சனி, 18 அக்டோபர், 2014

பரப்பன அக்ஹாராவில் நடந்தது என்ன? ப்ளாஷ் பேக் டீடெயில் !

பெங்களூரு அலைச்சல் அ.தி.மு.க-வினரை ரொம்பவே களைப்பாக்கி​விட்டது. எல்லோரும் சோர்ந்து போய்விட்டார்கள். பரப்பன அக்ரஹாரா வளாகத்தில் இப்போது அ.தி.மு.க-வினரின் பழைய பாய்ச்சலைப் பார்க்க முடியவில்லை. எல்லோரும் இயல்பு நிலைக்கு மாறுவது தெரிகிறது. தங்களது ஆற்றாமையை சிலர், பத்திரிகைகள் மீது வெளிப்படுத்துகிறார்கள்'' என்றபடியே நம்முன் ஆஜரானார் கழுகார்.
''ஜெயலலிதா கைது பரபரப்பில், பரப்பன அக்ரஹாரா பகுதி மக்களுடைய சுதந்திரம் பறி போய்விட்டது. அந்தச் சிறைப் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. சிறைக்குச் செல்லும் சாலையைத்தான் அவர்களும் பயன்படுத்தியாக வேண்டும். ஆனால், பரப்பன அக்ரஹாரா நுழைவுப் பகுதியிலேயே செக் போஸ்ட் அமைத்து வழியை மறித்துவிட்டார்கள். செக் போஸ்ட்டில் சோதனைக்கு நிற்கும் போலீஸ்காரர்களை அ.தி.மு.க-வினர் அட்ஜெஸ்ட் செய்து உரிமையோடு உள்ளே செல்கிறார்கள். ஆனால், அங்கேயே வசிக்கும் மக்களை அத்தனைச் சாதாரணமாக உள்ளே அனுமதிப்பது இல்லை. கேள்வி மேல் கேள்வி கேட்கிறார்கள். அந்தப் பகுதிக்கு வரும் விருந்தினர்களுக்கு கூட அனுமதி மறுக்கப்படுகிறது.

டக்கர் படத்தில் மீனாட்சி தீட்சித் அருந்ததி பிரேம்ஜி

சென்னை: காமெடி திரில்லர் கதையாக உருவாகிறது ‘டக்கர். இதுபற்றி இயக்குனர் பரணி ஜெயபால் கூறியது: ஏற்கனவே ‘மதில் மேல் பூனை படத்தை இயக்கினேன். அடுத்து விஞ்ஞான ஆராய்ச்சியுடன் காமெடி, ஆக்ஷன், திரில் கலந்த கதையாக ‘டக்கர் ஸ்கிரிப்ட் உருவாகி இருக்கிறது. இதில் கார் ஓட்டும் வீரராக பிரேம்ஜி நடிப்பதுடன் இசை அமைக்கிறார். மீனாட்சி தீட்சித், அருந்ததி ஹீரோயின்களாக நடிக்கின்றனர். விடிவி கணேஷ், ஜெயபிரகாஷ், தேவதர்ஷினி, கங்கை அமரன், வெங்கட்பிரபு, ‘பாண்டியநாடு வில்லன் சரத் நடிக்கின்றனர். எஸ்.யுவராஜ், கார்த்திகேயன் தயாரிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி பெங்களூர் மற்றும் அந்தமான் காடுகளில் நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார். - tamilmurasu.org/

சிவசேனாவினர் தங்கள் கட்சிக்கு வோட்டு போடாத பெண்ணை எரித்து கொன்றனர்

நாசிக்: மகாராஷ்டிராவில் சிவசேனாவுக்கு ஓட்டு போடாமல் தேசியவாத காங்கிரசுக்கு வாக்களித்த 65 வயது பெண் தீ வைத்து எரிக்கப்பட்டார். மகாராஷ்டிர சட்டமன்றத்துக்கு கடந்த 15ம் தேதி தேர்தல் நடைபெற்றது. நாசிக்கில் இருந்து 85 கிமீ தொலைவில் இயோலா அருகே உள்ளது பாபுல் கவுன். தேர்தல் அன்று அதே பகுதியைச் சேர்ந்த ஜெலுபாய் வாபலே (65) என்ற பெண் வாக்களிக்க சென்று கொண்டிருந்தார். இவரது தொகுதியில் என்சிபி வேட்பாளர் சாகன் புஜ்பால் வாட்ச் சின்னத்தில் போட்டியிடுகிறார். சிவசேனா வேட்பாளர் சாம்பாஜி பவார் வில்-அம்பு சின்னத்தில் போட்டியிடுகிறார். வாக்குபதிவு இயந்திரத்தில் 2வது பட்டனில் என்சிபி வேட்பாளரும், 3வது பட்டனில் சிவசேனா வேட்பாளரும் இடம் பெற்றிருந்தனர். வாக்களிக்க சென்ற ஜெலுபாயை 3 பேர் வழிமறித்து 3வது பட்டனை அழுத்த சொல்லியுள்ளனர். வாக்களித்து விட்டு திரும்பிய அவரிடம் மீண்டும் எதற்கு வாக்களித்தாய் என்று கேட்டனர். அவர் இரண்டாம் பட்டனில் உள்ள வாட்ச் சின்னத்தில் வாக்களித்தேன் என்றார்.

ஜெயலலிதா 22 நாட்களுக்குப் பின் விடுதலையானர் ! போயஸ் தோட்டம் வந்தார் !

பெங்களூர்: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஜாமீனில் இன்று விடுதலையானர். 22 நாட்கள் சிறைவாசத்திற்குப் பின்னர் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார் ஜெயலலிதா.
பிற்பகல் 3.20 மணிக்கு சிறையில் இருந்து விடுதலையான ஜெயலலிதா, தோழி சசிகலா உடன் கார் மூலம் பெங்களூர் விமான நிலையத்திற்குப் புறப்பட்டார்
சிறையில் இருந்து ஜெயலலிதாவின் வாகனம் வெளியே வந்த உடன் அதிமுக தொண்டர்கள் உற்சாகத்துடன் குரல் எழுப்பினர். பட்டாசு வெடித்தனர். இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.
/tamil.oneindia.com

Soft Skills மென் திறன் தகுதி உடையோர் மட்டுமே வெற்றி பெறுவார்கள் !

ஒரு நிறுவனத்தில் ஆட்குறைப்பு நடைபெறும்போது, இவ்வளவு பேர்கள் நம் அலுவலகத்தில் பணி புரிந்தால் போதும். மற்றவர்களை அனுப்பிவிடலாம் என்று எதை வைத்துத் தீர்மானிக்கிறார்கள்.

வேலை செய்பவர்களில் யாருக்குப் பாசிட்டிவ்வான எண்ணம் இருக்கிறது, மற்றவர்களுக்கு உதவி செய்பவர்கள் யார், கம்பெனி மேல் நம்பிக்கை வைப்பவர்கள் யார் என்ற தகுதிகளை அலசியபின்பே நிறுவனம் அவர்களைத் தக்க வைத்துக்கொள்கிறது.
“நீங்கள்தான் உலகிலேயே அழகானவர். அறிவுள்ளவர். அனைவரிடமும் அன்பு பாராட்டுபவர். உங்கள் திறமையில் எந்தச் சந்தேகமுமில்லை. நீங்கள் படிக்கின்ற பாடக் கல்வியில் தலை சிறந்தவர்.” என்று உறுதியாக நம்புங்கள். ஆனால், நீங்கள் படிக்கின்ற கல்வியின் கூடவே கொள்ள வேண்டிய மென் திறன்தான் உங்களைத் தனித்திறனுள்ளவர்களாகக் காட்டி மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்தி, உங்களை உயர்நிலையை அடையச் செய்யும். நாம் நம் முன்னேற்றத்தில் கவனம் கொள்ளாமல் அடுத்தவர்களைப் பற்றி அதிகம் சிந்திக்கிறோம். நமக்குப் பிடித்த நபர்களுக்கு எது பிடிக்கும் எது பிடிக்காது என்ற ஆராய்ச்சியில் இறங்கிவிடுகிறோம். அது நண்பர்களாக இருக்கலாம், அல்லது பிடித்த நடிகர்களாகவோ, அல்லது விளையாட்டு வீரர்களாகவோ இருக்கலாம். ஆனால் நம் பலம் என்ன, பலவீனம் என்று ஆராயத் தொடங்குவதில் நமக்கு இன்று ஆர்வம் இல்லை. உங்களுக்குப் பிடித்தவர்களைப் பற்றித் தெரிந்து கொள்ளச் செலவிடும் நேரத்தில் பாதியாவது உங்களைப் பற்றித் தெரிந்து கொள்வதில் செலவிடுங்கள்.

Bihar CM Jiten Ram Manjhi ஒரு இந்தியன் தாத்தா ? அரசு டாக்டர்கள் ஏழைகளை புறக்கணித்தால் கைகளை வெட்டுவேன் என்கிறார் !


பீகார் முதல்–மந்திரி ஜிதன்ராம்மாஞ்சி. இவர் ஏற்கனவே சர்ச்சை அளிக்கும் வகையில் பேசி இருக்கிறார். தற்போது மீண்டும் ஒரு சர்ச்சையை கிளப்பி உள்ளார். ஏழைகளை புறக்கணித்தால் கைகளை வெட்டுவோம் என்று அரசு டாக்டர்களுக்கு அவர் எச்சரிக்கை விடுத்து உள்ளார். சாம்பரான் மாவட்டம் மொதிஹரி பகுதியில் ஆஸ்பத்திரி திறப்பு விழா நடந்தது. இதில் பீகார் முதல்–மந்திரி ஜிதன்ராம்மாஞ்சி கலந்து கொண்டார். பின்னர் நடந்த பொதுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:–
நான் சாதாரண ஏழை குடும்பத்தில் இருந்து வந்துள்ளேன். இதனால் அவர்களது நிலைமை பற்றி எனக்கு நன்றாக தெரியும். அரசு டாக்டர்கள் ஏழைகளுக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்க வேண்டும். அவர்களை புறக்கணிக்க கூடாது. ஏழைகளுக்கு சிகிச்சை அளிக்க மறுத்தால் அரசு டாக்டர்களின் கைகளை வெட்டுவோம்.
இதனால் ஏற்படும் எந்த விளைவுகளையும் சந்திக்க நான் தயாராக இருக்கிறேன். ஆனால் டாக்டர்கள் ஏழை மக்களின் வாழ்க்கையில் விளையாடுவதை அனுமதிக்க முடியாது.  இந்த பீகார் முதலமைச்சர்தான் நிஜ இந்தியன் தாத்தா , இவரு வரணுமே ? இங்கே ரோம்பதாய்ன் ஆட்டம் போடுதாக !

அமெரிக்காவிலிருந்து கோழிக்கால் இறக்குமதியை அனுமதிக்கக் கூடாது: ராமதாஸ் அறிக்கை

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–
அமெரிக்காவிலிருந்து கோழிக்கால்கள் உள்ளிட்ட கழிவுகளை இறக்குமதி செய்வதற்கு இந்தியா விதித்த தடை செல்லாது என்று உலக வர்த்தக அமைப்பு தீர்ப்பளித்திருக்கிறது. இதனால் இந்தியாவில் பறவைக்காய்ச்சல் நோய் பரவுவதுடன், கோழிக்கறி வணிகமும் பாதிக்கப்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
கோழி இறைச்சி உற்பத்தியில் முதலிடத்தில் இருப்பதைப் போலவே பறவைக் காய்ச்சல் போன்ற நோய்களை பரப்புவதிலும் அமெரிக்கா தான் முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கோழிக் கால்களால் இந்தியாவில் பறவைக் காய்ச்சல் நோய் பரவுவது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அத்தகைய இறக்குமதிக்கு தடை விதித்து 2007 ஆம் ஆண்டில் இந்திய அரசு ஆணையிட்டது. அதை எதிர்த்து உலக வர்த்தக நிறுவனத்தின் தீர்ப்பாயத்தில் அமெரிக்கா தொடர்ந்த வழக்கில் தான் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

ஜெயலலிதாவையும் அதிமுகவினரையும் அம்பலபடுத்திய நீதிபதி குன்ஹாவை ஆதரித்து சென்னையில்

ஆர்ப்பாட்டம் சுவரொட்டி


  • ஊழல் குற்றவாளி ஜெயலலிதாவிற்குச் சிறை!
  • நீதிபதி குன்ஹாவின் தீர்ப்பை வரவேற்போம்!
  • ஊழலில் சேர்த்த சொத்துக்களை பறிமுதல் செய்யப் போராடுவோம்!சென்னை உயர்நீதிமன்றத்தில் மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் ஆர்ப்பாட்டம்!
  • மிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை குற்றவாளியாக பெங்களூரு தனி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக அதிமுக கட்சியினர் திட்டமிட்டு அனுதாப அலையினை உருவாக்க சட்டவிரோதமான முறையில் ‘போராட்டங்களை’ தூண்டிவிடும் நிலையில் அதனை அம்பலப்படுத்தும் வகையில் மனித உரிமைப் பாதுகாப்பு மையம் சென்னை கிளையின் சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் அக்டோபர் 15 அன்று ஆர்ப்பாட்டம் நடத்தியது!
“ஊழல் குற்றவாளி ஜெயலலிதாவிற்கு சிறை!
நீதிபதி குன்ஹாவின் தீர்ப்பை வரவேற்போம்!”
என்ற முழக்கத்தினை முன்வைத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞர்களின் அறைகளுக்கு நேரடியாக சென்று துண்டுபிரசுரங்கள் விநியோகித்து மனித உரிமைப் பாதுகாப்பு மைய வழக்குரைஞர்கள் பிரச்சாரம் செய்தார்கள்.
பெரும்பாலான வழக்குரைஞர்கள் அதிமுக கட்சியினரின் சட்டவிரோத நடவடிக்கைகளின் மீது வெறுப்பு கொண்டிருந்தாலும், நேரடியாக பேச இயலாத தங்களின் இயலாமையை ஆதங்கமாக வெளிப்படுத்தினார்கள். பிரசுரங்களை பெற்றுக்கொண்ட அதிமுக கட்சி சார்ந்த வழக்குரைஞர்கள் பலரும் மவுனமாகவே இருந்து, தங்களுக்கும் தமது கட்சியினர் செய்வது நியாமல்ல என்பதை வெளிப்படுத்தினார்கள்.

தலித் வாழ்வை சொல்கிறதா மெட்ராஸ்? அமெரிக்காவில் கருப்பர்களின் கலாச்சாரம் மாதிரி வட சென்னையிலும் பரவியிருக்கிறது ?


தமிழ் சினிமாவில் சாதிப் பிரச்சினைகள் மீதான அணுகுமுறை, தலித் மக்களின் வாழ்வியல் பதிவு உள்ளிட்ட விவாதங்களைக் கிளப்பியிருக்கிறது, 'மெட்ராஸ்'. இப்படம் குறித்து இயக்குநர் ரஞ்சித்திடம் விரிவாகப் பேசியதில் இருந்து...
தமிழ் சினிமா வரலாற்றில் திரை விமர்சகர்களாலும், சமூக ஆர்வலர்களாலும் கவனிக்கப்பட்ட வேண்டிய திரைப்படமாக 'மெட்ராஸ்' வேறொரு தளத்துக்கு கொண்டுசெல்லப்படிருக்கிறதே... இதற்கான காரணம் என்ன என்று நினைக்கிறீர்கள்?
'மெட்ராஸ்' தலித்துகளைப் பற்றிய, அவர்களது வாழ்க்கை முறையைப் பற்றிய திரைப்படம். தலித்துகளின் கலாச்சாரம், வாழ்க்கையைப் பற்றி தமிழ் சினிமாவில் இதுவரை சரியாகப் பதிவு செய்யப்படவில்லை. வட சென்னை மக்கள் உயர்ந்த சிந்தனைகள் இல்லாதவர்களாகவும், வன்முறையாளர்களாகவும்தான் இதுவரை சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால், அங்குள்ள இளைஞர்களுக்கு ஹிப் ஹாப் இசை பிடிக்கும், மைக்கல் ஜாக்சன், கால்பந்து, பாப் மார்லி எல்லாமே தெரியும்.
அமெரிக்காவில் கருப்பர்களின் கலாச்சாரம் மாதிரி வட சென்னையிலும் பரவியிருக்கிறது.

உலகின் 80 வீத போலியோ நோயாளிகள் பாகிஸ்தானியர்கள் !

உலக அளவில் போலியோவால் பாதிக்கப்படும் குழந்தைகளில் 80 சதவீதத்தினர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. அந்த அமைப்பு அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:;
கடந்த 1999-ஆம் ஆண்டு பாகிஸ்தானில் அதிகபட்ச அளவாக 199 குழந்தைகளுக்கு போலியோ நோய் இருப்பது கண்டறியப்பட்டது.
ஆனால் இந்த ஆண்டு அதனையும் தாண்டி 206 குழந்தைகளை போலியோ தாக்கியிருப்பது தெரியவந்துள்ளது.
உலகில் போலியோவால் பாதிக்கப்படும் குழந்தைகளில் 80 சதவீதத்தினர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள்.
உலகம் முழுவதும் போலியோவை முற்றிலுமாக ஒழிக்கும் முயற்சிக்கு பாகிஸ்தான் மிகப்பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது.
அந்த நாட்டின் வடக்கு, தெற்கு வஜிரிஸ்தான் மாகாணங்களில் போலியோ தடுப்பு மருந்துக்கு தலிபான் பயங்கரவாதிகள் தடை விதித்திருப்பதுதான் இந்த நிலைக்குக் காரணம். இந்த லட்சணத்தில இந்தியாவுக்கு எதிரா முழக்கம் வேற? நல்ல காலம் காஷ்மிரில இந்த அளவு போலியோ இல்லை !

வெள்ளி, 17 அக்டோபர், 2014

மத்திய அரசு :swiss கருப்பு பண இந்தியர்களின் பெயரை வெளியிட முடியாது !

புதுடெல்லி: வெளிநாட்டு வங்கிகளில் கருப்பு பணத்தை பதுக்கி வைத்துள்ள இந்தியர்களின் பெயர்களை வெளியிட முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி கருப்பு பணத்தை மீட்பது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில் மத்திய அரசு இவ்வாறு கூறியுள்ளது. பெயர்களை வெளியிடுவது அந்த தகவலை அளித்த அந்த நாடுகளுடனான இரட்டை வரி விதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தங்களை மீறுவதாகும் என்று அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.
சம்பந்த பட்ட விசாரணை முகமைகளுடன் மட்டுமே விவரங்களை பகிர்நது கொள்ள முடியும் என்று மத்திய அரசு கூறியுள்ளது. இதனை அடுத்து வழக்கு விசாரணை வரும் 28-ம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்தி வ¬த்துள்ளது. சொந்த காசுல  சூனியம் வைக்க அவிங்களுக்கு கிறுக்கு பிடிச்சிருக்கா என்ன ?

ஜெயலலிதா : நிச்சயம் வெற்றி கிட்டும் ! நீதிமன்றம் மீதோ வேறு எவர்மீதோ விமர்சனம் வேண்டாம் !

 நீதித் துறையின் புகழுக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் எந்தச் செயலிலும் யாரும் ஈடுபட வேண்டாம் என்றும்; அமைதி காத்து தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கினைபராமரிக்க ஒத்துழைக்க வேண்டும் என்றும் மக்கள் முதல்வர் ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார்.  
இ து குறித்து    மக்கள் முதல்வர்  ஜெயலலிதா   வெளியிட்டுள்ள  அறிக்கையில் கூறி யிருப்பதாவது :
 ஒரு தலைவனைப் பற்றி பேரறிஞர் அண்ணா அவர்கள் கூறும் போது, “எதையும் தாங்கும் இதயம் வேண்டும்” என்றார்.   பேரறிஞர் அண்ணா வழியில், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் நான் அவர்களுடைய வழியில் பொதுவாழ்வில் ஈடுபட்டு வருகிறேன்.
 எனது வழக்கு தொடர்பாக இன்று உச்ச நீதிமன்றம் வழங்கிய உத்தரவின் விவரம் எனக்கு தெரிவிக்கப்பட்டது.

ஜெயலலிதா வீட்டிற்குள்ளேயேதான் இருக்க வேண்டும்:ஜாமீன் பற்றி சுப்பிரமணியன் சுவாமி

புதுடெல்லி: ஜெயலலிதாவிற்கு சில நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது என்றும், அவர் வீட்டைவிட்டு வெளியே வரக்கூடாது என்று  உச்ச நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளதாகவும் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்தார். சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உள்பட 4 பேருக்கு உச்ச நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. ஜெயலலிதா வழக்கு விசாரணையையொட்டி உச்ச நீதிமன்றத்திற்கு பா.ஜனதா தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி வந்திருந்தார். ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சுப்பிரமணியன் சுவாமி, 'ஜெயலலிதாவிற்கு சில நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. இவர் வீட்டிலேயேதான் இருக்க வேண்டும், கட்சியினரை சந்திக்க கூடாது. மேலும், தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு நடவடிக்கைகளை ஆளுநர் ரோசையா கண்காணிக்க வேண்டும். அதேவேளையில், தனது கட்சியினருக்கு தேவையான கட்டுப்பாடுகளை ஜெயலலிதா விதிக்க வேண்டும் என்று நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளதாக கூறினார்.vikatan.com

அரசு மருத்துவ மனைகளின் அலட்சியம் ! தனியார் மருத்துவ மனைகளுக்கு கொண்டாட்டம் ?

ஸ்டேன்லி மருத்துவமனைசென்னையிலுள்ள ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வரும் 30-க்கும் மேற்பட்ட சிறுநீரகம் செயலிழந்த நோயாளிகளுக்கு ஒரே சமயத்தில் ஹெச்.சி.வி (ஹெபடைட்டிஸ் சி வைரஸ்) என்ற கொடிய, உயிருக்கே உலைவைக்கக்கூடிய மஞ்சள்காமாலையை விளைவிக்கும் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. டயாலிசிஸ் கருவியையும், அச்சிகிச்சை நடைபெறும் அறையையும் நோய் தொற்று ஏற்படாதவண்ணம் பாதுகாப்பாக வைக்காததாலேயே அந்த முப்பது பேரையும் மஞ்சள்காமாலையை விளைவிக்கக்கூடிய கிருமி எளிதாகத் தாக்கியிருக்கிறது. மாதத்திற்கு இருமுறையோ அதற்கு மேலோ டயாலிசிஸ் சிகிச்சை செய்துகொண்டால்தான் உயிர் பிழைத்திருக்க முடியும் என்ற நிலையில் வாழ்ந்துவரும் இவர்களை, தமது அலட்சியத்தால் மரணத்தில் வாசலில் கொண்டுபோய்த் தள்ளியிருக்கிறது ஸ்டான்லி மருத்துவமனை நிர்வாகம்.
இதனைவிடக் கொடிய சம்பவம் கோவையில் நடந்திருக்கிறது. கோவை மாநகர சுகாதாரத்துறை சார்பில் நடத்தப்பட்ட குடும்பக் கட்டுப்பாடு முகாமில் அறுவை சிகிச்சை செய்துகொண்ட கலைவாணி என்ற பெண் பரிதாபமாக உயிரிழந்து போனார். அம்முகாமில் அறுவை சிகிச்சைக்கு உரிய மேசைகளை ஏற்பாடு செய்யாமல், மருத்துவமனையில் நோயாளிகள் அமரும் பெஞ்சுகளை ஒன்றின் மீது ஒன்றாகச் சாய்த்துக் கட்டி அறுவை சிகிச்சை நடத்தப்பட்டுள்ளது.

கௌரவகொலை ! கௌரவ ஆடம்பரம் ! கௌரவ தற்கொலை! வரட்டு கௌரவ தமிழர்கள்.சுயகெளரவம் பெறுவது எப்போது?

ண்மையை உரக்கச் சொல்லி நேர்மையா இருக்கிறதுதான் மனிதனுக்கு கௌரவம். ஆனால் இந்த வார்த்தையின் அர்த்தத்தை அவரவர் வசதிக்கு, சந்தர்ப்பத்துக்கு ஏற்ற மாதிரி வளைச்சு நெளிச்சு போலி கௌரவமா உருமாறி ‘கௌரவம்’ இன்னைக்கி சித்தரவதைய அனுபவிக்குது.
இந்த போலி கௌரவம் நகரங்கள விட கிராமங்கள்ல இன்னமும் உயிர் நீக்கும் விசயமா இருக்கு. உள்ள இருக்குறது என்னண்ணு தெரியாம கலர் பேப்பரால அலங்கரிச்சும், கமுக்கமா கவர்லையும் மூடி மறைச்சு நகரங்கள்ள நடக்குற விழாக்கள்ள கௌரவம் நாசூக்கா நடபோடுது. ஆனா கிராமங்கள்ள தாம்பூலம் தட்டுவரிசையா சீர்வரிசை செய்முறையின்னு பந்தல் நிறைய பந்தா காட்டுது.
அடுத்த வேள சோத்துக்கு என்ன செய்றது என்ற நெலம இருந்தாலும் சட்டுன்னு ஒரு மணி நேரத்துல 1000 ரூபாய்க்கு மொய் செய்வாங்க. நாலு பேருக்கு முன்னால நாமும் கௌரவத்த காப்பாத்திட்டோம்ங்கற பெருமிதத்தோட ஈரத்துணிய வயித்துல கட்டிகிட்டு குப்புறப்படுத்துகிட்டு அழுவாங்க. இப்படி போலி கௌரவத்த காப்பாத்துனம்முனு வாழ்க்கைய தொலைச்சவங்க பலபேரு.

நிபந்தனை ஜாமீன் தான் பொறுக்கிகளை ஜெயலலிதா அடக்கி வைக்கணும் - சு.சாமி

டெல்லி: ஜெயலலிதாவுக்கு நிபந்தனை ஜாமீன் தான் கிடைத்துள்ளது என்று பாஜக தலைவர் சுப்பிரமணியன் சாமி தெரிவித்துள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. ஜெயலலிதா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பாலி நரிமன் அவரது உடல் நிலையை கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்குமாறு வாதாடினார். இதையடுத்து நீதிபதிகள் ஜெயலலிதாவுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர்.  ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்று கூறி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த பாஜக தலைவர் சுப்பிரமணியன் சாமி இன்று நீதிமன்றத்திற்கு வந்திருந்தார். ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைத்தது சாமியை அதிருப்தியடைய வைத்தது.

குற்றவாளி என்ற தீர்ப்புக்கு தடை விதிக்க படவில்லை ! தண்டனை நிறுத்தத்தை தவறாக புரிந்து கொண்ட மீடியா மற்றும் அதிமுகவினர் ?

டெல்லி: ஜெயலலிதாவுக்கு தண்டனையை நிறுத்தி வைத்து ஜாமீன் வழங்கப்பட்டுள்ளதே தவிர அவர் 'குற்றவாளி' என்று அறிவிக்கப்பட்ட தீர்ப்புக்கு இன்னும் தடை விதிக்கப்படவில்லை. எனவே கர்நாடகாவில் மேல் முறையீடு விசாரணை முடிந்து அவர் குற்றமற்றவர் என்று கூறும் வரை ஜெயலலிதா தேர்தலில் போட்டியிட முடியாது, அவரது பதவி பறிப்பும் தொடரும். உச்சநீதிமன்றம் இன்று ஜெயலலிதாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. ஜாமீன் வழங்குவது என்றால், தண்டனையை நிறுத்தி வைப்பது என்று அதற்கு மற்றொரு பெயரும் உண்டு என்பது சட்டம் அறிந்த அனைவருக்கும் தெரிந்ததே. ! எனவேதான் ஜெயலலிதாவின் தண்டனையை நிறுத்தி வைத்து ஜாமீன் அளிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் தண்டனை அனுபவிக்கும் ஒருவர் எப்படி ஜாமீனில் வெளியே போக முடியும் என்ற சின்ன லாஜிக் இதன் பின்னால் ஒளிந்துள்ளதால், தண்டனையை ரத்து செய்துவிட்டு ஜாமீன் வழங்குவதாக அறிவித்துள்ளனர் நீதிபதிகள். ஆனால் தண்டனை ரத்து என்பதை சிலர், குறிப்பாக ஆளும்கட்சியினர் தவறாக புரிந்துகொண்டிருப்பது அவர்களின் சமூக வலைத்தள பதிவுகள் மூலம் தெரியவருகிறது. பேட்டிகளிலும் தவறான புரிதலுடனே பேசிவருகின்றனர்.

ஜாமீன் கிடைத்தது ! ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட எச்சரிக்கை மற்றும் நிபந்தனை விபரங்கள் !

பெங்களூர்: சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை பெற்ற ஜெயலலிதாவுக்கு நீதிபதிகள் கடுமை காட்டியும் மூத்த வழக்கறிஞர் பாலி நாரிமன் அளித்த உறுதி மொழியை மட்டும் நம்பி ஜாமீன் வழங்கியுள்ளனர். சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் தங்களுக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை நிறுத்தி வைத்து ஜாமீன் வழங்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஹெச்.எல். தத்து, நீதிபதிகள் மதன் லோகுர், சிக்ரி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இன்று விசாரித்து ஜாமீன் வழங்கி தீர்ப்பளித்தது. ஜெ.க்கு இடைக்கால நிபந்தனை ஜாமீன் அளித்து நீதிபதிகள் கூறிய தீர்ப்பு விவரம் என்ன? தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்: உடல்நிலையைக் கருத்தில் கொண்டு ஜெயலலிதாவ உள்ளிட்டோரின் 4 ஆண்டு தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டு 18.12.2014 வரை இடைக்கால ஜாமீன் வழங்கப்படுகிறது. ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை இழுத்தடிக்கக் கூடாது. கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் 18.12.2014 க்குள் மேல்முறையீட்டு வழக்கின் அனைத்து ஆவணங்களையும் அது 35 ஆயிரம் பக்கமோ 40 ஆயிரம் பக்கமோ தாக்கல் செய்தாக வேண்டும்.

நடிகர்களுக்கு அழைப்புக்குமேல் அழைப்பு கொடுக்கும் பாஜக :வீரமணி கண்டனம்

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில்,  ‘’தமிழ்நாட்டின் இன்றைய அரசியல் கட்சிகளை பார்த்தால் மிகவும் வெட்கமாகவும், வேதனையாகவும் உள்ளது. சட்டத்தினால் தண்டிக்கப்பட்டவர்கள் சட்ட முறைகளான மேல்முறையீடுகள், ஜாமீன் போன்றவைகள் மூலம் தான் வெளிவர முயற்சிக்கலாமே தவிர, அபத்தங்களை வாசகங்களாக்கி உலா விடுதல் சரியானதுதானா?இது ஒரு புறம் இருக்க, மறுபுறம் சினிமா நடிகர்களுக்கு பா.ஜ.க.வின் அழைப்புக்குமேல் அழைப்பு. ஆசை வெட்கமறியாது என்பதற்கேற்ப, பா.ஜ.க. எப்படி தமிழ்நாட்டில் அரசியல் நடத்த முனைந்து, இப்போது சினிமா ரசிகர் மன்றத்தின் மற்றொரு அங்கமாக தன்னை மாற்றிக்கொண்டு, கொக்கு தலையில் வெண்ணெய் வைத்துப்பிடிக்கும் திட்டமிட்ட ‘அதிபுத்திசாலியாக‘ மாறிட துடியாய் துடிக்கிறது.இதற்கெல்லாம் பலியாகாத இளைஞர்கள், திராவிடர் இயக்கத்தின் அடிநாதத்தை அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டுள்ளனர். இறுதியில் சிரிப்பவர்தானே அறிவாளி? இடையில் இப்படிப்பட்ட காட்சிகளும், நகைச்சுவைக்குப் பயன்படுமே தவிர, நாடாள ஒருபோதும் கைகொடுக்காது. காலம் புரிய வைக்கக்காத்திருக்கிறது’’என்று கூறியுள்ளார் nakkheeran,in

லக்ஷ்மி ராயின் படத்தை மாப்பிங் செய்து இன்டர்நெட்டில் கிரிமினல்கள்

சென்னை: சமீபகாலமாக நடிகைகளின் நிர்வாண படங்கள் என்று இணைய தளத்தில் வீடியோவும், ஸ்டில்களும் வெளியிடப்படுகின்றன. சம்பந்தப்பட்ட நடிகைகள் இதற்கு மறுப்பு தெரிவித்து வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று இணைய தளத்தில் வெளியான ஆபாச வீடியோ பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதில் இருப்பது நடிகை ராய் லட்சுமி என்று கூறப்பட்டது. இதையடுத்து பரபரப்பு எற்பட்டது.இதுபற்றி ராய் லட்சுமி கூறும்போது,‘இதுவரை நான் குறிப்பிட்ட வீடியோவை பார்க்கவில்லை. அந்த வீடியோவை பார்த்த எனது நண்பர்கள் மற்றும் சிலர் அதுபற்றி என்னிடம் கூறினார்கள். அதில் இருக்கும் பெண் லேசாக எனது சாயலில் இருப்பதாக தோன்றுகிறதாம். யாரோ என் மீது தவறான எண்ணம் ஏற்படும் விதத்தில் இதை பரப்பிவிட்டிருக்கிறார்கள். வீடியோவில் பெரும்பாலும் அந்த பெண்ணின் முகத்தை மறைத்திருக்கிறார்கள். அவரது கால் விரலில் மெட்டி அணிந்திருப்பது அதில் தெரிகிறதாம். அப்படியானால் அது திருமணம் ஆன பெண்ணைத்தான் குறிக்கிறது. நடிகையாக இருப்பதால் இதுபோல் வதந்திகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது என்றார். இரும்புகோட்டை முரட்டு சிங்கம்,  காஞ்சனா, இரும்பு குதிரை போன்ற பல படங்களில் நடித்த லட்சுமி ராய் தனது பெயரை சமீபத்தில் ராய் லட்சுமி என மாற்றிக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. - .tamilmurasu.org/

Parvez Mushraf: இந்தியாவுக்கு எதிராக போராட பாக். மக்களை தூண்ட வேண்டுமாம் ?

இஸ்லாமாபாத்: இந்தியாவுக்கு எதிராக போராட பாகிஸ்தான் மக்களை தூண்ட வேண்டும் என அந்நாட்டு முன்னாள் அதிபர் முஷாரப் கூறியுள்ளார்.< பாகிஸ்தானின் முன்னாள் அதிபரான முஷாரப் கடந்த 2008ஆம் ஆண்டு தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து அவர் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர் நாடு கடத்தப்பட்டார். அதன் பின்னர் 2013ஆம் ஆண்டு பாகிஸ்தான் திரும்பினார். தற்போது அவர் மீது 4 வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், ''காஷ்மீரில் பாகிஸ்தானுக்கும் பங்கு உள்ளது. காஷ்மீருக்காக இந்தியாவுக்கு எதிராக போராட பாகிஸ்தான் மக்களை நாம் தூண்டிவிட வேண்டும். 1999ஆம் ஆண்டு போரின் போது ஆயிரக்கணக்கான மக்கள் போராட தயாராக இருந்திருந்தால் இந்தியா நப்பாசையுடன் இருக்காது. பாகிஸ்தானும் அன்று திரும்பி இருக்காது. காஷ்மீரில் நாம் இந்தியர்களுடன் சண்டையிடுகிறோம். ராணுவம் முன் புறமும், பின்புறமும் இருக்கிறது. உள்நாட்டில் நாம் வலுவாக இருந்தால் யாருக்கும் நம்மை குறி வைக்கும் தைரியம் வராது. நாம் அனைவரும் முஸ்லிம்கள். நாம் மற்றொரு கன்னத்தை காட்ட கூடாது. நாம் மற்றவர் கன்னத்தில் அறைய வேண்டும். இந்திய பிரதமர் நரேந்திர மோடி முஸ்லிம்களுக்கும், பாகிஸ்தானுக்கும் எதிரானவர். அவர் இன்னும் மாறவில்லை.  பாகிஸ்தான் ராணுவத்தினர்கள்அந்த நாட்டை உருப்படவே  விடமாட்டர்கள். இவர்மீதே பல வழக்குகள் அதிலிருந்து மீள காணோம் ? இந்தியாவுக்கு எதிராக  விஷம் கக்கியே தங்கள்  வயிறு வளர்த்த கூட்டம்தான்  இது, பாகிஸ்தான் மக்கள் தற்போது கொஞ்சம் விழித்து விட்டார்கள். இந்த மாதிரி பப்பு எல்லாம் முன்ன மாதிரி  இப்ப வேகாது ?

Anoyara kartun மலாலாவின் 'நிஜ நாயகி'யாக திகழும் இந்திய இளம்பெண்!

அமைதிக்கான நோபல் பரிசு வென்றுள்ள தன்னை உலகமே கொண்டாடிக் கொண்டிருக்கும் வேளையில், மலாலாவோ மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஓர் இளம்பெண்ணை நிஜ நாயகியாகக் கொண்டாடுகிறார்.
இளம்பெண்கள், சிறுமிகள் கடத்தலை எதிர்த்துத் தொடர்ந்து போராடி வரும் அனோயாரா கடுன் என்ற 18 வயது பெண்தான் அந்த நாயகி.
மேற்கு வங்கத்தின் சந்தேஷ்காளி என்ற பகுதியைச் சேர்ந்த அனோயாரா, சக நண்பர்கள் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் உதவியுடன், தமது பகுதியில் நடக்கும் பெண் கடத்தல் மற்றும் குழந்தைத் திருமணங்களுக்கு எதிராக போராடி வருகிறார்.

ஆ.ராஜா எழுதும் புத்தகம் பலபேரின் முகத்திரையை கிழிக்கும் ? 2G பாஜகாவின் பிரமோத் மகாஜன் ,அருண் சோரி முதல் ......

  

The 2G spectrum scam is the BJP's favourite stick to beat the ruling combine but now the scam could boomerang on itself as the CBI has registered an FIR into spectrum allocation during BJP leader late Pramod Mahajan's tenure as telecom minister. CBI believes Pramod Mahajan allegedly caused a Rs 565 crore loss over 6 years.
the period of 2001-2007, starting with Mahajan's term as the telecom minister. Mahajan was replaced by Shourie in early 2003, while Maran was handed the steering of the telecom ministry after the UPA was voted to power at the Centre in May 2004.  http://articles.economictimes.indiatimes.com/2011-08-20/news/29909350_1_shourie-and-dayanidhi-maran-spectrum-scam-2g
'2ஜி' அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில், வெளிவராத உண்மைகள் குறித்து, புத்தகம் எழுதப் போவதாக, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள, முன்னாள் மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராஜா தெரிவித்து உள்ளார்.
நாட்டையே உலுக்கிய இந்த ஊழல் விவகாரம் தொடர்பாக, இவர் எழுதப் போகும் புத்தகம், பாஜக , காங்., மற்றும் தி.மு.க.,வில் பெரும் புயலை கிளப்பும் என, அஞ்சப்படுகிறது.காங்., தலைமையிலான, ஐ.மு., கூட்டணி ஆட்சியில், தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்தவர் ராஜா. தி.மு.க.,வை சேர்ந்த இவரது பதவிக் காலத்தில், தனியார் செல்போன் நிறுவனங்களுக்கு, '2ஜி' அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்டது.இதில், 1.76 கோடி ரூபாய் அளவுக்கு, வருவாய் இழப்பு நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
இதுகுறித்து, சி.பி.ஐ., நடத்திய விசாரணையில், ராஜா, தி.மு.க., எம்.பி., கனிமொழி, சாகித் பல்வா, கரீம் மொரானி உட்பட, 10 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டு, அவர்கள் மீது வழக்கு பதியப்பட்டது. 9 தனியார் நிறுவனங்கள் மீதும், குற்றம் சாட்டப்பட்டன.
ஏன் பிரமோத் மகாஜன் , அருண் ஜெட்லி தயாநிதி மாறன் பெயர்கள் சேர்க்க படவில்லை ?  வாஜ்பாய் காலத்தில இருந்து  ஆரம்பிக்கப்பா! இது முழுக்க முழுக்க ஆதிக்க ஜாதியினால் திராவிட கருத்துக்கும் தலித்துக்கும் எதிராக கதை வசனம் எழுதப்பட்ட திரைப்படம்தான் .

டில்லியில் மணிப்பூர் வாலிபர்கள் மீது கொடூர தாக்குதல்:தொடர்கின்றன இனவெறி சம்பவங்கள்


புதுடில்லி:டில்லி அருகே மணிப்பூர் வாலிபர்கள் இருவர், ஏழு பேர் கும்பலால் கொடூரமாகத் தாக்கப்பட்டனர். இதனால், டில்லியில் இனவெறி தாக்குதல் சம்பவங்கள் தொடர்வதாக, சமூக ஆர்வலர் கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
கடந்த ஜனவரியில், டில்லி யின் லஜ்பத் நகர் பகுதியில், 19 வயதான, நிடோ டேனியம் என்ற வாலிபர், கடைக்காரர்களுடன் ஏற்பட்ட தகராறில், இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டு பலியானார். அருணாச்சல பிரதேச காங்., எம்.எல்.ஏ.,வின் மகன் இவர்.இதன்பின், பிப்., மாதத்தில், மணிப்பூரை சேர்ந்த பெண்கள் இருவர், தெற்கு டில்லி பகுதி யில், சிலரால் தாக்கப்பட்டனர். மே மாதத்தில், நாகாலாந்தை சேர்ந்த, சட்டக் கல்லுாரி மாணவி ஒருவர், வழக்கறிஞர்கள் சிலரால் மானபங்கம் செய்யப்பட்டார். ஜூலையில், வடகிழக்கு மாநிலத்தை சேர்ந்த தம்பதியர் குர்காவ்னில் தாக்கப்பட்டனர்.
இவை எல்லாம், வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு எதிரான, இனவெறித் தாக்குதல்களாகவே கருதப்பட்டது.இந்நிலையில், டில்லி அருகேஉள்ள குர்காவ்ன் சிக்கந்தர்பூரில், மணிப்பூர் மாநில வாலிபர்கள் இருவர், ஏழு பேர் கும்பலால், கிரிக்கெட் மட்டை மற்றும் கம்புகளால் கொடூரமாக தாக்கப்பட்டு உள்ளனர். இதெல்லாம் மோடி அலையின் by product தான் . அடிப்படைவாதம் தீவிரவாதம்  எல்லாமே  சகிப்புத்தன்மை இல்லாமையின் வெளிப்பாடுதான் , இதுதானே பாஜக வின் அடித்தளம் .இன்னும் நெறைய கூத்து அரங்கேறும் போல தெரிகிறது, இதுபத்தி எல்லாம் பாப்பானுக்க மூச்சு விடமாட்டனுக

கர்நாடக IAS அதிகாரிமீது சக ஊழியர்களும் தற்கொலை செய்தவரின் உறவினர்களும் தாக்குதல் !

கர்நாடக மாநிலம், மைசூரில் பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர், 20 பேர் கொண்ட கும்பலால் தாக்கப்பட்டார்.மைசூரில் உள்ள நிர்வாக பயிற்சி நிறுவனத்தின் தலைமை இயக்குநராக ரேஷ்மி என்பவர் பணியாற்றி வருகிறார். இந்த நிறுவனத்தில் பணியாற்றி வெங்கடேஷ் என்ற ஊழியர், நேற்று காலை அங்குள்ள தண்ணீர் தொட்டியில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். வேலை பளு காரணமாக அவர் தற்கொலை செய்துகொண்டதாக புகார் எழுந்தது.இந்தநிலையில் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக சென்ற ரேஷ்மியை வெங்கடேஷ் உறவினர்கள் சூழ்ந்துகொண்டு தாக்கினார்கள். அப்போது ஒரு பெண் ரேஷ்மியை காலணியால் அடிக்க முயன்றார். எனினும் அங்கிருந்த பாதுகாவலர்களும், காவல்துறையினரும் கடுமையாக போரடி ரேஷ்மியை பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.இந்த சம்பவம் தொடர்பாக 19 பேர் கைது செய்யப்பட்டனர். nakkheeran.in

வியாழன், 16 அக்டோபர், 2014

கௌரவக்கொலைகளும் பெண்ணின் திருமண வயதும்! ஆதிக்க ஜாதியின் அலங்கோலம் ஒரு கௌரவமா ?

* மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தாலுகாவைச் சேர்ந்த திலீப்குமார் என்ற தலித் இளைஞருக்கும், விமலாதேவி என்ற பெண்ணுக்கும் திருமணம் நடந்த விவகாரத்தில் விமலாதேவியை அவரது பெற்றோர்கள் கௌரவக் கொலை செய்ததாக புகார்.
* 'பெண்ணின் திருமண வயதை 18ல் இருந்து 21ஆக உயர்த்தவேண்டும். 18 வயது பெண்கள் திருமணம் செய்வதற்கான பக்குவமான வயது அல்ல’ என்று மதுரை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு. சமீபத்திய மேற்சொன்ன இரண்டு செய்திகள் நம் சமூகத்தின் மனநிலை குறித்து அறிய உதவுகின்றன. ஏற்கனவே சாதிமறுப்புத்திருமணங்கள் தடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, பல்வேறு சாதி அமைப்புகள் கூட்டமைப்பாக இணைந்து, சாதிமறுப்பு காதல் திருமணங்களுக்கு எதிராகப் பரப்புரை செய்துவருகின்றனர்.
இந்நிலையில் தற்போது வெளியாகி உள்ள மதுரை உயர்நீதிமன்றத் தீர்ப்பை மகிழ்ச்சியுடன் தங்கள் வாதங்களுக்குப் பயன்படுத்திக்கொள்கின்றனர்.
“18 வயது என்பது பெண்கள் மனமுதிர்ச்சி அடையாத, பக்குவம் அடையாத வயது. இந்த வயதில் அவர்கள் தங்கள் வாழ்க்கைத்துணையைத் தேர்ந்தெடுப்பது பொருத்தமானது அல்ல. எளிதில் உணர்ச்சிவசப்பட்டு காதலில் விழும் பெண்கள், பெற்றோரை மீறித் திருமணம் செய்து தங்கள் எதிர்காலத்தைத் தொலைக்கின்றனர்” என்ற இவர்களது குரலுக்கு சமூகத்தில் கணிசமான வரவேற்பு மனநிலையும் உள்ளது.

அதிமுக எம்எல்ஏக்கள் மீது உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் சட்ட பஞ்சாயத்து இயக்கம் முடிவு

பஞ்சாயத்து இயக்கத்தின் செயலாளர் முகம்மது இலியாஸ் மற்றும் நிர்வாகிகள் சென்னையில் வியாழக்கிழமை செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது,>முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலரலிதா வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் பெங்களுர் சிறப்பு நீதிமன்றம் 4 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூபாய் 100 கோடி அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.இத்தீர்ப்பை கண்டித்து அதிமுகவினர் தமிழகம் முழுவதும் பல போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிரதங்கள் நடத்தினர். இந்த போராட்டங்களில் பல அனுமதிக்கப்படாத இடங்களில், அனுமதி வாங்காமல் நடத்தினர். இவர்கள் மீது காவல்துறை எந்த பெரிய நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை. இது சம்மந்தமாக சென்னை உயர்நீதிமன்றமும் தமிழக அரசிடம் கேள்வி கேட்டுள்ளது.

ராமநாதபுரம் காவல் நிலைய கொலை: நீதி விசாரணைக்கு முதல்வர் பன்னீர்செல்வம் உத்தரவு!

ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டினம் காவல் நிலைய துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக, நீதி விசாரணைக்கு முதல்வர் பன்னீர் செல்வம் உத்தரவிட்டுள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டினம் காவல் நிலைய சப். இன்ஸ்பெக்டரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சையது முகம்மது என்ற வாலிபர் சுட்டுகொல்லப்பட்டார். நீதிபதியின் விசாரணைக்கு பின் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த சையது முகம்மதுவின் உடல் நேற்று மாலை பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பிரேத பரிசோதனைக்கு பின் உடலை செய்யது முகம்மதுவின் உறவினர்களிடம் போலீஸார் ஒப்படைக்க முயன்றனர்.  கொலைவழக்கு பதிவு செய்க ஆனால், சையது முகம்மதுவை சுட்டுகொன்ற போலீஸ் எஸ்.ஐ. காளிதாஸ் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும். அவரை கைது செய்து பணி நீக்கம் செய்ய வேண்டும். பலியான செய்யது முகம்மதுவின் குடும்பத்திற்கு அரசு நிவாரண தொகை வழங்க வேண்டும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி உடலை வாங்க மறுத்து விட்டனர்.

Mineral sand கொள்ளை வைகுண்டராஜன் ஜெ.வின் முக்கிய பினாமி!- நீதிபதி குன்ஹாவினால் வெளிவந்த மற்றொரு உண்மை !ஆம் ஆத்மி கட்சி

சென்னை: தாது மணல் கொள்ளையில் ஈடுபட்டுள்ள வைகுண்டராஜன் ஜெயலலிதாவின் முக்கிய பினாமி என்பதை சொத்துக் குவிப்பு வழக்கில் நீதிபதி மைக்கேல் குன்ஹாவின் தீர்ப்பு நிரூபிக்கிறது என்று ஆம் ஆத்மி கட்சி கூறியுள்ளது. இது குறித்து ஆம் ஆத்மி கட்சியின் தமிழக பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கை: மைக்கேல் குன்ஹாவின் சொதுக் குவிப்பு வழக்கின் தீர்ப்பின் மூலமாக ஜெயலலிதாவின் ஒரு மிகப் பெரிய பினாமியாக தாது மணல் கொள்ளையில் ஈடுபட்டுள்ள எஸ். வைகுண்டராஜன் உள்ளார் என்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. குன்ஹாவின் தீர்ப்பில் ஜெயலலிதா சொத்துக் குவிக்க 32 பினாமி நிறுவனங்களை உபயோகித்ததும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் முக்கியமான நிறுவனமாக திகழ்வது ரிவர்வே அக்ரோ ப்ராடக்ஸ்ட் ப்ரைவேட் லிமிடெட் ஆகும். இந்த நிறுவனம் மூலம் ஜெயலலிதா 1,190 ஏக்கர் நிலம் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் 1994ம் ஆண்டு வாங்கியுள்ளார். ஜெயலலிதா தனது ஊழல் பணத்தை இந்த நிறுவனத்திற்கு கொடுத்து அதன் மூலமாக வாங்கப்பட்டது என்பதும் ஊர்ஜிதமாகியுள்ளது. இந்த 1190 ஏக்கர் நிலம் மற்றும் இப்படி சட்ட விரோதமாக வாங்கப்பட்ட அனைத்து நிலங்களையும் அரசுடமையாக்க தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் வெளியுலகத்துக்குத் தெரியாத உண்மை என்னவென்றால் இந்த ரிவர்வே அக்ரோ நிறுவனத்தின் இயக்குனராக 2003ம் ஆண்டு முதல் இன்று வரை இருப்பவர் தாது மணல் கொள்ளையில் ஈடுபட்டிருக்கும் எஸ்.வைகுண்டராஜன் தான் (ஆதாரம்- 1). அவர் தான் இந்த 1190 ஏக்கர் நிலத்தை பாதுகாத்து வந்தவர். ஜெயலலிதா அவர்கள் வைகுண்டராஜனையும் அவரது நிறுவனமான விவி.மினரல்ஸையும் காப்பாற்ற கடந்த 1 வருடமாக போராடி வருகிறார்.

Brittany Maynard தவிர்க்கவே முடியாத மரணத்தை மகிழ்வோடு வரவேற்க தயாராகும் அமெரிக்க இளம் பெண் !

வாஷிங்டன்: கணவனும், தாயும் அருகருகே படுத்திருக்க, பின்னணியில் இசை ஒலிக்க ஆனந்தமாக உயிரைவிட முடிவு செய்துள்ளார் 29வயது இளம் அமெரிக்க பெண். மூளையில் உருவாகிய கொலைகார கட்டி, கொஞ்சம், கொஞ்சமாக வலியோடு உயிரையும் எடுப்பதை தாங்கிக்கொள்ள முடியாமல் நோயை கொல்ல தனது உயிரை தியாகம் செய்யப்போகிறார் இந்த பெண். அமெரிக்காவின் ஒரேகான் மாகாணத்தை சேர்ந்த 29 வயது பிரிட்னி மேனார்ட், கடந்த ஆண்டு டேனை திருமணம் செய்தபோது, எல்லா பெண்களையும்போல, தானும் பல ஆண்டுகள் கணவனோடு மகிழ்ச்சியாக வாழ்ந்து, பல குழந்தைகளை பெறுவோம் என்றுதான் நினைத்திருந்தார். ஆனால் கடந்த ஜனவரியில், தலைவலிக்காக எம்ஆர்ஐ ஸ்கேன் செய்து பார்த்தபோது மூளையில் கட்டி வளர்ந்திருப்பதாக டாக்டர் சொன்னபோது அவரது கனவுகள் ஒரே நிமிடத்தில் பொசுங்கி போகின.

ஒப்பாரியில் எனக்கே முதலிடம் ! அதிமுகவில் இன்றைய அரசியல் தகுதி ! எனக்குதாய்ன் சீட்டு ! அப்புறம் அள்ளிக்கோ அள்ளிக்கோ !

அம்மா போஸ்டர்டேய்! அம்மாவ வெளியுல விடுங்கடா!” என்று சுற்றும் உருட்டுக்கட்டைகளின் உணர்ச்சிகளுக்கும், “மெகா! கூட்டணி அமைத்தாலும் அம்மாவை வெல்ல முடியாது!” என்று கொக்கரிக்கும் அறிவாளிக் கட்டைகளுக்கும் ஒரே புத்திதான்!
சொத்துக்குவிப்பு வழக்கில் – தண்டனைக் கைதியாக ஜெயலலிதா அறிவிக்கப்பட்ட அடுத்த கணத்தில் ஒரு அ.தி.மு.க.காரர் “என்னமோ, விசயம் தெரியாம அம்மா மேல கைய வச்சிட்டானுங்க, என்னன்ன கதி ஆவப் போவுது, பாருங்க, இன்னமதான் கதையே இருக்கு!” என்றார் சஸ்பென்சாக.
“என்னமோ, விசயம் தெரியாம அம்மா மேல கைய வச்சிட்டானுங்க, என்னன்ன கதி ஆவப் போவுது, பாருங்க, இன்னமதான் கதையே இருக்கு!”
அது கட்சி வட்டத்தைத் தாண்டி தினமணி வைத்தி, தினத்தந்தி பாண்டே, தமிழ் இந்து சமஸ், சிற்பி பாலசுப்ரமணியன் என கதிகலக்கும் என கனவிலும் நினைக்கவில்லை! தெய்வமாயிற்றே! சந்து முனீஸ்வரன் சமஸ் முதல் ஜகஜ்ஜால கில்லாடி வைத்தி, பாதாள பைரவர் சிற்பி வரை அகிலாண்டேஸ்வரி, அகிலமே வியக்கும் ஊழல்புரீஸ்வரிக்குள் அடக்கம் என்பதை அம்மாவின் கைது காட்டிவிட்டது.
“தெய்வத்துக்கே தண்டனையா?” என்று போஸ்டர் அடித்து பொங்கிய ரத்தத்தின் ரத்தங்களும், “இடும்பைக்கு இடும்பை படுப்பர்!” என்ற வள்ளுவர் குறளை மாமிக்கு ஒட்டியாணமாக்கிய வைத்தியும், “அன்று நகைத்தாளடா – என் மாமனே அவளை என் ஆளாக்கினாய்” என்ற பாரதியின் பாஞ்சாலி சபதத்தை அம்மாவுக்கு பதவுரையாக்கிய சிற்பியும் ஒரே சாம்பிராணியின் இரு மணங்கள்.

அர்ச்சனா ராமசுந்தரம் புகார் மீது நடவடிக்கை ! உச்ச நீதிமன்றம் உத்தரவு !

உள்துறை அமைச்சகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
ஐபிஎஸ் அதிகாரி அர்ச்சனா ராமசுந்தரத்தின் புகார் மீது உடனடியாக மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது மத்திய அரசின் பணிக்கு நியமிக்கப்பட்டிருப்பதால் மாநில அரசால் தன்னை பணியிடை நீக்கம் செய்ய முடியாது என்று அர்ச்சனா ராமசுந்தரம் வாதத்தை முன் வைத்தார்.  ஆனால், மாநில அரசு இடைநீக்கம் செய்த அதிகாரிக்கு மத்திய அரசு எப்படி பதவி உயர்வு அளிக்க முடியும் என்று தமிழக அரசு வழக்குரைஞர் வாதாடினார்.ஐபிஎஸ் அதிகாரி அர்ச்சனா ராமசுந்தரத்தின் மனுவை விசாரித்து, இரு தரப்பு வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்றம், அர்ச்சனா ராமசுந்தரம் மத்திய அரசுப் பணிக்கு நியமிக்கப்பட்டிருப்பது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு எடுக்க உத்தரவிட்டுள்ளது. மேலும், அடுத்த கட்ட வழக்கு விசாரணையை 2015ஆம் ஆண்டு மார்ச் மாதம் 2ம் வாரத்துக்கு ஒத்தி வைத்தும் உத்தரவு பிறப்பித்துள்ளது  nakkheeran.in

சத்திஷ்கர் பீகாரில் சிறுவர்கள் கடத்தபடுகிறார்கள் . கிட்னி வியாபாரம் ? கொத்தடிமை ? பிச்சை பிசினெஸ் ??

சத்தீஷ்கர் மற்றும் பீகார் மாநிலங்களில் அடிக்கடி சிறுவர்கள் மாயமானதாக போலீசில் புகார் செய்யப்பட்டு வந்தன. அவர்கள் கதி என்னவென்று தெரியாததாலும் அவர்களை கண்டு பிடிக்கும் முயற்சியில் ஈடுபடக்கோரியும் சுப்ரீம் கோர்ட்டில் பொது நலன் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இன்று இந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது நாடு முழுவதும் சிறுவர்கள் காணாமல் போவது குறித்து நீதிபதிகள் கவலை தெரிவித்தனர்.
இதுகுறித்து பதில் அளிக்குமாறு பீகார் மற்றும் சத்தீஷ்கர் மாநில தலைமை செயலாளர்கள், போலீஸ் டி.ஜி.பி.க்கள் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தர விட்டனர்.maalaimalar.com

12 for 25 ? போர்னோகிராபி ரேஞ்சுக்கு படம் எடுத்துள்ள ராம் கோபால் வர்மா ! ஸ்ரீதேவியின் ஆட்சேபம் ?

சாவித்ரி டூ ஸ்ரீதேவி! வர்மாவின் வில்லங்கம்!பரபரப்புக்கு பஞ்சமில்லாத திரையுலக பிரபலங்களில் இயக்குன ராம் கோபால் வர்மாவும் ஒருவர். இவர் இயக்கியுள்ள சாவித்ரி திரைப்படம் கிளப்பியுள்ள பிரச்சனைகள் கொஞ்சமில்லை. 12 வயது மதிக்கத்தக்க சிறுவன் 25 வயது பெண்ணுடன் தவறாக பழகுவதைப் போன்ற ஒரு வில்லங்கமான கதையை படமாக எடுத்துவைத்துக்கொண்டு ரிலீஸ் செய்தே தீருவேன் என அடம்பிடிக்கிறார் மனுஷன். இது மிகவும் மோசமான முயற்சி என்று கண்டன கோஷங்களும், சிறுவர்களின் மனத்தில் நஞ்சை கலக்கும் முயற்சி என்றும் பல அமைப்பினரும் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர். இதற்கிடையில் சாவித்ரி என்ற பெயரை வைக்கக்கூடாது என்று சிலர் போர்க்கொடி தூக்கினர். இது தான் சமயம் என்று ஸ்ரீதேவி என்று படத்திற்கு பெயரை மாற்றிவிட்டார். பல பேட்டிகளில் திரைத்துறையில் எனக்கு பிடித்த நடிகை ஸ்ரீதேவி தான் என்று ராம்கோபால் வர்மா கூறியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.இப்படி பல தரப்பினரும் எதிர்க்கும் ஒரு படத்திற்கு தனது பெயரை வைத்திருப்பது, தனது மரியாதைக்கு பங்கம் விளைவிக்கும் செயல் என்றும், தனது பெயரை வைக்கக் கூடாது எனவும் நோட்டீஸ் ஒன்றை அவருக்கு அனுப்பியிருக்கிறார் ஸ்ரீதேவி.இதுகுறித்து ராம் கோபால் வர்மா “ஸ்ரீதேவி என்று பெயர் வைத்ததால் என் படம் அவர்களை பற்றிய படம் ஆகிவிடாது. இந்த கதைக்கும் அவருக்கும்ச் அம்மந்தம் இல்லை. இந்த படம் ஒரு சிறுவனுக்கும் 25 வயது பெண்ணிற்கும் இடையே ஏற்படும் ஓர் உணர்வு பற்றிய படம். என் வாழ்வில் நடந்த உண்மையான கதை” என்று கூறியிருக்கிறார். வம்பை விலை கொடுத்து வாங்குவதில் வர்மாவுக்கு நிகர் வேறு எவர். nakkheeran.in

Facebook கலைஞரின் முகநூல் 2.65 லட்சம் விருப்பங்களுடன் முதலிடத்தை பிடித்துள்ளது !

சமூக வலைதள பிரச் சாரத்தில் திமுக தலைவர் கலைஞரின் அதிகாரபூர்வ முகநூல் பக்கம், 2.65 லட்சம் விருப்பங்களுடன் (லைக்ஸ்) முன்னணி வரி சையில் உள்ளது. தகவல் களை உடனடியாக பதிவ திலும் மற்ற இளம் அரசி யல் தலைவர்களுக்கு சவால் விடும் வகையில் செயல் படுகிறது.
சமூக வலைதளங்க ளின் தாக்கம், இப்போது அரசியலிலும் பெரும் முக்கியத்துவம் வாய்ந்த தாக மாறிவிட்டது. இத னால், சமூக வலைதள பக்கங்களில் இணையும் அரசியல்வாதிகளின் எண்ணிக்கையும் அதிக ரித்து வருகிறது.
தமிழகத்தில் அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்களின் சமூக வலைதள பக்கங்களில், திமுக தலைவர் கலைஞ ரின் பக்கம் (kalaignar karunanidhi) https://www.facebook.com/Kalaignar89 உச்சத்தை தொட்டுள்ளது.

வயது ஏறாது ! இளமைக்கு 25 வழிகள்!

பிரேமா
யாராவது உங்களை 'அங்கிள்’ என்றோ 'ஆன்ட்டி’ என்றோ கூப்பிட்டால், நீங்கள் வருத்தப்படத் தொடங்குகிறீர்களா? ஆண்டொன்று போனால் வயதொன்று போகும். ஆனாலும் வயதாவதை ஒப்புக்கொள்ளாமல் மனசு மல்லுக்கட்டும். ''சான்ஸே இல்லை, அன்னைக்குப் பார்த்த மாதிரியே நதியா இன்னைக்கும் இருக்காங்க' என்று பெருமூச்சுவிடாத பெண்களோ, ''சரத்குமாருக்கு 60 வயசு ஆச்சாம். எப்படிய்யா உடம்பை மெயின்டெய்ன் பண்றாரு' என்று பொறாமையோடு புலம்பாத ஆண்களோ இருக்கிறார்களா என்ன?
அவர்களுக்காக மூப்பைத் தள்ளிப் போட முத்தான டிப்ஸ்களை அள்ளி வழங்குகிறார் சென்னை அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துக் கல்லூரியின் இணைப் பேராசிரியரும் வாழ்வியல்கலை நிபுணருமான டாக்டர் எஸ்.டி.வெங்கடேஸ்வரன்.
1 'ஆன்ட்டி ஏஜிங்’ என்றாலே 'ஆன்டிஆக்ஸிடன்ட்’தான் நினைவுக்கு வரவேண்டும்.  வைட்டமின் ஏ (பீட்டா கரோட்டின்), சி மற்றும் இ, துத்தநாகம், செலினியம் இவை அனைத்தையுமே ஆன்டிஆக்ஸிடன்ட் என்கிறது நவீன அறிவியல். இந்தச் சத்துக்கள் நிரம்பிய காய்கள், பழங்கள், தானியங்களை எடுத்துக் கொள்ளும்போது, உங்கள் முதுமையை இன்னும் கொஞ்சம் தள்ளிப்போடலாம்.

மகாராஷ்டிரா ஹரியானாவில் அறுதி பெரும்பான்மை யாருக்கும் இல்லை ? Exit கருத்து கணிப்பில் பாஜாகவுக்கு அதிக இடங்கள் கிடைக்கும் !

வாக்குச்சாவடி அதிகாரிகள் மகாராஷ்டிரத்தில் வாக்கு எந்திரங்களை சரிபார்க்கின்றனர். | கோப்புப் படம்
வாக்குச்சாவடி அதிகாரிகள் மகாராஷ்டிரத்தில் வாக்கு எந்திரங்களை சரிபார்க்கின்றனர். மகாராஷ்டிரம் மற்றும் ஹரியாணா மாநில சட்டப்பேரவைக்கான வாக்குப் பதிவுகள் இன்று நடைபெற்றன. ஹரியாணாவில் 73% வாக்குகள் பதிவாகியுள்ளது. அக்டோபர் 19ஆம் தேதி வாக்குகள் எண்ணிக்கை நடைபெறும்.; இந்த நிலையில் தேர்தல் வாக்குப்பதிவுகள் முடிந்ததற்கு பிறகான கருத்துக் கணிப்பில் இரு மாநிலங்களிலும் அதிக இடங்களில் பாஜக வெற்றி பெறும் ஆனாலும் அறுதிப் பெரும்பான்மை கிடைப்பது அரிது என்று தெரியவந்துள்ளது. மகாராஷ்டிரத்தை 15 ஆண்டுகளாக ஆட்சி செய்த காங்கிரஸ்-என்.சி.பி. கூட்டணி இந்தத் தேர்தலில் உடைந்து போனதால் கடுமையாகத் தோல்வியை எதிர்நோக்குகிறது என்றும் சிவசேனா இரண்டாவது பெரிய கட்சியாக வெற்றி பெறும் என்றும் இந்தக் கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் ஆந்திரா என்ஜினியருக்கு மரணதண்டனை ! பணத்துக்காக நண்பனின் பாட்டியையும் குழந்தையையும் கொன்றார்.

Nicknames used in the ransom note by the 26-year-old software engineer who kidnapped and killed 10-month-old Saanvi Venna gave the police critical clues to help nab him, according to court documents. For $50,000, a 26-year-old software engineer from Andhra Pradesh kidnapped and killed his family friend’s 10-month-old baby Saanvi, whose body he stuffed in a suitcase, but nicknames used by him in the ransom note provided critical clues that helped police nab him. அமெரிக்காவில் பத்து மாதக் குழந்தையையும், அதன் பாட்டியையும் கொலை செய்த குற்றச்சாட்டில், இந்தியர் ஒருவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்திலுள்ள கிங் ஆஃப் பிரஷியா நகரில், தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றி வந்தவர் எண்டமூரி ரகுநந்தன் (28). இந்தியாவைச் சேர்ந்த மற்றொரு தகவல் தொழில்நுட்பப் பணியாளரின் 10 மாதக் குழந்தையான சான்வி வென்னாவை அவர் பணத்துக்காக 2012-ஆம் ஆண்டு கடத்த முயன்றதாகக் கூறப்படுகிறது.
அதற்கு குழந்தையின் பாட்டி சத்யவதி வென்னா (62) எதிர்ப்பு தெரிவித்ததால் அவரைக் கத்தியால் குத்தியும், பின்பு அந்தக் குழந்தையை, கழுத்தை நெரித்தும் ரகுநந்தன் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.. dinamani.com