வெள்ளி, 17 அக்டோபர், 2014

கர்நாடக IAS அதிகாரிமீது சக ஊழியர்களும் தற்கொலை செய்தவரின் உறவினர்களும் தாக்குதல் !

கர்நாடக மாநிலம், மைசூரில் பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர், 20 பேர் கொண்ட கும்பலால் தாக்கப்பட்டார்.மைசூரில் உள்ள நிர்வாக பயிற்சி நிறுவனத்தின் தலைமை இயக்குநராக ரேஷ்மி என்பவர் பணியாற்றி வருகிறார். இந்த நிறுவனத்தில் பணியாற்றி வெங்கடேஷ் என்ற ஊழியர், நேற்று காலை அங்குள்ள தண்ணீர் தொட்டியில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். வேலை பளு காரணமாக அவர் தற்கொலை செய்துகொண்டதாக புகார் எழுந்தது.இந்தநிலையில் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக சென்ற ரேஷ்மியை வெங்கடேஷ் உறவினர்கள் சூழ்ந்துகொண்டு தாக்கினார்கள். அப்போது ஒரு பெண் ரேஷ்மியை காலணியால் அடிக்க முயன்றார். எனினும் அங்கிருந்த பாதுகாவலர்களும், காவல்துறையினரும் கடுமையாக போரடி ரேஷ்மியை பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.இந்த சம்பவம் தொடர்பாக 19 பேர் கைது செய்யப்பட்டனர். nakkheeran.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக