ஆரியப் பார்ப்பனர்கள், மாட்டுக்கறி, உணவை தவிர்த்ததே, புத்தரின் கொள்கை மார்க்கம் பரவி செல்வாக்கு பெற்ற நிலையில், அதனிடமிருந்து காப்பியடித்து பல தத்துவங்கள், கொள்கைகள், நடைமுறைகள் - இவைகளை ஏதோ முதன் முதலில் தாங்கள் தான் கண்டுபிடித்ததாகவோ, அல்லது நேரே கடவுள் இவர்களுக்கு வந்து கொடுத்து விட்டுச் சென்றது போலவோ எழுதி வைத்து அதையே பிரச்சாரத்தின் மூலம் நிலை நிறுத்தி வருகின்றனர்!
அதுபோலவே புத்தர் தன் சீடர்களுக்கு கருத்துரை வழங்க, மடம் என்ற அமைப்பினை
உருவாக்கியதை, பிற்காலத்தில் அதிலிருந்து காப்பிய டித்தே! ஆதி சங்கராச்சாரி
நான்கு திசைகளிலும் நான்கு மடங்களை நிறுவி, சனாதனமதமாகி, வேதமதமாகிய
பிராமண - பார்ப்பன மதத்தினை உரு வாக்கினார்! பவுத்தம், பார்ப்பனீய
ஜாதிமுறை, பெண்ணடிமைத்தனம், சமஸ்கிருத மொழி ஆதிக்கம், அறிவைப் புறந்தள்ளி
நம்பிக்கையை ஆணியடித்த ஆரியத்தைக் கண்டித்து ஒரு அறிவுப் பிரச்சாரம்,
கடவுள், ஆத்மா மறுப்பு இவைகளையெல்லாம் செய்து, மக்கள் மத்தியில் புத்தம்
தனி செல்வாக்குப் பெற்றது!
வேதம் அறிவு என்பதை உயர் ஜாதிப் பார்ப்பனர் மட்டும் அறிந்து கொள்ள உரிமை பெற்றிருந்த நிலையில்,
அறிவு எல்லோருக்கும் பொது என்று தந்தை பெரியார் இயக்கம் 20ஆம் நூற்றாண்டில்
செய்ததுபோல, அந்தக் காலத்தில் (கி.மு.) 2600 ஆண்டு களுக்கு முன்னர்
புத்தர் அறிவியக்கப் பிரச்சாரம் மூலம் மக்களின் உள் ளத்தைக் கவர்ந்ததால்,
அதிலிருந்து பலவற்றை ஆரியப் பார்ப்பன வேத மதம் காப்பியடித்து தன்னுள்
வைத்து, தானே உண்டாக்கியது போல காட்டிக் கொண்டது.
மாட்டிறைச்சியைத்தான் யாகம் மற்றும் விருந்துகளுக்குப் பயன்படுத்திய
ஆரியர்கள் அதை விட்டு விட்டு காய் கறி சாப்பிடுபவர்களாக (சைவமாக?) மாறியது
பிற்காலத்தில் தான் என்பதைThe Dynamic Brahmin என்ற நூலில் (பம்பாய்)
திருநாயர் குறிப்பிட்டுள்ளார்!
பள்ளிகள், மடங்கள் என்பது புத்தரி டமிருந்து கையகப்படுத்திய தத்துவ நடைமுறை நிறுவனங்கள் என்பதை,
பவுத்தமும் தமிழும் என்ற நூலில் ஆராய்ச்சியாளரான மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள் குறிப்பிடுவது ஈண்டு நினைவு கூரத்தக்கது.
இதுபோல, அடுக்கடுக்காக பல கூறலாம். ஆய்வாளர்கள் இதில் நுழைந்து புதிய
கோணங்களில் பல புது கருத்துக்களை தர வேண்டுமென விரும்புகிறோம். அரைத்த
மாவையே அரைப்பதால் யாருக்கு என்ன லாபம்?
மேலை நாட்டவர்களையும், மற்றும் பலரையும் வெகுவாகக் கவர்ந்துள்ள இந்த யோகா
என்ற யோகக் கலை, வேத கால, ஆரிய நாகரிகத்திற்கு முந் தைய மொகஞ்சதாரோ ஹரப்பா,
நாகரிகத்திலேயே அந்த மக்களால் (திரா விடர்களால்) கடைப்பிடிக்கப்பட்ட
ஒன்றாகும்! பிற்காலத்தில் இதற்கு ஒரு வகை உருவம் தந்து, பதிவு செய்ய
(Documentation) பதஞ்சலி போன்றவர்கள் வந்திருக்கலாம். இது பற்றி சீரிய
தமிழ் அறிஞர்கள் நல்ல வண்ணம் ஆய்வு செய்ய முன் வர வேண்டும்.
யோகா என்ற தலைப்பில், இங்கிலாந்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேல் சொல்லிக்
கொடுக்கும் பேரா சிரியை மேரி ஸ்டூவர்ட் (Mary Stuwart) என்பவர் எழுதிய
ஆங்கில நூல் ஒன்றினை அண்மையில் படித்த போது, அதில் அந்த அம்மையார் யோகாவைப்
பற்றி ஒரு புதுக் கருத்தினைக் கூறி யுள்ளார்!
“Yoge is as old as Civilisation, its first traces were fond in the
pre-historic ruins of Indus valley is what is now Pakistan. Here carved
seals were discovered some of which showed a figure seated in Yoge
position which is still practised today. The script used by these indus
valley people has not yet been decipheed. But from their well - planned
cities and buildings we know that theirs was an advanced culture and
predating the migration of Aryans into India from the north.”
The earliest written references to Yoge are in the vedas (2500-600 BC)
தமிழாக்கம்: யோகா
எனும் முறை, நாகரிகம் எவ்வளவு பழைமையானதோ அவ்வளவு பழைமையானது. இப்பொழுது
பாகிஸ்தான் எனப்படும் நாட்டில் உள்ள சிந்துச் சமவெளியில், வரலாற்றுக்கு
முந்திய இடிபாடுகள் (புதை பொருள்கள்) இருக்கின்றன. அவற்றிடையே யோகாவைப்
பற்றிய முதல் அடையாளங்கள் காணப்பட்டன. உருவங்கள் பதியப் பெற்ற முத்திரைகள்
இங்கே கண்டெடுக்கப்பட்டன. இன் னும் வழக்காற்றில் உள்ள, யோகா நிலையில்
அமர்ந்திருப்பது போன்ற ஓர் உருவத்தை அந்த முத்திரைகள் சில காட்டுகின்றன.
சிந்துச் சமவெளி மக்கள் பயன்படுத்திய எழுத்துக்களை இன்னும் படிக்க
இயலவில்லை. ஆனால், அங் குள்ள, நன்கு திட்டமிட்டுக் கட்டப் பட்டுள்ள
நகரங்களும், கட்டடங்களும், சிந்துச் சமவெளி நாகரிகத்தவர்கள் முன்னேறிய
பண்பாட்டிற்கு உரிய வர்கள் எனக் காட்டுகின்றன. வடக்கில் இருந்து
இந்தியாவில் ஆரியர்கள் குடி யேறுவதற்கு முன்பே அந்த நாகரிகம் இருந்தது.
வேதங்களில் (கி.மு. 2500-_600) யோகாவைப் பற்றிய மிக முந்தியதாக எழுதப்
பெற்ற தகவல்கள் கிடைக்கப் பெறுகின்றன.
சாங்கியம் என்பது மதமல்ல. கடவுளை மறுப்பது; அதுபற்றி புரட்சிக் கவிஞர்
பாரதிதாசன் மிகவும் ஆய்வுக் கண்ணோட்டத்தில் கூறியுள்ளார்! பவுத்தத்திற்கு
முன்னோடியானது கபிலான் சாங்கிய தத்துவம் ஆகும்.
எண்ணூல் என்ற சாங்கியத்தை முதன் முதலில் அறிந்தவர்கள் தமி ழர்கள் என்கிறார்
புரட்சிக் கவிஞர் (குயில் 16.6.1959) இந்திய மெய்ப்பொருள் வரலாற்றில்
சாங்கியம் தொன்மையானது.
சாங்கியக் கருத்துக்கள் இயற்கை யோடு இயைந்தவை; பகுத்தறிவுக்கு ஒத்தவை
(புரட்சிக் கவிஞர் - குயில் 1.12.1959)
உலகம் எவ்வாறு உருவாகிறது? உயிர்களின் இயல்பு என்ன? இன்ப,
துன்பங்களினின்றும் விடுதலை பெறுவது எப்படி? என்பன போன்ற மறைபொருள்
விளக்கங்களுக்குப் பகுத்தறிவினைப் பயன்படுத்தி முதன் முதலாக உலக
வரலாற்றிலேயே விரி வான விளக்கத் தத்துவம் சாங்கியம் ஆகும். சாங்கிய
தத்துவம் இறை மறுப்பு (கடவுள் மறுப்பு) கொள்கையைக் கொண்டது. உலகம் கடவுளால்
படைக் கப்பட்டது என்பதை சாங்கியத் தத் துவம் மறுப்பது இங்கு சுட்டிக்
காட்டத் தக்கது.
இது ஒரு கடவுள், மதச் சார்பற்ற, பகுத்தறிவு நெறியை ஒட்டி மிக நீண்ட காலம்
முன்பே உருவாக்கப்பட்டு வளர்ந்தோங்கிய தத்துவம். இதனை ஒருவர்இருவர்
உருவாக்கியிருக்க முடியாது. இதனை முதலில் கபிலர் (Kapila) உருவாக்கி, பிறகு
பலரும் இதனை பிரச்சாரம் செய்தனர்.
இந்தப் பெயர் பெருமைக்கும் பின்பற்றுதலுக்கும் உரியதாகையால், ஒரு கபிலர்
அல்ல; பல கபிலர்கள், ஒரு இடத்தில் பிறந்தவர்கள் அல்ல; பற்பல பகுதிகளில்
பற்பல கால கட்டங்களில் பிறந்தவர்களாக அவர்கள் இருந்திருக்க வேண்டும்.
கபிலர் அகவல் பாட்டு எழுதிய கபிலரும் திருவாரூர்க் கபிலர் தமிழில் எழுதிய
எண்ணூலைத்தான் பிறகு வடமொழியாளர் சாங்கியம் என்றும் மொழி பெயர்த்துக்
கொண்டனர் என்றும் புரட்சிக் கவிஞர் கருதுகிறார்!
சாங்கியம் என்னும் சமசுகிருதச் சொல்லுக்குத் தேர்ந்து தெரிதல்; எண் கணிதம்,
பகுத்தாய்வு, ஆய்ந்து கண்ட முடிவு என்று அறிஞர்கள் பல் பொருள் உரைப்பர்
(பாரதிதாசன் - _ திருக்குறளின் உரை டாக்டர் ச.சு. இளங்கோ).
சாங்கியத் தத்துவத்தின் அடிப்படைக் கூறுகள் இரண்டு.
1. புருடன் --(Purusa) உயிர்.
2. பிரகிருதி - மூலப் பகுதி.
முற்றிலும் மாறான பொருள்களின் சேர்க்கை.
இந்த சாங்கியத் தத்துவத்தின் கீழும் யோகா என்ற உடற்பயிற்சி முன்பு
அக்காலத்திலேயே (இது புத்தர் காலத்திற்கும் முந்தையது, முன்னோடித் தத்துவம்
என்பது நினைவில் நிறுத்தப் படல் வேண்டும்) கபிலரின் சாங்கியத் தத்துவம்
முழுவதும் பகுத்தறிவு நெறியை அடிப்படையாகக் கொண்டது. ஆனபடியால், இதில்
கடவுளுக்கோ, மதத்திற்கோ வேலையில்லை. ஆனால் பிறகு ஆரியக் கலாச்சார
அடிப்படையை வேதம், உபநிஷத் போன்றவைகளின் அடிப்படையில் இதை சமயக் கணக்கர்
மதிவழியே ஆக்கினர்.
பதஞ்சலி என்பவரின் ஆரிய வேத மதக் கருத்துக்கள் இந்த உடற்பயிற்சி
போன்றவைகளில் உள்ளே புகுந்தன. அன்றாட வாழ்க்கைகள், மதச் சிந்தனை களை,
கடவுள் கருத்துக்களை, புகுத்திட ஒரு கருவியாக அவர்களுக்குப் பயன்
பட்டிருக்க வேண்டும்!
டில்லியில் 1872-ல் பிறந்து, இங்கிலாந் தில் பி.ஏ., எல்.எல்.எம். (L.L.M.)
L.L.D. என்ற பட்டங்களை கேம்பிரிட்ஜ் பல் கலைக் கழகத்தில் பெற்றும் பிறகு
டில்லி பல்கலைக் கழகத்தால் D.L.I.T.T.பட்டம் அளிக்கப்பட்டவரும் மிகச்
சிறந்த சிந் தனையாளரும், (1918_22இல்) நாகபுரியின் மேயராகவும், டில்லி,
நாகபுரி பல்கலைக் கழகங்களில் துணைவேந்தராகவும் இருந்த டாக்டர் சர். ஹரிசிங்
கவுர் அவர்கள் 1929-இல் எழுதிய The Spirit of Buddhism என்ற நூலில்
யோகாவை புத்தர் அணுகிய விதமும் பதஞ்சலி பயன்படுத்தியது பற்றியும்
கீழ்க்காணும் முறையில் குறிப்பிடுகிறது.
..For both the Sankhya and the Vedanta appear to have agreed on the
practice of Yoge, as enlarging the vision beyond the material horizon.
The practice of Yoge or intense meditation was itself the survival of
the Vedic tapas, which was a form of asceticism combined with penance.
It is not clear whether kapila himself recognized Yoge as the gate -way
to higher knowledge, but it was the theme of the grammarian Patanjali,
who expounded it in his Yoge Shastra, written about 200 B.C....
..Patanjali had to introduce in his system the doctrine of a personal
God, Though he clearly saw its irreconcilable nature, and therefore,
relegated his sutras dealing with God to a place unconnected with his
treatise.
..That Buddha was a firm believer in the efficacy of Yoge is clear from the tenor of his earlier life.
...But Buddha believed in Yoge as a mental telescope; he did not believe
in its efficacy beyond chastening the mind by freeing it from material
distractions. It was the pre-Buddhistic view. But in later time
Patanjali gave Yoge a special significance and it was maintained to be
the chief means of salvation”
In his treatise Patanjali still adhered to the orthodox Sankhya doctrine
- that the final aim of man was the absolute isolation of the soul
from matter, and not as in the Vedantic doctrine - the union with,
absorption with, God Nor are the individual souls here derived from the
“Special Soul or God, but are like the latter - without a beginning”
“Sanskrit Literature” - Page 392, by Macdonnell.
“Sanskrit Literature” - Page 392, by Macdonnell.
தமிழாக்கம்: யோக
முறையைப் பின்பற்றுவதன் மூலம் ஒருவரின் நோக்கு அல்லது பார்வை பொருள்
எல்லையைக் கடந்து விரிவடைகிறது எனச் சாங்கியம், வேதாந்தம் ஆகிய இரண்டும்
கருதின. வேதியத்தவம் (தபஸ்), சுகத்தை மறுத்துத் தன்னை வருத்திக் கொள்வது
ஆகும்; அதாவது ஊனை உருக்கி, உள் ஒளி பெருக்குதல்; அதன் மீட்சியே யோகம்
எனும் தீவிர ஆழ்நிலைச் சிந்தனை.
உயர்ந்த ஞானத்தைப் பெறுவதற்கான ஒரு வழி என்ற வகையில் யோக முறையைக் கபிலர்
கருதினாரா என்ப தைத் தெளிவாகச் சொல்ல முடிய வில்லை. ஆனால், இலக்கண ஆசிரியர்
பதஞ்சலி யோக முறையால் உயர்ந்த ஞானத்தைப் பெறலாம் என, கி.மு. 200-இல் தாம்
யாத்த யோக சாஸ்திரத்தில் எழுதினார்.
தனியாள் சார்ந்த கடவுள் (Personal God) எனும் கொள்கையைப் பதஞ்சலி, தமது
முறையில் சேர்க்க வேண்டியவர் ஆனார். அவ்வாறு கடவுள் கொள் கையைப்
புகுத்துவதால் முரண்பாடு ஏற்படுவதைக் கண்டார்; அதனால், கடவுளைப் பற்றிய
தமது சூத்திரங்களை, கோட்பாட்டைப் பற்றிய பகுதியுடன் சேர்க்காமல், அதனுடன்
தொடர்பற்ற ஒரு தனித்த இடத்திற்கு ஒதுக்கி விட்டார்.
யோக முறைக்கு ஆற்றல் உண்டு, அதைக் கொண்டு, விரும்பும் விளைவை ஏற்படுத்தலாம் எனப் புத்தர் உறுதியாக நம்பினார் என்பதை அவருடைய தொடக்க கால வாழ்வுப் போக்குத் தெளிவாக காட்டுகிறது.
மனதைத் தொலைநோக்கு உடைய தாக ஆக்கவல்லது யோகம் எனப் புத்தர் நம்பினார். பொருள் வயப்பட்ட புற ஈர்ப்புகளுக்கு உட்படாமல், மனதை விடுவித்து அதைத் தூய்மையாக வைத்துக் கொள்வதற்கு யோகம் பயன்படுகிறது; அதற்கு மேல் அதற்குத் தனி ஓர் ஆற்றல் இல்லை. இந்தக் கருத்து, புத்தர் காலத்திற்கு முன்பு இருந்த ஒன்று. ஆனால், பதஞ்சலி, யோக முறைக்கு ஒரு தனித்த முக்கியத்துவம் அளித்தார்; வீடு பேறு அல்லது மோட் சம் என்பதை அடைவதற்கு அஃது ஒரு முக்கிய வழிமுறை எனக் கண்டார். பக்கம் 78 “The Spirit of Buddhism”
தமது கோட்பாடுகள்பற்றிய நூலில், பதஞ்சலி பழைமையான சாங்கியக் கொள்கைகளையே
பற்றியிருந்தார். பொருளிலிருந்து ஆன்மா முற்றிலும் தனித்துப் பிரிய
வேண்டும் என்பதே அக்கொள்கை. வேதாந்தக் கொள்கை வேறானது -_ அதன்படி,
கடவுளுடன் ஆன்மா ஒன்றுதல் இறுதி இலக்கு ஆகும். பேரான்மா அல்லது கடவுளிட
மிருந்து தனி ஆன்மாக்கள் பெறப்படு கின்றன என்பது வேதாந்தம். ஆனால்,
பேரான்மாவை அல்லது கடவுளைப் போன்று தனி ஆன்மாக்களும் தோற்றம் (தொடக்கம்)
அற்றவை என்பது சாங்கியக் கொள்கை.
பக்கம் 392 “Sanskrit Literature’
- by Macdonnell
- by Macdonnell
உண்மை மே 1-15 2002
இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
- செத்தமொழி சமஸ்கிருதத்திற்கு மோடி அரசு தரும் முக்கியத்துவத்தை பாரீர்
- தமிழும்,தமிழர் முன்னேற்றமும்
- நெருக்கடி நிலை பிரகடனமும், பாஜக., ஆர்.எஸ்.எஸ். தகிடுதத்தமும்
- பாஜக ஆட்சிக்கு எதிராக 8 மாதங்களில் பதவி விலகிய 4 கல்வியாளர்கள்
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
- லலித் மோடி பற்றி நரேந்திர மோடிக்கு விடப்படும் எதிர்பார்க்க இயலாத கேள்வி
- எழுத்தாளர் பார்வையில்... இந்தியக் குடிசை - (குறுநாவல்)
- இவரை மறக்க முடியுமா?
- வட நாட்டு அரசியல் தளத்தைப் புரட்டிப் போட்ட சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் பிறந்த நாள் ஜூன் 25
- அடாலியில் இந்துமத வெறியர்கள் நடத்திய கலவரம்
Hey great stuff, thank you for sharing this useful information and i will let know my friends as well.Tamil News
பதிலளிநீக்குthank you very much for your good words
பதிலளிநீக்கு