செவ்வாய், 17 நவம்பர், 2015

தந்தி டிவியும் ரங்கராஜ் பாண்டேயும் இணைந்து பச்சை பார்பன (RSS) பிரசாரம்...

‘தந்தி’ டிவியில் ஆயுத எழுத்து மற்றும் கேள்விக் கென்ன பதில் நிகழ்ச்சிகளில் நெறியாளராக பணி யாற்றும் ரங்கராஜ் பாண்டே, 13.11.2015 வெள்ளியன்று, சுப.வீரபாண்டியனின் கேள்விக்கு பதில் சொல்பவராக காட்சி அளித்தார்.
தமிழ் நாட்டில் உயிரும் உடலும் சொந்தம் என்று சொன்ன ரங்கராஜ், தன் பெயருக்குப் பின்னால் ஒட்டிய வால்  பாண்டேவிற்கு அளித்த விளக்கம் இருக்கிறதே, ஆகா என்ன சாமர்த்தியம். 1857-ல் நடந்த சிப்பாய் கலகத்தில் கலந்து கொண்ட மங்கல் பாண்டே என்ற பார்ப்பான் நினைவாக பாண்டே என்பதை மனதில் இருத்தி, பெயரில் சேர்த்துள்ளாராம். நாம் நம்பித்தான் ஆக வேண்டும்.
மங்கல் பாண்டே மீது அத்தகைய பக்தி இருந்தால், ரங்கராஜ் மங்கல் பாண்டே என்று தானே வைத்திருக்க வேண்டும். தமிழ் நாட்டில் கனகசுப்புரத்தினம் தன் பெயரை, பாரதியின் மீது கொண்ட மரியாதையால், பாரதிதாசன் என்று தானே வைத்துக் கொண்டார். ஆனால், இவர் பாண்டே என்று வைத்துக்கொண்டால், எப்படி மங்கல் பாண்டே நினைவு வரும். பாண்டே என் கிற பார்ப்பன ஜாதிப்பெயர்தான் அனைவருக்கும் வரும். இருந்தாலும், ரங்கராஜீக்கு மட்டும் மங்கல் பாண்டே நினைவுக்கு வருவார்.

இதெப்படி என்று கேட்கக்கூடாது. ஏனென்றால், வருமானத்திற்கு அதிகமான சொத்து என்றால் சொத்துக்குவிப்பு என்றுதான் எல்லோரும் சொல்வார்கள். ஆங்கிலத்திலும், assets disproportionate case  என்று தான் எழுது கிறார்கள். ஆனால், ரங்கராஜ் பாண்டேவிற்கு மட்டும் அது சொத்து வழக்கு என்பதாகத் தான் அர்த்தமாம். யார் என்ன சொன்னாலும் மாற்றிக் கொள்ள மாட்டாராம். அடுத்து, திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்களை பேட்டி கண்டபோது, அது பதிவு செய்யப்பட்டு, இன்னொரு நாள் ஒளி பரப்பப்பட்ட நிகழ்ச்சி. அந்த பேட்டியின் போது எந்த ஆதாரத்தையும் ஆசிரியர் வீரமணி அவர்களிடம் தெரிவிக்காமல், இவராக, ஒரு வீடியோவை அதுவும் முழுவதும் தவறான கருத்தை ஒளிபரப்பினார்.

பலரின் கண்டனத்துக்குப் பிறகு, தந்தி டிவி நிர்வாகம், திராவிடர் கழகத்தின் உண்மை கருத்தினை சில நாட்களுக்குப் பிறகு ஒளிபரப்பியது.  இது குறித்து, சுப.வீ. கேட்ட கேள்விக்கு, அறிவு நாணயத்தோடு ரங்கராஜ் பாண்டே பதில் தரவில்லை. மாறாக, தனக்குத் தெரிந்த கருத்தை பேட்டி எடுத்தவரிடமும் காட்டாமல் ஒளிபரப்பினாராம். அதற்கு மறுப்பு வந்தபோது அதையும் செய்தாராம்.

‘தி இந்து’ நாளிதழ், நூறாண்டுக்கும் மேலாக நடத்தப்படும் பத்திரிக்கை. 1987 ஆகஸ்டு 22-ஆம் தேதி திடீரென காஞ்சி மடத்திலிருந்து ஜெயேந்திர சரஸ்வதி மாயமானார். எங்கு சென்றார் என்று யாருக்கும் தெரியவில்லை. மறு நாள் தி இந்து நாளேடு முதல் பக்கத்தில் Head of Kanchi Mutt missing  என்று தலைப்பிட்டு செய்தி வெளியிட்டது. காஞ்சி மடாதிபதியைக் காணோம் என்று செய்தி வெளியிட்டதற்காக பார்ப்பனர்களிடமிருந்து கண்டனக் கடிதங்கள் தி இந்து நாளிதழுக்கு வந் ததையடுத்து,  என்று தலைப்பிட்டதற்கு வருத்தம் தெரிவித்து செய்தி வெளியிட்டது தி இந்து நாளிதழ். இத்தகைய மனப்பான்மையை ரங்கராஜ் பாண்டேவிடம் நாம் எதிர்பார்க்க முடியுமா? முடி யாது என்று பாண்டே தெளிவாக சொல்லிவிட்டார்.

 பின் எதற்காக இந்த பேட்டி? தொலைக்காட்சி வரலாற்றில் புதிய முயற்சியா? அதெல்லாம் ஒரு வெங்காயமும் இல்லை. ரங்கராஜ் பாண்டே நெறியாளராக நடத்தும் நிகழ்ச்சியில் முழுக்க முழுக்க தான் ஒரு ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தை ஏற்றுக்கொண்ட மனிதராக இருப்பது நிகழ்ச்சி பார்க்கும் அனைத்து மக்களுக்கும் தெரிந்துவிட் டது. இதன் காரணமாக நிகழ்ச்சியின்மீது ஒரு மரியாதையும் இல்லை என்பதை நிர்வாகம் தெரிந்த கொண்டதன் விளைவுதான், இந்த மாதிரி ஒரு பேட்டியை எடுத்து, ரங்கராஜ் பாண்டே ரொம்ப நல்லவர்னு காட்ட நிர்வாகம் முனைந்துள்ளது. ஆனால் எப்படி மெனக்கெட்டாலும், ஒரு திரைப்படத்தில் சொல்வார்களே, மண்டையில் இருக்கும் கொண்டையை மறைக்க முடியவில்லை என்று. அதைப்போல, ரங்கராஜ் தன்னை நல்ல வன்னு சொன்னாலும், பின்னால் இருக்கும் பாண்டே காட்டிக்கொடுத்துவிடுகிறது  viduthalai.com valaippoo 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக