ஞாயிறு, 28 ஜூன், 2015

விமான பயணிகளிடம் லக்கேஜ் செக்-இன் செய்ய கட்டணம் வசூலிக்க கூடாது

புதுடெல்லி: உள்ளூர் விமான பயணிகளிடம் லக்கேஜ் செக்-இன் செய்வதற்கு கட்டணம் வசூலிக்க அனுமதிக்க வேண்டும் என்ற விமான நிறுவனங்களின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்தது.  குறைந்த கட்டணத்தில் விமான சேவை அளிக்கும் சில நிறுவனங்கள், விமான கட்டணத்தில் பயணிகளுக்கு பல்வேறு சலுகைகள் அளித்து குறைந்த கட்ணத்தில் இயக்குவதால், பயணிகளின் லக்கேஜ்களை செக்இன் செய்வதற்கு முதல் லக்கேஜூக்கு ரூ.250, 2வது லக்கேஜூக்கு ரூ.500, 3வது லக்கேஜூக்கு ரூ.1,500 என வசூலிக்க அனுமதிக்க வேண்டும் என்று சிவில் விமான போக்குவரத்து ஆணையத்திடம் கோரியிருந்தன.
இதுகுறித்து மத்திய விமான போக்குவரத்து துறை இணையமைச்சர் மகேஷ் சர்மா கூறுகையில், ‘‘குறைந்த கட்டணத்தில் விமானம் இயக்கும் நிறுவனங்கள், பயணிகளின் லக்கேஜ்களை செக்-இன் செய்வதற்கு தனியாக கட்டணம் வசூலிக்க அனுமதி தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தன. விமான அமைச்சக அளவிலேயே இது ஏற்றுக்கொள்ளப்படவில்லை. பயணிகளின் மீது சுமையை ஏற்ற இந்த அரசுக்கு விருப்பம் இல்லை. எனவே இந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டு விட்டது. பயணிகளுக்கு பயன்தரும் வகையில் கோரிக்கை ஏதேனும் இருந்தால் பரிசீலிக்கலாம் எனவும், அதுகுறித்து விவரங்களை இணைத்து அனுப்புமாறு விமான நிறுவனங்களிடம் நாங்கள் கூறியுள்ளோம்’’ என்று தெரிவித்தார். தினகரன்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக