புதன், 1 ஜூலை, 2015

இராணுவ ஆக்கிரமிப்புக்கு இணையானது நுகர் பொருள் படையெடுப்பு




  • குப்பை உணவுகள் உலக மக்களின் ஆரோக்கியத்தை அழித்து வரும் அணுகுண்டுகள்.ஐந்து ரூபாய் விலையுள்ள லேஸ் சிப்சையும் பத்து ரூபாய் கோக்கையும் வாங்கி உங்கள் குழந்தைகளுக்கு தருகிறீர்கள் என்றால் அது அவர்களது வயிற்றையும்,  ஆளுமை வளர்ச்சியையும் அரித்துக் கரைத்து அவர்களை வெறும் தக்கைகளாகத் துப்பி விடும். துரித உணவு வகைகளின் இருண்ட பக்கத்தையும், அவற்றின் பின் உள்ள அரசியலையும் சித்தரிக்கும் கட்டுரைகளின் தொகுப்பு.
  • அமெரிக்காவின் இராணுவ ஆக்கிரமிப்புக்கு இணையானது நுகர் பொருள் படையெடுப்பு. தொலைக்காட்சிகளின் விளம்பரங்கள் வழியாக சிறுவர்களின் சிந்தனையில் பதிகின்றன இந்த துரித உணவு வகைகள்.  உடலையும் உள்ளத்தையும் மெல்லக் கொல்லும் நஞ்சாக ஊடுறுவுகின்றன.

    துரித உணவுகள் தோற்றுவிக்கும் உடல் பருமன், ஆரோக்கியமின்மை, நோய்வாய்ப்படல் ஆகியவை மட்டுமல்ல பிரச்சினை; இவற்றுக்கு அடிமையாகும் சிறுவர்கள், உடலுழைப்பே இல்லாமல், விளையாட்டிலும் ஆர்வமிழந்து, டிஜிட்டல் உலகில் முடங்கிக் கொள்வதுடன், கட்டுக்கடங்கா பிடிவாதத்தையும் வன்முறைப் போக்கையும் வெளிப்படுத்துகிறார்கள். பிறந்த மண், மக்கள், பண்பாடு அனைத்திலிருந்தும் அந்நியப்படுவதுடன், அவற்றை இழிவானவையாகக் கருதி வெறுத்தொதுக்கவும் செய்கிறார்கள்.
    நமது மரபு சார்ந்த ஆரோக்கியமான உணவுகள், தின்பண்டங்கள், பானங்கள் ஆகியவை புறக்கணிக்கப்படுவதால், அவற்றின் உற்பத்தி நின்று போவதுடன், விவசாயம், சிறு தொழில், குடிசைத்தொழில் ஆகியவற்றைச் சார்ந்து வாழும் கோடிக்கணக்கான மக்களும் நிராதரவாகத் தூக்கியெறியப்படுவதும் கடந்த சில ஆண்டுகளாகத் தீவிரமாக நடந்து வருகிறது.
    தற்போது மேகி நூடுல்ஸ் தடை செய்யப்பட்டிருப்பது ஒரு நாடகம். அஜினோமோட்டோவும்,  இன்னும் பல அபாயகரமான ரசாயனப் பொருட்களும் இங்கே நூற்றுக்கணக்கான உணவுகளில் கலந்து விற்கப்படுகின்றன. மத்திய மாநில அரசுகள், காங்கிரசு – பா.ஜ.க கட்சிகள் அனைத்தும்  பன்னாட்டு முதலாளிகளுக்கு பாய்விரிக்கும் துரோகத்தினைத்  தொடர்ந்து செய்து வருகின்றன.
    இப்பிரச்சினையின் பல்வேறு பரிமாணங்களை விளக்கும் விதமாக இந்த வெளியீட்டில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள், ஒரு விச முறிவு மருந்தாக, இதனை எதிர்த்துப் போராடும் அனைவருக்கும் பயன்படும் என்று நம்புகிறோம்.
    தோழமையுடன்
    புதிய கலாச்சாரம்.
    இடம் பெற்றுள்ள கட்டுரைகள்:
    • நெஸ்லே: ஒரு குழந்தைக் கொலையாளியின் வரலாறு!
    • அஜினோமோட்டோ: முதலாளித்துவம் கண்டுபிடித்த எமன்
    • மேகி நூடுல்ஸ்: பிரச்சினை காரியமா? முதலாளிகளின் காரியமா?
    • தொப்பை வயிறு, சப்பை மூளை, குப்பை உணவு!
    • இந்து ஞானமரபிடம் அடிபணிந்த மெக்டோனால்ட்ஸ்!
    • பீட்சா வர்க்கம் நாசாமாக்கும் உணவுச் செல்வம்!
    • சாப்பாட்டு ராமன்களின் சோத்துக் கட்சி!
    • மானம் கெட்டவர்களின் பானம் பெப்சி – கோக்!
    • முட்டைக்கு தடை: குழந்தைகளை கொல்லும் பா.ஜ.க பயங்கரவாதம்
    • செயற்கை இறைச்சி சுற்றுச் சூழலை காப்பாற்றுமா?
    • ஆர்கானிக் உணவு: சதிக்கு பலியாகும் நடுத்தர வர்க்கம்!
    • இந்தியா: தடை செய்யப்பட்ட பொருட்களின் சொர்க்கம்
    பக்கங்கள் : 80
    விலை ரூ. 20.00
    _______________________
    ஆண்டுச் சந்தா உள்நாடு:  ரூ 300
    ஆண்டுச் சந்தா வெளிநாடு: ரூ 1600
    மாதந்தோறும் தவறாமல் புதிய கலாச்சாரம் நூல் உங்களுக்கு கிடைக்கும் பொருட்டு ஆண்டு சந்தாவை உடன் அனுப்பி ஆதரிக்குமாறு கோருகிறோம். சந்தா அனுப்புவோர் கன்னையன் ராமதாஸ் பெயருக்கு டிடி, MO, அனுப்பலாம். வங்கிக் கணக்கிற்கு நேரடியாகவும் அனுப்பலாம். விவரங்கள்,
    KANNAIAN RAMADOSS
    AC,NO – 046301000031766
    IFSC – IOBA0000463
    BRANCH  IOB ASHOK NAGAR.
    சந்தா தொகை அனுப்பிவிட்டு உங்களது பெயர், முகவரி விவரங்களோடு உங்களது தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி (இருந்தால்) அனுப்புமாறு கோருகிறோம்.
    அலுவலக முகவரி:
    புதிய கலாச்சாரம்,
    16, முல்லை நகர் வணிக வளாகம்,
    2-வது நிழற்சாலை, அசோக் நகர்,
    சென்னை – 600 083.
    தொலைபேசி
    044-2371 8706,
    99411 75876, 97100 82506
    மின்னஞ்சல்
    vinavu@gmail.com

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக