எண்ணற்ற ஏன் இணையற்ற நாதஸ்வரக் கலைஞர்கள் இருக்கிறார்களே. தெரிந்த வரை
அதில் ஒரு பிராமணரைக் கூடக் காணோமே? அடுத்து தவில் காரர்களைப் பற்றி
இன்னும் சொல்லவே வேண்டாம். பிராமணர்கள் இல்லை என்று சத்தியமே செய்யலாம்.
இதைப் போலவே மற்றொரு கேள்வி : இதில் மதுரை சோமு எந்த வகை? அவருக்காக யார்
புண்ணியம் செய்திருக்கிறார்கள், போன பிறவியில்? ஷேக் சின்னமெளலானா
சாகிப்பிற்கு இங்கு என்ன வேலை? அவர் முஸ்லிம் வேறு அல்லவா? நாதசுவரத்தை
அவ்வளவு மென்மையாக வாசிக்க அவருக்கு யார் வரமளித்தது?
கர்நாடக சங்கீதம் கடவுளைத் தவிர்த்து மற்ற ”தீம்களை” ஆராய்வதே இல்லைதான். ஹிந்துஸ்தானி இசையில் இயற்கையைப் பாடுவார்கள். காதலும் இருக்கும். கர்நாடக சங்கீதத்தின் கதையே வேறு. இதனால் இந்த சங்கீதமே சாமி வழிபாடோ என்று எண்ணி விடத் தோன்றுகிறது.