புதன், 18 நவம்பர், 2015

நான் உத்தரவிட்டுள்ளேன்..முதல்வர் ஜெயலலிதா....நிவாரண உதவிகளை வழங்குமாறு அதிகாரிகளுக்கு..

இதுகுறித்துஅவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்: வடகிழக்கு பருவ மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவித் தொகை வழங்கவும் மற்றும் உடனடி சீரமைப்புப் பணிகளுக்கும் என 500 கோடி ரூபாய் ஒதுக்கி நான் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளேன். மழையால் பாதிக்கப்பட்ட பயிர்சேதங்களை ஆய்வு செய்து கணக்கெடுக்கும்படி நான் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். இந்த ஆய்வின் அடிப்படையில் பயிர் சேதங்களுக்கான இழப்பீடுகள் விவசாயப் பெருங்குடி மக்களுக்கு வழங்கப்படும். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தாம்பரம், முடிச்சூர் ஆகிய பகுதிகளில் இருந்து பாதுகாப்பான இடங்களுக்கு மக்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளதால், அவர்களது வீடுகள், உடமைகளுக்கு காவல்துறை மூலம் பாதுகாப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
திருவள்ளூர் மாவட்டத்தில் கரை உடைப்பு ஏற்பட்ட ஏரிகள் கண்டறியப்பட்டு அவை போர்க்கால அடிப்படையில் சரிசெய்யப்பட்டிருப்பதாகவும், 117 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு 26 ஆயிரத்து 448 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெருமழையால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்விநியோகம் நிறுத்தப்பட்டதாகவும், மழைநீர் வடிந்த காஞ்சிபுரம் நகரம் உள்ளிட்ட பகுதிகளில் தடையற்ற மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. webdunia.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக