வியாழன், 2 ஜூலை, 2015

ரஜினியின் அசிங்கத்தை வெளிச்சம் போட்டு காட்டும் கலைஞானம் ! ரஜினியை ஹீரோவாக அறிமுகப்படுத்தியவர்

முதல்நாள் ரஜினி என்னிடம் 25 ஆயிரம் ரூபாய் சம்பளமும், ஆயிரம் ரூபாய் அட்வான்ஸும் கேட்டார். எப்படியோ உருட்டிப் புரட்டி ஆயிரம் ரூபாய் ரெடி செய்துவிட்டு போனபோது, திடீர்னு பேச்சு மாறி ஐம்பதாயிரம் சம்பளமும், ஐயாயிரம் அட்வான் ஸும் அவரின் நண்பர் நட்ராஜ் மூலம் கேட்டு விட்டாரே... என்ன செய்வதுனு தெரியாமல், மனைவியின் தாலியின் இரு பக்கமும் இருந்த இரண்டு தங்கக் குண்டுமணிகளை... விற்கக் கூடாததை விற்று ஐந்தாயிரம் கொடுத்தவனைப் பார்த்து இப்படி ஒரு சொல் சொல்லலாமா?'’என வேதனைப்பட்டேன்
(151) ரசிகர்களுக்காக...!
சென்னை பச்சையப்பன் கல்லூரி எதிர்ப்புறத்தில் "சந்திரமுகி'’படப்பிடிப்பு ஸ்பாட்டுக் குப் போனேன். கேமரா முன் ஒத்திகையில் ஈடுபட்டிருந்த ரஜினி, என்னைப் பார்த்ததும் பெட்ரோல் தீப்பற்றி பறந்து வருவதுபோல என்னை நோக்கி விரைந்து வந்தார்.கண்களில் கனல் கக்க மிகுந்த கோபத் துடன் பார்த்தபடி... “""கலைஞானம் சார்... நீங்க என்னை ஹீரோவாப் போட்டு, என் வாழ்க்கை யைப் பாழாக்கிட்டீங்க''’என்றார்.எனக்கு அதிர்ச்சியாக இருந்தாலும் சமாளித்துக்கொண்டு... ""உங்களால் பலரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். அதில் நீங்கள் பங்கெடுத்துக்கொள்ளுங்கள்''’என்றேன்.மறுபக்கமாக திரும்பியவாறு சினத்தில் மூழ்கியிருந்தார் ரஜினி. நான் அவரையே பார்த்துக்கொண்டிருந்தேன். அதற்குள் "ஷாட் ரெடி'’என்கிற அறிகுறியுடன் உதவி இயக்குநர் வந்து நிற்க... ரஜினி விரைந்து சென்று நடிக்க ஆரம்பித்துவிட்டார்.


எனக்கு ஒரே குழப்பம். "ஏன் இப்படிச் சொன்னார் ரஜினி? கோடி கோடியா சொத்து குவிஞ்சு கிடக்குது. உலகெங்கும் இவரின் புகழ் பரவிக்கிடக்கு. இப்படி இருக்கும்போது "என் வாழ்க்கையைப் பாழாக்கிட்டீங்களே'னு சொல் லீட்டாரே... நாம இவரைப்பத்தி எங்கேயாவது தவறா பேசிட்டோமா? இவரின் புகழ் பாடுவதைத் தவிர வேறேதும் பேசியது இல்லையே? இன்னைக்கு அவரோட வீட்டில் ஏதேனும் தாங்க முடியாத பிரச் சினை ஏற்பட்டுவிட்டதோ? இருக்கட்டும்... என்னதான் பிரச்சினையாக இருந்தாலும், அரும்பாடுபட்டு வளர்த்த தாயைப் பார்த்து "ஏண்டி என்னை வளர்த்துவிட்ட... பொறுக்கி நாயே'’என்று சொல்ல முடியுமா? அப்படித்தானே ரஜினி என்னிடம் பேசிவிட்டார்.

"பைரவி'’படம் மூலம் முதன்முதலா தயாரிப்பாளரா ஆகப்போவதையும், ரஜினியை ஹீரோவா அறிமுகப்படுத்தப் போவதையும் தேவர்கிட்ட சொன்னபோது... அன்னைக்கே தேவர்... "அடே ரஜினிகாந்த்தை வில்லனா போடு. ஹீரோவா போடதே'னு சொன்னாரே. தேவர் பேச்சை மீறி ரஜினியை ஹீரோவாக்கினதால் தேவர் ஃபைனான்ஸ் ஏற்பாடு செய்து தர மறுத் திட்டாரே. இப்போ ரஜினி வில்லன் மாதிரியே பேசிட்டாரே. "பைரவி'யில் நடிக்க, முதல்நாள் ரஜினி என்னிடம் 25 ஆயிரம் ரூபாய் சம்பளமும், ஆயிரம் ரூபாய் அட்வான்ஸும் கேட்டார். எப்படியோ உருட்டிப் புரட்டி ஆயிரம் ரூபாய் ரெடி செய்துவிட்டு போனபோது, திடீர்னு பேச்சு மாறி ஐம்பதாயிரம் சம்பளமும், ஐயாயிரம் அட்வான் ஸும் அவரின் நண்பர் நட்ராஜ் மூலம் கேட்டு விட்டாரே... என்ன செய்வதுனு தெரியாமல், மனைவியின் தாலியின் இரு பக்கமும் இருந்த இரண்டு தங்கக் குண்டுமணிகளை... விற்கக் கூடாததை விற்று ஐந்தாயிரம் கொடுத்தவனைப் பார்த்து இப்படி ஒரு சொல் சொல்லலாமா?'’என வேதனைப்பட்டேன். "இப்படி ஒரே நிமிஷத்தில் பழைய நினைவுகள் எல்லாம் வந்துவிட்டதே' என மனம் நொந்து, நிலைகுலைந்து போனேன்.



மதியம்...  ஷூட்டிங் முடிந்து புறப்பட்டார் ரஜினி. காரில் ஏறப்போகும் முன்பு, அவரின்  கண்கள் என்னைத் தேடிப் பிடித்தன.

""கலைஞானம் சார்''’என அழைத்தார்.

அருகில் சென்றேன்.

மலர்ந்த முகத்துடன் கேட்டார். ""நீங்க வீட்டுக்குப் போக கார் இருக்கிறதா?''’’

என்னிடம் கார் இல்லை. ஆனாலும் ""கார் இருக்கு''’என்றேன்.

""வரட்டுமா?''’என ஒரு சிறு புன்னகையுடன் புறப்பட்டுப் போனார் ரஜினி.

இவரைப் பற்றி என்ன சொல்வதென்றே புரியவில்லை.

"அன்னைக்கி "முத்து'’பட பூஜையின்போது பாலசந்தர் என்னை கேமராவின் சுவிட்ச்சை ஆன் பண்ணி படப்பிடிப்பை துவங்கி வைக்கச் சொன்னார். நான் மறுத்தபோது "உங்க கைதான் ராசியான கை. ரஜினியை நடிகராக அறிமுகப்படுத்திய என்னால் அவரை ஹீரோவா போட்டு படம் எடுக்கத் துணிச்சல் வரலை. ஆனா நீங்க துணிஞ்சு ஹீரோவா போட்டதால், அவரு சூப்பர் ஸ்டார் ஆனாரு. ஓய்வில்லாம நடிக்கிறாரு, சம்பா திக்கிறாரு, அவரால பலபேரும் சம்பாதிச்சு சந்தோஷமா இருக்காங்க. உங்களைவிட கைராசி வேணுமா?'னு பாலசந்தர்  என்னைப் பற்றி அப்படிச் சொன்னார். இன்னைக்கி இவரு... "என் வாழ்க்கையைப் பாழாக்கிட்டீங்க'னு சொல்றாரு.

"சரி... வசதி உள்ளவங்க வாய் எப்படி வேணும்னாலும் பேசும். இதுல ரஜினிகாந்த் மட்டும் விதிவிலக்கா என்ன? இப்போ நாம பிழைக்கிற பிழைப்பைத் தேடி பொடிநடையா போவோம்'’என என்னை சமாதானப்படுத்திக்கொண்டேன்.

இந்த நேரம்... திடீர் என என் புத்தியில் ஒரு உதயம்...

என்னதான் இருந்தாலும் ரஜினி என்னோட ஹீரோ. அவரு சீரும் சிறப்புமா இருந்தாத்தானே எனக்குப் பெருமை. நிறை, குறைகள் யார்கிட்டத்தான் இல்லை?

இருப்பினும் இதையெல்லாம் தாண்டி, ரஜினிக்கு சில உண்மைகளைச் சொல்ல ஆசைப்படுறேன்.
ரஜினி, தனக்கு வாழ்வளித்த தமிழகத்தை ஏனோதானோனு பாராமுகமாக இருப்பது, தமிழ் ரசிகப் பெருமக்களின் சந்திப்பைத் தவிர்ப்பது, ஏற்றி விட்டவர்களை ஏறிட்டுப் பார்க்கவே கூசுவது... இப்படிப்பட்ட குணம் கூடவே கூடாது என்பதே என் கவலை. ரஜினி ரசிகர் மன்றத்தினரின் வீட்டு கல்யாணம், காது குத்து, சடங்கு, கிரஹப்பிரவேசம்... இப்படி பல நிகழ்ச்சிகளுக்கு, பல ஊர்களுக்கு ரஜினி ரசிகர்கள் என்னை சிறப்பு விருந்தினராக அழைத்துச் சென்றுள்ளனர். ரஜினியை முதலில் ஹீரோவாக்கிய என்மீதே அவர் களுக்கு இவ்வளவு மரியாதை என்றால்... ரஜினி மீது எவ்வளவு மரியாதை வைத்திருப்பார்கள்.

"கல்யாணம் உள்ளிட்ட விசேஷங் களுக்கு பத்திரிகை அனுப்பி வைத் தால் பிரிண்ட் செய்யப்பட்ட ரெடிமேட் கார்டில் தலைவர் கையெழுத்துப் போட்டு அனுப்பினாலும் போதும். ஆனால் அதைக்கூட செய்வதில்லை' என என்னிடம் வருந்தியிருக்கிறார் கள். இது ஒருபக்கம் இருக்கட்டும்...

என்னுடைய இருபது வயதில் எனக்கொரு திருமணம் நடந்தது. கர்ப்பமான நிலையில் என் மனைவி இறந்துவிட்டார். அந்தக் குழந்தை ஒரு வேளை சாகாமல் இருந்திருந்தால்... இன்று அந்தப் பிள்ளைக்கு ரஜினி வயதிருக்கும். இப்போது எனக்கு 85 வயது நிறைவுறுகிறது. இதன்படி பார்த்தால் ரஜினி என் மகன் மாதிரி தானே. அவர் நன்றாக இருந்தால் போதும்.

நடிகர்களில் எம்.ஜி.ஆருக்கும், மற்றவர்களுக்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது. எம்.ஜி.ஆரைப் பார்க்க அவரின் ரசிகர்கள் ஒரேநாளில் ஆயிரம் பேர்கள் வந்தாலும், உடனே அவர்களுக்கு உணவு ஏற்பாடு செய்யும்படி ஆர்.எம்.வீரப்பனிடமும், பத்மநாபனிடமும் சொல்லிவிடுவார் எம்.ஜி.ஆர்.

ரசிகர்கள் சாப்பிட்டுக்கொண்டி ருக்கும்போது... கைகூப்பி வணங்கிய வாறு அந்த இடத்துக்கு வரும் எம்.ஜி.ஆர்., "என்னை வாழவைக்கும் தெய்வங்களே... வயிறார உணவு உண்ணுங்கள்'’என்பார்.

ரசிகர்கள் அன்பு மிகுதியால் உண்ணும் குரலோடு "எம்.ஜி.ஆர். வாழ்க'’என உரக்க வாழ்த்துவார்கள். இருபுறமும் ரசிகர்கள் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருக்க... நடுவில் நடந்துவரும் எம்.ஜி.ஆர்., யாரோ ஒரு ரசிகரின் இலையில் இருந்து சிறிது உணவை எடுத்துச் சாப்பிட்டு, ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை சேர்ப்பார். தமிழ்நாட்டில் இயற்கை கொடுமையால் மக்கள் பாதிக்கப் படும் போது உதவும் முதல் கரம் எம்.ஜி.ஆருடையதாகத்தான் இருக்கும்.

அவரைப்போலவே என்னுடைய சூப்பர்ஸ்டாரும் வாழவேண்டும் என்பது என் ஆசை. அதிலே உள்ள மன அமைதியும், வாழ்வின் சுகமும் வேறு எதிலும் கிடைக்கவே கிடைக் காது.

ரஜினியின் குணம்... கணப்பித் தம், கணச்சித்தம். "என் வழி தனி வழி'’என ரஜினி டயலாக் உண்டே. அதுபோல... "சித்தன் போக்கு... சிவன் போக்கு...' என்பது மாதிரி ரஜினியின் போக்கே ஒரு தனி போக்குதான். இவரை அனுசரித்து குடும்பம் நடத்திவரும் திருமதி லதா ரஜினியின் தியாக உள்ளத்தை என் வாழ்நாள் முழுமையும் வாழ்த்திக்கொண்டே இருப்பேன்.

நான் ரஜினியைப் பார்ப்பதற் காக அவரின் வீட்டுக்குச் செல்லும் போதெல்லாம் சொல்லி வைத்தாற் போல வெள்ளி டம்ளரில் காபி கொண்டுவந்து கொடுத்து, மகிழ்ச்சியை தவறாமல் தெரிவிப்பார் லதா.

சிவாஜிராவ்விற்கு "ரஜினி காந்த்'’என்ற பெயரை பாலசந்தர் சூட்டிய மார்ச் 11-ஆம் தேதியை ஆண்டுதோறும் கொண்டாடிவருவது லதாரஜினியின் வழக்கம். அப்படி அந்த விழா நாளில் தயாரிப்பாளர் களையும், இயக்குநர்களையும் அழைத்து வீட்டில் விருந்து கொடுத்த போது... என்னையும் போன் செய்து அழைத்திருந்தார். நான் போனபோது என் கைகளைப் பிடித்து வீட்டிற்குள் அழைத்துச் சென்றபோது, என் மகள் என்னை அழைத்துச் செல்லும் மகிழ்ச்சிப் பெருக்கு எனக்கு ஏற்பட் டது. அதேபோல ரஜினி வீட்டில் விசேஷங்கள் நடக்கும்போதெல்லாம் என்னை தவறாமல் அழைத்து கௌர விப்பார்கள். சௌந்தர்யா ரஜினியின் திருமணத்தின்போது.. அத்தனைக் கூட்டத்திலும் "சௌந்தர்யா... இவர்தான் உன் அப்பாவை ஹீரோ வாக அறிமுகம் செய்தவர்'’      என்று சொல்லி, அகம் மகிழ்ந்த அன்புமகள் லதாவை எப்போதும் வாழ்த்திக் கொண்டேயிருக்கும் என் உள்ளம்.

ரஜினி போன்செய்து “"நீங்க "ராணா'’ பட பூஜைக்கு அவசியம் வரணும்'’ என அழைத்ததால். சென்றேன். மேக்-அப் அறையில் இருந்த ரஜினிக்கு மலர்க் கிரீடம் சூட்டி, மாலை அணிவித்து மகிழ்ந்தேன். அன்றுதான் பூஜை முடிந்ததும், நேராக ஆஸ்பத்திரிக்குச் சென்றார் ரஜினி. அதன்பின் சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றார். ரஜினி குணமடைய ரசிகர்கள் நடை பயணம் சென்று பிரார்த்தனை செய் தார்கள், தீ மிதித்தார்கள், அவர் நல முடன் திரும்பி படங்களில் நடிக்க வேண்டும்’என கோயில்களில் வேண்டுதலை காணிக்கையாக்கினார் கள் என்பது அறிந்ததே. என்னுடைய குடும்பத்தினர் திருப்பதி சென்று, ரஜினி நலம்பெற வேண்டிக்கொண்டு, லட்டு பிரசாதம் வாங்கி வந்து, ரஜினியின் வீட்டுக்கு அனுப்பி வைத்தார்கள்.

இப்போதெல்லாம் ரஜினி அப்படியும், இப்படியுமாக இருக்கிறார். நானோ... எப்படியும் ஒரு படம் எடுக்க முடியும் என்று இருக்கிறேன். எத்த னையோ புதுமுகங்களை அறிமுகப் படுத்திய நான் எடுக்கப்போகிற படத்திலும் புதுமுகத்தைப் போடப் போகிறேன்.

எங்கேயோ பாட்டுக் கேட் கிறது.

"நினைத்ததை நடத்தியே முடிப்பவன் நான்... நான்... நான்...'

எம்.ஜி.ஆர். பாட்டு... அட நல்ல சகுனம்தான்.

(தொடரும்) vikatan.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக