வெள்ளி, 17 அக்டோபர், 2014

டில்லியில் மணிப்பூர் வாலிபர்கள் மீது கொடூர தாக்குதல்:தொடர்கின்றன இனவெறி சம்பவங்கள்


புதுடில்லி:டில்லி அருகே மணிப்பூர் வாலிபர்கள் இருவர், ஏழு பேர் கும்பலால் கொடூரமாகத் தாக்கப்பட்டனர். இதனால், டில்லியில் இனவெறி தாக்குதல் சம்பவங்கள் தொடர்வதாக, சமூக ஆர்வலர் கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
கடந்த ஜனவரியில், டில்லி யின் லஜ்பத் நகர் பகுதியில், 19 வயதான, நிடோ டேனியம் என்ற வாலிபர், கடைக்காரர்களுடன் ஏற்பட்ட தகராறில், இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டு பலியானார். அருணாச்சல பிரதேச காங்., எம்.எல்.ஏ.,வின் மகன் இவர்.இதன்பின், பிப்., மாதத்தில், மணிப்பூரை சேர்ந்த பெண்கள் இருவர், தெற்கு டில்லி பகுதி யில், சிலரால் தாக்கப்பட்டனர். மே மாதத்தில், நாகாலாந்தை சேர்ந்த, சட்டக் கல்லுாரி மாணவி ஒருவர், வழக்கறிஞர்கள் சிலரால் மானபங்கம் செய்யப்பட்டார். ஜூலையில், வடகிழக்கு மாநிலத்தை சேர்ந்த தம்பதியர் குர்காவ்னில் தாக்கப்பட்டனர்.
இவை எல்லாம், வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு எதிரான, இனவெறித் தாக்குதல்களாகவே கருதப்பட்டது.இந்நிலையில், டில்லி அருகேஉள்ள குர்காவ்ன் சிக்கந்தர்பூரில், மணிப்பூர் மாநில வாலிபர்கள் இருவர், ஏழு பேர் கும்பலால், கிரிக்கெட் மட்டை மற்றும் கம்புகளால் கொடூரமாக தாக்கப்பட்டு உள்ளனர். இதெல்லாம் மோடி அலையின் by product தான் . அடிப்படைவாதம் தீவிரவாதம்  எல்லாமே  சகிப்புத்தன்மை இல்லாமையின் வெளிப்பாடுதான் , இதுதானே பாஜக வின் அடித்தளம் .இன்னும் நெறைய கூத்து அரங்கேறும் போல தெரிகிறது, இதுபத்தி எல்லாம் பாப்பானுக்க மூச்சு விடமாட்டனுக

தாக்குதல் நடத்திய நபர்களில் ஒருவர், 'வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்தவர்கள் எல்லாம், சிக்கந்தர்பூரை விட்டு வெளியேற வேண்டும். இல்லையெனில், நடப்பதே வேறு என்றும், மணிப்பூர் மாநிலத்தில் இருந்து யாராவது வந்தால், அவர்களை கொன்று விடுவோம்' என்றும் மிரட்டியதாக, பாதிக்கப்பட்ட மணிப்பூர் வாலிபர்கள் தெரிவித்து உள்ளனர்.
இதே போல, பெங்களூருவிலும் கன்னட மொழி பேசாததற்காக, வடகிழக்கு மாநில இளைஞர் ஒருவர் தாக்கப்பட்டிருந்தார்.டில்லியில், ஜன., மாதம் நிகழ்ந்த, அருணாச்சல பிரதேச மாநில வாலிபர் நிடோவின் மரணத்திற்குப் பின், பெரிய அளவில் போராட்டங்கள் நடந்தன. இனவெறித் தாக்குதல் களை, போலீசார் தடுக்க வேண்டும் என்றும், பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர்.ஆனாலும், இனவெறி தாக்குதல்கள் நின்றபாடில்லை; தொடர்கின்றன என, சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
பெங்களூருக்கு மறுநாள்...கர்நாடக மாநிலம் பெங்களூரில், மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த, 26 வயது பொறியியல் கல்லுாரி மாணவர், நேற்று முன்தினம் கும்பல் ஒன்றால் தாக்கப்பட்டார். கன்னடம் பேசச் சொல்லி, அந்த கும்பல் வற்புறுத்தியதாகவும், தனக்கு பேசத்தெரியாது என, அந்த மாணவர் சொன்னதால், கும்பல் தாக்கியதாகவும் தகவல் வெளியானது. இந்தச் சூழ்நிலையில், டில்லி அருகே நேற்று மணிப்பூர் மாணவர்கள் தாக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தினமலர்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக