் கட்­ட­ட­மொன்றில் புதன்­கி­ழமை அதி­காலை மேற்­கொண்ட தேடுதல் நட­வ­டிக்­கையின் போது தற்­கொலைக் குண்­டுத் ­தாக்­கு­தலை நடத்­திய பெண் தொடர்­பான தக­வல்கள் வியா­ழக்­கி­ழமை வெளி­யா­கி­யுள்­ளன. ஐரோப்­பாவின் முத­லா­வது பெண் தற்­கொலைக் குண்­டு­தா­ரி­யான அந்தப் பெண், அப்­டெல்­ஹமீட் அபா­யோ­வுத்தின் (27 வயது) மைத்துனியான ஹஸ்னா அயித்­போ­லச்சன் என மேற்­படி உத்­தி­யோ­க­பூர்­வ­மற்ற தக­வல்கள் கூறு­கின்­றன.
இது­வரை காலமும் அப்­டெல்­ஹமீட் அபா­யோவுத் சிரி­யா­வி­லி­ருந்து ஐ.எஸ். தீவி­ர­வா­தி­களின் தாக்­கு­தல்­க­ளுக்கு வியூகம் வகுத்து வந்ததாக நம்­பப்­பட்டு வந்­தது.

லாலுவின் 26 வயது மகன் தேஜஸ்வி துணை முதல்வர் அடுத்த மகனும் அமைச்சர்..

பாட்னா: பீஹார் மாநில முதல்வராக, 5வது முறையாக, ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதிஷ் குமார் நேற்று பதவியேற்றார். அவருடன், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவின், இரு மகன்கள் உட்பட, 28 பேர், அமைச்சர்களாக பதவியேற்றனர். பீஹார் மாநிலத்தில், சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில், மொத்தமுள்ள, 243 தொகுதிகளில், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், லாலுவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இடம்பெற்ற, 'மெகா' கூட்டணி, 178 தொகுதிகளை கைப்பற்றியது. இதையடுத்து, தலைநகர் பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில், நிதிஷ் குமார் தலைமையிலான புதிய அரசின் பதவியேற்பு விழா, கோலாகலமாக நேற்று நடைபெற்றது.

ஓசைப்படாமல் உதவும் தனியார் அமைப்புகள்: ஒருங்கிணைக்க மாநகராட்சி முன்வராதது ஏன்? செயல்பட தெரியாமல் திரு திருவென முழித்த நிர்வாகம்...

சென்னை: மழை வெள்ளத்தால் சீர்குலைந்துள்ள சென்னை நகரத்தில், மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப, பல்வேறு தனியார் அமைப்புகள் ஓசையின்றி களப்பணி ஆற்றி வருகின்றன. அந்த அமைப்புகளை ஒருங்கிணைத்து, உதவிகளை பெற, மாநகராட்சி முன்வரவில்லை.வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், மாநகராட்சி நிர்வாகம், நிவாரண பணிகளை செய்து வருகிறது. மாநகராட்சியின், 23 ஆயிரம் பணியாளர்கள், குடிநீர் வாரியம் உட்பட பல்வேறு இதர அரசு துறைகளின் பணியாளர்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாக, மாநகராட்சி தெரிவிக்கிறது.
பாதிக்கப்பட்டோருக்கு உணவு, உறைவிட வசதி போன்றவற்றை மாநகராட்சி அளிப்பதாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால், தற்போதைய பாதிப்பிற்கு, அவை மட்டுமே போதுமானதாக இல்லை. வெள்ள பாதிப்பில் உடைமைகளை இழந்து, உணவின்றி, குளிர் தாங்காமல், உறங்க முடியாமல் தவிப்போருக்கு, அந்தந்த பகுதி நலச்சங்கங்கள், தனியார் அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் என, பல்வேறு அமைப்புகளும், தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றன.  அம்மா தாயே புரட்சி தலைவி தெய்வமே பாதாதி கேசம் சூர்யப்பிரகாசம் பரிபூர்ண சந்திரோதயம் கருணா கடாட்சம்  வெளக்கெண்ணே...இதுக்கே நேரம் போயிடுச்சு

24-ல் தேசிய முற்போக்கு கூட்டணி கூட்டம்

புதுடில்லி: விரைவில் பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற உள்ளதை முன்னிட்டு தேசிய முற்போக்கு கூட்டணியின் கூட்டம் வரும் 24-ம் தேதி நடைபெற உள்ளது. பார்லிமென்ட்டின் குளிர்கால கூட்டதொடர் வரும் வியாழக்கிழமை (26ம் தேதி துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பார்லியில் முக்கிய பிரச்னைகளில் எதிர்கட்சிகளின் ஆதரவுடன் மசோதாக்கள் நிறைவேற்றுவது மற்றும் எதிர்கட்சிகள் எழுப்பும் பிரச்னைகளை சமாளிப்பது குறித்து வரும் 24-ம் தேதி தேசிய முற்போக்கு கூட்டணி கூட்டம் நடைபெற உள்ளது. முன்னதாக இக்கூட்டம் 18-ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. ஆனால் எதிர்பாராத விதமாக விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் தலைவர்களில் ஒருவரான அசோக் சிங்கால் மறைவை அடுத்து கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

2016 இலும் நாமதாய்ன் ஜெயிப்போம்ல....விசுக்குவோம்ல? போங்கடா போக்கத்த பயலுகளா...ஒரு விசுவாசியின் ஒப்புதல்...

nisaptharm.com :ஊர்ப்பக்கத்தில் ஒரு கிராமப்புற தொடக்கப் பள்ளியை உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தியிருக்கிறார்கள். ‘பள்ளிக்கு கட்டிடங்களே இல்லை...ஏதாவது உதவ முடியுமா?’ என்றார்கள். விசாரித்த வரையில் அந்தப் பள்ளிக்கு மட்டும் மத்திய அரசின் நிதி ஒரு கோடியே இருபது லட்சம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஆச்சரியமாக இருந்தது. இந்தத் தொகை இருந்தால் சொந்தமாக இடம் வாங்கி புதிய பள்ளிக்கூடத்தையே கட்டிவிடலாம். பள்ளிக்கும் இடம் பிரச்சினை இல்லை- ஏக்கர் கணக்கில் சொந்த இடம் இருக்கிறது. கட்டிடங்கள் மட்டும்தான் தேவை. சர்க்கரையை வைத்துக் கொண்டு இலுப்பைப் பூவைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். பிரச்சினை என்னவென்றால் ஒதுக்கப்பட்ட நிதி இன்னமும் கைக்கு வந்து சேரவில்லை. பணமாகத் தர மாட்டார்கள். மாநில பொதுப்பணித்துறைதான் கட்டிட வேலைகளை முடித்துத் தர வேண்டும் என்பதால் மாநில அரசுதான் இதை முன்னெடுக்க வேண்டும். ஆனால் தமிழக அரசு கண்டுகொள்ளாமல் விட்டிருக்கிறது. இதுவரை கிட்டத்தட்ட நான்காயிரத்து நானூறு கோடி தமிழக பள்ளிகளுக்காக ஒதுக்கப்பட்டு பயன்படுத்தாமல் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்த ஆனந்தவிகடனின் கட்டுரையை வாசித்த போதுதான் திக்கென்றிருந்தது. புரட்சித்தலைவியை மந்திரி தந்திரி தொடரில் நார் நாராகக் கிழித்துத் தொங்கவிட்டிருக்கிறார்கள்.

சவுதி நீதிமன்றம்: இஸ்லாத்தை கைவிட்டதால் பலஸ்தீன கவிஞர் தலையை வெட்டி மரண தண்டனை.....


இஸ்லாத்தை கைவிட்டார் எனக் கூறி, ஒருவருக்கு தலையை வெட்டி மரண தண்டனையை நிறைவேற்றுமாறு சவுதி அரேபிய நீதிமன்றம் ஒன்று
உத்தரவிட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. சவுதியில் எப்படி தலைவெட்டி மரண தண்டனை நிறைவேற்றப்படும் என்பதை சித்தரிக்கும் புகைப்படம்(இது உண்மைப் புகைப்படம் இல்லை) ஆனால் தண்டனை விதிக்கப்பட்டுள்ள கவிஞரும், கலைஞருமான அஷ்ரஃப் ஃபயாத் தான் ஒரு உண்மையான முஸ்லிம் என்று வலியுறுத்துகிறார். கடவுளை சபித்தார் மற்றும் நாத்திகக் கொள்கைகளை ஊக்குவித்தார் எனக் குற்றஞ்சாட்டப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். சவுதி அரேபியாவில் பிறந்த பாலஸ்தீன அகதியாக அவருக்கு, முதலில் நீதிமன்றம் நான்கு ஆண்டுகள் சிறையும், 800 கசையடிகளும் விதித்து தீர்ப்பளித்தது.

வெள்ளி, 20 நவம்பர், 2015

பெரிய படங்களின் வசூல் விபரங்கள் பச்சை பொய்களே.....மாசும் கோவிந்தா ஓபனிங்கும் கோவிந்தா ....

அஜீத் படங்களுக்கு பெரிய ஓபனிங் உண்டு என சினிமாக்காரர்கள் சொல்கிறார்களோ இல்லையோ... அவர் படங்கள் வெளியாகும்போதெல்லாம் சில பத்திரிகைகள் எழுதுவது வழக்கம். இவர்கள் சொல்வது போல ஆரம்ப வசூல் அமோகமாக இருந்தாலும், நிலைத்து ஓடும் நாட்கள் எண்ணிக்கை குறைவுதான். வசூலும்தான். இதுவரை மங்காத்தா உள்ளிட்ட அஜீத்தின் எந்தப் படமும் ரூ 100 கோடியை வசூலித்ததில்லை என்பதே பாக்ஸ் ஆபீஸ் சொல்லும் உண்மை. அஜீத்தின் கடைசி 5 படங்களில் வசூல் விவரங்களைப் பார்க்கலாம்...
பில்லா 2 சக்ரி டோலட்டி இயக்கத்தில் வந்த பில்லா 2 அஜீத்தின் பெரிய தோல்விப் படங்களுள் ஒன்று. இந்தப் படத்துக்கும் ஆரம்ப வசூல் ஓஹோ எனப் புகழ்ந்து தள்ளினர் சிலர். ஆனால் படம் பெரிய நஷ்டம். ரூ 32 கோடிதான் வசூலானது. ஆனால் ரூ 60 கோடி வரை வசூலித்ததாக தவறான தகவல்களைப் பரப்பினார்கள்

நிதீஷ் அமைச்சரவையில் லாலுவின் மகன் துணை முதல்வர்...மற்றொரு மகனுக்கு சுகாதாரத்துறை...

பீகார் சட்டசபை தேர்தலில் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம், ராஷ்ட்ரீய ஜனதாதளம், காங்கிரஸ் கட்சிகள் அடங்கிய மகா கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இந்த வெற்றியை தொடர்ந்து, பாட்னா காந்தி மைதானத்தில் இன்று நடைபெற்ற பதவியேற்பு விழாவில், முதல் மந்திரியாக நிதிஷ்குமார் பதவி ஏற்றார். அவரைத் தொடர்ந்து லாலு பிரசாத் யாதவின் இரண்டு மகன்கள் உள்பட 28 மந்திரிகளும் பதவியேற்றனர். இவர்களில் லாலு பிரசாத் யாதவின் இளைய மகனும், முதல் முறையாக எம்.எல்.ஏ.வாக தேர்வு பெற்றவருமான தேஜஸ்வி பிரசாத் (வயது 26) துணை முதல்-மந்திரியாக நியமிக்கப்பட்டுள்ளார். முதல் மந்திரி நிதிஷ் குமார் உள்துறை மற்றும் பணியாளர் அமைச்சகங்களை கவனிப்பார். துணை முதல்வரான தேஜஸ்விக்கு, சாலை மற்றும் கட்டுமானத்துறை உள்ளிட்ட மூன்று இலாகா ஒதுக்கப்பட்டுள்ளது. அவரது சகோதரரான தேஜ் பிரதாப் சுகாதாரத் துறை மந்திரியாக நியமிக்கப்பட்டுள்ளார். மாலைமலர்.com

கோவையில் மொபெட்டில் சென்ற பெண் வழிப்பறி கொலை...

கோவையில், இரு சக்கர வாகனத்தில் மகனை அழைத்துச் சென்ற பெண்ணின் கழுத்திலிருந்த, 'கவரிங் செயினை' கொள்ளையர் பறித்து, கீழே தள்ளிவிட்டனர். இதில், அப்பெண் தலையில் பலத்தகாயமடைந்து உயிரிழந்தார். பலராலும் சர்வ சாதாரணமாக கருதப்படும் செயின்பறிப்பு குற்றம், அப்பாவி பெண்ணின் உயிரையே குடிக்கும் அளவுக்கு, தனது கொடூர முகத்தை காட்டியிருக்கிறது.
கோவை நகரிலுள்ள காந்திபார்க், சுக்கிரவார்பேட்டை, மூன்று கம்பம் பகுதியைச் சேர்ந்தவர் ஜோகப்பன், ௫௧. கரும்பு இனப்பெருக்க மைய கூலித்தொழிலாளி. இவரது மனைவி மீனாட்சி, ௩௮; ஆவின் பால் முகவர். இவர்களது மகன் ராகுல், ௧௫, தனியார் பள்ளியில், ஒன்பதாம் வகுப்பு படிக்கிறார். இவர் கடந்த இரண்டு நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு தனது மகனை, மொபட்டில், வீரகேரளத்திலுள்ள டாக்டரிடம் மீனாட்சி அழைத்துச் சென்றார். டாக்டரை சந்தித்துவிட்டு, தொண்டாமுத்துார் மெயின் ரோடு வழியாக இரவு, ௯.௩௫ மணியளவில் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். மகன், பின்னால் அமர்ந்திருந்தான். .. இப்படி செய்யலாம்னு போடா போடி படத்துல ஐடியா கொடுத்தாரு சிம்பு ...சந்தானம் கூட..

மாலி ஓட்டலில் இருந்து 80 பணய கைதிகள் விடுவிப்பு மீதி 90 பேரின் நிலை...?


மாலி பமாகோயில் உள்ள ராடிசன் புளு ஓட்டலில் புகுந்து 170 பேரை பணய கைதிகளாக பிடித்து வைத்தனர். ராணுவ வீரர்கள் தீவிரவாதிகளுடன் சண்டையிட்டு 80 பணய கைதிகள் மீட்டனர் தகவல்கள் என தெரிவிக்கின்றன.

வியாழன், 19 நவம்பர், 2015

புர்காவுக்கு தடை....பாதுகாப்பு காரணம்...முகத்தை மறைப்பதை தடுக்கும் சட்டம்...பலநாடுகள்...

ஆப்ரிக்க நாடான செனகோல் , அங்கு
ஜிஹாதி தாக்குதல்கள் நடக்கும்
ஆபத்தைக் கட்டுப்படுத்தும் ஒரு முயற்சியில், பெண்கள் தங்கள் முழு உடல் மற்றும் முகத்தை மூடும் வண்ணம் அணியும் 'புர்கா'வை தடை செய்வது குறித்துப் பரிசீலித்துவருகிறது.t;இந்த முழு முகத்தை மூடும் இஸ்லாமிய முகத்திரை, உடல் முழுவதையும் தளர்ச்சியாக மூடி , பார்ப்பதற்கு மட்டும்
முகத்தில் ஒரு வலை வேலைப்பாடு செய்த திரையுடன் இருக்கும். பொது இடங்களில் முஸ்லீம் பெண்கள் இதை அணிகிறார்கள்.
ஆனல், கடந்த காலங்களில் இது இஸ்லாமியத் தீவிரவாதிகள் வெடி பொருட்களை தாங்கிச்செல்ல உதவுவதால், இது ஒரு பாதுகாப்பு அச்சுறுத்தல் என்று சிலர் வாதிடுகிறார்கள்.
நைஜீரியாவிலிருந்து செயல்படும் தீவிரவாத குழுவான, பொக்கோ ஹராமிடமிருந்து அச்சுறுத்தல்கள் வரும் நிலையில், இந்த புர்கா பயன்பாடு குறித்து மேலும் கடுமையான விதிகள் கொண்டுவரப்படவேண்டும் என்று செனகோலின் உள்துறை அமைச்சர் அப்துலாயே தாவுதா முயற்சி செய்துவருகிறார்.

ரமணன் : வாக்கிய பஞ்சாங்கத்தை வைத்து நான் வானிலை சொல்வதில்லை

புயல் வருவது குறித்து வாக்கிய பஞ்சாங்கம் கணித்ததாக கூறப்படுவது பற்றி, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் திரு. எஸ்.ஆர்.ரமணன் அவர்கள் கூறுகையில், தமிழ்நாட்டில் இப்போது புதிய புயல் வர வாய்ப்பில்லை என்று மறுத்துள்ளார்.
 புயல் வருவது குறித்து வாக்கிய பஞ்சாங்கத்தை வைத்து நான் வானிலை சொல்வதில்லை. எனவே, நான் உறுதியாக நம்பவில்லை.
 இது குறித்து கி.வீரமணி விடுத்துள்ள அறிக்கையில், ”தமிழ்நாட்டில் மழை, வெள்ளம் - அதிலும் குறிப்பாக சென்னையிலும் அதன் புறநகர்ப் பகுதியிலும் அதன் சீற்றத்தைக் காட்டியதால், மக்கள் - குறிப்பாக ஏழை, எளிய நடுத்தர வர்க்கத்தினர் சொல்லொணாச் சோகக் கடலில் தத்தளிக்கின்றனர்.
மேலும் மழை பெய்யுமோ என்ற அச்சம் வேறு வெந்த புண்ணில் வேலைச் செருகுவதுபோல், நொந்த உள்ளங்களை நோகடித்துக் கொண்டுள்ளது"
இந்நிலையில், அறிவியல் பூர்வமாக ஊடகங்களுக்கு வானிலை ஆய்வு மையம், அதன் பொறுப்பாளர்கள் அவ்வப்போது வானிலை, மழை, புயல் பற்றி முன் அறிவிப்புகளைத் தருகின்ற கடமையைச் சிறப்பாகச் செய்து வருகின்றனர்!

“ஊருக்குள்ள அத்தனை பேரும் வடிவேலுதாண்ணே!”

“ஊருக்குள்ள அத்தனை பேரும் வடிவேலுதாண்ணே!”லகலக கலகல பேட்டிம.கா.செந்தில்குமார், ஆ.விஜயானந்த், படங்கள்: கே.ராஜசேகரன்''அண்ணே... ஊருக்குள்ள இறங்கி நடந்தா, வீதிக்கு வீதி வீட்டுக்கு வீடு பூராப் பேருமே வடிவேலுகளாவே தெரியுறாங்க. சீரியஸ் மேட்டர்லகூட சிரிக்கவைக்கிறாங்க. நீங்க கேக்குற எல்லா கேள்விக்கும் என் ரியல், ரீல் ட்ராக்ல இருந்தே உதாரணம் சொல்ற அளவுக்கு அவ்வளவு காமெடி பண்றாய்ங்கண்ணே. ஏன்னா, கவுண்டமணி அண்ணனுக்கு அப்புறம் நான்தான் ட்ராக் பண்ணிட்டு இருந்தேன். இப்ப நீங்க டி.வி-யில பாக்குறது எல்லாமே அந்த ட்ராக் காமெடிதானே. அதுதான் தூக்குத் தூக்குனு தூக்கும். அப்போ விதைச்சது இன்னும் அறுவடை கொடுத்துட்டே இருக்கு' - தன் பன்ச் டயலாக்குகள் அவ்வளவும் மீம்ஸ், டப்ஸ்மாஷ்கள், படத் தலைப்புகள் எனக் கொடிகட்டிப்பறப்பதைக் கவனித்துக்கொண்டு, அமைதியாக இருக்கிறார் வடிவேலு. நடிகர் சங்கப் பஞ்சாயத்துகளில் பரபரப்பாக இருந்தவர், இப்போது அடுத்தடுத்த படங்களின் பணிகளில் தீவிரமாக இருக்கிறார்!
''ஏயப்பா... நடிகர் சங்கத் தேர்தல் பொதுத்தேர்தல் மாதிரில்ல நடந்துச்சு. வீட்டுக்குள்ள ரொம்ப நாளா அடைஞ்சுகிடந்த மூத்த கலைஞர்கள் எல்லாம் வெளியே வந்தப்பவே எங்க அணியோட வெற்றி தெரிஞ்சிருச்சு.

மந்திரி தந்திரி! - 30 கேபினெட் கேமராவிகடன் டீம்

2011-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு பரபரப்பு கூடியிருந்த நேரம். தே.மு.தி.க., இடதுசாரிகள் எல்லாம் சேர்ந்து அ.தி.மு.க தலைமையில் 'மெகா கூட்டணி’ உருவாகியிருந்தது. தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை இழுபறியாகி, கூட்டணிக் கட்சிகள் முரண்டு பிடித்துக்கொண்டிருந்தன. அப்போது யாரும் எதிர்பாராத வகையில், திடீரென்று அ.தி.மு.க வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ஜெயலலிதா. கூட்டணிக் கட்சிகள் அரண்டுபோயின. தமிழகத் தேர்தல் வரலாற்றில் முன் எப்போதும் இப்படி நடந்தது இல்லை. என்ன செய்வது எனத் தெரியாமல், கூட்டணிக் கட்சிகள் ஒன்றுகூடி ஆலோசனைக் கூட்டம் நடத்த...  'ஜெயலலிதாவுக்குத் தெரியாமல் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுவிட்டது’ என அறிவித்தார்கள். ஜெயலலிதாவுக்குத் தெரியாமல் அ.தி.மு.க-வின் வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட அந்த அப்பாடக்கர் யார் என இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
வேட்பாளர் பட்டியல் மட்டுமா தெரியாமல் ரிலீஸ் ஆனது? 'எனக்குத் தெரியாமலேயே என் கட்சி எம்.எல்.ஏ-க்களும் எம்.பி-க்களும் ஜனாதிபதி தேர்தலில் ஓட்டு போடப் போனார்கள்’ என அறிக்கைவிட்டு மீடியாவை மிரளவைத்தார். 'ஆவணத்தில் உள்ளது என் கையெழுத்தே இல்லை’ எனச் சொல்லி, நீதிமன்றத்தையே கிடுகிடுக்கவைத்தார்

அம்மா டாஸ்மாக்குதாய்ன்...அம்மா உப்பு அம்மா சிமெண்டு அல்லாத்தையும் விட..தெறி..தெறி....

மூடு டாஸ்மாக்கை ! – கோமளவல்லியை அச்சுறுத்தும் கலகக்குரல் ! தோழர் கோவனின் கைதுக்கு எதிராகத் தமிழக அளவிலும் தேசிய அளவிலும் எழுந்த எதிர்ப்பைக் கண்டு ஆத்திரம் அடைந்தவர்கள் அ.தி.மு.க.வினர் மட்டுமல்ல; அவர்களைக் காட்டிலும் பார்ப்பன பாரதிய ஜனதா கும்பலும், அவர்களுடைய ஊடகத்துறை கைக்கூலிகளும், முன்னாள் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளும்தான் ஆத்திரம் அடைந்திருக்கிறார்கள். கருத்துரிமையை ஆதரிக்கிறோம், அதே நேரத்தில் வன்முறையைப் பரப்புவதை ஏற்கவியலாது; ரசனைக்குறைவான வரிகளை ஏற்கவியலாது என்று விதவிதமாக இவர்கள் மழுப்புகிறார்கள். ஜனநாயகவாதிகளைப் போல நடிக்கிறார்கள்.
04-police-serviceதொலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்ற ஒரு முன்னாள் போலீசு அதிகாரி, “நம்ம ஊரில் டாஸ்மாக்கு கிடையாது, அடிச்சு தூக்குன்னு எழுதியிருப்பதால் இது தேசத்துரோக குற்றம்தான்” என்று பேசினார். சாராயக்கடையும் தேசமும் ஒன்றே என்பது அவரது விளக்கம். கடைகளைத் தூக்குவதற்கு இவர்கள் கூறும் வழி என்ன? கடைகளை அகற்றுவதற்காக ஆயிரக்கணக்கான போராட்டங்கள் நடந்திருக்கின்றன. எண்ணற்ற தீர்ப்புகள் வந்துள்ளன.

நிதிஷ்குமார் பதவியேற்பில் 35 தலைவர்கள்..ஸ்டாலின், மம்தா,தேவகௌடா,ராகுல்,கேஜ்ரிவால்,சித்தராமையா.....

பாட்னா: பீகார் முதல்வர் நிதிஷ்குமார் பதவியேற்பில் முன்னாள் பிரதமர் தேவகவுடா, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, இடதுசாரி தலைவர்கள் டி.ராஜா, யெச்சூரி, தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் உட்பட 35 தலைவர்கள் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பீகார் சட்டசபை தேர்தலில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம், லாலு பிரசாத்தின் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்த மகா கூட்டணி பெரும் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. இந்த கூட்டணியின் வெற்றியானது நாடு முழுவதும் பா.ஜ.க.வுக்கு எதிரான கட்சிகளை ஒருங்கிணைக்கவும் தொடங்கியுள்ளது. தேசிய அளவில் பா.ஜ.க.வுக்கு எதிரான மாற்று அணி அமைவதற்கான வலுவான அடித்தளத்தை பீகார் தேர்தல் முடிவுகள் ஏற்படுத்தியுள்ளன.

கொலிஜியம் முறைப்படியே நீதிபதிகளை நியமிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

இது தொடர்பான வழக்குகளை விசாரித்து வந்த ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வு, கொலிஜியம் முறையை மேம்படுத்துவதற்காக நீதிபதிகளை 'நியமிக்கும் நடைமுறைகள்' குறித்த வரைவை தயாரிக்குமாறு நேற்று மத்திய அரசை கேட்டுக் கொண்டது. இந்நிலையில் இன்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டானி ஜெனரல் முகுல் ரோகத்கி, நீதிபதிகள் நியமனம் தொடர்பாக 'நியமிக்கும் நடைமுறைகள்' குறித்த எந்த வரைவையும் அரசு தயாரிக்காது என்றார். மேலும், இம்முயற்சியை கைவிட்டு விட்டு, கொலிஜியம் முறையை மேம்படுத்துவதற்கான வழிமுறைகளை வகுக்க உச்ச நீதிமன்றம் முன்வரவேண்டும் என்றார். கொலிஜியம் முறையை மேம்படுத்துவதற்காக ஆலோசனைகள் மீதான வாதம் முடிவடைந்த நிலையில், தீர்ப்பினை நீதிபதிகள் ஒத்திவைத்தனர். அதுவரை, தற்போதைய கொலிஜியம் முறை மூலமே நீதிபதிகளை தேர்வு செய்யலாம் என்றும் உத்தரவிட்டனர் nakkheeran,in

பொங்கலுக்கு ஐந்து படங்கள்..சூப்பர் சிங்கர் பிரகதியின் தாரை தப்பட்டையும்...

விஷால் நடிப்பில் ‘கதகளி’, சிம்பு நடிப்பில் ‘இது நம்ம ஆளு’, ஜெயம் ரவி நடிப்பில் ‘மிருதன்’,பாலாவின் ‘தாரை தப்பட்டை’, சூர்யாவின் ‘24’, என பல படங்களை பொங்கல் அன்று ரிலீஸ் செய்யும் முயற்சியில் இறங்கியிருக்கிறது திரையுலகம். தீபாவளிக்கு ரிலீஸான கமல், அஜித் இவருவரின் படங்களும் ஹிட் ஆகியிருக்கிறது. இந்த படங்கள் ரிலீஸ் ஆகிவிட்டால் வசூல் பாதிக்கப்படுமே என காத்திருந்த படங்களும், போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் முடிந்து ரிலீஸுக்கு தயாராகியுள்ள படங்கள் என ஐந்திற்கும் மேற்பட்ட படங்கள் ரிலீஸுக்குத் தயாராகியுள்ளது. ஒவ்வொருவரும் சொந்த தயாரிப்பு நிறுவனம், தங்களுக்கு ஆதரவான விநியோகிஸ்தர்கள் என கையில் வைத்திருக்கும் நம்பிக்கையில் படங்களை ஒரே சமயத்தில் ரிலீஸ் செய்கிறார்கள் என திரையுலகில் பேசப்படுகிறது. பொங்கலுக்கு 3 நாட்கள் தொடர் விடுமுறை தினம் என்பதாலும், ரிலீஸாகும் படங்கள் பெரிய ஸ்டார்களை வைத்து எடுக்கப்பட்ட படங்கள் என்பதாலும் வசூல் எதிர்பார்த்தபடி அமையும் என்றும் நம்புகின்றனர் படக்குழுவினர்.

ராகுல் காந்தியுடன் அருண் ஜெட்லி சந்திப்பு..deal making? ராஜ்யசபாவில் காங்கிரஸ் ஆதரவு? பிரித்தானிய பிரஜையை காப்பாத்தும்?

மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி புதன்கிழமை காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய துணைத்தலைவர் ராகுல் காந்தியை டெல்லியில் சந்தித்தார். அப்போது அவர் அடுத்த மாதம் நடைபெற உள்ள தன்னுடைய மகள் திருமணத்துக்கு அழைப்பு விடுத்து திருமண அழைப்பிதழை ராகுல் காந்தியிடம் வழங்கினார். இன்னும் சில நாட்களில் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடக்க உள்ள நிலையில் நடந்த இந்த திடீர் சந்திப்பு டெல்லி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சந்திப்பின் போது, சரக்கு மற்றும் சேவை வரி மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற அருண் ஜெட்லி ஆதரவு கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இதனை காங்கிரஸ், பா.ஜ.க. ஆகிய இரு கட்சிகளும் மறுத்துள்ளன.nakkheeran.in

நேபாள பிரதமர் இந்தியாவுக்கு கடும் கண்டனம்..மோடியின் சம்பாத்தியம்...இருந்த ஒரே நட்பு அயலானும் இனி....

காட்மாண்ட், நவ.17_ நேபாள நாட்டின் உள் நாட்டுப் பிரச்சினைகளில் இந்தியப் பிரதமர் நரேந் திர மோடி தலையிடுவது, கருத்துத் தெரிவிப்பது கண்டனத்துக்குரியது என்று நேபாள பிரதமர் ஓலே கூறியுள்ளார்.
நேபாளம் _ இந்தியா இரண்டும் வேறு நாடுகள், இரண்டு நாடுகளை ஒரு எல்லை பிரித்தாலும், இரண்டு நாட்டின் அரசி யலமைப்புகள் வேறு. எங்கள் நாட்டின் அரசிய லைப்புப் பற்றி ஆலோ சனை கூறவோ மக்களைத் தூண்டி கலவரத்தை ஏற் படுத்த முயன்றால் நாங் கள் பன்னாட்டு அளவில் இந்தியாவின் சூழ்ச்சியை அமபலப் படுத்தவேண்டி இருக்கும் என்று நேபா ளப் பிரதமர் ஓலே கண் டனம் தெரிவித்துளார்.  மோடி முதல்ல குஜராத்தி வாடகை தாய்மாரின் பிரச்சனைகளை தீர்க்கட்டும்..வெறும் டுபாக்கூர் விளம்பரத்தால்  இனியும் காலத்தை ஓட்ட முடியாது 

கிரிமினல் பாபா ராம்தேவ் நூடில்ஸ் தயாரிப்பு....உரிமம் பெறாமலேயே விற்பனை.. டுபாக்கூர் ஆட்சியில் டுபாக்கூர் சாமிகளின்....

அரித்துவார்- நவ, 18 இந்திய உணவுப் பாது காப்பு மற்றும் தரக்கட்டு பாட்டுக் கழகத்தின் அனு மதி பெறாமல் போலியான உரிம எண்ணுடன் பதஞ் சலி நூடுல்ஸ் என்ற உணவு வியாபாரத்தை  கருப்புப் பணப் புகழ் சாமியார் ராம்தேவ் பாபா தொடங் கியுள்ளார்.   மாகி நூடுல்ஸில் ஆபத் தான வேதிப்பொருள் உள்ளது என்று தடை செய்யப்பட்டவுடன் அவசர அவசரமாக கருப் புப் பணப்புகழ் சாமியார் ராம்தேவ், தான் பாது காப்பான நூடுல்ஸ் என்ற உணவை அறிமுகப்படுத் துவதாக அறிவித்தார். அறிவித்தது போலவே சில நாட்கள் ஆய்வு செய் வதாகக் காட்டிக்கொண்டு, அக்டோபர் மாதம் பத் திரிகையாளர்கள் சந்திப் பில் தனது பதஞ்சலி நிறுவன நூடுல்ஸ் என்று அறிமுகப்படுத்தி, அதை சமைத்து பத்திரிகையாளர் சந்திப்பிற்கு வந்த பத்திரி கையாளர்களுக்குக் கொடுத்தார்.   போலியான பதிவு எண்!

20.11.2015 நீதிக்கட்சி நூற்றாண்டு- சுயமரியாதை இயக்கம் 90-ம் ஆண்டு தொடக்க விழா

நீதிக்கட்சியின் நூற்றாண்டு - சுயமரியாதை இயக்கம் 90ஆம் ஆண்டு தொடக்க விழா சென்னை பெரியார் திடலில் 20.11.2015 அன்று காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறுகிறது 
தாழ்ந்தவர் என்பர் உயர்ந்தவர்க்கு இம்மொழி இன்பம் - இந்தச்
சாத்திரத்தால் இந்த நாள்வரைக்கும் துன்பம்! - மண்ணில்
தாழ்ந்தவர் என்றொரு சாதியுரைப்பவன் தீயன் - அவன்
தன்னுடலைப் பிறர் சொத்தில் வளர்த்திடும் பேயன் - நீர்
தாழ்ந்து படிந்து தரைமட்டமாகிய நாட்டில் - இனிச்
சாக்குருவிச் சத்தம் நீக்கிடுவீர் மன வீட்டில் - இன்று
வழ்ந்தவர் பின்னர் விழிப்பதற்கே அடையாளம் - வாய்
விட்டிசைப்பீர் சுயமரியாதை எக்காளம்!
என்றார் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன். பிறப்பிலேயே பேதம் பேசும் நாடு இது. இந்தச் கேவலத்துக்குக் கடவுள் துணை _ மதம் பாதுகாப்பு _ சாத்திரம் சாய்கால் -_ ஏன் இந்த அரசமைப்புச் சட்டமே பாடுவது ஏற்றப் பாட்டு.
ஜாதி ஓர் அடையாளமாக இருந்தால் கூட இருந்து தொலைந்து விட்டுப் போகட்டும் என்று அலட்சியத் துடைப்பத்தால் தட்டி விட்டுப் போகலாம்.
அப்படியில்லையே! அவன் பிறப்பை இது மய்யப்படுத்தி, இழிவைத் துடைப்பத்தால் அல்லவா மொத்துகிறது.  தாசிமகன் என்றல்லவா, வைப்பாட்டி மகன்கள் என்றல்லவா முத்திரை குத்துகிறது.

Mr.Bean விவாகரத்து... இந்திய வம்சாவளி மனைவி சுனீத்ரா... 24 வருட உறவு 65 செக்கனில் முடிவு


24 வருட உறவு 65 செக்கனில் முடிவுக்கு – Mr.Bean
உலகப்புகழ் பெற்ற பிரபல நகைச்சுவை கதாபாத்திரமான மிஸ்டர் பீன் (Mr.Bean) கதாபாத்திரத்திற்கு சொந்தமான நடிகர் ரோவன் அட்கின்சன் (60), தனது மனைவி சுனேத்ரா சாஸ்திரியை (54) விவாகரத்து செய்துள்ளார்.
பி.பி.சி. செய்திச் சேவையில் ஒப்பனை கலைஞராக பணி புரியும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இவருடன் கடந்த 1990 ஆம் ஆண்டு பெப்ரவரியில் திருமணத்தில் இணைந்தார்.
அற்கின்சன் அவரது மனைவி சுனேத்ரா (1990 இல்)
இவர்களுக்கு லில்லி என்ற மகளும், பெஞ்சமின் என்ற  மகனும் உள்ளனர்.
Untitled-1[33]  24 வருட உறவு 65 செக்கனில் முடிவுக்கு - Mr.Bean Untitled 133கடந்த ஒன்றரை ஆண்டுகளாக  32 வயதான மற்றுமொரு நகைச்சுவை நடிகையான லூயிஸ் ஃபோர்ட் என்பருடன் ரோவனுக்கு ஏற்பட்டுள்ள காதலே இவ்விவாகரத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது.
இவ்வழக்கை எடுத்துக் கொண்ட மாவட்ட நீதிமன்ற நீதிபதி சுமார் 65 செக்கன்களில் அவர்களுக்கு விவாகரத்து வழங்கியதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
‘காரணமின்றிய நடத்தைகளே’ (அதாவது அதிகமாக பேசுதல், தன்னை செவிமடுப்பதில்லை, எப்போதும் நண்பர்களுடன் வெளியே செல்லுதல் போன்றவை உள்ளடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது) இவ்விவாகரத்துக்கு காரணமாக குறிப்பிடப்பட்டிருந்தது.

புதன், 18 நவம்பர், 2015

நான் உத்தரவிட்டுள்ளேன்..முதல்வர் ஜெயலலிதா....நிவாரண உதவிகளை வழங்குமாறு அதிகாரிகளுக்கு..

இதுகுறித்துஅவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்: வடகிழக்கு பருவ மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவித் தொகை வழங்கவும் மற்றும் உடனடி சீரமைப்புப் பணிகளுக்கும் என 500 கோடி ரூபாய் ஒதுக்கி நான் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளேன். மழையால் பாதிக்கப்பட்ட பயிர்சேதங்களை ஆய்வு செய்து கணக்கெடுக்கும்படி நான் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். இந்த ஆய்வின் அடிப்படையில் பயிர் சேதங்களுக்கான இழப்பீடுகள் விவசாயப் பெருங்குடி மக்களுக்கு வழங்கப்படும். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தாம்பரம், முடிச்சூர் ஆகிய பகுதிகளில் இருந்து பாதுகாப்பான இடங்களுக்கு மக்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளதால், அவர்களது வீடுகள், உடமைகளுக்கு காவல்துறை மூலம் பாதுகாப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

கேரளா Kiss of Love ரேஷ்மி...பசுபாலன் கைது...ஆன்லைன் விபச்சார குற்றசாட்டு..பின்னணியில் ....?


charges were filed against Rahul Pasupalan and his wife Reshmi R. Nair for allegedly running an online sex racket. Rahul and his wife Reshmi were leading the protests and spearheaded the 'Kiss of Love' movement in Kochi last year. The campaign used kissing as a form of protest to oppose the restrictions on civil liberties and strict moral policing by authorities. It was heavily criticized by Hindu right-wing parties such as the Vishwa Hindu Parishad, Shiv Sena, Bajrang Dal and Hindu Sena
கேரள மாநிலத்தில் நடைபெற்ற அன்பின் முத்தம் போராட்டத்தை முன்னின்று நடத்திய மாடல் அழகி ரேஷ்மி, இணையதளம் மூலம் விபசாரம் நடத்தியதாக கைது செய்யப்பட்டார். அவரது கணவரும் இவ்வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். கேரள மாநிலத்தில் நடைபெறும் இணையவழி விபசாரம் குறித்து சைபர் க்ரைம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இதுதொடர்பாக 11 பேரை கேரள போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். கேரளாவில் நடைபெற்ற அன்பின் முத்தம் போராட்டத்தை முன்னின்று நடத்திய ரேஷ்மி ஆர், நாயர் மற்றும் அவரது கணவர் ராகுல் புஷ்பாலன் ஆகியோர் விபசாரம் செய்ததாக கைது செய்யப்பட்டனர்.

சுப்ரீம் கோர்ட்டில் அன்பழகன் பதில் மனு.. குன்ஹவின் தீர்ப்ப்பை உறுதி செய்க...குமாரசாமி தீர்ப்பில் கணிதப்பிழை..

டெல்லி: ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், ஹைகோர்ட் தீர்ப்பில் கணித பிழை இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில், பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் தமிழக முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்டோர் குற்றவாளிகள் என தீர்ப்பளித்தது. ஆனால் விசாரணை நடத்திய ஹைகோர்ட், ஜெயலலிதா உள்ளிட்டோரை விடுதலை செய்தது.

பீகார்: நிதீஷ்குமார் பதவி ஏற்புவிழாவில் ஸ்டாலின் பங்கேற்கிறார்....

 பீகாரின் முதல் மந்திரியாக மீண்டும் பதவியேற்றுக்கொள்ளும் நிதிஷ் குமாரின் பதவியேற்பு விழாவில் தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின் பங்கேற்பார் என தெரியவந்துள்ளது. வரும் 20-ம் தேதி பாட்னா நகரில் நடைபெறவுள்ள தனது புதிய மந்திரிசபையின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க வருமாறு தி.மு.க. தலைவர் கலைஞருக்கு நிதிஷ் குமார் அழைப்பு அனுப்பி இருந்தார். அந்த அழைப்புக்கு நன்றி தெரிவித்து நிதிஷ் குமாருக்கு கலைஞர் இன்று பதில் கடிதம்
எழுதியுள்ளார். பாட்னாவில் நடைபெறும் உங்கள் தலைமையிலான மந்திரிசபையின் பதவியேற்பு விழாவில் பங்கேற்று உங்களை நேரில் வாழ்த்துவதற்கு மிகவும் விரும்பினாலும், அன்றைய தினம் சென்னையை விட்டு வரஇயலாத சூழ்நிலையில் உள்ளேன். எனது மனைவி தயாளு அம்மையார் சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். எனவே, இவ்விழாவில் பங்கேற்க இயலவில்லை.

பாரிஸில் சந்தேகநபர் இருவர் கொலை..அதிரடி நடவடிக்கை!

பாரிஸில் சென்ற வாரம் 129 பேரை பலிகொண்ட பயங்கரவாதத் தாக்குதலின் சூத்திரதாரி என்று சந்தேகிக்கப்படுபவரை இலக்குவைத்து பாரிஸின் புறநகர்ப் பகுதி ஒன்றில் அடுக்கு மாடிக் குயிருப்பு வீடொன்றில் ஆயுத பொலிசாரும் சிப்பாய்களுமாக அதிரடி வேட்டை ஒன்றை நடத்தியுள்ளனர். சந்தேக நபர்கள் இருவர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிசார் கூறுகின்றனர். அதில் ஒருவர் பெண் என்றும் அவர் தன் மீது கட்டியிருந்த குண்டுகளைத் தானே வெடிக்கச் செய்துகொண்டார் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர். ஆண்கள் நால்வரும் பெண்ணொருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக சட்ட நடவடிக்கை அதிகாரிகள் கூறுகின்றனர்.

சிரியா அகதிகளை அனுமதிக்க மறுப்பு 20க்கும் அதிக அமெரிக்க மாகாணங்கள்

வாஷிங்டன்: பாரீஸ் தாக்குதல்களை அடுத்து சிரியாவை சேர்ந்த அகதிகளை அனுமதிப்பது இல்லை என்று அமெரிக்காவில் உள்ள 20க்கும் மேற்பட்ட மாகாண ஆளுநர்கள் அறிவித்துள்ளனர். பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்களில் 129 பேர் பலியாகினர். இந்த தாக்குதல்களுக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. தற்கொலைப்படை தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளில் ஒருவர் சிரியாவில் இருந்து அகதிகளோடு அகதியாக கிரீஸ் வந்து அங்கிருந்து பாரீஸ் வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்நிலையில் சிரியாவைச் சேர்ந்த அகதிகளை அனுமதிப்பது இல்லை என அமெரிக்காவில் உள்ள அலபாமா, மிஷிகன், டெக்சாஸ், அர்கன்சாஸ், லூசியானா உள்பட 20க்கும் மேற்பட்ட மாகாணங்களின் ஆளுநர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

nisaptham.com ; இசுலாமியத்தின் பயங்கரவாதம்...மயிலிறகில் வருடிக் கொடுக்க வேண்டியதில்லை.

சில நாட்களுக்கு முன்பாக ஐ.எஸ் தீவிரவாதிகள் குறித்தான ஆவணப்படம் ஒன்று இணையத்தில் சிக்கியது. நாற்பது நிமிடங்களுக்கு மேலாக ஓடக் கூடிய அந்தப் படம் ஆப்கனில் தாலிபானுக்கு ஐஎஸ் தீவிரவாதிகளுக்கும் இடையேயான விரிசலையும் ஐஎஸ் தீவிரவாதிகள் எவ்வாறு செயல்படுகிறார்கள் என்பதையும் பதற்றத்துடன் காட்டிக் கொண்டிருந்தது. தாலிபான்கள்தான் இருப்பதிலேயே காட்டுமிராண்டிகள் என்று நினைத்துக் கொண்டிருந்த உலகம் ‘IS is ruthless compare to Taliban' என்று சொல்ல ஆரம்பித்து வெகு நாட்கள் ஆகிவிட்டதற்கான காரணங்கள் படத்தில் பதிவு செயப்பட்டிருந்தன. குழந்தைகளிடம் துப்பாக்கியைக் கொடுத்து எதிரிகளை சுடச் சொல்கிறார்கள். சுடுவதற்கு முன்பாக ‘இவன் நம் மதத்துக்கு துரோகம் செய்தான்’ என்று காதில் ஓதுகிறார்கள். துரோகிகளை அழிக்க வேண்டும் என்று அந்தக் குழந்தையின் மனதில் பதிக்கிறார்கள். அதன் பிறகு அவர்கள் யாரையெல்லாம் துரோகிகள் என்று அடையாளம் காட்டுகிறார்களோ அவர்களையெல்லாம் அந்தக் குழந்தை வெறியெடுத்துச் சுடுகிறது. பதினான்கு வயதுச் சிறுவனை தற்கொலைப்படையாக மாற்றி வைத்திருக்கிறார்கள்.

ஐ எஸ் ஐ எஸ் பயங்கரவாதிகளுக்கு எங்கிருந்து பணம் வருகிறது?



  பாரிஸில் தங்கள் அமைப்புதான் 129 பேர் கொல்லப்பட்ட தாக்குதல்களை நடத்தியது என்று இஸ்லாமிய அரசு என்ற தீவிரவாத அமைப்பு கூறியிருக்கிறது.
இந்த ஐ.எஸ் அமைப்புக்கு எங்கிருந்து பணம் வருகிறது?
வெள்ளிக்கிழமை நடந்த பாரிஸ் தாக்குதல்களை அடுத்து மீண்டும் ஒருமுறை உலகின் கவனம் இஸ்லாமிய அரசு என்று தன்னை அழைத்துக் கொள்ளும்
ஐ.எஸ் அமைப்பின் மேல் வந்திருக்கிறது.
இந்த அமைப்பின் தீவிரவாதிகள் பாரிஸ் தாக்குதல்களைத் தாங்கள்தாம் செய்தோம் என்று கூறியிருக்கிறார்கள்.
உலகின் மிகப் பணக்கார தீவிரவாதக்குழுவாக இஸ்லாமிய அரசு குழு கருதப்படுகிறது.
இது இராக்கிலும், சிரியாவிலும் அது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நிலப்பரப்பில் ஒரு "கேலிஃபேட்" ( இஸ்லாமியப் புனித அரசு) ஆட்சியை நடத்துவதாக கூறிக்கொள்கிறது.
ஆனால் இந்த அமைப்புக்குப் பணம் எங்கிருந்து வருகிறது ?

1.நன்கொடைகள்

குறிப்பாக சௌதி அரேபியா மற்றும் கத்தார் போன்ற நாடுகளிலும் பிற நாடுகளிலும் உள்ள செல்வந்த தனி நபர்களும், இஸ்லாமிய தர்மஸ்தாபனங்களும்தான் இந்த அமைப்புக்கு முக்கிய கொடையாளிகளாக இருந்தனர்.

இதற்குமா புரட்சித் தலைவி இதய தெய்வம் அம்மா...நிவாரண உதவிகளை செய்வது ஒரு அரசின் கடமை..

ஜெயலலிதாவின் புகைப்படம் ஊடகங்களில் தெரிய வேண்டும் என்பதற்காக மெனக்கெட்டதைப் பார்த்த மக்கள் "எழவு வீட்டிலுமா இப்படி?" என்ற கேள்வியை எழுப்பவே செய்தனர்.
தமிழகம் வரலாறு காணாத பெருமழை வெள்ளத்தை சந்தித்துள்ளது... வட தமிழகத்தை புரட்டிப் போட்டிருப்பது பெரும் புயலும் அல்ல.. சுனாமியும் அல்ல.. வழக்கமான வடகிழக்கு பருவமழை தான்... இந்த பருவமழையைக் கூட எதிர்கொள்ள திராணியற்றதாகத்தான் தமிழக அரசு இருக்கிறது என்பது கடலூரிலேயே அம்பலப்பப்பட்டுப் போனது. 2004-ல் சுனாமி தமிழகத்தை தாக்கி ஆயிரக்கணக்கானோர் பலியாகிப் போகினர். அதனைத் தொடர்ந்து இத்தகைய இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்ள பேரிடர் ஆணையம் என்பது அமைக்கப்பட்டது. அவ்வளவுதான்.. அதன் கதி என்ன என்பது இப்போது வரை யாருக்கும் தெரியாது. ஒரு பருவமழையை, மழை வந்த பின்னர்தான் எதிர்கொள்ள வியூகம் வகுக்க வேண்டும் என காத்திருந்திருக்கிறது தமிழக அரசு.

செவ்வாய், 17 நவம்பர், 2015

சிங்கப்பூர் ஆக்குவோம் என்றவர்கள் மீண்டும் ஓய்வெடுக்க போய்விட்டார்கள்...

கழிவுநீர் கலக்காத கால்வாய் கட்டி, மழைநீரை சேகரித்தால் மட்டுமே, மழை வெள்ள பிரச்னைக்கு முடிவு கட்ட முடியும்' என, மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் தெரிவித்துள்ளார்.ல் பக்கத்தில் வெளியிட்டு உள்ள தகவல் வருமாறு:தமிழகத்தில், 2005ல், 130 செ.மீ., மழை பெய்தது. அது, தமிழகத்தின் ஆண்டு சராசரியான, 95 செ.மீட்டரை விட, 36.1 சதவீதம் அதிகம். சென்னையில் மட்டும், 235 செ.மீ.,மழை பெய்தது. அப்போது மிகப் பெரிய பொருள் சேதமும், உயிர் சேதமும் ஏற்பட்டது. அது மட்டுமல்ல, அனைத்து மழைநீரும் கடலில் கலந்து விட்டது.
இயல்பு வாழ்க்கை பாதிப்பு:
இதையடுத்து, 'தமிழக நதிகளை இணைக்க வேண்டும்; தமிழகத்தில், அதிதிறன் நீர் வழிச்சாலை அமைக்க வேண்டும்' என, சென்னை கவர்னர் மாளிகையில், அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதியிடம், அப்துல் கலாமும், அவரோடு நானும், அதிதிறன் நீர் வழிச்சாலை அமைப்பதன் தேவையை பற்றி ஆய்வறிக்கை சமர்ப்பித்தோம்.அடுத்த வந்த முதல்வர் ஜெயலலிதாவிடமும் இதை தொடர்ந்து வலியுறுத்தினோம். ஆனால், இதுவரை நதிகளை இணைக்க வில்லை, மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை உருவாக்கவில்லை. அதிதிறன் நீர் வழிச்சாலையை உருவாக்கவில்லை.தற்போது, 10 ஆண்டுகள் கழித்து, 2015ல் பெய்த, 15 செ.மீ., மழைக்கு தாங்காத சென்னையும், மிதக்கும் கடலுாரும் தான், நம் ஆட்சி முறை நிர்வாகத்தின் அடையாளமாக திகழ்கிறது.

சித்தூர் மேயர் அனுராதா சுட்டு கொலை..கணவரும் படுகாயம்..வேலூர் சி எம் சி மருத்துவ...

ஆந்திர மாநிலம் சித்தூர் மாநகராட்சி மேயர் அனுராதா அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் அனுராதாவுடன் இருந்த அவரது கணவர் குண்டு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார். இந்த சம்பவம் ஆந்திர மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது ஆந்திரா மாநிலம், சித்தூர் நகராட்சி தலைவராக ( ஆந்திராவில் நகராட்சி தலைவரை மேயர் என அழைப்பர் ) இருப்பவர் ஆளும் கட்சியான தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த கட்டாரி அனுராதா. இன்று மதியம் வழக்கம்போல் அலுவலகம் வந்த அனுராதா அதிகாரிகளுடன் உரையாடி க்கொண்டு இருந்துள்ளார். அப்போது அலுவலகத்துக்குள் வந்த மர்மநபர்கள் 5 பேர் துப்பாக்கியால் சரமாரியாக அனுராதாவை நோக்கி சுட்டுள்ளனர். அருகில் இருந்த அவரது கணவரையும் சுட்டுள்ளனர்.
இதில் அனுராதா சம்பவயிடத்திலேயே பலியானார்.

வெள்ளத்தில் சென்னை மிதக்கிறது....அரசு இன்னும் தூங்குகிறது.

மிஸ்டர் கழுகு: அடைமழை... மூழ்கிய சென்னை... முடங்கிய அரசு!
ள்ளே நுழைந்த கழுகாரிடம், ‘‘எப்படி வந்தீர்?” என்று கேட்டோம். ‘‘நமக்கென்ன... எப்போதும் சிறகு கள்தான்! உம்மைப்போல நடந்து வந்து... படகில் வந்து... பஸ்ஸில் வந்து... பல சாகசங்கள் செய்ய வேண்டிய அவஸ்தை கிடையாதே!” என்று சொல்லியபடி செய்திகளைக் கொட்ட ஆரம்பித்தார்.
‘‘தொடர் மழையால் தலைநகர் சென்னை உள்பட தமிழக நகரங்கள் தண்ணீரில் மிதக்கின்றன. சென்னையின் எல்லா சுரங்கப்பாதை​களும் தண்ணீரில் மூழ்கிக் கிடக்கின்றன. பேருந்துகள் படகுகள்போல போய்க்கொண்டு இருக்கின்றன. வீட்டுக்​குள்ளேயே மக்கள் முடங்கிக் கிடக்கிறார்கள். வாகனங்கள் அனைத்தும் பாதியிலேயே நின்றுவிடுகின்றன. சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டுக்காக இரண்டு மாதங்கள் முன்பு சென்னையில் போடப்பட்ட புதிய சாலைகள் மழையில் பல் இளிக்கின்றன. புதிய ரோடுகள் அதற்குள்ளேயே பல்லாங்குழிகளாகி விட்டன. பருவ மழைக்கான எந்த முன்னேற்பாடு களையும் அரசும், அதிகாரிகளும், அமைச்சர்களும் செய்யவில்லை என்பது பட்டவர்த்​தனமாக தெரிந்துவிட்டது!”
‘‘வரிசையாகச் சொல்லும்!”
‘‘29 நாட்கள் இடைவெளிக்குப் பிறகு 11-ம் தேதி முதல்வர் ஜெயலலிதா தலைமைச் செயலகம் வந்தார். ஒரு மணி நேரம் இருந்தார். அதிகாரிகள், அமைச்சர்களுடன் மழை, வெள்ளப் பாதிப்புகள் குறித்து ஆலோசனை நடத்திவிட்டு கிளம்பிப்​போய்விட்டார். ஆனால் பாதிப்புகள் சரி செய்யப்படவில்லை.

தந்தி டிவியும் ரங்கராஜ் பாண்டேயும் இணைந்து பச்சை பார்பன (RSS) பிரசாரம்...

‘தந்தி’ டிவியில் ஆயுத எழுத்து மற்றும் கேள்விக் கென்ன பதில் நிகழ்ச்சிகளில் நெறியாளராக பணி யாற்றும் ரங்கராஜ் பாண்டே, 13.11.2015 வெள்ளியன்று, சுப.வீரபாண்டியனின் கேள்விக்கு பதில் சொல்பவராக காட்சி அளித்தார்.
தமிழ் நாட்டில் உயிரும் உடலும் சொந்தம் என்று சொன்ன ரங்கராஜ், தன் பெயருக்குப் பின்னால் ஒட்டிய வால்  பாண்டேவிற்கு அளித்த விளக்கம் இருக்கிறதே, ஆகா என்ன சாமர்த்தியம். 1857-ல் நடந்த சிப்பாய் கலகத்தில் கலந்து கொண்ட மங்கல் பாண்டே என்ற பார்ப்பான் நினைவாக பாண்டே என்பதை மனதில் இருத்தி, பெயரில் சேர்த்துள்ளாராம். நாம் நம்பித்தான் ஆக வேண்டும்.

பித்துக்குளி முருகதாஸ் காலமானார்..பக்தி பாடல் உலகில் தனிமுத்திரை...95 வயது...


சென்னை : பக்திப்பாடகர் பித்துக்குளி முருகதாஸ்(95) சென்னையில் காலமானார். இவர், கோவையில் 1920ம் ஆண்டு ஜனவரி 25ம் தேதி சுந்தரம் ஐயர், அலமேலு தம்பதியருக்கு மகனாக தைப்பூச திருநாளில் பிறந்தார். இவரது இயற்பெயர் பாலசுப்ரமணியம். பக்திப்பாடகரான இவர் தென்னாப்ரிக்கா, இலங்கை, அமெரிக்கா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இசைக்கச்சேரி நடத்தியுள்ளார். தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகள் தெரிந்த இவர், கலைமாமணி, சங்கீத சாம்ராட், தியாகராஜர் விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார்.

எம்ஜியாரை சுட்ட எம் ஆர் ராதா தன்னை தானே சுட்டாரா? முன்னாள் அமைச்சர் அரங்கநாயகம்....

நீண்டகாலமாகவே பலரின் சந்தேகத்துக்கு இடமான எம் ஆர் ராதாவின் தன்னை தானே சுட்ட விடயம் தற்போது ஒரு வெளிச்சத்தை நோக்கி வந்துள்ளது.  எம்ஜியாரோடு மிகவும் நெருக்கமாக இருந்த முன்னாள் அமைச்சர் அரங்கநாயகம் அது பற்றி ஒரு தொலைக்காட்சி பேட்டி யில் கொஞ்சம் விபரித்து இருக்கிறார்,
கோபத்தில்  இருந்த ராதாண்ணன்  உண்மையில் எம்ஜியாரை கொஞ்சம் மிரட்டவே துப்பாக்கியை நீட்டினார். பின்பு நிதானம் இழந்து வேகமாக  சுட்டு இருக்கவேண்டும் ஆனால்  மிகவும் துடிப்பாக சூழ்நிலைகளை புரிந்து வேகமாக செயலாற்றும் இயல்பு கொண்ட எம்ஜியார் அதை எப்படி எதிர்கொண்டிருப்பார் என்று நீங்கள் கருதுகிறீர்கள்?
எம் ஆர் ராதாவை விட பல மடங்கு...ஸ்டண்டுகளில் தேர்ச்சி பெற்ற எம்ஜியார் நிச்சயம் பதிலடி கொடுத்திருப்பார்?
 சூட்டு காயத்துடனேயே வீட்டின் கீழ் தளத்துக்கு காயத்தோடு எம்ஜியார் ஓடி வந்தார் என்பதுவும் மிகவும் கவனிக்க வேண்டிய செய்தியாகும். வைத்தியசாலையில் இருந்து ராதாண்ணை எப்படி இருக்கிறார்? என்று எம்ஜியார் விசாரித்த வண்ணம் இருந்தார். மேலும் அவரை நன்றாக கவனிக்குமாறும் வேண்டிகொண்டார்.
இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு இது பற்றி ராதாவிடமும் சரி எம்ஜியாரிடமும் சரி கேட்ட பொழுது இருவருமே சிரிப்பையே பதிலாக தந்தார்கள் என்பது வரலாறு.

விவேக் ஜெயராமன்.. போயஸ் கார்டனின் புதிய ஆல் இன் ஆல் அழகுராஜா இவர்தாய்ன்...ஜாஸ் ஜாஸ் ஜாஸ் ..

jaya 600  விவேக் ஜெயராமன்... ஜெயலலிதாவின் 'புதிய செல்லப்பிள்ளை'! jaya 600போயஸ் கார்டனைப் பொறுத்தவரையில் ஒருவரை ராஜ மரியாதையுடன் ஒரேநாளில் உச்சாணிக் கொம்பில் அமர வைப்பதும், அன்று மாலையே அதிகாரம் பறிக்கப்படுவதும் புதிதல்ல.
கார்டனுக்குள் ஒருகாலத்தில் கோலோச்சிய திவாகரன், மகாதேவன், டி.டி.வி.தினகரன், பாஸ்கரன், ராஜராஜன், குலோத்துங்கன், டாக்டர்.வெங்கடேஷ், நடராஜன் போன்றவர்கள் இப்போது இருக்கும் இடம் தெரியவில்லை. இருப்பினும், என்றாவது ஒருநாள் கார்டன் கதவு திறக்கும் என்ற நம்பிக்கைதான் அவர்களது வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கிறது.
அப்படி அவர்களுக்கு நம்பிக்கை கொடுக்கும் நபர்… விவேக் ஜெயராமன்! சசிகலா குடும்பத்திலேயே தற்போது கார்டனுக்குள் கோலோச்சும் ஒரே ஆண் வாரிசு இவர்தான் என்கிறார்கள்.

புது சொத்து விவரங்கள் எப்படி லீக் ஆனது? Who is the Black Sheep? மில்லியன் டாலர் கேள்வி....

பொதுவா தீபாவளி நாளில் ஜெ.வைத்தான் பலரும் சந்திப்பாங்க.
வாழ்த்து சொல்லுவாங்க. இந்த முறை ஜெ. பலருக்கும் போன் செய்து தீபாவளி வாழ்த்து சொல்லியிருக்காரு. அதில் சுப்ரீம் கோர்ட்டில் பிரபலமான வக்கீல்களும் அடக்கம். இப்ப அம்பலமாகியிருக்கும் புது சொத்து விவரங்களை சுப்ரீம்கோர்ட்டில் கர்நாடக தரப்பும், தி.மு.க தரப்பும் கொண்டுபோனால் என்ன செய்வதுன்னு வக்கீல்களோடு ஆலோசனை நடந்திருக்குது.
1991-96 பீரியடு சம்பந்தமான கேஸில் புது சொத்து விவரங்கள் வராமல் பார்த்துக்கலாம்னும், ஆனாலும் இந்த மாதிரி சொத்து விவரங்கள் இனி வரவிடாமல் கவனமா இருக்கணும்னும் ஆலோசிக்கப்பட்டிருக்குது. "புது சொத்து விவரங்கள் எப்படி லீக் ஆனதுன்னும் கார்டனில் ஆலோசிக்கப் பட்டிருக்குமே?'' அது பெரிய சர்ச்சையா வெடிச்சிருக்குது. கொடநாட்டில் இருந்தப்பவே, யார் அந்த கறுப்பு ஆடுன்னு கோபக்குரல் வெளிப்பட்டதைப் பற்றி நாம பேசியிருக்கோம். மந்திரிகள் ஓ.பி.எஸ்., வைத்திலிங்கம் மூலமாத்தான் இது கசிஞ்சிருக் கணும்னு சசிகலா குடும்பத்தினரில் ஒரு தரப்பு சொல்ல, அதை சசிகலாவும் ஜெ. காதுக்கு கொண்டு போயிருக்காரு.
அதே நேரத்தில் இன்னும் பலர் மேலேயும் சந்தேகம் இருக்குதாம். ஜெ.வோட நம்பிக்கைக்குரியவரா இருக்கிறவர் டாக்டர் சிவகுமார்.

பாரிஸ்...அந்த மூன்று மணிநேரத்தில் நடந்த கொலைவெறியாட்டம்....விபரம் வெளியாகி உள்ளது

அப்பாவி மக்களையும் கொன்று பின்னர் தம்மையும் அழித்துக் கொண்ட மூன்று தீவிரவாதிகள் வந்தது கறுப்புநிற ஃபோக்ஸ்வாகனில்- வந்த நேரம் வெள்ளியிரவு 9.40 மணி.> மூன்று மணி நேரம் பட்டக்லான் இசை அரங்கத்தில் கண்மூடித் தனமாக நடத்திய தாக்குதலின் விளைவு, 89 அப்பவி மக்களின் உயிரிழப்பு. 99 பேர் குத்துயிரும் கொலையுயிருமாகக் கிடந்தனர்.
அந்த வாகனம், நடைபெற்ற கொடூரங்களுக்கு மௌனமான ஒரு சாட்சியாக, அனாதரவாக அரங்கில் வெளியே இருந்தது.
‘எல்லாம் முடிய’ ஆன மூன்று மணி நேரத்தில் நடந்தது என்ன?
“அந்த இடம் ஒரு கசாப்புக் கடை” போலக் காட்சியளித்தது என்கிறார் தப்பிப் பிழைத்த பிரிட்டிஷ் பிரஜை மைக்கேல் ஓ'கானர்
உறைந்துபோன ரத்ததின் மீது கவனமாக நடக்க வேண்டியிருந்தது, பல இடங்களில் ஒரு செ.மீ அளவுக்கு ரத்தம் உறைந்திருந்தது என்கிறார் ஒ’கானர். அராஜகம், அதிர்ச்சி, அஞ்சலி அரங்கினுள் நடைபெற்ற அராஜகம் குறித்த தகவல்கள், ஆதாரங்கள் போன்றவற்றை மிக மிக நுணுக்கமாக சேகரிக்கும் நடவடிக்கையில் பாரிஸின் சட்டவாதிகள் இறங்கியுள்ளனர்.

திங்கள், 16 நவம்பர், 2015

ராகுல் காந்தி பிரித்தானிய பிரஜை...சுப்ரமணியம் சாமி குற்றச்சாட்டு....

ராகுல் காந்தி தன்னை இங்கிலாந்து குடிமகனாக அறிவித்துக்கொண்டதாக சுப்ரமணியன் சுவாமி கூறியது முற்றிலும் தவறானது என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது. இது குறித்து காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா கூறியதாவது:- ராகுல் காந்தி பிறந்ததில் இருந்து  இந்திய குடியுரிமையை மட்டும்தான் வைத்துள்ளார். அதேபோல், இந்திய பாஸ்போர்ட்டை மட்டுமே வைத்துள்ளார். பிற எந்த நாட்டின் குடியுரிமையையும் அவர் பெற்றிருக்கவில்லை. பீகார் தேர்தலில் அடைந்த தோல்வியாலும், மூத்த தலைவர்கள் அதிருப்தி குரலாலும் விரக்தியடைந்துள்ள பாரதீய ஜனதா,  பிரச்சினையை திசை திருப்பவே ராகுல் காந்தி குறித்து பொய்யான தகவலை  சுப்ரமணியன் சுவாமி தலைமையில் வெளியிட்டுள்ளது. சுப்ரமணியன் சுவாமி,  மலிவான அரசியல் விளம்பரத்திற்காக கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக  இது போன்ற  மலிவான உத்திகளையும், முற்றிலும் தவறான தகவல்களையும் தயாரிப்பதில் ஈடுபட்டு வருகின்றார்” என்று தெரிவித்தார். சுப்ரமணியம் சாமி காங்கிரசில் சேரப்போகிறார் என்ற சந்தேகம் நமக்கு வர்றது...என்னாக்க ராகுல் அரசியலை விட்டு விலகினா காங்கிரசுக்கு நல்ல எதிர்காலம் நிச்சயமாக உண்டு.....இவரு காங்கிரசை காப்பாற்ற எடுக்கும் முயற்சிதான் இது....சு.சாமி பாணியில அரசியல் பேச நம்பளுக்கும் தெரியும்லே! 

Chennai மின்சார ரயில்கள் சேவை நிறுத்தமா? கனமழை எச்சரிக்கை

சென்னையில், நேற்று அதிகாலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. வேலை நாளான, இன்றும், மழை தொடரும் என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருப்பதால், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு பணிக்கு செல்வோர், வியாபாரம் நிமித்தமாக பயணிப்போர் என, அனைவரும் அவதிப்பட உள்ளனர். இவர்களுக்காக, போதிய ரயில்களையும், பஸ்களையும் இயக்க வேண்டியது அவசியம். உயர்த்தப்பட்ட வழித்தடமாக உள்ளதால், சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையிலான மேம்பால ரயில் சேவை, கோயம்பேடு - ஆலந்துார் இடையிலான மெட்ரோ ரயில் சேவை ஆகியவை, மழை பாதிப்பில் இருந்து தப்புகின்றன. ஆகையால், மேம்பால பாதையில் செல்லும் மின்சார ரயில்களும், மெட்ரோ ரயில்களும் வழக்கம் போல் இயங்கும்.தெற்கு ரயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில், 'மழையின் தாக்கம் அதிகம் இருந்தால், மேம்பால வழித்தடத்தில் மின்சார ரயில்கள் இயக்கத்தில், 10 முதல், 15 நிமிடங்கள் வரை தாமதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

மக்களை மீட்க ராணுவத்தின் உதவி கோரப்பட்டுள்ளது: முதல்வர் ஜெ.,

சென்னை: தாம்பரம் பகுதியில் வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்க ராணுவத்தின் உதவி கோரப்பட்டுள்ளதாகவும், வெள்ள நிவாரணப்பணிகளுக்கு ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார் சென்னையில் ஆர்.கே., நகர் பகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வெள்ளம் பாதித்த பகுதிகளை முதல்வர் ஜெயலலிதா நேரில் பார்வையிட்டார். இதன் பின்னர் நிவாரண பணிகளுக்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டார். அப்போது முதல்வர் கூறுகையில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 587 இடங்களில் 207 இடங்களில் மழை நீர் வெளியேற்றப்பட்டுள்ளது. மற்ற பகுதிகளில் மாநகராட்சி பணியாளர்கள் போர்க்கால நடவடிக்கையில் மழை நீரை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 6 சுரங்கப்பாதைகள் தவிர மற்ற சுரங்கப்பாதையில் தண்ணீர் அகற்றப்பட்டுள்ளது. சென்னையில் 101 முகாம்கள் அமைக்கப்பட்டு 90 ஆயிரம் உணவு பொட்டலங்கள் சென்னை மாநகராட்சி மூலம் வழங்கப்பட்டுள்ளன. காஞ்சிபுரத்தில் 60 முகாம்கள் அமைக்கப்பட்டு 16 ஆயிரம் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன. திருவள்ளூர் மாவட்டத்தில் 57 நிவாரண முகாம்கள் மூலம் 18,051 உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன.

பாரிஸ் தாக்குதல்: 24 பேர் இதுவரை கைது

பாரிஸில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் இதுவரை 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரெஞ்ச் உள்துறை அமைச்சர் பெய்நார் காசநோவ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். பிரெஞ்ச் உள்துறை அமைச்சர் பெய்நார் காசநோவ் நாடு முழுவதும் 168 இடங்களில் காவல்துறையினர் முற்றுகையிட்டு முன்னெடுத்த சோதனை நடவடிக்கைகளில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதுகளுக்கு அப்பாற்பட்டு கலாஷ்னிகோவ், தானியங்கித் பிஸ்டல்கள், ராக்கெட் ஏவும் கருவிகள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன என்றும் காசநோவ் தெரிவித்துள்ளார்.

பாடகர் கோவனுக்கு ஜாமீன் வழங்கிய அமர்வு நீதிமன்றம்

டாஸ்மாக்கை மூடு பாட்டைப்பாடியது தொடர்பாக பாடகர் கோவன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் கோவனுக்கு ஜாமின் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் நீதிபதி என்.ஆதிநாதன் உத்தரவிட்டுள்ளார். ஐந்தாயிரம் ரூபாய்க்கான இரு நபர் உத்தரவாதம் வழங்க வேண்டும். விசாரணைக்கு தேவைப்பட்டு காவல்துறையினர் அழைக்கும் பட்சத்தில் கோவன் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார் நீதிபதி.nakkheeran.com

ஞாயிறு, 15 நவம்பர், 2015

ஆங் சான் சூயின் கட்சி ஆட்சி அமைக்கும் சந்தேகம் தேவை இல்லை..மியான்மார் அதிபர் தெயின் செயின்...

மியன்மாரில் நடந்துமுடிந்த தேர்தலில் வெற்றிபெற்ற ஆங் சான் சூ சியின் கட்சிக்கு ஆட்சியதிகாரத்தை கையளிக்கும் நடைமுறை சுமுகமாக அமையும் என்று அந்நாட்டு அதிபர் தெயின் செய்ன் மக்களுக்கு உறுதியளித்துள்ளார். யங்கூன் நகரில் நடைபெற்ற அரசியல்கட்சிகளின் கூட்டம் ஒன்றிலேயே தெயின் செய்ன் இந்த உறுதிமொழியை அளித்துள்ளார். கடந்த வாரம் நடைபெற்ற தேர்தலில், போட்டி நடந்த தொகுதிகளில் ஜனநாயகத்துக்கான தேசிய லீக் கட்சி 80 வீதத்துக்கும் அதிகமான இடங்களை வென்றுள்ளது. புதிய அரசாங்கத்தை அமைப்பது தொடர்பான பேச்சுக்கள் அடுத்த வாரம் அளவில் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. மியன்மாரில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால், கடந்த 50 ஆண்டுகளுக்கும் அதிகமான காலம் நீடிக்கும் இராணுவ-பின்புலம் கொண்ட அரசாங்கம் முடிவுக்கு வரும்.bbc.tamill.com

வானிலை அறிவிப்பால் மிரண்டு போயுள்ளனர் சென்னைவாசிகள்

சென்னை: வெளுத்து வாங்கும் வடகிழக்கு பருவமழையால், சென்னை நகரமே வெள்ளக்காடாக மாறிவிட்டது. சாலைகள், குடியிருப்பு
பகுதிகளை வெள்ளம் சூழ்ந்திருப்பதால், வீடுகளில் சிறைபட்டு கிடக்கும் மக்கள், அத்தியாவசிய தேவைகளுக்குகூட பரிதவிக்கின்றனர். மழை இன்னும் தீவிரமடையுமென்ற வானிலை மையத்தின் அறிவிப்பால், மிரண்டு போயுள்ளனர்
சென்னைவாசிகள். ஒரு கண்ணில் வெண்ணெய்; மறு கண்ணில் சுண்ணாம்பு: அ.தி.மு.க., கட்சி தலைமை அலுவலகம் முன், மழைநீர் தேங்காமல் இருக்க, 25க்கும் மேற்பட்ட மாநகராட்சி ஊழியர்கள், சீரமைப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் அதன் அருகிலேயே ஒரு தெருவில், குளம் போல் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்ற ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கனமழையால், சென்னையின் பல பகுதிகள், வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. குறிப்பாக ராயபுரம், தண்டையார்பேட்டை, பெரம்பூர், திரு.வி.க., நகர் உள்ளிட்ட வடசென்னைவாசிகள் மழைநீரில் தத்தளித்து வருகின்றனர்.