வெள்ளி, 20 நவம்பர், 2015

கோவையில் மொபெட்டில் சென்ற பெண் வழிப்பறி கொலை...

கோவையில், இரு சக்கர வாகனத்தில் மகனை அழைத்துச் சென்ற பெண்ணின் கழுத்திலிருந்த, 'கவரிங் செயினை' கொள்ளையர் பறித்து, கீழே தள்ளிவிட்டனர். இதில், அப்பெண் தலையில் பலத்தகாயமடைந்து உயிரிழந்தார். பலராலும் சர்வ சாதாரணமாக கருதப்படும் செயின்பறிப்பு குற்றம், அப்பாவி பெண்ணின் உயிரையே குடிக்கும் அளவுக்கு, தனது கொடூர முகத்தை காட்டியிருக்கிறது.
கோவை நகரிலுள்ள காந்திபார்க், சுக்கிரவார்பேட்டை, மூன்று கம்பம் பகுதியைச் சேர்ந்தவர் ஜோகப்பன், ௫௧. கரும்பு இனப்பெருக்க மைய கூலித்தொழிலாளி. இவரது மனைவி மீனாட்சி, ௩௮; ஆவின் பால் முகவர். இவர்களது மகன் ராகுல், ௧௫, தனியார் பள்ளியில், ஒன்பதாம் வகுப்பு படிக்கிறார். இவர் கடந்த இரண்டு நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு தனது மகனை, மொபட்டில், வீரகேரளத்திலுள்ள டாக்டரிடம் மீனாட்சி அழைத்துச் சென்றார். டாக்டரை சந்தித்துவிட்டு, தொண்டாமுத்துார் மெயின் ரோடு வழியாக இரவு, ௯.௩௫ மணியளவில் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். மகன், பின்னால் அமர்ந்திருந்தான். .. இப்படி செய்யலாம்னு போடா போடி படத்துல ஐடியா கொடுத்தாரு சிம்பு ...சந்தானம் கூட..

தமிழ்நாடு அரசு நன்செய் பண்ணை அருகே மொபட் சென்றபோது, திடீரென பைக்கில் வந்த இரு ஆசாமிகள், மீனாட்சி கழுத்தில் இருந்த செயினை பிடித்து இழுத்தனர்; தலைமுடியும் அதனுடன் சிக்கிக்கொண்டது. நிலைதடுமாறிய மீனாட்சியும், பின்னால் அமர்ந்திருந்த மகனும் கீழே விழுந்தனர். செயினை பறித்த ஆசாமிகள் மின்னல் வேகத்தில் தப்பினர்.
பின்தலையில் பலத்த அடிபட்டு மீனாட்சி உயிருக்கு போராடினார்; லேசான காயத்துடன் உயிர்தப்பிய மகன், தாயின் காதில் இருந்து ரத்தம் வழிவதை கண்டு கதறினார். இருவரையும் மீட்ட அப்பகுதி மக்கள், ஆட்டோவில் ஏற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கிருந்து பீளமேட்டிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு உறவினர்கள் அழைத்து சென்றனர். அங்கிருந்த டாக்டர்கள், மீனாட்சியின் நிலை மோசமாக இருப்பதை கண்டு, மீண்டும் அரசு மருத்துவமனைக்கே கொண்டு செல்லுமாறு கூறிவிட்டனர். அதன்படியே அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டவர், நேற்று காலை ௧௧:௦௦ மணியளவில் பரிதாபமாக உயிரிழந்தார்.
அரசு மருத்துவமனையில் திரண்ட அவரது உறவினர்கள், கையில் காயத்துக்கு மருந்து போட்ட நிலையில் சோகமே உருவாக நின்றிருந்த மகன் ராகுலை கட்டியணைத்து கதறியது, மற்றவர்களின் கண்களையும் குளமாக்கியது.வழிப்பறி சம்பவம் நடந்த இடத்தை, மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ், துணை போலீஸ் கமிஷனர் நிஷா பார்த்திபன் பார்வையிட்டனர். செயின் பறிப்பு குற்றத்துக்குரிய சட்டப்பிரிவில் வழக்கு பதிவு செய்திருந்த செல்வபுரம் போலீசார், நேற்று காலை, அந்த வழக்கை கொலை வழக்காக மாற்றினர். வழிப்பறி
குற்றத்தில் ஈடுபட்டு உயிரை பறித்த நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

தாயை இழந்து கண்ணீர்தாயை பறிகொடுத்து தவிக்கும் மகன் ராகுல் கூறியதாவது:அம்மா வண்டி ஓட்ட, நான் பின்னால் அமர்ந்திருந்தேன். பேசிகிட்டே போனோம். திடீரென ரெண்டு பேரு, பைக்கில
பயங்கர வேகமா வந்தாங்க. அவங்க கருப்பு கலர் சட்டை போட்டிருந்தாங்க. ஒருத்தன், அம்மா கழுத்துல இருந்த செயின பிடிச்சு இழுத்தான். நாங்க வண்டியோட கீழே சரிஞ்சுட்டோம்.அப்புறமா பார்த்தேன். அம்மா தலையில அடிபட்டு ரத்தமா வந்துச்சு; கொஞ்சம் பேரு வேடிக்கை பார்த்தாங்க. அப்புறமா சிலர் வந்து உதவி செஞ்சாங்க. எங்கம்மாதான், எனக்கு எல்லாமாக இருந்தாங்க. படிக்கிறதுக்கு எல்லாம் அவங்கதான் உதவி செஞ்சாங்க. இனிமே, நா என்ன பண்றது. அப்பாவ நினைச்சா எனக்கு அழுகையா வருது.
இவ்வாறு, ராகுல் கூறினார்.

'தெருவிளக்கு கிடையாது'
மீனாட்சியை மருத்துவமனையில் சேர்க்க உதவிய, ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்த தாஸ், ௩௪, கூறுகையில்,'' வழிப்பறி சம்பவம் நடந்த இடத்தில் இருந்து 3 கி.மீ., துாரம் வரை தெரு விளக்குகள் கிடையாது. திட்டம் போட்டு தான் மர்ம நபர்கள் செயின் பறிப்பில் ஈடுபட்டுள்ளனர். எல்லோராலும் சாதாரண குற்றமாக கருதப்படும் நகை பறிப்பு குற்றம், அப்பாவி பெண் ஒருவரின் உயிரை குடித்து, அந்த குடும்பத்தை நட்டாற்றில் தள்ளிவிட்டது,'' என்றார். மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜிடம் கேட்டபோது, ''மர்ம நபர்களை பிடிக்க நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. பழைய குற்றவாளிகள் குறித்து விசாரிக்கிறோம். குற்றவாளிகள் விரைவில் பிடிக்கப்படுவார்கள்,'' என்றார்.
'கவரிங்' நகை கொலை செய்யப்பட்ட மீனாட்சி அணிந்திருந்தது 'கவரிங்' நகை. இதையறியாத மர்ம நபர்கள், செயினை பறித்து அந்த பெண்ணின் உயிரை பறித்து விட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக