திங்கள், 29 ஜூன், 2015

நடிகர் விஷாலை மிரட்டும் ராதிகா? சரத்துக்கும் ராதாரவிக்கும் வக்காலத்து?

மல்லாக்க படுத்து கொண்டு எச்சில் துப்பினால் அது நம் மீதுதான் விழும் என்பதை இளைய தலைமுறை நடிகர்கள் புரிந்து கொள்ள வேண்டுமென நடிகை ராதிகா பங்கேற்ற சினிமா விழாவில் பேசினார். நடிகை ஜெயப்பிரதாவின் மகன் சித்து, ஹன்சிகா நடித்துள்ள ‘உயிரே உயிரே' படத்தின் பாடல் மற்றும் டிரெயிலர் வெளியீட்டு விழா, சென்னையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை ராதிகா பேசுகையில், "இங்கு வந்துள்ள எல்லோரும் பல ஆண்டுகளாக பழகியிருக்கிறோம். எங்களுக்குள் எப்போதும் எந்த விதமான பிரச்னையும் வந்ததில்லை. எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் சந்தோஷமாக பங்கேற்கிறோம் ஆனால் இன்றைய தலைமுறை நடிகர்களுக்கு மரியாதையோ, நட்பின் முக்கியத்துவமோ தெரிவதில்லை. மல்லாந்து படுத்துக் கொண்டு மேலே எச்சில் துப்பினால், அது நம் மீதுதான் விழும் என்பதை இன்றைய இளம் தலைமுறை நடிகர்கள் புரிந்துகொண்டு நடக்க வேண்டும். ராதாரவி சரத் கும்பலிடம் நடிகர் சங்கம் மாட்டிக்கிட்டு மீள முடியாமல் ..வரலக்ஷிமியின் அம்மா சாயாவிடம் இருந்து சரத்தை லவட்டிய ராதிகா பெருசா பேசுறாங்கோ!
நாம் நடிகர்கள், ஒரே குடும்பம் மாதிரி என்பதை மனதில் கொள்ளுங்கள்,'' என்றார். நடிகர் சங்க கட்டட விவகாரமும், நடிகர் சங்க தேர்தல பிரச்னையும் தீவிரமடைந்துள்ள நிலையில் நடிகை ராதிகா இதுபோல பொடி வைத்து பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் சங்க விவகாரம் தொடர்பாக தன் கணவர் சரத்குமார் மற்றும் சகோதரர் ராதாரவியுடன் மல்லுக் கட்டிக் கொண்டிருக்கும் விஷாலை மனதில் வைத்துத்தான் ராதிகா இப்படி பேசியிருக்கிறார் என்பதே கோடம்பாக்கத்தில் பேச்சாக இருக்கிறது

Read more tamil.filmibeat.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக