வியாழன், 2 ஜூலை, 2015

BSLN முறைகேடு ! தயாநிதி மாறனிடம் 2 வது நாளாக விசாரணை

துடில்லி: பி.எஸ்.என்.எல். முறைகேடு தொடர்பாக மாஜி மத்திய அமைச்சர் தயாநிதியிடம் 2 வது நாளாக சி.பி.ஐ., விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. தயாநிதியிடம் சி.பி.ஐ., அதிகாரிகள் 70க்கும் மேற்பட்ட கேள்விகளை கேட்டு துருவினர். ஆனால் தயாநிதி முறையாக பதில் எதுவும் அளிக்கவில்லை என சி.பி.ஐ., வட்டாரம் தெரிவிக்கிறது.சென்னையில் உள்ள சன் டி.வி., நிறுவனத்தில் பி.எஸ்.என்.எல்.-ன் 620 லைன்கள் முறைகேடாக பயன்படுத்தப்பட்டன. இதனால் பி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கு பெரும் நிதி இழப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்நிலையில் தயாநிதி ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என சி.பி.ஐ., சம்மன் அனுப்பியிருந்தது.
விசாரணையின் போது, தான் கைது செய்யப்படக்கூடும் எனவே முன் ஜாமின் வழங்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். கோர்ட் முன் ஜாமின் வழங்கியது. அதே நேரத்தில் சி.பி.ஐ.,விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லையெனில் சி.பி.ஐ., கோர்ட்டை அணுகலாம் என்றும் நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் தயாநிதி டில்லியில் சி.பி.ஐ., அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார். இவரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. இன்று 2 வது நாளாக தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. நாளையும் விசாரணை தொடரும் என தெரிகிறது. மேலும் விசாரணையின் அடிப்படையில் முன்ஜாமினை ரத்து செய்ய கோர்ட்டில் சி.பி.ஐ.,மனு தாக்கல் செய்யும் என டில்லி வட்டாரம் தெரிவிக்கிறது dinamalar.com

3 கருத்துகள்: