வியாழன், 16 அக்டோபர், 2014

12 for 25 ? போர்னோகிராபி ரேஞ்சுக்கு படம் எடுத்துள்ள ராம் கோபால் வர்மா ! ஸ்ரீதேவியின் ஆட்சேபம் ?

சாவித்ரி டூ ஸ்ரீதேவி! வர்மாவின் வில்லங்கம்!பரபரப்புக்கு பஞ்சமில்லாத திரையுலக பிரபலங்களில் இயக்குன ராம் கோபால் வர்மாவும் ஒருவர். இவர் இயக்கியுள்ள சாவித்ரி திரைப்படம் கிளப்பியுள்ள பிரச்சனைகள் கொஞ்சமில்லை. 12 வயது மதிக்கத்தக்க சிறுவன் 25 வயது பெண்ணுடன் தவறாக பழகுவதைப் போன்ற ஒரு வில்லங்கமான கதையை படமாக எடுத்துவைத்துக்கொண்டு ரிலீஸ் செய்தே தீருவேன் என அடம்பிடிக்கிறார் மனுஷன். இது மிகவும் மோசமான முயற்சி என்று கண்டன கோஷங்களும், சிறுவர்களின் மனத்தில் நஞ்சை கலக்கும் முயற்சி என்றும் பல அமைப்பினரும் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர். இதற்கிடையில் சாவித்ரி என்ற பெயரை வைக்கக்கூடாது என்று சிலர் போர்க்கொடி தூக்கினர். இது தான் சமயம் என்று ஸ்ரீதேவி என்று படத்திற்கு பெயரை மாற்றிவிட்டார். பல பேட்டிகளில் திரைத்துறையில் எனக்கு பிடித்த நடிகை ஸ்ரீதேவி தான் என்று ராம்கோபால் வர்மா கூறியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.இப்படி பல தரப்பினரும் எதிர்க்கும் ஒரு படத்திற்கு தனது பெயரை வைத்திருப்பது, தனது மரியாதைக்கு பங்கம் விளைவிக்கும் செயல் என்றும், தனது பெயரை வைக்கக் கூடாது எனவும் நோட்டீஸ் ஒன்றை அவருக்கு அனுப்பியிருக்கிறார் ஸ்ரீதேவி.இதுகுறித்து ராம் கோபால் வர்மா “ஸ்ரீதேவி என்று பெயர் வைத்ததால் என் படம் அவர்களை பற்றிய படம் ஆகிவிடாது. இந்த கதைக்கும் அவருக்கும்ச் அம்மந்தம் இல்லை. இந்த படம் ஒரு சிறுவனுக்கும் 25 வயது பெண்ணிற்கும் இடையே ஏற்படும் ஓர் உணர்வு பற்றிய படம். என் வாழ்வில் நடந்த உண்மையான கதை” என்று கூறியிருக்கிறார். வம்பை விலை கொடுத்து வாங்குவதில் வர்மாவுக்கு நிகர் வேறு எவர். nakkheeran.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக