சனி, 18 அக்டோபர், 2014

Bihar CM Jiten Ram Manjhi ஒரு இந்தியன் தாத்தா ? அரசு டாக்டர்கள் ஏழைகளை புறக்கணித்தால் கைகளை வெட்டுவேன் என்கிறார் !


பீகார் முதல்–மந்திரி ஜிதன்ராம்மாஞ்சி. இவர் ஏற்கனவே சர்ச்சை அளிக்கும் வகையில் பேசி இருக்கிறார். தற்போது மீண்டும் ஒரு சர்ச்சையை கிளப்பி உள்ளார். ஏழைகளை புறக்கணித்தால் கைகளை வெட்டுவோம் என்று அரசு டாக்டர்களுக்கு அவர் எச்சரிக்கை விடுத்து உள்ளார். சாம்பரான் மாவட்டம் மொதிஹரி பகுதியில் ஆஸ்பத்திரி திறப்பு விழா நடந்தது. இதில் பீகார் முதல்–மந்திரி ஜிதன்ராம்மாஞ்சி கலந்து கொண்டார். பின்னர் நடந்த பொதுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:–
நான் சாதாரண ஏழை குடும்பத்தில் இருந்து வந்துள்ளேன். இதனால் அவர்களது நிலைமை பற்றி எனக்கு நன்றாக தெரியும். அரசு டாக்டர்கள் ஏழைகளுக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்க வேண்டும். அவர்களை புறக்கணிக்க கூடாது. ஏழைகளுக்கு சிகிச்சை அளிக்க மறுத்தால் அரசு டாக்டர்களின் கைகளை வெட்டுவோம்.
இதனால் ஏற்படும் எந்த விளைவுகளையும் சந்திக்க நான் தயாராக இருக்கிறேன். ஆனால் டாக்டர்கள் ஏழை மக்களின் வாழ்க்கையில் விளையாடுவதை அனுமதிக்க முடியாது.  இந்த பீகார் முதலமைச்சர்தான் நிஜ இந்தியன் தாத்தா , இவரு வரணுமே ? இங்கே ரோம்பதாய்ன் ஆட்டம் போடுதாக !

நான் சமீபத்தில் தான் மருத்துவ ஊழலில் ஈடுபட்ட மருத்துவ அதிகாரி மீது நடவடிக்கை எடுத்தேன். இதே போல சரியாக பணி செய்யாத பாட்னா மருத்துவ கல்லூரி டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுத்து இருக்கிறேன்.
இவ்வாறு ஜிதன்ராம்மாஞ்சி பேசியுள்ளார்.
பீகார் முதல்–மந்திரியின் இந்த சர்ச்சைக்குரிய பேச்சுக்கு மாநில பா.ஜனதா கண்டனம் தெரிவித்துள்ளது.
மாநில பா.ஜனதா தலைவர் ஹிரேந்திரா பாண்டே கூறும்போது முதல்–மந்திரியின் இந்த பேச்சு அதிர்ச்சி அளிக்கிறது. சமீபகாலமாகவே அவர் வன்முறையை தூண்டும் வகையில் தான் பேசுகிறார். முதல்–மந்திரியான ஜிதன்ராம்மாஞ்சி கண்டிப்பாக வாயை திறக்காமல் இருப்பதே நல்லது என்றார்.
மேலும் இது தொடர்பாக பீகார் முதல்–மந்திரி மீது வழக்கு தொடர போவதாகவும் பா.ஜனதா அறிவித்து உள்ளது. maalaimalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக