வியாழன், 16 அக்டோபர், 2014

அர்ச்சனா ராமசுந்தரம் புகார் மீது நடவடிக்கை ! உச்ச நீதிமன்றம் உத்தரவு !

உள்துறை அமைச்சகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
ஐபிஎஸ் அதிகாரி அர்ச்சனா ராமசுந்தரத்தின் புகார் மீது உடனடியாக மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது மத்திய அரசின் பணிக்கு நியமிக்கப்பட்டிருப்பதால் மாநில அரசால் தன்னை பணியிடை நீக்கம் செய்ய முடியாது என்று அர்ச்சனா ராமசுந்தரம் வாதத்தை முன் வைத்தார்.  ஆனால், மாநில அரசு இடைநீக்கம் செய்த அதிகாரிக்கு மத்திய அரசு எப்படி பதவி உயர்வு அளிக்க முடியும் என்று தமிழக அரசு வழக்குரைஞர் வாதாடினார்.ஐபிஎஸ் அதிகாரி அர்ச்சனா ராமசுந்தரத்தின் மனுவை விசாரித்து, இரு தரப்பு வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்றம், அர்ச்சனா ராமசுந்தரம் மத்திய அரசுப் பணிக்கு நியமிக்கப்பட்டிருப்பது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு எடுக்க உத்தரவிட்டுள்ளது. மேலும், அடுத்த கட்ட வழக்கு விசாரணையை 2015ஆம் ஆண்டு மார்ச் மாதம் 2ம் வாரத்துக்கு ஒத்தி வைத்தும் உத்தரவு பிறப்பித்துள்ளது  nakkheeran.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக