ஞாயிறு, 28 ஜூன், 2015

ஜெயலலிதா வழக்கில் திமுகவும் மேல்முறையீடு செய்ய ஆலோசனை?

சொத்துக் குவிப்பு வழக்கில், ஜெயலலிதா உட்பட, நால்வரை, கர்நாடகா உயர் நீதிமன்றம் விடுதலை செய்ததை எதிர்த்து, அம்மாநில அரசு, உச்ச நீதிமன்றத்தில், மேல் முறையீடு செய்துள்ளது.அதன் மீதான விசாரணை விவரம், அடுத்த வாரத்தில் தெரிய வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சூழலில், இதில், தி.மு.க.,வின் நிலை குறித்து, சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.இதுகுறித்து, தி.மு.க., சட்டப்பிரிவு நிர்வாகி ஒருவர் கூறியதாவது:கர்நாடகா உயர் நீதிமன்றம், ஜெயலலிதாவை விடுதலை செய்ததும், அதை எதிர்த்து, உச்ச நீதிமன்றம் செல்வது என, முடிவு செய்து விட்டோம்; ஆனால், கர்நாடகா அரசின் நிலைப்பாட்டை அறிவதற்காக காத்திருந்தோம். தற்போது, கர்நாடகா அரசு, மேல்முறையீடு செய்துள்ளது. எனவே, வழக்கில் புகார்தாரர் என்ற முறையில், தி.மு.க., தரப்பிலும், மேல்முறையீடு மனு போடுவதா அல்லது கர்நாடகா தொடர்ந்துள்ள வழக்கில், இணைந்து கொள்வதா என, ஆலோசிக்கப்படுகிறது.
இவ்வழக்கில், தி.மு.க., தரப்பு கருத்துக்களை, எடுத்து வைக்க வேண்டியது மிகவும் அவசியம். அதற்காக டில்லியில், மூத்த வழக்கறிஞர்களின் கருத்தை கேட்டுள்ளோம்.கர்நாடகா வழக்கில், தி.மு.க., தரப்பையும் சேர்த்துக் கொள்ளும்படி, 'இம்ப்ளீட்' மனு செய்யும் பட்சத்தில், அதை உச்ச நீதிமன்றம் ஏற்காவிட்டால், வேறு வாய்ப்பு இல்லாமல் போய் விடும்.

அதற்கு பதிலாக, கர்நாடகாவை போல், தி.மு.க.,வும், 'அப்பீல்' செய்வதே நல்லது என, சட்ட யோசனை சொல்லப்படுகிறது. கர்நாடகா ஏற்கனவே, அப்பீல் செய்துள்ளதாக கூறி, தி.மு.க., மனுவை தள்ளுபடி செய்ய நேரிட்டாலும், 'அந்த வழக்கில், ஒரு, 'பார்ட்டி'யாக சேர்ந்து கொள்ளுங்கள்' என, உத்தரவு பிறப்பிக்க வாய்ப்பு உள்ளது.ஒருவேளை, எந்த உத்தரவுமின்றி, தி.மு.க., மனு தள்ளுபடி செய்யப்பட்டாலும், தி.மு.க.,வை வழக்கில் சேர்க்கக் கோரி, மீண்டும் மனு போட வாய்ப்பு உள்ளது.இவ்வாறு, அந்த நிர்வாகி தெரிவித்தார்.தினமலர்.கம

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக