செவ்வாய், 30 ஜூன், 2015

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்:டிராபிக் ராமசாமி 4,590 ! ஜெயலலிதா 1,51, 252 வாக்குகள்!

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தமிழக முதல்வர் ஜெயலலிதா 1,51, 252 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில் நோட்டாவிற்கு 2,376 வாக்குகள் பதிவாகியுள்ளன. இதையடுத்து எண்ணிக்கையில் 4,590 ஓட்டுகள் பெற்றதால் டிராபிக் ராமசாமி நோட்டாவுடனான போட்டியில் ஜெயித்துள்ளார். தமிழக முதல்வர் ஜெயலலிதா போட்டியிட்ட சென்னை ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதியில் இன்று காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை துவங்கியது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டன. பதிவான அனைத்து தபால் ஓட்டுகளும் ஜெயலலிதாவுக்கே கிடைத்திருந்தன.  கடந்த சனிக்கிழமை நடைபெற்ற இந்த இடைத் தேர்தலை, தி.மு.க, தே.மு.தி.க, பா.ஜ.க, காங்கிரஸ் உட்பட முக்கிய கட்சிகள் அனைத்தும் புறக்கணித்தன. அதிமுக வேட்பாளர் ஜெயலலிதா, இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் மகேந்திரனும், சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி உட்பட 28 பேர் போட்டியிட்டனர். இந்நிலையில் 1,60,432 வாக்குகள் பெற்று அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் காலையில் இருந்தே டிராபிக் ராமசாமிக்கும், நோட்டாவிற்கும் கடும் போட்டி நிலவி வந்தது. இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை முடிவில் டிராபிக் ராமசாமி 4,590 வாக்குகள் பெற்று 3 இடமும், நோட்டா 2,376 வாக்குகள் பெற்று 4ம் இடமும் பெற்றுள்ளனர். இதனையடுத்து நோட்டவை தோற்கடித்து 3வது இடத்தினை தக்க வைத்துக் கொண்டுள்ளார் டிராபிக் ராமசாமி

Read more a /tamil.oneindia.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக