வியாழன், 19 நவம்பர், 2015

கிரிமினல் பாபா ராம்தேவ் நூடில்ஸ் தயாரிப்பு....உரிமம் பெறாமலேயே விற்பனை.. டுபாக்கூர் ஆட்சியில் டுபாக்கூர் சாமிகளின்....

அரித்துவார்- நவ, 18 இந்திய உணவுப் பாது காப்பு மற்றும் தரக்கட்டு பாட்டுக் கழகத்தின் அனு மதி பெறாமல் போலியான உரிம எண்ணுடன் பதஞ் சலி நூடுல்ஸ் என்ற உணவு வியாபாரத்தை  கருப்புப் பணப் புகழ் சாமியார் ராம்தேவ் பாபா தொடங் கியுள்ளார்.   மாகி நூடுல்ஸில் ஆபத் தான வேதிப்பொருள் உள்ளது என்று தடை செய்யப்பட்டவுடன் அவசர அவசரமாக கருப் புப் பணப்புகழ் சாமியார் ராம்தேவ், தான் பாது காப்பான நூடுல்ஸ் என்ற உணவை அறிமுகப்படுத் துவதாக அறிவித்தார். அறிவித்தது போலவே சில நாட்கள் ஆய்வு செய் வதாகக் காட்டிக்கொண்டு, அக்டோபர் மாதம் பத் திரிகையாளர்கள் சந்திப் பில் தனது பதஞ்சலி நிறுவன நூடுல்ஸ் என்று அறிமுகப்படுத்தி, அதை சமைத்து பத்திரிகையாளர் சந்திப்பிற்கு வந்த பத்திரி கையாளர்களுக்குக் கொடுத்தார்.   போலியான பதிவு எண்!

இந்த நிலையில் மத்திய உணவுக்கழகத்திற்கு டில் லியைச் சேர்ந்த பத்திரிகை யாளர் ஒருவர் பதஞ்சலி நூடுல்ஸ் பாக்கெட்டை அனுப்பி சில அய்யங் களைக் கேட்டிருந்தார். அதில் மத்திய உணவுக் கழகமான  என்ற இந்திய உணவுப் பாதுகாப்பு தரக் கட்டுப்பாட்டுக் கழகத்தின் அனுமதி எண்ணில் சில அய்யங்கள் உள்ளன என்றும் இதில் நீங்கள் கொடுத்துள்ள உரிம எண்கள் சரியானதா என்றும் கேட்டுள்ளார்.
இது குறித்து  தலைவர் ஆஷிஸ் பகுகுணா இந்தி யன் எக்ஸ்பிரஸ் என்ற இதழுக்கு அளித்த பேட்டி யில் பதஞ்சலி நூடுல்ஸ் பாக்கெட்டுகளின் மேல் அச்சிடப்பட்ட எங்களது உரிமம் எண் போலி யானது என்றும், எங்களி டம் அவர்கள் நூடுல்ஸ் தயாரிப்பிற்கான அனும தியைப் பெறவில்லை என்றும் கூறினார்.  இது குறித்து பதஞ்சலி நிறுவன இயக்குநரிடம் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் கேள்வி கேட்ட போது, ஆயுர்வேத தயாரிப் புகளில் உள்ள சில விதி முறைகளின்படி அரசு அனுமதிபெறத் தேவை யில்லை, அரசு தேவைப் பட்டால் சோதனை செய்து அதனுடைய முடிவை அறிவிக்கும், உரிம எண் பற்றி உங்களுக்கு விரைவில்தகவல் தெரிவிப்போம் என்று கூறினார். சாப்பிடும் உணவிலும் நச்சுத்தனம்!
கடந்த வாரம் நடந்த நூடுல்ஸ் அறிமுகவிழா வில் பேசிய ராம்தேவ் இந்தியா முழுவதும் 13 நகரங்களில் பதஞ்சலி நூடுல்ஸ் தயாரிப்பு நிலை யங்கள் அமைத்துக் கொண்டு இருக்கிறோம். டிசம்பர் மாதத்திற்குள் 20 லட்சம் கடைகளிலும் நாடு முழுவதுமுள்ள அனைத்துப் பெரிய மால்களிலும் பதஞ்சலி நூடுல்ஸ் கொண்டுவர விருக்கிறோம் என்று கூறியுள்ளார்.  மேலும் பதஞ்சலி நூடுல்ஸ் 15 ரூபாய்க்கு விற்பனைக்கு வருவதாக வும் வரவேற்பு அதிகம் இருக்கும் பட்சத்தில் 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்போவதாகவும் இதன் மூலம் வரும் பணம் ஏழை மாணவர்களின் கல்விக்குச் செலவிடப்படும் என்று அறிவித்திருந்தார்.  ஆனால், போலியான உரிம எண்ணை பதித்து அரசை ஏமாற்றியது மட்டுமல்லாமல் சாப்பிடும் உணவு விவகாரத்திலும் தனது நச்சுத்தனத்தைக் காட்டியுள்ள கருப்புப் பணப்புகழ் ராம்தேவ் மீது மோடி அரசு நடவடிக்கை எடுக்குமா? அல்லது ஆயுர் வேத தயாரிப்பு என்று கூறி ராம்தேவிற்கு ஆதரவான முடிவை எடுக்குமா என்று தெரியவில்லை.  அந்நிய உணவான நூடுல்ஸ் எப்படி ஆயுர் வேத தயாரிப்பானது என்று மோடிக்கும், ராம் தேவிற்கு மட்டுமே தெரிந்த ரகசியமோ!
மிருக எலும்புகளை சேர்த்தவர்
இந்த கருப்புப் பணப் பதுக்கல்  சாமியார் தன்னு டைய தயாரிப்புகளில் மிருக எலும்புகளை கலப்பதாக கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் பிருந்தா காரத் ஆதாரங்களுடன் நிரூபித்தார். கடந்த ஆண்டில் ஆண் குழந்தை பிறக்கும் ஆயுர் வேத மருந்து என்று கூறி விற்று அது நாடாளுமன்றத்தில் பிரச் சினையாக எழுப்பப்பட் டதும் அந்த தயாரிப்பை திரும்பப் பெற்றார் என் பது குறிப்பிடத்தக்கதாகும் விடுதலை.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக