செவ்வாய், 17 நவம்பர், 2015

எம்ஜியாரை சுட்ட எம் ஆர் ராதா தன்னை தானே சுட்டாரா? முன்னாள் அமைச்சர் அரங்கநாயகம்....

நீண்டகாலமாகவே பலரின் சந்தேகத்துக்கு இடமான எம் ஆர் ராதாவின் தன்னை தானே சுட்ட விடயம் தற்போது ஒரு வெளிச்சத்தை நோக்கி வந்துள்ளது.  எம்ஜியாரோடு மிகவும் நெருக்கமாக இருந்த முன்னாள் அமைச்சர் அரங்கநாயகம் அது பற்றி ஒரு தொலைக்காட்சி பேட்டி யில் கொஞ்சம் விபரித்து இருக்கிறார்,
கோபத்தில்  இருந்த ராதாண்ணன்  உண்மையில் எம்ஜியாரை கொஞ்சம் மிரட்டவே துப்பாக்கியை நீட்டினார். பின்பு நிதானம் இழந்து வேகமாக  சுட்டு இருக்கவேண்டும் ஆனால்  மிகவும் துடிப்பாக சூழ்நிலைகளை புரிந்து வேகமாக செயலாற்றும் இயல்பு கொண்ட எம்ஜியார் அதை எப்படி எதிர்கொண்டிருப்பார் என்று நீங்கள் கருதுகிறீர்கள்?
எம் ஆர் ராதாவை விட பல மடங்கு...ஸ்டண்டுகளில் தேர்ச்சி பெற்ற எம்ஜியார் நிச்சயம் பதிலடி கொடுத்திருப்பார்?
 சூட்டு காயத்துடனேயே வீட்டின் கீழ் தளத்துக்கு காயத்தோடு எம்ஜியார் ஓடி வந்தார் என்பதுவும் மிகவும் கவனிக்க வேண்டிய செய்தியாகும். வைத்தியசாலையில் இருந்து ராதாண்ணை எப்படி இருக்கிறார்? என்று எம்ஜியார் விசாரித்த வண்ணம் இருந்தார். மேலும் அவரை நன்றாக கவனிக்குமாறும் வேண்டிகொண்டார்.
இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு இது பற்றி ராதாவிடமும் சரி எம்ஜியாரிடமும் சரி கேட்ட பொழுது இருவருமே சிரிப்பையே பதிலாக தந்தார்கள் என்பது வரலாறு.
 தீர்ப்புக்குப் பின்...
badriseshadri.in/2005/06/blog-post_15.htm சுதாங்கன்

ராதாவின் மகளான ரஷ்யா என்கிற ராணிக்கும் டாக்டர் சீனிவாசன் என்பவருக்கும் ராதா சிறையில் இருக்கும்போதுதான் திருமணம் நடந்தது. ராதாவால் திருமணத்தில் கலந்து கொள்ள முடியவில்லை. 1968-ம் வருடம் ஆகஸ்ட் 26-ம் தேதி நடந்த திருமணத்துக்கு தந்தை பெரியார்தான் தலைமை தாங்கினார். முதலில் காமராஜர்தான் தலைமை தாங்குவதாக இருந்தது. ராதா வேண்டாமென்று மறுத்துவிட்டார். காமராஜர் சொல்லித்தான் ராதா எம்.ஜி.ஆரைச் சுட்டார் என்கிற வதந்தி பரவிக் கிடந்தது. அதனால் காமராஜர் திருமணத்தில் கலந்து கொண்டார்; தலைமை தாங்கவில்லை.

திருமணத்தைத் திரையுலகப் பிரபலங்கள் பலரும் புறக்கணித்தனர். ராதாவின் நாடக மன்றத்தில் நடித்து வளர்ந்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். அவர் திருமணத்துக்கு வரவில்லை. வந்த ஒரே நட்சத்திர தம்பதிகள் ஜெமினி கணேசனும், சாவித்திரியும்தான். இதன் பிறகு 1968 இறுதியில் ராதாவுக்கு ஜாமீன் கிடைத்தது. ஆனால் அவர் திருச்சியில் தங்கியிருக்க வேண்டும் என்று நிபந்தனை.

இதற்கிடையில் என்ன நடந்ததோ தெரியாது, நீதிமன்ற வரலாற்றிலேயே ஆபூர்வமாக ஒரு விஷயம் நடந்து. வழக்கமாக ஒரு வழக்கு விசாரணைக்கோ, தீர்ப்புக்கோ எடுத்துக் கொள்ளப்பட்டால், அதைப் பற்றிய ஓர் அறிவிப்பு வெளிவரும். இதை லிஸ்ட் என்பார்கள். இப்படி ஒரு லிஸ்ட் வராமலேயே உயர் நீதிமன்றம் இந்த வழக்கை எடுத்துக் கொண்டு செஷன்ஸ் கோர்ட்டில் வழங்கிய ஏழு ஆண்டுச் சிறைத் தண்டனையை உறுதி செய்தது. ராதாவின் ஜாமீனையும் நிராகரித்தது. ராதா மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.

உயர் நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு, வழக்கு உச்சநீதிமன்றம் சென்றது. வழக்கமாக இது போன்ற வழக்குகளில் கீழ் நீதிமன்றங்களில் சரியான முறையில் விசாரணை நடந்திருக்கிறதா என்றுதான் உச்ச நீதிமன்றம் பார்க்கும். ராதா வழக்கில் இன்னொரு அசாதாரணமான விசாரணையும் உச்ச நீதிமன்றத்தில் நடந்தது. உயர் நீதிமன்ற சாட்சிகளையும் அழைத்து விசாரித்தது உச்ச நீதிமன்றம். இந்த விசாரணையின்போதுதான், ராதாவின் தண்டனைக் காலம் குறைக்கப்பட்டது. ஏற்கெனவே அனுபவித்த சிறைத் தண்டனையை மனத்தில் கொண்டு, மூன்றரையாண்டு சிறை வாசத்துக்குப்பின் ராதா விடுதலையானார்.

விடுதலையானதற்குப் பிறகு ராதாவால் வெகுநாட்கள் வேலை ஏதும் செய்யாமல் சும்மா இருக்க முடியவில்லை. நாடகம் போடத் தீர்மானித்தார். புதிய நாடகத்தின் தலைப்பு கதம்பம். அவர் ஏற்கெனவே மேடையேற்றி நடித்த தூக்குமேடை, ரத்தக்கண்ணீர், லட்சுமிகாந்தன் கொலை வழக்கு ஆகிய மூன்று நாடகங்களின் தொகுப்பு. அவருடன் முன்னர் நடித்த பழைய ஆள்கள் பலர் அப்போது இல்லை. இருந்த சிலரும் அவருடன் நடிக்க பயந்தார்கள். ஆனாலும் வேறு சிலரைத் தயார் செய்து நடிக்க வைத்தார்.

அப்போது திருவல்லிக்கேணியில் பார்த்தசாரதி சபா அரங்கம் மிகவும் பிரபலம். அங்கேதான் நாடக அரங்கேற்றம். யாரைத் தலைமை தாங்க அழைக்கலாம் என்கிற யோசனை எழுந்தது. உடனே ராதா எம்.ஜி.ஆரை அழைக்கலாம் என்றார். ராதாவே எம்.ஜி.ஆருடன் பேசி தலைமை தாங்க அழைத்தார். எம்.ஜி.ஆரும் ஒப்புக்கொண்டார். ஆனால் கடைசி நிமிடத்தில் வரவில்லை. நாடகத்தில் ஒரு காட்சியில் லட்சுமிகாந்தனைத் துப்பாக்கியால் ராதா பாத்திரம் சுடுவதுபோல் வரும். பழைய பகையை மனத்தில் வைத்துக்கொண்டு நிஜமாகவே உண்மையான துப்பாக்கியால் எதிரே பார்வையாளர் பகுதியிலுள்ள எம்.ஜி.ஆரைச் சுட்டுவிட்டால் என்னாவது என்று யாரோ எம்.ஜி.ஆரிடம் சொல்லியதால்தான் அவர் கலந்து கொள்ளவில்லை என்று பேசப்பட்டது. அப்போது ராதாவுக்கு அறுபத்தைந்து வயது.

வெளியூர்களில் ராதாவின் நாடகங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்க ஆரம்பித்தது. கீமாயணம்-1 என்கிற பெயரில் 'லட்சுமிகாந்தன் கொலை வழக்கு' நடக்கும். கீமாயணம்-2 என்கிற பெயரில் 'தூக்கு மேடை' நாடகம். கீமாயணம்-3 என்கிற பெயரில் 'ரத்தக்கண்ணீர்'. உடல் தளர்ந்தபோதும் நாடகம் போடுவதை நிறுத்தவில்லை. நாடகம் போட்டுத்தான் ஆக வேண்டுமா என்று குடும்பத்தினர் ராதாவிடம் கேட்டார்கள். அதற்கு அவர், "கடைசி காலத்தில் தொழில் இல்லாமல்தான் கலைவாணர் இறந்தார். தியாகராஜ பாகவதருக்கும் அந்த நிலைதான் ஏற்பட்டது. எனக்கு அந்த நிலை ஏற்படக்கூடாது" என்றாராம்.

சில மாதங்கள் கழித்து 'சமையல்காரன்' என்கிற படத்தில் நடிக்க ராதாவுக்கு வாய்ப்பு வந்தது. அன்றைய தமிழக முதல்வரான கருணாநிதியின் மகன் மு.க.முத்துதான் படத்தின் கதாநாயகன். மைசூரில்தான் படப்பிடிப்பு. படப்பிடிப்புக்காக ராதா காரில் மைசூர் சென்றார். அதிகாலை நேரம், பெங்களூரில் காரைவிட்டு வெளியே இறங்கிய ராதா, "பெட்டி படுக்கையெல்லாம் காரிலேயே இருக்கட்டும். பெரியார் இறந்துடுவார்னு தோணுது. அநேகமாக நாம மறுபடியும் திரும்ப வேண்டியிருக்கும்" என்றாராம். ராதாவும் மற்றவர்களும் ஹோட்டல் அறையில் ஒய்வு எடுத்துக் கொண்டிருந்தார்கள். காலை ஏழரை மணிக்கு பெரியார் இறந்துவிட்டதாகத் தகவல் வந்தது.

காரில் சென்னை திரும்பிய ராதா, நேராகப் பெரியாரின் உடல் வைக்கப்பட்டிருந்த ராஜாஜி ஹாலுக்குத்தான் போனார். அவர் உடல் மீது விழந்து புலம்பினார். "போச்சு, எல்லாம் போச்சு. இனிமேல் தமிழ்நாட்டுக்குத் தலைவனே கிடையாது" என்றாராம். அந்த இடத்தில்தான் எம்.ஜி.ஆர் - ராதா சந்திப்பு பல வருடங்களுக்குப்பின் நடந்தது. அப்போது ராதா எம்.ஜி.ஆரிடம், "உன் கூட இருக்கிற யாரையும் நம்பாதே, கழுத்தறுத்துடுவாங்க" என்றாராம்.

'சமையல்காரன்' படத்தில் வில்லனுக்கு அப்பா வேடம் ராதாவுக்கு. அவருக்கு அந்த வயதான பாத்திரம் பிடிக்கவில்லை. கருணாநிதியிடம் சொல்லிப்பார்த்தார். பாத்திரத்தை எப்படி வேண்டுமானலும் மாற்றிக்கொள்ளுங்கள் என்று கருணாநிதி ராதாவுக்கு அனுமதி கொடுத்தாராம். அதற்கு பிறகே ராதா நடித்தார். அந்தப் படத்தில் ராதாவை அறிமுகம் செய்கிற காட்சியில் அவர் ஜெயிலிலிருந்து வெளியே வருவார். "ஜெயில்லதான் காபி கொடுக்கிறான். வெளியே கடைசி எழுத்தத்தான் கொடுக்கிறான்" என்றுதான் அறிமுகமாவார்.

தொடர்ந்து ராதா ஜெய்சங்கருடன் 'ஆடுபாம்பே', 'தர்மங்கள் சிரிக்கின்றன', 'பஞ்சபூதம்', 'கந்தரலங்காரம்' ஆகிய படங்களில் நடித்தார்.

அதற்குப் பிறகு அரசியல் மாறியது. இந்தியப் பிரதமராக இருந்த இந்திரா காந்தி 1975-ல் இந்தியா முழுவதும் "எமர்ஜென்ஸி' கொண்டு வந்தார். பலர் இந்தியா முழவதும் கைது செய்யப்பட்டனர். ராதாவையும் மிசாவில் கைது செய்தார்கள். ராதா கைதானவுடனேயே, "உங்களுக்கும் தந்தை பெரியாருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று எழுதிக் கொடுங்கள். உங்களை விடுதலை செய்கிறோம்" என்றனர். ராதா மறுத்துவிட்டார். பிறகு ராதாவின் மகன் ராதா ரவி டெல்லி சென்று அன்றைய மத்திய மந்திரியாக இருந்த ஒம் மேத்தாவையும், இந்திரா காந்தியையும் சந்திந்து ராதாவின் உடல்நிலையை விளக்கி ராதாவுக்கு விடுதலை பெற்றுத் தந்தார்.

பதினோரு மாதங்கள் சிறைவாசம் அனுபவித்துவிட்டுத் திரும்பியவுடன் மலேசியா, சிங்கப்பூரில் நாடகம் போட ராதாவுக்கு அழைப்பு வந்தது. மூன்று மாதங்கள் இரண்டு நாடுகளிலும் நாடகம் நடத்தினார். சில கூட்டங்களில் பேசினார். அந்தப் பேச்சுக்கள் ஒலிநாடாவாக்கப்பட்டு பல ஆயிரம் பிரதிகள் விற்றுத் தீர்த்தது. பல ஆபூர்வமான சுயசிந்தனைக் கருத்துக்கள் அந்தப் பேச்சுக்களில் நிறைந்து இருந்தது. அங்கிருந்தபோதே ராதாவை மஞ்சள் காமாலை நோய் தாக்கியது. இந்தியா திரும்பி நேரே திருச்சி சென்று தங்கினார் ராதா.

ராதா 1979-ம் ஆண்டு செப்டம்பர் 17-ம் தேதி இறந்தார். எம்.ஜி.ஆர் அப்போது தமிழக முதல்வர். அவர் ராதாவின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளக் கிளம்பினார். ராதாவுக்கு திருச்சியில் செல்வாக்கு அதிகம், பிரச்னை வரக்கூடாது என்பதற்காக ராதா குடும்பத்தினர் எம்.ஜி.ஆரை வரவேண்டாம் என்று தடுத்துவிட்டனர். எம்.ஜி.ஆர் ராதாவின் இறுதிச் சடங்குக்காக ஓர் அரசாங்க வண்டிக்கு ஏற்பாடு செய்தார். ஆனால் ராதா குடும்பத்தினர் அதையும் ஏற்றுக்கொள்ளவில்லை என்கிற தகவலும் உண்டு.

ராதா இறந்த அன்று தந்தை பெரியாருக்கு 101வது பிறந்த நாள் விழா.


metronews.lk/e ;தமிழ்த் திரை­யு­ல­கிலும் தமி­ழக அர­சி­யலிலும் நிகரற்ற நாய­க­னாக விளங்­கிய மக்கள் திலகம் எம்.ஜி.ஆரை (எம்.ஜி.ராமச்­சந்­திரன்) நடிகர் எம்.ஆர்.ராதா துப்­பாக்­கியால் சுட்டு, இன்று
ஞாயிற்­றுக்­கி­ழ­மை­யுடன் 47 வரு­டங்கள் பூர்த்­தி­யா­கின்­றன.

அது தமி­ழக சட்­ட­சபைத் தேர்தல் பிரசாரம் உச்சக் கட்­டத்தை எட்டிக் கொண்­டி­ருந்த காலம். முன்­னணி நடி­க­ரான எம்.ஜி.ஆர். அப்­போது தி.மு.கவில் நட்­சத்­திர அங்­கத்­த­வ­ராக இருந்தார். திடீ­ரென எம்.ஜி.ஆர். சுடப்­பட்ட செய்தி ஒட்­டு­மொத்த தமி­ழ­கத்­தையும் உலுக்­கி­யது.

எம்.ஜி.ஆரை சுட்­ட­தோடு தன்­னையும் சுட்­டுக்­கொண்டார் எம்.ஆர்.ராதா. இரு­வரும் அவ­சரம் அவ­ச­ர­மாக மருத்­து­வ­ம­னைக்குக் கொண்டு செல்­லப்­பட்­டனர். தீவிர சிகிச்­சைக்குப் பிறகு இரு­வ­ருமே உயிர் பிழைத்­தனர். தனிப்­பட்ட முரண்­பாடு கார­ண­மாக நடந்த இந்த மோதல் அர­சி­யல்­ ரீ­தி­யா­கவும் முக்­கி­யத்­துவம் பெற்­றது.

எம்.ஜி.ஆரை எம். ஆர்.ராதா சுட்டார் என்­பது பல­ருக்குத் தெரியும். ஆனால், எதற்­காக,  எந்தச் சூழ்­நி­லையில் எம்.ஆர். ராதா சுட்டார் என்­பது பலர் அறி­யா­தது. இச்­சம்­ப­வத்­திற்­கான உண்­மை­யான,  துல்­லி­ய­மான காரணம் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.,  நடி­கவேள் எம்.ஆர்.ராதா இரு­வ­ருக்கு மட்­டுமே தெரிந்த இர­க­சியம் என்­கின்­றனர்.

ஆனால், 1967 ஜன­வரி 12 ஆம் திகதி இடம்­பெற்ற இச்­சம்­ப­வத்­திற்­கான கார­ண­மாக அப்­போது பர­ப­ரப்­பாக பேசப்­பட்ட விட­யங்கள் இவை:

எம்.ஜி.ஆர். நடித்த 'பெற்­றால்தான் பிள்­ளையா?' என்ற படத்தை எம்.ஆர்.ராதாவின் நெருங்­கிய நண்­ப­ரான வாசு தயா­ரித்து 9.12.1966 -ஆம் திகதி வெளி­யிட்­டி­ருந்தார். நண்­ப­னுக்கு உதவி செய்யும் எண்­ணத்­தில்தான் படத்தை முடிக்க கட­னு­தவி செய்தார் ராதா.

'படத்தை முடிக்க வேண்­டிய கட்­டத்தில் புதிய காட்­சி­களை இணைக்கச் சொல்­லி­விட்டார் எம்.ஜி.ஆர். அதனால் செலவு கூடி­விட்­டது. இலாப­மில்­லா­விட்­டாலும் பர­வா­யில்லை. கையைக் கடிக்­காமல் இருந்தால் போதும். உங்­க­ளுக்கு வேறு பணம் தர வேண்டும். என்ன செய்­வது என்றே விளங்­க­வில்லை' என எம்.ஆர்.ராதா­விடம் புலம்­பி­னாராம் வாசு.

'நான் கொடுத்த பணம் திரும்பி வராதா? இந்நாள் வரை நான் இள­கிய மனம் உடை­ய­வ­னாக வாழ்ந்து வந்­தி­ருக்­கிறேன். எந்தச் சூழ்­நி­லை­யிலும் இனி யாருக்கும் உதவி செய்­யக்­கூ­டாது. பணம் கொடுத்து பகையைத் தேடிக் கொள்­ளக்­கூ­டாது என்ற என்னை மாற்­றி­விட்டாய். வா. என்­னோடு.... எம்.ஜி.ஆரி­டமே பேசுவோம்' என்று எம்.ஆர்.ராதா கூறி­னாராம்.

அன்று மாலை 5 மணிக்கு ராமா­வரம் தோட்­டத்தில் உள்ள எம்.ஜி.ஆர். வீட்­டுக்கு எம்.ஆர்.ராதாவும் சென்றார். 'பெற்­றால்தான் பிள்­ளையா' படத்தின் தயா­ரிப்­பாளர் வாசுவும் சென்­றனர்.

அங்கு செல்­லும்­போது எம்.ஆர். ராதா கைத்­துப்­பாக்­கி­யையும் எடுத்து வைத்­துக்­கொண்­டது எனக்குத் தெரி­யாது என்று பின்னர் ஒரு பேட்­டியில் வாசு கூறினார்.

ராமா­வரம் தோட்­டத்தில் எம்.ஆர்.ராதாவும், வாசுவும் எம்.ஜி.ஆரைச் சந்­தித்­தனர். 'என்­னு­டைய தொழில் நடிப்­பது... பண விட­யத்­துக்கு நான் பொறுப்­பில்லை' என்று எம்.ஜி.ஆர் கூறி­னாராம். இதனால் உணர்ச்சி வசப்­பட்டு கைத்­துப்­பாக்­கியால் சுட்­டாராம் எம்.ஆர்.ராதா.

'எம்.ஜி.ஆரை ராதாவும் வாசுவும் சந்­தித்­தார்கள். அப்­போது தக­ராறு ஏற்­பட்­டது. எம்.ஆர்.ராதா தன் மடியில் வைத்­தி­ருந்த கைத்­துப்­பாக்­கியை எடுத்து, எம்.ஜி.ஆரை சுட்டார். எம்.ஜி.ஆர். குனிந்தார். குண்டு இடது புற காது அருகே கன்­னத்தில் பாய்ந்­தது. உடனே ராதா துப்­பாக்­கியைத் தன் தலையில் வைத்து விசையை அழுத்­தினார். குண்டு அவர் நெற்­றியில் பாய்ந்­தது' என்று பொலிஸார் பின்னர் தெரி­வித்­தனர்.
சுடப்­பட்ட எம்.ஜி.ஆர். முதலில் ராயப்­பேட்டை ஆஸ்­பத்­தி­ரிக்குக் கொண்டு போகப்­பட்டார். முதல் சிகிச்­சைக்குப் பிறகு, சென்னை பொது வைத்­தி­ய­சா­லையில் சேர்க்­கப்­பட்டார். எம்.ஆர்.ராதாவும் இதே வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்டார். அவர் நெற்­றியில் பாய்ந்த குண்டு அகற்­றப்­பட்­டது.

ஆனால், எம்.ஜி.ஆர். கழுத்தில் பாய்ந்த குண்டு, மூன்று முக்­கிய நரம்­பு­க­ளுக்கு இடையே பதிந்­தி­ருந்­தது. அதை அகற்­றினால் நரம்­பு­க­ளுக்குச் சேதம் ஏற்­பட்டு, உயி­ருக்கே ஆபத்து ஏற்­ப­டலாம் என்ற நிலை. எனவே மருத்­து­வர்கள் இந்த குண்டை அப்­ப­டியே விட்டு விட்டுத் தையல் போட்­டனர்.

பரங்­கி­மலைத் தொகு­தியில் தி.மு.க. வேட்­பா­ள­ராக எம்.ஜி.ஆர். போட்­டி­யிட்ட நேரத்­தில்தான் அவர் சுடப்­பட்டார். தேர்தல் பிர­சா­ரத்­திற்குப் போகா­ம­லேயே, ஆஸ்­பத்­தி­ரியில் படுத்­த­படி அவர் வெற்றி பெற்றார்.

சிகிச்­சைக்குப் பின், எம்.ஜி.ஆரும் எம்.ஆர்.ராதாவும் குணம் அடைந்­தார்கள். எம்.ஜி.ஆரை சுட்­ட­தாக ராதா மீது சைதாப்­பேட்டைக் நீதிமன்றில் வழக்கு நடந்­தது. இந்த வழக்கில் 1967.05.22 ஆம் திகதி எம்.ஜி.ஆர். நீதி­மன்­றுக்கு வந்து சாட்­சியம் அளித்தார்.

வழக்கு விசா­ரணை முடிவில் எம்.ஆர்.ராதா குற்­ற­வாளி என்­பது உறுதி செய்­யப்­பட்டு சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டது. சென்னை செஷன்ஸ் நீதி­மன்­றத்தில் அவ­ருக்கு 7 ஆண்­டுகள் சிறைத்­தண்­டனை என்று தீர்ப்பு கூறப்­பட்­டது. இதை எதிர்த்து மேல் நீதி­மன்றில் மேன்­மு­றை­யீடு செய்தார். ஏழு ஆண்டுகள் சிறைத்­தண்­ட­னையை மேல்­நீ­தி­மன்றம் உறுதி செய்­தது.

பின்னர் உயர் நீதி­மன்­றுக்கு மேன்­மு­றை­யீடு செய்தார். அந்­நீ­தி­மன்றம் சிறைத்­தண்­ட­னையை 5 ஆண்­டு­க­ளாகக் குறைத்­தது. சிறையில் நன்­ன­டத்தை கார­ண­மாக தண்­டனை சற்று குறைந்­தது. நான்­கரை வரு­டங்­க­ளின்பின் அவர் விடு­த­லை­யானார்.

எம்.ஜி.ஆருக்கு ஏற்­பட்ட குண்டு காயத்­தினால் பேசும் திறன் பாதிக்­கப்­பட்டு இருந்­தாலும்  எம்.ஜி.ஆரின் செல்­வாக்கு பன்­ம­டங்கு உயர்ந்­து­விட்­டி­ருந்­தது. விடு­த­லை­யான எம்.ஆர்.ராதாவின் வாழ்வில் எத்­த­னையோ மாற்­றங்கள். அவ­ரு­டைய இயல்­பான ஆர்ப்­பாட்­டங்கள் இல்லை. கிண்டல்இ கலாட்டா, சத்தம் எல்­லாமே அடங்­கி­விட்­டன. ஆனால், அப்­போது அவ­ருக்கு ஏரா­ள­மான ரசி­கர்கள் இருந்­தனர்.

அவ­ரது வாயைக் கிளறி செய்­தி­களை வர­வ­ழைத்து பத்­தி­ரி­கையில் வெளி­யிட முயன்­றார்கள். 'ஒன்றும் பேசா­தீர்கள். இரா­மச்­சந்­திரன் நல்­லவர். நடையைக் காட்­டுங்கள்' என்று பத்­தி­ரி­கைக்­கா­ரர்­களை விரட்­டி­வி­டுவார் எம்.ஆர். ராதா.

தனது உயி­ருக்கே உலை வைக்­கக்­கூ­டிய நட­வ­டிக்­கையில் ஈடு­பட்­டி­ருந்­தாலும் எம்.ஆர்.ராதா மீது எம்.ஜி.ஆர் பகைமை பாராட்டவில்லை.  ஆனால், இந்த கசப்பான சம்பவத்திற்குப் பிறகு படத்தில் அவருடன் நடிப்பதை நிறுத்திக் கொண்டார் எம்.ஜி.ஆர். துப்பாக்கிப் பிரயோகத்தின் பின்னரும் ராதா அண்ணனை காப்பாற்றுங்கள் என எம்.ஜி.ஆர். கூறினாராம்.

பின்னர் தி.மு.க.விலிருந்து எம்.ஜி.ஆர். விலக்கப்பட்டு 1972 இல் அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தை ஆரம்பித்த எம்.ஜி.ஆர். 1977 முதல் 1987 இல் தான் இறக்கும்வரை அப்பதவியை வகித்தார். இதற்கிடையில் 1979 ஆம் ஆண்டு எம்.ஆர்.ராதா தனது 72 ஆவது வயதில் காலமானார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக