செவ்வாய், 17 நவம்பர், 2015

புது சொத்து விவரங்கள் எப்படி லீக் ஆனது? Who is the Black Sheep? மில்லியன் டாலர் கேள்வி....

பொதுவா தீபாவளி நாளில் ஜெ.வைத்தான் பலரும் சந்திப்பாங்க.
வாழ்த்து சொல்லுவாங்க. இந்த முறை ஜெ. பலருக்கும் போன் செய்து தீபாவளி வாழ்த்து சொல்லியிருக்காரு. அதில் சுப்ரீம் கோர்ட்டில் பிரபலமான வக்கீல்களும் அடக்கம். இப்ப அம்பலமாகியிருக்கும் புது சொத்து விவரங்களை சுப்ரீம்கோர்ட்டில் கர்நாடக தரப்பும், தி.மு.க தரப்பும் கொண்டுபோனால் என்ன செய்வதுன்னு வக்கீல்களோடு ஆலோசனை நடந்திருக்குது.
1991-96 பீரியடு சம்பந்தமான கேஸில் புது சொத்து விவரங்கள் வராமல் பார்த்துக்கலாம்னும், ஆனாலும் இந்த மாதிரி சொத்து விவரங்கள் இனி வரவிடாமல் கவனமா இருக்கணும்னும் ஆலோசிக்கப்பட்டிருக்குது. "புது சொத்து விவரங்கள் எப்படி லீக் ஆனதுன்னும் கார்டனில் ஆலோசிக்கப் பட்டிருக்குமே?'' அது பெரிய சர்ச்சையா வெடிச்சிருக்குது. கொடநாட்டில் இருந்தப்பவே, யார் அந்த கறுப்பு ஆடுன்னு கோபக்குரல் வெளிப்பட்டதைப் பற்றி நாம பேசியிருக்கோம். மந்திரிகள் ஓ.பி.எஸ்., வைத்திலிங்கம் மூலமாத்தான் இது கசிஞ்சிருக் கணும்னு சசிகலா குடும்பத்தினரில் ஒரு தரப்பு சொல்ல, அதை சசிகலாவும் ஜெ. காதுக்கு கொண்டு போயிருக்காரு.
அதே நேரத்தில் இன்னும் பலர் மேலேயும் சந்தேகம் இருக்குதாம். ஜெ.வோட நம்பிக்கைக்குரியவரா இருக்கிறவர் டாக்டர் சிவகுமார்.
சசிகலாவோட அண்ணன் சுந்தரவதனத்தோட மருமகனான இவர்தான் பெரும்பாலான புது கம்பெனிகளில் இளவரசியின் மருமகன் கார்த்திகேயனோடு சேர்ந்து டைரக்டரா இருக்காரு. ஆனாலும் டாக்டர் சிவகுமார் மேலேயும் சசிகலா குடும்பத்தார் தரப்பிலேயே டவுட் கிளம்புதாம்.

'' ""அவரே பல கம்பெனிகளில் டைரக்டரா இருக்கிறப்ப அதை லீக் பண்ணி மாட்டிக்குவாரா, லாஜிக் இடிக்குதேப்பா?'' ""நானும் இதைத்தான் கார்டன் வட்டாரத்தில் கேட்டேங்க தலைவரே.. .. சசிகலா குடும்பத்தில் வெளியிலிருந்து மாப்பிள்ளையா வந்தவராம் இந்த சிவகுமார். அதனால ரத்த சொந்தபந்தங்களான சசிகலா தம்பி திவாகரன், இளவரசி மகன் விவேக், இளவரசி சம்பந்தி கலியபெருமாள் இவங்களுக் கெல்லாம் சிவகுமாரோட திடீர் செல்வாக்கு உறுத்திக்கிட்டே இருந்திருக்குது.

ஜெ.வின் நம்பிக் கைக்குரிய டாக்டராகவும் சிவகுமார் இருப்பதால் மன்னார்குடி வட்டாரம் கொஞ்சம் அதிர்ந்துதான் போயிருக்குது. கார்டனுக்குள் என்ட்ரி ஆகாமல் எல்லாவற்றையும் கவனிக்கும் நடராஜனும் சிவகுமாரோட செல்வாக்கை விரும்பலையாம். இதையெல்லாம் அறிந்த சிவகுமாரும் தனக்கு எதிரா காய் நகர்த்தப்படுவதை புரிஞ்சி வச்சிருக் காரு.
கம்பெனி விவரங்கள் லீக்கானால், நம்பிக்கைக்குரியவரான தன் மேலே சந்தேகம் வராதுன்னும் சசிகலா- இளவரசி குடும்பத்தார் மேலே டவுட் வந்தால் அவங்களோட செல்வாக்கு கார்டனில் குறையும்னும் கணக்குப் போட்டுதான் இப்படி செயல்பட்டி ருக்காருன்னு மன்னார்குடி தரப்பு நினைப்பதா சொல்றாங்க. கார்டனில் தங்களோட கை ஓங்கணும்ங்கிறதுக்காக இன்னும் பலரும் படு கவனமா காய் நகர்த்திக்கிட்டிருக்காங்க.''
""புது கேரக்டர்களா?'' ""அறிமுகமான ஆட்கள்தான். மறுபடியும் கட்சிக்குள்ளே முக்கியத் துவம் பெற நினைக்கிறாரு சசிகலாவின் அக்கா மகன் டி.டி.வி.தினகரன். சசி தரப்புக்கு ப்ரேக் போடணும்னு இளவரசி தரப்பில் தினகரனோட மச்சானான டாக்டர் வெங்கடேஷுக்கு கொம்பு சீவி விடுறாங்களாம். இது ரத்த பந்தத்துக்குள்ளேயே நடக்கிற போட்டி. ஏற்கனவே அ.தி.மு.கவின் இளை ஞர்-இளம்பெண்கள் பாசறைக்குப் பொறுப்பு வகித்தவரான வெங்கடேஷ், நான் மறுபடியும் கட்சியில் அதிகார மையத்துக்கு... nakkheeran.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக