ஞாயிறு, 28 ஜூன், 2015

டெல்லியிலுள்ள அனைத்து கிராமங்களுக்கும் இலவச இண்டர்நெட் வசதி

டெல்லியை சுற்றியுள்ள 300 கிராமங்கள் மற்றும் அங்குள்ள டெல்லி பல்கலைக்கழகம், கல்லூரிகளில் முதற்கட்டமாக இலவச வை-ஃபை இண்டர்நெட் வசதியை இந்த ஆண்டு இறுதிக்குள் வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்காக, ஆம் ஆத்மி அரசு ரூ.50 கோடியை ஒதுக்கியுள்ளது. எனினும், இந்த இலவச இண்டர்நெட் வசதியின் மூலம் பொழுதுபோக்கு இணையதளங்களை காண வரையறை நிர்ணயிக்கப்பட உள்ளது. ஆனால், அரசு வெப்சைட்டுகளை காண்பதற்கு எவ்வித நிபந்தனைகளும் கிடையாது. இதற்காக ஆங்காங்கே ஹாட்ஸ்பாட்டுகளை அமைக்க டெல்லி அரசுடன், ஐ.டி. துறை இணைந்து செயல்பட்டு வருகிறது.
இதை ஏற்கனவே பல வெளிநாடுகள் செய்து வருகின்றன. இந்த திட்டத்தை கொண்டு வருவதற்காக ஸடாக்ஹால்ம், பார்ஸிலோனா, சாங்காய், சிங்கப்பூர் ஆகிய வெளிநாட்டு நகரங்களில் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளது. இலவச இண்டர்நெட் சேவையை வழங்குவதற்காக டெல்லி முழுவதும் 50 ஆயிரம் முதல் 80 ஆயிரம் ஹாட்ஸ்பாட்டுகள் வரை அமைக்கப்பட உள்ளன. இந்த தகவலை டெல்லி துணை முதல் மந்திரி மனிஷ் சிசோடியா தெரிவித்தார்nakkheeran.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக